குழந்தைகளுக்கான கல்வித் திறன் வளர்க்கும் உணவு முறைகள் - தொடர் (1) - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 11, 2020

குழந்தைகளுக்கான கல்வித் திறன் வளர்க்கும் உணவு முறைகள் - தொடர் (1)

குழந்தைகளுக்கான கல்வித் திறன் வளர்க்கும் உணவு முறைகள் - தொடர் (1) 

சத்தான உணவு 

குழந்தைகளுக்கு சத்துணவு என்பது மிகவும் அவசியமானதே. ஆண் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் இது பொருந்தும். பெண் குழந்தைகளுக்கு உடம்பு வைத்துவிடக் கூடாது என்று தவறான கருத்தின் அடிப்படையில் அவர்களுக்கு போதுமான சத்துணவு அளிக்காமல் இருந்து வருவதும் உண்டு. ஆண் குழந்தைகளை விட பெண் பிள்ளைகளை   பெற்றோர் கவனமாக கண்காணித்து பராமரிப்பது இல்லை. பெண் குழந்தை வயதுக்கு வந்துவிட்ட பின்னர்தான் அந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் பெற்றோர்க்கு சற்று கவனம் கூடுகிறது. இதில் கட்டாயம் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த பெண் குழந்தைகளுக்கும் தேவையான உணவுகள் வழங்கிட வேண்டும் என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வரவேண்டும். 

குழந்தையின் முதல் உணவு

தாய்பால்தான் குழந்தையின் முதல் உணவு. இயற்கையின் படைப்பில் இது மிக முக்கியமானது. தாயின் முலைக்காம்பு ஈரிப்பாக நுண்கிலருமிமிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இந்த நுண்கிருமிகள் ஒருவித மணத்தை  ஏற்படுத்தி பிறந்த குழந்தையின் இதழ்களை அதை நோக்கி ஈர்க்கிறது.  கண்களைக்கூட திறக்காத குழந்தைதாய்பால் சுரக்கும் இடத்தை அறியும் விந்தை இதுதான். பொியவர்களுக்கு உள்ளதை விட கைக்குழந்தை பருவத்தில்  குரல்வளையானது  சற்று மேலே தள்ளியே இருக்கும். இதன் காரணமாகத்தான் தாயிடம் பாலமுது பருகும் போது அவைகளுக்கு மூச்சு முட்டுவதில்லை.  மூச்சுக்குழலிலும் நுரையீரலுக்குள்ளும் பால் வடிந்து விடவதில்லை. 

குழந்தைப் பருவத்தில் கிருமிகள் வாயில் வழியாகவும் சுவாககுழாயின் நுரையீரலையும் வயிற்றையும்  சென்றடைகின்றன.  இதன்மூலம் கிருமிகளை எதிர்த்த முதல்கட்ட போராட்டம் குழந்தைக்குள் துவங்குகிறது. 


இவ்வகை கிருமிகளை எதிர்க்கத் தக்க சக்கி சிசுவின் உடலுக்குள் குறைவாகவே இருக்கம். எனவே தான் குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைக்கு கொடுக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. 

பெரியவர்களுக்கு ஜீரணம் என்பது பல்வேறு சுரப்பிகளின் மூலம் நடைபெறுகிறது. ஆனால் குழந்தைகளின் முதல் ஜீரணம் அவ்வாறு  நடைபெறுவதில்லை. எந்த ஒரு உணவு அதன் இயற்கைத் தன்மை யோடு வயிற்றுக்குள் செல்கிறதோ அந்த உணவை நொதிக்க வைப்பதற்கான நொத்ப்பான்கள் அதிலேயே இருக்கும்.  அதனால் தான் இயற்கையான தன்மை உள்ள தாய்ப்பாலானது குழந்தைக்கு முதல் உணவாக அமைக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பாலானது குழந்தைக்கு வளர்ச்சிக்கான சத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது.

தாய்பால் எப்படி சுரக்கிது?

தாய்பால் ஊட்டுவது நிறுத்தியபின்பு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு எப்படி இருக்க வேண்டும் என்பதை தாய்பாலின் தன்மை மற்றும் அதன் மேம்பட்ட செயல்முறைகளை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

குழந்தை பிறந்து அதன் இதழ்கள் மார்பு காம்புகளை கவ.வியுடன் பால் சுரக்கத் தொடங்குகிறது. விந்தையானது. இயற்கையின் படைப்பில் ரகசியம் இது.

உடலின் பிற திசுக்களைப் போலவே பால் சுரப்பிகளும் இரத்தத்தின் மூலம் சத்துக்கள் போய் சேர்கின்றன.  இவ்வாறு சத்துக்களை பெற்ற பால் சுரப்பிகள் பாலைச் சுரக்கத் துவங்குகின்றன.  தாய் உண்ணும் உணவு உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் ஜீரணிக்கப்பட்டு பால் சுரப்பியை வந்தடைந்து குழந்தைக்கான தயார்நிலை உணவாக மாறுகிறது.

 உடல் உறுப்புகளுக்கான அடித்தளத்தை மூலம் கிடைக்கிறது நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குள் சென்று ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு உடலுக்கு சக்தி அளிக்கும் ஆற்றலாக மாறுகிறது பிறகு உடலின் ரத்த ஓட்டத்தில் கலக்கிறது இதன் மூலம் சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்குப் போய்ச் சேர்க்கப் படுகிறது பறவைகளுக்கு தனது வாயில் உள்ள உணவை ஊட்டுவது போல நமது தாய் நமக்கு உணவை ஓட்டவில்லை பறவைக் குஞ்சியின் ஜீரண மண்டலம் கடுமையானவை உணவுகளையும் ஜீரணிக்கத்தக்கது. பிறந்த குஞ்சுக்கு பூச்சி புழுக்களை நேரடியாக உணவாக வழங்குகிறது தாய்ப்பறவை. ஆனால் ஒரு பெண் தான் உண்ணும் உணவு குழந்தைக்கும் பொருத்தமானது தானே என்று நேரடியாக வழங்கி விடுவது இல்லை. அதை தான் உண்டு தனது உடல் உறுப்பின் மூலம் சக்தியாக மாற்றி ரத்தத்தின் மூலம் மார்பகங்களுக்கு அனுப்பி பாலாக மாற்றித்தான் உலகில் ஈடு இணையற்ற தரத்தில் குழந்தைக்கு அமுதாக வழங்குகிறாள்.

உருவத்தில் குழந்தையை விட 100 மடங்கு சிறிய பறவைக்கு அதனது தாய் நேரடியாக வழங்கும் உணவு ஜீரணம் ஆகும் போது நமது குழந்தைக்கு ஜீரண சக்தி ஏன் குறைவாக  உள்ளது என்று கேள்வி எழுவது நியாயமே.

குழந்தை உடலின் தசைகளும் உடலுறுப்புகளும்குழந்தையின் உடல் வெப்பமும் சேர்ந்து அந்த குழந்தையின் உடலை பல்வேறு கிருமிகள் வந்து தங்குவதற்கான புகழிடமாக திகழசெய்கின்றன. 

மற்ற உயிரினங்களுக்கு இல்லாத குழந்தைக்கு உள்ளது. மனித உயிரின் ஜீரண சுரப்புகளது முதல் கடமை தீமைதரும்  கிருமிகளை அழிக்கும் தன்மையுடைய  கத்துகளை உயிரஷக்கனளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யும் வகையில்  தங்களது சுரப்பு திரவத்தின் இரசாயனத் தன்மைகளை அமைப்பதேயாகும். அதற்கு அடுத்துதான் உடல் உறுப்பின் வழக்கமான செயல்பாட்டிற்கான ஊட்டச்சத்துக்களை வழங்கும் கடமை, பிறந்த குழந்தையின் உயிர் அணுக்கள் குழந்தைக்குள் நுழையும் நோய் கிருமிகளை பற்றிய அறிவு அற்றவையாகும். 

நோய்க் கிருமிகள் உள்ளே வந்த பின்னர்தான் அவற்றின் தன்மையை அனுபவம் மூலமாக பெற்று எதிர்காலத்தில் அவ்வாறான கிருமிகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு அழிக்கிறது. இவ்வாறு அடையாளம் காணும் நினைவுகளை உயிர்கள் இருப்பதற்கான ரசாயனத் தன்மை பிறந்த குழந்தையின் சுரப்புகளுக்கு இருக்காது. எனவே உணவின் மூலம் உள்ளே செல்லும் கிருமிகளை அழிக்கும் திறன் உயிரணுக்களுக்கு இல்லாதிருக்கும். அதனால்தான் தனது ரத்தமும் சதையுமாக வளர்ந்த குழந்தைக்கு தனது உடலில் பக்குவப்படுத்தப்பட்ட சக்தியை அதாவது நோய் கிருமிகளை அழிக்க தக்க வகையில் குழந்தையின் உயிர் அணுக்களை செயல்பட செய்கிற தன்மையோடு கூடிய அந்த உயிரினுக்களுக்கான உணவாக தனது பாலமுது மூலம்  வழங்குகிறாள்.


தாய்ப்பாலானது வெற்றுத் திரவம்வும் அல்ல. கூர்மையான அறிவு படைத்தது. குழந்தையின் உடல் திறனை முன்கூட்டியே யூகித்து அதற்கேற்ற சத்துக்களை வழங்கும் திறன் பெற்றவை தாய் பால் சுரப்பிகள்.

தாய்மார்கள் சிலருக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு பிறந்த குழந்தைகள் போதுமான பலம் இன்றி காணப்படும். எனவே அவற்றிற்கு கூடுதல் சத்துக்கள் தேவைப்படும். எனவே அந்த குழந்தையின் தாய் நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கக் கூடியதாக மட்டுமல்லாமல் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். எனவே அந்த தாய்மார்களில் பாலில் கொழுப்பு புரதம் சோடியம் புளோரைடு இரும்பு போன்ற சத்துக்கள் கூடுதலாக இருக்கும். இவ்வாறான கூடுதல் சத்துக்கள் தான் அந்த குழந்தைகளை பார்வை இழப்பு போன்ற அபாயங்களிலிருந்து விடுவிக்கிறது. அதன் கண்களின் பார்வைத் திறனை சிறப்பாகஅமைப்பது உள்ளிட்ட  பல்வேறு நன்மைகளை தரக்கூடியதாக அமைகிறது.

தனது வயிற்றில் இருந்த வெளிவந்துவிட்ட குழந்தைக்கு எப்படிப் பட்ட சத்துள்ள பாலை சுரக்கவேண்டும் என்று முடிவு செய்வது  தாயின் மார்பில் உள்ள சில உயிரினுக்களேயாகும். தனது உடலுக்கு வெளியில் உள்ள ஒரு உயிருக்கு தேவையானவை எவை என்று ஒரு தாயின் பால் சுரப்பிகள் உணர்வது விந்தையிலும் விந்தை அல்லவா.

பால் சுலரப்பும் கட்டுபாடும். 

குழந்தைக்கு எப்போது என்ன வகையான பால் எவ்வளவு தேவை என்ற கட்டுப்பாடு மிக்க செயல்முறை இயற்கையின் படைப்பின் ரகசியம். உடலில் உள்ள ஹார்மோன்கள் எனப்படும் சுரப்பிகளின் செயல்பாடுகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் மூலம் உடல் உறுப்புகள் தங்களுக்குள் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் மேற்கண்டவாறு பால் சுரப்பு நடைபெறுகிறது.

தாயின் மார்பகங்களில் பால் சுரப்பிகள் சுரக்க தூண்டும் அவரது உடலில் உள்ள புரலோக்டடீன் என்ற சுரப்பித் திரவம் ஆகும்.  மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி என்ற சுரப்பியில் இது சுரக்கிறது.

ஒரு பெண் கருவுறத் துவங்கிய சில நாட்களிலேயே சில காரணிகள் விலகாமல் புரலோக்டின் சுரக்காமல் தந்துவிடுகிறது.  இதன் மூலம் பால் உற்பத்தி ஆகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. தாய் இப்போதுதான் கருவுற்றிருக்கிறது பிறக்க பல மாதங்கள் உள்ளன.  இப்போதைக்கு பால் வேண்டியதில்லை. எனவே பாலை இப்போதைக்கு சுரக்க வேண்டியதில்லை. என்பதுதான் புரலோக்ஷன் சுரப்பு நிறுத்தத்தின் பொருள். இவ்வாறான தடை எப்படி செயல் முறைக்கு வந்தது ?

நமது மூளையின் ஹைப்போதலாமஸ் என்ற சுரப்பி உள்ளது. இதில் இருந்து சுரக்கும் திரவம் தான் நமது தினசரி காலை கடன்களுக்கான சிறுநீர் கழித்தல் மலம் கழித்தல் போன்ற கடமைகளை நிறைவேற்றும் உணர்வைத் தூண்டுகிறது.  இந்த திரவம்தான் ப்ரோலாக்டின் உற்பத்தியை தடை செய்கிறது . எனவே இதை புரோலாக்டின் தடுப்பு சிறப்பு என்று அழைக்கின்றனர். 

 கர்ப்ப காலத்தில் புரோட்டீன் தடுப்பு சுரப்பிக்கு தடுப்பு ஆணையை அனுப்புவது எது? ஈஸ்டரோஜின் என்ற  சுரப்பி தான்.  தனது சுரப்பு மூலம் இந்த ஆணையை அமலாக்குகிறது.

 குழந்தை பிறந்தவுடன் ஈஸ்ட்ரோஜின் தனது முடிவை மாற்றிக் கொள்கிறது அதாவது ஈஸ்ட்ரோஜின் தனது திரவ சுரப்பைக் குறைத்துக் கொள்கிறது. இதை உணர்ந்த புரோலாக்டின் தனது தரப்பை மெல்ல மெல்ல அதிகரித்து பால் உற்பத்தி சுரப்பிகளை தூண்டி தாய்ப்பால் உற்பத்தியை துவங்க செய்கிறது.


குழந்தையின் முதல் அமுது.

பிறந்த குழந்தை முதன் முதலில் தாயின் மார்புக் காம்புகளைக் கவ்வத் தொடங்கியதும் தாயின் மார்பகங்களில் உள்ள நரம்புகளின் உயிரணுக்கள் செயல்பட்டு நரம்புத்தூண்டல்களை ஏற்படுத்துகின்றன. இந்த தூண்டல் சமிக்கைகள் ஐபோதலத்தை  எட்டுகின்றன.  தாய் பால் உற்பத்திக்குக் காரணமாக உள்ள புரலாக்டின்கு  இதுவரை நீங்கள் விதித்திருந்த தடைகளை விலக்கிக் கொள்ளுங்கள். குழந்தை பிறந்து விட்டது. அதற்கு பால் வேண்டும். எனவே புரலோக்டின் தனது திரவத்தை அதிகமாகச் சுரக்கச் சொல்லுங்கள்,  என்பது தான் இந்த தூண்டலின் பொருள். 

பிறந்த குழந்தையின் பூவினும் மெல்லிய இதழ்களின் உறிஞ்சுதலை உணர்வதற்கான தனி வகைப்பட்ட உணரிகள் தாயின் மார்பகங்களில் அமைந்துள்ளன. குழந்தை உறிஞ்சத் துவங்கிவிட்டது, என்பதை ஐபோதலம்ஸக்கு உணர்த்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விந்தை மிகு  இந்த  கட்டளைகள் எலும்பும் சதையுமாக திகழும் உடலின் பரந்து விரிந்து கிடக்கிற நரம்பு மண்டலத்தில் தான் நடைபெறுகிறது.

மூளையுன் உணர் மையம்  வயிறு, குடல்கள் இவைகளுக்கு இடையே மிகத்துல்லியமான முறையில் நரம்புகள் தொடர்புகள் அமைக்கப்பட்டுள்ளன .
அதைப் போன்றே ஹைபோதலமஸ் உடனும் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்டவாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் சுரப்பிகளுடன் இணைப்பு உள்ள மற்றொரு சுரப்பி ஆக்சிடோசின்.

மாடுகளில் பால் கறப்பவர் மாட்டின் மடியில் உள்ள காம்புகளைத் தங்களது விரல்களால் இறுக்கிப் பிடித்து மேலிருந்து கீழ்நோக்கி வலிந்து பாத்திரத்தில் பீச்சுவதைப்  பார்த்து இருப்பீர்கள்.  குழந்தையின் பச்சிளம் இதழ்கள் அப்படி காம்புகளை இழுத்து பாலை உறிஞ்சும் திறன் கொண்டவை அல்ல. எனவே தான் இயற்கை அதற்கான ஒரு ஏற்பாடாக ஆக்ஸிடோசின் சுரப்பியை படைத்துள்ளது.

தாயின் பால் பருக தாயின் மார்புக்காம்பில் தனது இதழ்களைப் பொறுத்துகிறது. எனவே பால் சுரப்பிகளை சுற்றி உள்ள தசைகளே உங்களை நீங்களே  இறுக்கிக் கொண்டு காம்புகளை நோக்கி பாலை வடியச்செய்யுங்கள் என்று சம்பந்தப்பட்ட தசைகளுக்கு ஆக்சிடோசின் தனது சுரப்பு திரவம் மூலம் வேண்டுகோள் விடுக்கிறது.  குழந்தையின் வாயில் சுலபமாக இறங்கியது பால். இயற்கையின் படைப்பை என்னவென்பது?.

எவ்வளவு கூறிய அறிவுத் திறனோடு குழந்தைக்கு ஆரம்ப கால உணவு அமைக்கப்பட்டுள்ளது என்பதை பெற்றோர்கள் தினம் தினம் வியந்து நோக்கினால் தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய உணவு மற்றும் அதற்கான வழி காட்டுதலில் மேல் அக்கறை செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

அடுத்தப் பதிவில் தொடரும்....

No comments:

Post a Comment