கிட்டப்பார்வை என்றால் என்ன அதை போக்கும் வழிமுறைகள் யாவை? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 30, 2020

கிட்டப்பார்வை என்றால் என்ன அதை போக்கும் வழிமுறைகள் யாவை?

கிட்டப்பார்வை என்றால் என்ன அதை போக்கும் வழிமுறைகள் யாவை?

கிட்டப்பார்வை

இது எந்த வயதிலும் வரலாம் தூரப்பார்வையை விட கிட்டப்பார்வை கண்களை அதிகமாக பாதித்துவிடும் என்பது மருத்துவ உலகில் பரவலாக உள்ள கருத்தாகும்.

கிட்டப்பார்வை உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் கண்ணாடி அணிந்து கொள்கிறார்கள் இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் கண்ணாடி அணிந்த பிறகு புத்தகத்தை முகத்தின் அருகே வைத்து படிப்பதுதான்.

சிலருக்கு கிட்ட பார்வை குழந்தை பருவத்திலேயே தோன்றிவிடும் இது கவலைப்படுவதனால்தான் முற்றுகிறது. என்பது மருத்துவர்களின் கருத்து. கொழுப்பு முதலிய உணவு சத்துக்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதாலும் இது வரலாம்.

 தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு கிட்ட பார்வை அதிகமாக ஏற்படும் இதற்கு காரணம் உண்டு.  தொடர்ச்சியாக கண்ணாடி அணிந்தால் கழுத்து முகம் முதலிய இடங்களில் உள்ள நரம்புகள் அதிகமாக அயர்வு பெற்று அதனால் கழுத்தின் பின்புறம் தசைகள் சுருங்குகின்றன.

கிட்டப்பார்வை ஏற்பட காரணம் என்ன?

விழித்திரையில் ஏற்பட வேண்டிய ஒழிக்குவியல் சற்று முன்பாகவே ஏற்படுவதுதான் இதற்கு காரணம் இது கண்ணில் உள்ள தசைகளின் கோளாறினால் ஏற்படுவதாகும்.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் குழந்தைகளும் கிட்ட பார்வையினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் கிட்டப்பார்வை ஏற்படுவதற்கு உண்மையான காரணமும் சரியான வைத்தியம் கண்டுபிடிக்கப்படாதுதான். முறையான சிகிச்சைகள் இல்லாததனால் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் கண்ணாடி அணிவது ஒன்றுதான் வழி என்று நினைக்கின்றனர்.

கண்ணாடி அணிவதால் நிலைமை மேலும் மோசமாகிறது. பிறகு எப்போதும் கண்ணாடி அணிந்துகொண்டு இருக்கும்படி ஆகிவிடும் அடிக்கடி கண்ணாடியின் சக்தி அதிகரித்து மாற்றிக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான் . சிறந்த பொருத்தமான கண்ணாடியை அணிந்தாலும்  அது கிட்ட பார்வைக்கு தகுந்து  மாற்றுமுறை ஆகாது. ஆனால் ஒரு விஷயம் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. பல டாக்டர்கள் கிட்ட பார்வை ஏற்படகாரணம் கண்ணில் ஏற்படும் அசதியும் வலியும் காரணம் என ஆராய்ந்து அதற்கேற்றபடி சிகிச்சை அளித்தனர்.  இந்நோய்கள் குணமடைந்து உடன் கண்ணாடி அணியவேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது.

கண்ணில் உள்ள இரண்டு ஆப்ளிக் தசைகளில் காரணமாக சுருக்கம் அடைந்து விழி கோளத்தை பக்கவாட்டில் பரப்புகின்றன. இதனால் ஒழிக்குவியல்   முன்பாகவே விழுந்துவிடுகிறது.  இதனால் தூரத்தில் உள்ள பொருள்கள் நோயாளிகளுக்கு குழப்பமாகவும் மங்கலாகவும் தெரியும் பல குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை ஏற்பட்டிருப்பதை தெரியாது.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தது தான் அக்குழந்தை புத்தகத்தை தூரத்தில் வைத்து படிக்க முடியாததை அறிகிறது.

உடனே பெற்றோர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் குழந்தைக்கும் கண்ணாடியை வாங்கி மாட்டிவிடுவார்கள். எவ்வளவு அவசரம் குழந்தை வாழ்நாள் முழுவதும் அல்லவா கண்ணாடி அணிய வேண்டியிருக்கும்.

பல குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் கண்களை தவறாக பயன்படுத்துதல்.  வயிற்றுக் கோளாறுகள் ஓயாத இருமல் நரம்பு தளர்ச்சி பற்க்களில் கோளாறு முதலியவையும் காரணமாகலாம்

மேலும் அதுவரை பள்ளிக்கு செல்வது படிப்பது முதலிய மனப்பக்குவம் இல்லாத குழந்தை திடீரென்று வகுப்பறையில் புதிய அனுபவத்தை பெறும்போது அதற்கு பலவிதமான போராட்டங்கள் ஏற்படும்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது பல குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவது ஆச்சரியமான ஒன்று அல்ல என்றே தோன்றுகிறது.  மேலும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள் குழந்தைகளுக்கு கெட்ட பார்வை இருப்பது தெரிந்தாலும் கண் டாக்டரிடம் அழைத்துச் செல்லமாட்டார்கள். பயம். என்ன பயம்? டாக்டர் குழந்தைக்கு கண்ணாடி மாற்றி விடுவார்களோ என்ற பயம்தான்

இவர்களை ஒருவிதத்தில் பாராட்ட வேண்டும். குழந்தைக்கு கண்ணாடி அணிவிக்க கூடாது என்று விரும்புகிறார்களே அதுவரை இவர்களை பாராட்ட வேண்டும்.  கிட்ட பார்வையின் தீவிரத்தை அளப்பதற்கு டயாப்டர் முறையை பயன்படுத்துவார்கள் டயாப்டர் என்பது ஒளிக்குவியல் தவறாக விழும் ஒரு குறிப்பிட்ட நீளமாகும்.  ஆரம்பநிலை மத்திய நிலை முதிர்ந்த நிலை என்ற கிட்டப்பார்வை கட்டங்களைப் பிடித்துக்கொண்டால்

ஆரம்ப நிலையில் இரண்டு டயாப்டர்களுகாகவும் மத்திய நிலையில் இரண்டிலிருந்து நான்கு டயாப்டர்களுகாகவும் முதிர்ந்த நிலையில் நான்கு டயாப்டர்களுகாகவும் மேலாகவும் காணப்படும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை அதிகமாக அசதிக்குள்ளாவார்கள்.  இவர்களால் கண்களை அவ்வப்போது சிமிட்ட முடியாது.  இதனால் எப்போதும் கண்களை அகலமாக திறந்தபடி வைத்திருப்பார்கள்

கிட்டப்பார்வை உள்ளவர்கள் கண்களை நல்ல முறையில்  வைத்திருக்கும் பயிற்சி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருத்தல் தூக்கமின்மை தவறான உணவுப் பழக்கம் ஆகியவற்றினால் கிட்டப்பார்வை ஏற்பட்டவர்கள் சில வாரங்களிலேயே தகுந்த சிகிச்சை மூலம் குணம் பெறலாம்.
அடிப்படை காரணங்களை நீக்காமல் கிட்டப்பார்வை குணமாக்க முடியாது நான்கு டயாப்டர்கள் வரை கிட்டப்பார்வை உள்ளனர் கண்ணாடி அணிந்து மேலும் பாழடித்துக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் கண்ணாடியின் சக்தி அதிகரித்துக் கொண்டே செல்ல அதனால் கண்களுக்கு அதிக உபாதை உண்டாவதே.

குறிப்பாக இப்படிப்பட்ட நிலை ஒருவருக்கு 14 வயதிற்குள் ஏற்பட்டால் அது நீண்ட காலம் பாதிப்புக்கு வழி உண்டாகும். கண்களை எவ்வளவு பாதுகாக்கிறோம் அவ்வளவு தெளிவான பார்வை கிடைக்கும்.

அடுத்ததாக முற்றிய நிலையில் கிட்டப்பார்வை இப்படிப்பட்டவர்கள் இரண்டு பக்கமும் குழிந்த கண்ணாடிகளை அணிந்து இருப்பார்கள்.  இவர்கள் கண்ணாடி அணிந்த பிறகும் சரியாக பார்க்க முடியாது. மேலும் இப்படிப்பட்ட கண்ணாடிகள் அணிந்தவர்களின் முகத் தோற்றத்தையே பாதிக்கும்

இவர்கள் எதை வேண்டுமானாலும் இமைகளை சுருக்கி ஒற்றைக் கண்ணால் கஷ்டப்பட்டு பார்ப்பார்கள். இதனால் கண்களில் அதிக வலி ஏற்படும் மேலும் இவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும் ஆகவே கிட்ட பார்வை உள்ளவர்கள் கண்களுக்கு அதிக வேலை தரக்கூடாது. கண்களிலும் மூளையிலும் ரத்த ஓட்டம் நன்கு ஏற்பட செய்ய வேண்டும்.

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் நோயாளிகள் அனைவரும் வலி குறைய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் தவிர பார்வை தெளிவு வேண்டும் என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். அதன் விளைவுதான் அவர்கள் கண்ணாடி அணிவது.

ஆரம்ப நிலையில் பார்வைக்கோளாறு மட்டும் தான் இருக்கும். ஆனால் முற்றிய நிலையில் தலைவலி கண் வலி கண் சுருக்கம் பார்க்கும்போது ஒற்றைக்கண் ஏற்படுதல் ஆகியவை உண்டாகும்.

கிட்டப்பார்வை முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு திடம் உள்ள மனம் தேவை. எப்பாடுபட்டாவது குணமடைய வேண்டும் என்ற திடம் இதற்கு குறைந்தது ஆறு மாதம் தேவைப்படும். இதற்கு சில நோயாளிகள் சிகிச்சையில் வெற்றி பெற வருடக்கணக்கில் பிடிக்கும் பார்வை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை வலி எரிச்சல் தலைவலி முதலியவை அடங்கினால் போதும் என்று நினைப்பவர்கள் கண்ணாடி அணிந்தால் போதும்

ஆனால் கிட்ட பார்வைக்கு சிகிச்சை அளிக்காமலே தள்ளிவிடலாம் என்று பெற்றோர்கள் நினைக்கும் காலம் மலையேறி விட்டது எனலாம்.

கண்ணாடி அணிவது மட்டுமே சிகிச்சை ஆகாது அது ஒரு தற்காலிக ஏற்பாடு இந்த தற்காலிக ஏற்பாடு சிலசமயம் நிலைமையை மேலும் மோசமாக்கி விடுவதுடன் வேறுபல சில்லரை தொந்தரவுகளையும் அளிக்கக்கூடும்

கண்ணாடி அணிவது மிக மிக இன்றியமையாதது என்று நினைத்தால் மிகவும் தேவைப்படும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் கண்ணாடியை கழற்றி விட்டு வெறும் கண்ணால் சமாளிக்க முயலவேண்டும்.

ஒவ்வொருநாள் காலையும் எழுந்தவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடம் நேரம் கழுத்துக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

மதிய வேளையில் சுமார் பத்து நிமிட நேரம் உள்ளங்கை பயிற்சியும் மேலும் 10 நிமிட நேரம் கழித்து பயிற்சியும் அளிக்க வேண்டும்.

 மீண்டும் இதே மாதிரி இரவு படுக்கும்போது இவ்விரண்டு பயிற்சிகளை செய்ய வேண்டும். கண்ணாடி இன்றி படிக்கும் பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும். கண்ணாடியின் சக்தியை படிப்படியாக குறைத்து கடைசியில் கண்ணாடியை ஒரேயடியாக அகற்றிவிடவேண்டும்.

கண்ணிலுள்ள 4 ரெட்டஸ் சுருங்கி அதனால் கண்கள் அழுத்தப்பட்டு விழித்திருைக்கும் லென்ஸ்க்கும் இடையே உள்ள தூரம் குறுகும்

இதனால் ஒழிக்குவியல் விழித்திரையின் மேல் விழாமல் விழித்திரையையும் தாண்டி வெளியேறிவிழும் இதுவே தூரப்பார்வை எனப்படும்.

இதில் இருந்து குணம் பெற ஒரே வழி. ரெட்டஸ் தசைகளின் பிடிப்பை நீக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வருவதுதான்.

இதனால் விழித்திரை பழைய நிலைக்கு வந்து பார்வையும் சரியாக மாறும் கண்ணாடி அணிவதால் தூரப்பார்வை நிவர்த்திக்க முடியும். ஆனால் அடிப்படை தொல்லையை அகற்ற சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது

கண்ணாடி அணிவதால் தசைகள் மேலும் சுருங்கி நோய் மேலும் முற்ற வழி பிறக்கிறது. பல குழந்தைகள் பள்ளியில் சேர்வதற்கு முன்பே தூரப்பார்வை கண்ணாடி அணிவர்.

இக்கண்ணாடி அணியும் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை நம்மை விழிப்படையச் செய்கிறது மற்ற கண் நோய்களைப் போலவே தூரப் பார்வைக்கும் பொது உடல் நலத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் பல வருடகாலமாக கண்ணாடி அணிந்தவர்கள் கூட சிறிது காலம் சாதாரண பார்வையைப் பெறும் பயிற்சிகளை மேற்கொண்டதால் குணம் பெற்று கண்ணாடி அகற்றி இருக்கின்றனர்.

கண்களில் எரிச்சலும் நோயும் ஏற்பட்டு விழிக்கோளம் பாதிக்கப்பட்டிருக்காவிட்டால் தூரப்பார்வையை மிக எளிதில் நீக்கிவிடலாம். காரணம் அந்நிலையில் பழுதடைந்த தசைகளைச் சீர்படுத்தினால் போதுமானதாகும். இதற்கு ரெட்டஸ் தசைகளுக்கு ஏற்ற பயிற்சி அளிக்க வேண்டும்.  இதனால் விழித் திரையின் மீது பார்வை சரியாக விழும்.

No comments:

Post a Comment