இரண்டு நீதிக் கதைகள் உங்களுக்காக, படித்து மகிழுங்கள் (மீன் சொன்ன கதை மற்றும் முயலும் நரியும்) - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 28, 2020

இரண்டு நீதிக் கதைகள் உங்களுக்காக, படித்து மகிழுங்கள் (மீன் சொன்ன கதை மற்றும் முயலும் நரியும்)

இரண்டு நீதிக் கதைகள் உங்களுக்காக, படித்து மகிழுங்கள் (மீன் சொன்ன கதை மற்றும் முயலும் நரியும்)


1. மீன் சொன்ன கதை 


ஒரு குளத்தில் ஒரு மீன் இருந்தது. அது ஒரு துன்பமும் இல்லாமல் தண்ணீரில் அங்குமிங்குமாக மகிழ்ச்சியோடு நீந்திக் கொண்டிருந்தது.  ஒருநாள் குளத்தின் கரையில் ஒரு கொக்கு வந்து அந்த மீனை தின்பதற்காக காத்துக் கொண்டிருந்தது.  அந்த மீன் தலையை நீட்டிய போது காத்துக் கொண்டிருந்த போது அதை "லபக்" கென்று பிடித்து கொண்டது.

  அகப்பட்டுக் கொண்ட மீன் கொக்கை பார்த்து நான் சாவதற்கு பயப்படவில்லை, ஆனால் எனக்கு வெகு நாட்களாக ஒரே ஒரு ஆசை அது மட்டும் நிறைவேற்றினால் நான் ஆனந்தமாக உயிர் விடுவேன் என்றது. 

கொக்கு குளத்துப் படி மேல் மீனை விட்டுவிட்டு "அது என்ன ஆசை"  என்று கேட்டது/  அதற்கு மீன் என் பாட்டி எனக்கு ஒரு கதை சொன்னார். அதை யாரிடமாவது சொல்ல வேண்டும். அக்கதையை சொல்கிறேன் கேள் என்று கூறிய மீன் கதை சொல்ல ஆரம்பித்தது.  ஒரு காட்டில் ஒரு நரி வசித்து வந்தது.  ஒரு சமயம் அது திராட்சை தோட்டத்தின் வழியே சென்று கொண்டிருந்தது. அப்போது திராட்சை பழங்களைத் தின்ன ஆசைப்பட்டது.

 ஆனால் பழம் கொஞ்சம் உயரத்தில் இருந்தது. அதனால் பழத்தை தின்பதற்கு இப்படித் துள்ளிக் குதித்தது என்று மீன் ஒருமுறை துள்ளி குதித்து காட்டியது .   மறுபடியும் ஒரு முறை இம்மாதிரி குதித்தது என்று மறுபடியும் கொஞ்சம் உயரமாக துள்ளி குதித்தது.  அப்பொழுது பழம் எட்டவில்லை.  பிறகு ஒரே மூச்சாக இப்படி எகிறி குதித்தது  என்று சொல்லி அந்த கெட்டிக்கார தண்ணீருக்குள் தாவி குதித்தது.  இப்பொழுது தண்ணீருக்குள் போயே போய்விட்டது.  ஏமாற்றத்தோடு முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு மறுபடியும் தவம் செய்ய தொடங்கியது.

 நீதி

 எதையும் எளிதில் நம்பி விடக்கூடாது



2. முயலும் நரியும் 


நிலாப் போல ஒளியை பொழிந்துகொண்டிருந்தது. முயல் குட்டி ஒன்று தன் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்தது. அழகு மிகுந்த அவ்விரவை மிக எளிமையாக ரசித்தவாறு சிறிது தூரம் வந்து விட்டது. அந்த இடத்தின் அருகில் சிறிய குளம் ஒன்று இருந்தது.

 தடாகத்தின் நிலவின் காட்சி அழகாக தெரியவே முயல அதை பார்த்துக் கொண்டிருந்தது.  அப்போது தடாகத்தின் மறுபுறத்தில் யாரோ வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தது.  வந்தது ஒரு குள்ளநரியாகும்.

நரியும் முயலைப் பார்த்து விட்டது,  அது முயலை தின்பதற்கு ஆசைப்பட்டது,

 தடாகம் தடையாக இருப்பதால் அவ்வளவு எளிதில் குட்டி முயலைப் பிடிக்க இயலாது.  ஆகவே எப்படியாவது ஏமாற்றி குட்டி முயலைப் படிக்க வேண்டும் என்று கருதியது.  குள்ள நரியானது  "குட்டி முயலே"  தண்ணீரில் என்ன பார்க்கின்றாய்? ஆனா அதோ தெரிகிறதே அந்த நிலவையா? அந்த நிலவில்தான்  உன் முன்னோர் ஒருவர் ஒருவர் இருக்கின்றார்.  அவர் எப்படிப் போனார் தெரியுமா? நிலவு தண்ணீரில் இருக்கும்போது அதில் பாய்ந்து ஏறிக் கொண்டார்.  நீயும் நிலவிற்கு போக வேண்டுமானால் தண்ணீரில் குதித்து அதில் ஏறிக் கொள்ளலாம் எனக் கூறியது.

நரி கூரியதை கேட்ட குட்டி முயல் நரியின் தந்திரத்தை புரிந்து கொண்டது .
நான் நிலவு போக ஆசைப்படுகிறேன் என்று எண்ணிக் கொண்டது போலும் , அதனால் தான் இவ்வாறு கூறி என்னை ஏமாற்றப் பார்க்கிறது.  நான் அதன் பேச்சை நம்பி நீரில் குதித்தேனானால்   நீந்த  முடியாமல் தவிப்பேன்.  அப்போது என்னைப் பிடித்துத் தின்ன  நினைக்கிறது என்று கருதியது முயல் குட்டி.

பதிலுக்கு ஆமாம் நரியாரே  நான் நிலவிற்கு போக ஆசைப்படுவது உண்மைதான்.  ஆனால் இது இதுவல்ல வழி. மனிதர்கள் எங்களை வைத்துதான் ஆராய்ச்சி செய்கிறார்கள் அப்படி ஆராய்ச்சி செய்து அதில் ஒன்றுதான் நிலவிற்கு சென்று வந்த செய்தி. என் தாத்தா ஒரு சமயம் மனிதர் கையில் அகப்பட்டுக் கொண்டார் அவரை அவர்கள் ஆராய்ச்சி செய்து ராக்கெட் மூலம் நிலவிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவர் போன போது நீ சொன்ன அங்கே முயல் இருப்பதாக அது பொய் என்று தெரிந்துவிட்டது . உண்மையில் அது மலையின் ஒரு பகுதியாகும் இதை அவர் திரும்பி வந்தபின் எங்களுக்குச் சொன்னார். அதோடு மாத்திரமல்ல அவர் இறந்த பிறகும் கூட எங்களை பிடிக்க வந்த அந்த மனிதர்கள் இங்கு அடிக்கடி வருகின்றார்கள்.  இப்பொழுது கூட உன் பின்னால் வருவது அவர் ஒருவர்தான் என்று கூறியவாறு என் பின்புறத்தை சுட்டிக்காட்டிய அதே வார்த்தையை கேட்டு வந்த நரி தனக்குப் பின்னே யாரோ வருகிறார்கள் என்று முயல்குட்டி கூறியதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தது.  அவ்வளவுதான் இதுதான் சமயமென்று குட்டி முயல் ஒரே தாவில் தாவி ஓடி தன் பொந்துக்குள் நுழைந்து விட்டது.  கோட்டைவிட்ட நதி ஏமாற்றத்தால் வெட்கம் அடைந்தது

No comments:

Post a Comment