வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்ணைக் குணப்படுத்த உதவும் சில முக்கிய உணவு வகைகள்.
வயிற்றுப்புண் குடல் புண்ணை குணப்படுத்தும் உணவுகள்
உணவு மாற்றம் உடனடி தேவை
கார உணவுகள் அற்புத உணவுகள் மணத்தக்காளி கீரை வெந்தயக்கீரை முருங்கைக்கீரை வெண்பூசணி சாறு சோற்று கற்றாழை, நெல்லி வாழைத்தண்டை, கோஸ், கேரட், அருகம்புல் சாறு, மற்றும் காய்கறி கலவை வாழைப்பழம் வெள்ளரி திராட்சை ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா சீதாப்பழம் பீர்க்கை புடலை போன்ற சஞ்சீவி உணவுகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்தால் ஒரு வாரத்தில் மிகப் பெரிய மாறுதலை அடையலாம்.
கீரைகளை பச்சையாக சாறு எடுத்து சாப்பிட இயலாதவர்கள் வெந்தயத்தை முளை கட்டிய காயவைத்து பொடி காயவைத்து முருங்கை பொடி அருகம்புல் பொடி போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காபி டீக்கு பதில் முளைகட்டிய தானியங்களை காய வைத்து சத்து மாவு ரெடி செய்து கஞ்சி செய்து சாப்பிடலாம்.
பிற இயற்கை உணவு வகைகள் பற்றி அறிய பால் மனிதனின் பரிபூரண உணவு மற்றும் இயற்கை நலவாழ்வு புத்தகங்கள் மூலம் அறிந்து கடைப்பிடித்து குடல் புண் களில் இருந்து பூரண விடுதலை பெறலாம்.
பிற மருத்துவத்துறையில் நேரம் தவறாமல் சாப்பிட சொல்லி வற்புறுத்தப்படுகிறது. ஆனால் நிரந்தர உடல் நலம் நாடுபவர்கள் அவர்கள் நன்றாகப் பசித்த பின்புதான் எந்த உணவாக இருந்தாலும் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்
குடல்புண் வயிற்றுப்புண் வலியின் கடுமை குறையும் வரை திட உணவுகள் தவிர்த்து திரவ உணவுகளான பழச்சாறு காய்கறி சாறுகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். கண்டிப்பாக வெள்ளை சீனி தவிர்க்க வேண்டும் தேன் அல்லது வெல்லம் தேவைப்பட்டால் சேர்க்கலாம்
கூடியவரை இரவு உணவை 7 மணி அளவில் சாப்பிட வேண்டும் எளிய யோகாசன பயிற்சிகள் பவன முக்தாசனம் பத்மாசனம் வஜ்ராசனம் நாடிசுத்தி போன்ற பயிற்சிகளை யோக ஆசிரியர் அல்லது யோகாசனம் புத்தகம் மூலம் தெரிந்து தினமும் சில நிமிடங்கள் செய்து வர குடல் புண் விரைவில் சரியாகும்
வயிற்றுப்புண் குடல்புண் முற்றிய நிலையில் தேங்காய் போன்ற இயற்கை உணவுகளை இயற்கை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே சாப்பிடலாம் கூடியவரை சாப்பிட்ட பின்பு குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிட்டவுடன் மூளை சம்பந்தப்பட்ட வேலை அல்லது கடின உழைப்பு செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உழைப்பும் சரி வேலையை ஒரே நேரத்தில் நடக்காது.
சாப்பிட வேண்டிய உணவுக ளை அமைதியாக அமர்ந்து நன்றாக அவசரமில்லாமல் மென்று உமிழ்நீர் சேர்த்து சாப்பிடவேண்டும். உமிழ்நீர் சேர்ந்த உணவுகள் இணைப்பைக் உடலுக்கு நன்மை தருகின்றன. நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன
கோபமாக இருக்கும் போது மனம் அமைதியாக இருக்கும் போது உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தண்ணீர் சாப்பிடலாம்
குடல்புண் குணமாக குணம் பெற ஒரு நாள் மாதிரி உணவு திட்டம்
கண்டிப்பாக செயற்க்கை உப்பு வெள்ளை சீனி மிளகாய் எண்ணெயில் பொரித்த பண்டங்கள் தவிர்க்க வேண்டும்.
காலை 5:30
மணிக்கு எழுந்தவுடன் மூன்று முதல் ஆறு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் காலையில் குடிக்கும் நீர் வயிற்றுப் புண் குடல்புண்ணை சரி செய்கிறது
காலை 6:30
மணி அருகம்புல் சாறு மணத்தக்காளி கீரை சாறு நெல்லிச்சாறு சாம்பல் பூசணி சாறு வெந்தயக் கீரை சாறு இவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அருகம்புல் பொடி உயிரூட்டிய வெந்தயப்பொடி இவைகளில் ஏதேனும் ஒன்று சாரி எடுப்பதாக இருந்தால் ஒரு கைப்பிடி நிறைய எடுத்து கழுவி மிக்ஸியில் 200 மில்லிலிட்டர் விட்டு அரைத்து வடிகட்டவும் முளைகட்டிய வெந்தய பொடி தயார் செய்ய வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து 8 மணி நேரம் துணியில் கட்டினால் முளை வரும் வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடவும். நைந்து போன பலம் இழந்த வயிறு குடல் புண் மற்றும் வாய் புண் ஆற்றும் சஞ்சீவி உணவு
காலை 9:00
வாழைப்பழம் 2 திராட்சை 50 கிராம் ஆரஞ்சு 1 பப்பாளி 2 துண்டுகள் அல்லது தேவையான அளவு சாப்பிடலாம்.
மதிய ஒரு மணி
கேரட் கோஸ் தக்காளி புடலை பீர்க்கை போன்ற காய்கறிகள் கலந்த கலவை 100 கிராம் ஆப்பிள் ஒரு துண்டு மாதுளை 50 கிராம் தர்பூசணி சிறிது வெள்ளரி இரண்டு சமைத்த காய்கறிகள் 200 கிராம் ஊற வைத்த அவல் 150 கிராம் இவைகளில் சில மற்றும் தேவையான அளவு சாப்பிடலாம்.
பசுமை காய்கறி கலவை செய்யும் முறை
கேரட் 50 கிராம் தக்காளி 1 பல்லாரி வெங்காயம் கோஸ் பீர்க்கை புடலை தற்போது இவைகளில் ஒன்றோ அல்லது எல்லாம் சேர்ந்து 50 கிராம் தேங்காய் துருவல் 50 கிராம் எலுமிச்சை சாறு சிறிது வெல்லத்தை சிறிது மல்லித் தூள் கறிவேப்பிலை சிறிது காய்கறிகளை நன்றாகக் கழுவி தேங்காய் துருவல் போல் செய்து எலுமிச்சை சாறு தேங்காய் துருவல் கலந்து சாப்பிட்டால் குடல் புண் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
நோய்களை விரட்டும் அற்புத மருந்து வயதானவர்களும் பல் இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்து சாப்பிடலாம் 16:00 தேன் கலந்த நீர் காய்கறி சூப் வைத்தால் காயவைத்து பொடி உயிரூட்டிய தானே சத்துமாவு இவைகளில் ஏதேனும் ஒன்று முருங்கை கீரையை சமைத்து உண்பதால் அதன் குணம் ஆகிய கழிவு உணவாகி விடுகிறது எனவே கீரையை பறித்து உலர்த்தி பொடி இது வைத்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குடல் புண் தீரும் இது ஒரு சஞ்சீவி கீரையாகும் கரைகளில் மனிதன் சாப்பிடக்கூடிய கீரை முருங்கைக்கீரை ஒன்றே அதையும் காமன் பொடி செய்து சாப்பிடும்போது அற்புத ஆற்றல் தருகிறது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் கேரட் கீர் செய்முறை கேரட் துருவலை மிக்ஸி அல்லது கிரைண்டரில் ஆட்டி சாறு எடுத்து அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும் சுவைக்கு தேன் அல்லது வெல்லம் சேர்க்கவும் இதுக்கு பதில் மாற்று உணவு சத்து தரும் உடனடி சாத்தியம் தரும் குழந்தைகள் மிகவும் விரும்பி பிரியமாக சாப்பிடுவர் கேரட் கீர் கேட்டு பருகுவோம்
இரவு ஏழு மணி
சாப்பிடும் முன்பு ஏதேனும் கீரைகள் மேலும் வாழைப்பழம் உயிரூட்டிய தானியங்கள் கொய்யா 1 கேரட் 2 போன்றவை தேவையான அளவு
முளைக்கட்டிய உயிரூட்டிய தானிங்கள் செய்யும் முறை
ஒரு கைப்பிடி பாசிப்பயறு 8 மணி நேரம் ஊறவைத்து 8 மணி நேரம் துணியில் கட்டினால் முளை கிளம்பி வரும். நன்றாக கழுவி தேங்காய் துருவல் வெல்லத்தூள் கலந்து சாப்பிடலாம். இது போல் கேழ்வரகு கோதுமை கடலை போன்ற தானியங்கள் சாப்பிடலாம். புண்ணாகிப்போன குடலையும் மனதையும் விரைவில் குணமாக்கக் கூடிய சக்தி உயிரூட்டிய தானிணங்களுக்கு உண்டு. சாப்பிட்டு பலனை தெரிவியுங்கள் உப்பால் உடைந்து சிதைந்து போன குடலை சரிசெய்வது உயிரூட்டிய தானியங்களே ஆகும்.
No comments:
Post a Comment