பள்ளிப் பருவ நோய்களும் அதற்கானத் தீர்வுகளும் (தாெடர் - 1)
பிறப்புறுப்பின் கிருமிகள் தாயின் மார்பில் தங்கியுள்ள கிருமிகள் மனையின் சுற்றுச்சூழலில் உள்ள கிருமிகள் என அனைத்தும் சிசுவின் தூய உடலின் உள்ளுறுப்புகளில் தங்கிவிட போட்டி போடுகின்றன/ இறுதியில் முதல் கட்டப் படர்உயிரிகள் தங்களுக்கு ஏற்ற இடத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இவ்வாறு தங்கள் இடத்தை அபகரிக்க வரும் அடுத்த கட்ட உயிரிகளை வெளியேற்றுவதுதான் சிசுவின் உடல் உயிர் ஆரம்பம். சிசுவின் உடலுக்குள் முதலிடம் இடம் பிடிக்கும் இந்த உயிரிகள் சிசுவின் உடலை தங்களுக்கு மட்டுமே சொந்தமான வாழ்விட சொத்தாக அமைத்துக் கொள்கின்றன.
தங்களது எந்த உரிமையை பறிக்க வரும் எந்த ஒரு எடுத்துக்காட்டு உயிர் இறைவன் தான் அவனை எதிர்த்து இந்த போராட்டமே அந்த சிசுவின் உயிர் வாழ்க்கையாக மாறிவிடுகிறது. பகைவனை எதிர்க்க என்ன உணவு உண்ணவேண்டும்? எப்படி அப்படி வாழ்ந்தால் பகைவர்களை அனாவசியமாக உள்ளே நுழையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்? தகிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? தாங்க முடியாத குளிரில் இருந்து தப்பித்து கதகதப்பை வாழ்வது எப்படி? எப்படி வாழ்ந்தாலும் பெறமுடியும்? தம்முள் சேகரமாகி விட்ட கூடுதல் சத்துக்கள் நீண்ட காலம் செல்ல விடாமல் கெட்டுப்போன சத்தாக மாறி ஆபத்தாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள என்ன ஏற்பாடு?
விளையாட்டுகள் கலைப்பணிகள் மூலம் கூடுதல் சத்துக்களை செலவிடுவது சரியான ஏற்பாடல்லவா? என்று ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பதுதான் கல்வி. அதுதான் அந்த குழந்தையின் பிற்கால வாழ்க்கை. வாழ்க்கை முறை. அதைத்தான் பெற்றோர்களும் பள்ளிகளும் வழங்க வேண்டும்.
உயிரணுக்களின் வாழ்க்கை போராட்டம்
உயிரணுக்களின் வாழ்க்கை கூடுதான் மனித உருவம். மாறாக மனித உருவத்தில் சேவகர்கள் அல்ல உயிரணுக்கள். மனித இனத்தின் உயிர் அணுக்கள் ஒத்த தன்மை கொண்டவை தான். என்றாலும் ஒவ்வொரு உயிரினத்தையும் அந்த பலத்தின் அடிப்படையிலான குணத்தையும் பொறுத்து சிறு சிறு வேறுபாடு கொண்டவை ஆகும்.
அதே நேரத்தில் மனித உயிர்களுக்கு அப்பாற்பட்ட மற்ற எதிரிகளே. உயிரினங்கள் அனைத்தும் சமரசமற்ற எதிரிகளே இவைகள் தீமை பயக்கும் கிருமிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன இப்படி உயிரணுக்கள் எளிதாக ஒட்டி உறவாட தான் குழந்தை பருவ வாழ்க்கை அமைந்துள்ளது எனவே குழந்தையின் உடலுக்குள் தீமை பயக்கும் கிருமிகள் என்றுப் பொதுவாக அழைகஙகப்படுகின்றன.
தீமை பயக்கும் கிருமிகளை அழித்து கழிவு உறுப்புகளின் மூலம் வெளியேற்றும் திறனை ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தில் அளவுகோலாகும். உடலுக்குள் இருக்கும் பாதுகாப்பு உயிர் அணுக்கள் தான் நோய் கிருமிகளை அழிக்க துடிக்கும் படைவீரர்கள். இந்த படை வீரர்களுக்கு கூறிய அறிவுத்திறன் என்ன? எவ்வளவு விழிப்பாக இருந்து செயல்படுகின்றன? இந்த படை வரிசையின் அனைத்து நிலைகளையும் பொய் வேடம் தரித்து எப்படி உள்ளே நுழைகின்றன நோய்க்கிருமிகள்? என்பனவெல்லாம் மிகவும் விரிவாக பார்க்க வேண்டிய விஷயங்கள்.
நமது நோக்கம் அன்றாட வாழ்க்கையில் குழந்தைகளுக்கு உள் நுழையும் நோய்க் கிருமிகளை சுலபமாக முறியடிக்கும் திறனை குழந்தைகளின் உடலில் எப்படி ஏற்படுத்துவது என்பதை பெற்றோர்களுக்கு அடையாளம் காட்டுவது மட்டுமே? நமது உடலுக்கு உணவின் மூலம் நுழையும் நோய்க் கிருமிகளை நடவடிக்கைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். ஜீரண சுரப்பிகள் ரசாயன சுரப்பு திறன் எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? சுவாச உறுப்பின் மூலம் நுழையும் தூசிகள் உடனுக்குடன் தும்மல் மூலம் வெளியேற்றப்பட வேண்டும். மூச்சுக் குழலின் தூசு வெளியேற்ற அமைப்பு அந்த அளவிற்கு செயல்திறனோடு இருக்க வேண்டும்?
தும்மலுக்கான திறன் அவ்வாறு இல்லாத போது உள்ளே நுழைந்துவிடும் குப்பைகள் நுரையீரலுக்குள் குப்பை மேடாக படிந்து அந்த குப்பையை தின்னுவதற்கான கிருமிகளின் வாழ்விடமாக மாறிவிடுகிறது.
தும்மலுக்கான சக்தி இல்லாமை என்பது நோய்களை ஏற்படுத்தும் ஒரு செயலாக மாறிவிடுகிறது. ஆக்சிஜன் என்பதே முதல் நிலை என்பதால் அந்த உணவை வழங்குகிற சுவாச மண்டல இயக்கம் எந்த ஒரு நிலையிலும் தனது அதிகபட்ச சக்தியை செலுத்தி நுரையீரலை தூய்மையாக வைத்துக் கொள்ளத் தக்கது.
தும்மலின் மூலம் வெளியேற்ற இயலாது குப்பைகள் மற்றும் கிருமிகள் சளி மூலம் வெளியேற்றப்படும். இவ்வாறு வெளியேறும் சளி சுவாசக் குழாய் வழியாக அடித் தொண்டையை அடைகிறது. அங்கிருந்து உணவுக்குழாய் உள் சொல்கிறது. இது ஒரு அனிச்சை செயல். இவ்வாறாக ஜீரண மண்டலத்திற்குள் நுழையும் கசடுகளை வெளியேற்றும் திறனை ஜீரண மண்டல ரசாயன கலவை பெற்றிருக்க வேண்டும். இந்த திறனை எந்த உணவின் மூலம் பெற இயலும் என்பதையும் உணவு முறை சிகிச்சையாளர்கள் வழிகாட்ட இயலும்,
ஜீரண உறுப்புக்களாலும் சுவாச உறுப்புகளாலும் வெளியேற்ற முடியாத கிருமிகள் உள்ளே பல்கிப் பெருகும்போது அவற்றை முறியடிக்க இறுதிக்கட்டப் போரில் உடலில் அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள பாதுகாப்பு வீரர்கள் களத்தில் இறங்குகின்றன. அவ்வாறான நேரத்தில் உடல் முழு அளவில் இருக்க வேண்டும் என்பது இயற்கை விதி. இதை எப்படி காய்ச்சலுக்கு உட்பட்டவர்களுக்கு உணர்த்துவது என்று இயற்கை கண்டறிந்த முறைதான் உடல் கதகதப்பு. இந்த கதகதப்பே காய்ச்சல் என்று உணரப்படுகிறது. தாகம் எப்படி உணர்வோ? அதுபோல காய்ச்சலும் ஒரு உணர்வு. காய்ச்சலின் போது உடலினுள் போரிடும் நுண்ணுயிர்களுக்கு ஊட்டம் அளிக்க வேண்டும்.
போரில் மடிந்து விடும் நுண்ணுயிர்களின் இடத்தில் தொடர்ந்து புதிய புதிய நுண்ணுயிரிகளை ஈடுபடுத்தவும் வேண்டும். இதற்கான சக்தியை இடைவிடாது அளித்துக்கொண்டு இருக்க வேண்டும்.
இந்த போராட்டத்தின்போது எதிர்காலத்திற்கான தற்காப்பு யுத்திகளும் உடலில் உருவாகின்றன. கடந்த முறை உடலுக்குள் நுழைந்த நோய்க்கிருமிகளை பற்றிய குறிப்புகள் அனைத்தும் இந்த பாதுகாப்பு வீரர்கள் நினைவுகளில் பதியப்படுகின்றன. உடலுக்குள் நுழையும்போது வாசலிலேயே அறியப்பட்டு முறியடித்துவிடும் முறை ஏற்படுகிறது. எனவேதான் குழந்தைகளின் வாழ்க்கை நோய்க்கிருமிகள் ஒட்டி உறவாட கூடியதாக உள்ளது.
நோய்க்கிருமிகள் புகாத அறையில் ஒரு குழந்தையை குறிப்பிட்ட காலம் வளர்ப்போம் என்று வைத்துக்கொள்வோம். பிறகு வெளி உலகிற்கு கொண்டு வரும்போது அந்த குழந்தையின் உடலில் நோய் கிருமிகள் இருக்கின்றன என்பதை அறியும் திறன் அந்த குழந்தையின் உடலில் உள்ள நினைவில் இல்லாமல் போய் இறுதியாக தோல்வி ஏற்படுகிறது. எனவே இயல்பான வாழ்க்கை முறையில் நோய்க் கிருமிகள் தொற்றுவதும் அவற்றை அழிப்பதற்கான திறனோடு உடல் திகழ்வதும் அவசியம். (தொடரும்)
No comments:
Post a Comment