குண்டு மஞ்சள் மற்றும் விரல் மஞ்சளை பற்றி விரிவாக பார்ப்போம்
1. விரல் மஞ்சள்
விரல் போன்று நீண்டு உருண்டு காணப்படும். ஆனால் ஒழுங்காகவோ நேராகவோ இருக்காது. வளைந்தும் சுருண்டும் கூட இருக்கலாம். நீல மஞ்சள் கரி மஞ்சள் என்றும் கூறுவர். குச்சி மஞ்சள் என்பதும் இதைத்தான்.
இந்த மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகும். சரும வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. சொறி சிரங்கு, படை போன்ற சரும நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
இதை உணவுடன் சேர்த்து உண்பதால் உணவு பொருட்களில் உள்ள விஷ கிருமிகளை கொல்கிறது. அத்துடன் ரத்தத்தில் உள்ள விஷத்தை முறிக்கும் ஆற்றலும் பெற்று விளங்குகிறது.
உஷ்ணத்தை தணிக்க வல்லது. உடலின் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்க இது உதவுகிறது. அத்துடன் உடலுக்கு வீரிய சக்தியையும் அளிக்கிறது. அதனால்தான் எல்லா வீடுகளிலும் உணவு பொருட்கள் தயாரிக்கும் போது சிறிது மஞ்சள் தூளை சேர்க்கின்றனர். தாவர உணவு சமைப்பவர்கள் மாமிச உணவு சமைப்பவர்கள் இருசாராரும் மஞ்சளை பொதுவாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்துக்களின் திருமண விழாவில் அரிசியில் மஞ்சளை கலந்து அந்த அட்சதை கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்க செய்கின்றனர். அந்த அளவுக்கு மஞ்சள் அதிக மகத்துவம் பெற்றதாகவும் விளங்குகிறது இவ்வாறு அந்த அட்சதையை போடும் போது அதிலுள்ள மஞ்சள் எங்கும் வியாபித்துள்ள காற்றுடன் கலந்து விடும் இதனால் கூட்ட நெரிசல் உள்ள இடத்தில் காற்றில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி தூய்மையான காற்றை சுவாசிக்க ஏதுவாகும்.
இக்காரணம் பற்றியே இந்துக்கள் திருமண நாளில் மணமக்களை மஞ்சள் நீராட்டுவதையும் அட்சதையில் மஞ்சள் கலந்து தூவுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மருத்துவம் செய்கிறார்கள், மஞ்சள் நீரை அருந்தவும் செய்கிறார்கள் . சோப்புகள், முகப் பவுடர் அழகுசாதன பொருட்கள் போன்றவற்றை மஞ்சள் கலந்து தயாரிக்கிறார்கள். பெண்களுக்கு திலகமிட குங்குமம் பயன்படுகிறது . அது ஒரு வகை குங்குமம், வேறு வகை குங்குமம் வாயில்படிகளுக்கு இடப்படுகிறது. இவ்விரண்டு வகை குங்குமம் தயாரிக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது. கடவுள் வழிபாட்டில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள் விரதம் பலர் மேற்கொள்கின்றனர். அவர்கள் வெண்மையான துணியை மஞ்சளில் நனைத்து ஆடையாக தரித்து கொள்கின்றனர். திருஷ்டி கழிய சுற்றுவது உண்டு. அதற்கு நீரில் மஞ்சளுடன் சிறிது சுண்ணாம்பு கல் கரைப்பது சிவப்பு நிறமடையும் இதனையே ஆரத்தி என்பர். இதனால் கண்திருஷ்டி போன்ற எல்லா வகை தோஷங்களும் நிவர்த்தியாகும் என்று நீண்ட காலமாகவே மக்கள் தம்பியும் நடைமுறைப் படுத்தியும் வருகின்றனர்.
2. குண்டு மஞ்சள்
இது குண்டாக பம்பரம் போன்று காணப்படும். இதை பெண்கள் மஞ்சள் என்பர் இந்த மஞ்சள் கிழங்கு மஞ்சள் என்றும் கூட கூறுவார். முட்டா மஞ்சள் என்பது இதுதான். இந்த மஞ்சளை பெண்கள் உடலில் தேய்த்து நீராட பயன்படுத்துகின்றனர். இயற்கையிலேயே மிருதுத் தன்மை வாய்ந்த பெண்களின் உடல் தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்படாமலும் நோய் ஏற்படாத வாறு இது பாதுகாப்பு அளிக்கிறது.
அத்துடன் பெண்களின் தேகத்தில் சுருக்கம் ஏற்படாதவாறும் துர்நாற்றம் உண்டாகாதவாறும் தடுக்கிறது. சருமநோய்கள் ஏற்படாதவாறும் சிலந்தி போன்ற கொடிய நோய்கள் தாக்காமலும் பாதுகாக்கிறதுஃ பெண்களின் பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் நோய்களில் ஒன்று கிரந்தி நோய். இந்த நோய் ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது. மஞ்சள் பிறப்பு உறுப்புகளில் அரிப்பு இருப்பினும் குணப்படுத்த உதவுகிறது, பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசி வருவதால் முடி வளர்வதை தடுக்கிறது.
No comments:
Post a Comment