அரிய மூலிகை குணம் உள்ள மஞ்சளின் வகைகளும் மற்றும் அதன் பயன்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 28, 2020

அரிய மூலிகை குணம் உள்ள மஞ்சளின் வகைகளும் மற்றும் அதன் பயன்களும்

அரிய மூலிகை குணம் உள்ள மஞ்சளின்  வகைகளும் மற்றும் அதன் பயன்களும்

மஞ்சள் மருத்துவம் 

மஞ்சள் என்றதும் மங்களகரம் தான் நினைவுக்கு வரும். மனதில் சந்தோஷம் பெருகும். அந்த அளவுக்கு மங்களகரமான பொருட்களில் மஞ்சள் சிறப்பிடம் பெற்று திகழ்கிறது என்றால் மிகையாகாது. அதற்கு அது பெற்றுள்ள மருத்துவ குணமே காரணமாகும்.  எல்லாவித சுபகாரியங்கள் நடக்கும் போதும் மஞ்சளை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மஞ்சளை வெற்றிலை பாக்குடன் சேர்த்து அளிக்கின்றனர்.

 புத்தம் புதிய ஆடை உடுத்தும் போது அதன் மூலைகளில் மஞ்சளை தடவுவதை நீண்டகாலமாகவே பழக்கமாகக் கொண்டுள்ளனர். புதிதாக வியாபாரம் துவங்கும் போதும் அல்லது புதிதாக கணக்கு தொடங்கும் போதும் கணக்கு எழுதும் புத்தகங்களிலும் மஞ்சள் குங்குமம் வைக்கின்றனர். வீடுகளில் இறைவழிபாடு செய்யும் நாட்களில் வாயில் படிகளிலும் வழிபாட்டு பொருட்களின் மீதும் மஞ்சள் பூசி குங்குமம் அணிவிப்பர். 

சுப நிகழ்ச்சிகளில் கூட மஞ்சளை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர் சமையலுக்கும் மஞ்சள்தூளை பயன்படுத்துகின்றனர். பெண்கள் நீராடும் போது மஞ்சள் பூசிக் கொள்கின்றனர். அந்த அளவுக்கு மஞ்சள் மக்களின் அன்றாட வாழ்வில் அதிக பங்கு கொள்ளும் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது . மஞ்சள் நிறம் அனைவருக்கும் ஏற்புடையதாக விரும்பும் நிறமாக இருக்கிறது . அதனால் மஞ்சள் நிறம் கொண்ட தங்கம் பலராலும் விரும்பப்படுகிறது,  அதைப் போன்றே மஞ்சள் நிறத்தில் உள்ள எந்த பொருளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுவதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 மக்களுக்கு மட்டுமின்றி இறைவனுக்கும் விரும்பும் பொருளாகவும் இறை வழிபாட்டிற்கு மஞ்சள் உகந்ததாகவும் இருக்கிறது இந்துக்கள் கொண்டாடும் எல்லா வகைகளிலும் மஞ்சள் பிரதான இடம் வகிக்கிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகையில் மஞ்சள் கொத்தையும் வழிபாட்டுப் பொருட்களுடன் வைத்து பூஜிப்பர்.  

பொதுவாக எல்லா நிறங்களும் வெயில்ப்படுவதினாலோ ? மழைநீர் படுவதினாலோ?  நிறத்தில் மங்கிவிடும்.  ஆனால் மஞ்சள் நிறம் அத்தகைய நிலை அடைவதில்லை.  எவ்வளவு காலம் வெயில் படும்படி இருந்தாலும் மழைநீரில் நனைந்திருந்தாலும் தன் நிறத்தல் அதில் சிறிதும் மஞ்சள் மங்குவதில்லை.   அதனாலேயேதான் வீதிகளில் பெயர்பலகை கூட மஞ்சள் நிற வர்ணத்தையே பயன்படுத்துகின்றனர். 

மஞ்சளின் வகைகள் 

தாவர இனத்தில் மஞ்சள் கிழங்கு இனத்தை சேர்ந்தது.  பொதுவாக நமக்கு சமையலுக்கு பயன்படும் மஞ்சள் மற்றும் பெண்கள் பூசுமஞ்சள் ஆக இரண்டு வகை பற்றி தான் தெரியும்.  ஒனறு  நீண்ட வடிவத்தில் இருக்கும் மற்றொரு உருண்டை வடிவத்தில் காணப்படும்.  நீண்ட வடிவத்தில் உள்ள மஞ்சள் ஆண் மஞ்சள் என்றும்,  பம்பரம் போன்று உருண்டை வடிவத்தில் உள்ள மஞ்சள் பெண் மஞ்சள் என்றும் கூறுவர்.  நீண்ட வடிவத்தில் இருக்கும் மஞ்சள் சமையலுக்கு பயன்படுகிறது.  இன்னொரு வகையில் வாயிற்படிகளில் பூசுமஞ்சள் ஆக பயன்படுகிறது.  மஞ்சள் சாதாரணமாக சீதோசன மண்டல பிரதேசங்களிலேயே  வளரும்.

மஞ்சளில் பல வகைகள் உள்ளன, அவற்றுள்.... 

விரல் மஞ்சள் 
குண்டு மஞ்சள் 
கஸ்தூரி மஞ்சள்
 நாக மஞ்சள்  
பலா மஞ்சள்
குரங்கு மஞ்சள் 
மரமஞ்சள் மற்றும்
காட்டு மஞ்சள் போன்றன ஒரு சிலவாகும் எல்லாமே மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு மஞ்சளை பற்றியும் விரிவாக படிப்போம்.


கிருமி நாசினி

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டு வாயிற்படியில் நடுவீட்டில் மஞ்சள் இடுவதால் வீட்டிற்குள்ளிருக்கும்  கிருமிகளை கொல்கிறது.  அத்துடன் புதிதாக கிருமிகள் வீட்டுக்குள் புகாதவாறு பாதுகாக்கிறது. இதைப் போன்றே மஞ்சள் கரைத்த நீரை வீடுகளிலும் பல இடங்களிலும் தெளிப்பதால் கிருமிகள் அழிந்துவிடும். 

No comments:

Post a Comment