தூரப்பார்வை என்றால் என்ன? அதை எவ்வாறு குணப்படுத்தலாம்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 30, 2020

தூரப்பார்வை என்றால் என்ன? அதை எவ்வாறு குணப்படுத்தலாம்?

தூரப்பார்வை என்றால் என்ன? அதை எவ்வாறு சரி செய்யலாம்?

தூரப்பார்வை

சராசரியாக தூரப்பார்வை உள்ளவர்கள் ஒன்றிலிருந்து மூன்று டயாப்டர்கள் வரை உள்ள கண்ணாடிகளை அணிகின்றனர்.

தூரப் பார்வை யால் பாதிக்கப்பட்டவர்கள் எதையும் காரணமின்றி  உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.  இவர்கள் கண்களுக்கு ஓய்வு தர வேண்டும் முறையான உணவுா் பழக்கமும் தேவை.

உள்ளங்கை பயிற்சி, கழுத்துப் பயிற்சி ஆகியவற்றையும் மேற்கொண்டால் சில மாதங்களுக்குள்ளாகவே தூரப்பார்வையைக் குணப்படுத்திவிடலாம்.

ஒரு தெளிவற்ற பார்வை அஸ்டிக்மியா என்று கூறுவர்.  ஒரு பொருளில் உள்ள கோடுகள் சில கோணங்களில் தெளிவாக தெரியும்.

உதாரணமாக செங்குத்துக் கோடுகள் குழப்பமாக ஒளிக்கீற்றுகளுடன் தெரியும் அல்லது செங்குத்துக் கோடுகள் குழப்பமாகவும் வேறுகோடுகள் தெளிவாகவும் தெரியலாம்.

சில நோயாளிகளுக்கு வேறு விதமான பாதிப்பும் இருக்கும். அதாவது செங்குத்து கோடுகளும் சாய்வு கோடுகளும் ஒரே புள்ளியில் இணைந்து தெரியாமல் இடம் மாறித் தெரியும்.

 இது விழி கோலம் முறையற்று வளர்ச்சி பெற்று இருப்பதையே குறிக்கும் என்பது சில மருத்துவர்களின் கருத்து.  தசைகள் விறைப்புடன் இருந்தாலும் இந்நோய் தோன் றும்.

 சிறிதளவு டயாப்டர் அளவுள்ள  அஸ்டிக்மேடிசன் கோளாறு இருப்பது தெரிந்தாலும் சிலர் உடனே வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் .

ஆனால் இவர்களுக்கு ஒரு உண்மை தெரிவதில்லை இது ஒரு நிலையான வியாதி அல்ல அதாவது இதனால் ஏற்படும் விளைவுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது இந்த நிமிடம் இருக்கும் விளைவு அடுத்த நிமிடம் வேறுவிதமாக மாறும். அப்படியானால் நிமிடத்திற்கு நிமிடம் கண்ணாடி மாற்றிக்கொள்ள முடியுமா? பாதிப்பின் வீதம் மாறுவதைப் போல பாதிப்பின் தீவிரம் வெகு சீக்கிரம் ஆறும்.  மேற் கூறியவற்றில் இருந்து என்ன தெரிகிறது என்றால் அஸ்டிக்மேடிசன் என்பது ஒரு செயல் கோளாறு தவிர அமைப்பு கோளாறு அல்ல என்பதே. அ

தாவது இக்கோளாறு தசை இயக்க கோளாறு முதலிய பல்வேறு வழிகளில் தான் வருமே தவிர கண்ணின் அமைப்பு கோளாறினால் அல்ல.

 இந்நோய் ஏற்பட்டவர்கள் பெரும்பாலும் கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுப்பதன் மூலமே குணம் பெற முடியும் என்று பல டாக்டர்கள் கூறி விடுகின்றனர். அஸ்டிக்மேடிசன்   ஏற்பட காரணமான தசை கோளாறோ மற்றும் எந்த கோளாறோ ஏற்பட அடிப்படைக் காரணம் யாது என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளித்தால் நிரந்தர பலன் கிடைக்கும்.

கண்ணின் அமைப்பு மாறுதலை விரும்புவதில்லை. கண் தசைக்கு மிகப் பொறுமையுடன் பயிற்சி அளிக்க வேண்டும்.  ஒவ்வொரு மனிதனும் பார்க்கும் சக்தியில் பாதிதான் இயற்கை கண்ணின் அமைப்பு சேரும்.  மீதி பாதி பழக்கத்தினால் ஏற்படுவது.

உதாரணமாக ஒருவர் கண்ணாடியை மாற்றிக் கொள்ளும் போது அது பழகும் வரை அவருக்கு நிம்மதி இருக்காது.  டாக்டரின் சிகிச்சைகளில் பயிற்சி அளிப்பதும் பயன் பெறுவதும்  எளிதானது செயலே.

 அஸ்டிக்மெடிசம் குணமாக கண்ணாடியை நீக்கும் போது நோயாளிக்கு உண்மையில் எந்த கஷ்டமும் தெரியாது.  உண்மையில் கண்ணாடி என்று பழக ஆரம்பிக்கும் போது பார்வையில் நல்ல தெளிவு ஏற்படாவிட்டாலும் கண்களிலும் தசையிலும் நல்ல மாறுதல் தெரியும்.

அஸ்டிக்மெடிசம் ஏற்பட்டால் பல நோயாளிகளுக்கு பலவிதமான விளைவுகள் ஏற்படும்.

சிலருக்கு கண்களில் அயற்சித் தோன்றும் சிலருக்கு வாயுத்தொல்லை தலைவலி படபடப்பு ஆகியவையும் ஏற்படும். நோய் ஏற்பட்டதால் இவ்விளைவுகள் ஏற்பட்டதாகவும் இவ்விளைவுகளால் நோய் ஏற்பட்டதாகவும் எப்படி வேண்டுமானாலும் கூறமுடியும்.

பொதுவாக கிட்ட பார்வை பல நோயாளிகளுக்கும் அஸ்டிக்மெடிசத்தல்  மங்கிய பிளவுப் பட்ட பார்வை தெரியும். பாதிப்பின் அளவும் அனுபவத்தின் அளவும் ஒரே விகிதத்தில் அமையாது.  உதாரணமாக அரை டயாப்டர்  கோளாறு இருந்தால் மிக அதிகமான பார்வை கோளாறு உண்டாகலாம்  அதேபோல் 3 டயாப்டர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையில் சிறிதளவவ தவறு ஏற்படும்.

அஸ்டிக்மெடிசத்திலும் கிட்டப்பார்வை அஸ்டிக்மெடிசம் தூரப்பார்வை அஸ்டிக்மெடிசம்  என இருவகை உண்டு.  இந்நோய் எந்த  வயதிலும் தோன்றலாம்.

 குறிப்பாக 16 லிருந்து 20 வயது வரை இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.  இந்நோய் கண்ணானது  முழுவளர்ச்சியைப் பெற்ற பிறகு (13 வயதில்) ஏற்பட்டால் இதிலிருந்து குணம் பெறுவது மிகவும் எளிது .

கண்களுக்கு அதிக வேலை தருவதாலேயே இது ஏற்படுகிறது.  அத்துடன் தூக்கமின்மை கவலை அதிர்ச்சி முதலியவையும் இது ஏற்பட காரணங்கள் ஆகும்.

ரத்தத்தில் பல வித போதை வஸ்துக்கள் கலப்பதால் ரத்தம் கெட்டுவிடுகிறது ரத்தம் கேட்டுவிட்டால் கண் தசைகள் தாறுமாறாக இயங்கத் தொடங்கும்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் நோயிலிருந்து விடுபட்ட பிறகும் மிக சிறிய எழுத்துக்களை அதிக நேரம் படித்துக் கொண்டிருக்க கூடாது.

ஏன் எனில் இச்சமயத்தில் நரம்புகள் சரியாக இயங்கி கண்களை நல்ல நிலையில் வைத்திருப்பது சிறிது கடினம்.

ஆகவே பூரணமாக குணம் பெறும்வரை கண்களுக்கு நல்ல ஓய்வு தேவை மங்கிய வெளிச்சத்தில் படிப்பது நோயாளிகளுக்கு நல்லதல்ல.

அஸ்டிக்மெடிசத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முடிந்தபோதெல்லாம் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஒவ்வொரு நாளும் கிட்ட பார்வை அல்லது தூரப் பார்வைக்கு ஏற்றவாறு ஸ்பெஷல் சோதனையை அட்டையை தகுந்த தூரத்தில் வைத்து ஒவ்வொரு எழுத்தையும் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு எழுத்தையும் படித்த பிறகு கண்ணை சிமிட்ட வேண்டும்.  ஒரு கண்ணை மூடிக்கொண்டு  மறு கண்ணால்  படிப்பதே மாற்றி மாற்றி பயிற்சி செய்யவேண்டும்.  ஆனால் ஒரு கண்ணை கையால் மூட முடியாமல் தானாக இமைத்து மூடும் படி செய்யவேண்டும்.

மெதுவாக நடந்து கொண்டே படிக்கவும் பழக வேண்டும்.  கழுத்து பயிற்சியை மேற்கொள்வது நல்லது

ஒரு குறிப்பிட்ட புள்ளியை மட்டும் சிறிது நேரம் உற்றுப் பார்ப்பதும் இந்நோய்க்கு ஏற்ற சிகிச்சையாகும்.

 உதாரணமாக ப் என்ற எழுத்தின் புள்ளியை மட்டும் உற்றுப்பார்க்கலாம். தீ என்னும் எழுத்தில் உள்ள சுளியை  மட்டும் உற்றுப் பார்க்கலாம்.  ஒவ்வொரு புள்ளியையும் சுமார் ஐந்து நிமிட நேரம் உற்றுப் பார்க்கலாம். இதற்கு என்று தினமும் அரை அல்லது முக்கால் மணி நேரம் செலவிடுவது சிறந்தது .

ஒவ்வொரு புள்ளியையும் உற்றுநோக்கி முடிந்த பிறகு கண்களை பலமுறை நன்றாக சிமிட்டிக்கொள்ள வேண்டும். கண்ணீர் வந்தால் துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர வேண்டும்.

No comments:

Post a Comment