குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துவது எப்படி? குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு என்ன?
பெண் தோற்றுப் போனால் அவளுக்கு பிறக்கிற தலைமுறையும் தோற்றுப் போகிறது. எல்லாவற்றுக்கும் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிற மகனாகவோ மகளாகவோ பிறக்கும்படி ஆகிறது. சமுதாயத்தில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இதுதான். கணவன் தன் மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குறிப்பாக திருமணமான பெண்களிடம் உடலுறவு வைத்துக் கொள்வது. பிறகு மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான உணவு உடை கொடுக்காமல் கஷ்டப்படுவது இப்படிப்பட்டவர்களை அழைத்து கவுன்சிலிங் செய்யலாம்.
வருங்காலத்தில் பிள்ளைகள் எத்தனை வித பாதிப்புகள் அடைவார்கள் ஒருவரின் தனிப்பட்ட சுயநலத்திற்காக குடும்பத்தையே இழப்பது என்பது எவ்வளவு கொடுமை என்று விளக்கி காம்ப்ரமைஸ் பண்ணி பார்ப்போம். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கோர்ட்டு மூலம் பெண்ணுக்கு ஒரு தொகை அளிக்க வழி வகுப்போம். தனிப்பட்ட ஆண் பெண் பாலியல் விஷயங்களில் தலையிட முடியாது. அறிவுரை வழங்கக் கூடாது. அன்பு ஆலோசனை வழங்கலாம். அவ்வளவுதான்.
கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது. இதில் யார் பெரியவர் சிறியவர் என்று பார்க்க முடியாது. கணவன் மனைவி இருவரும் சம்பாதிக்கின்றனர். யாருக்காக? குழந்தைகளின் எதிர்காலத்திற்காக. ஆனால் ஈகோ பிரச்சினை வந்துவிடக் கூடாது. எடுத்துக்காட்டாக கணவர் பசியோடு வருவார். சாப்பாடு போடு என்றால்.... இன்றைக்கு ஒரு நாள் தன் வீட்டில் இருக்கிறேன். நானும் தான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன்.. நீங்களே போட்டு சாப்பிடுங்கள் என்பாள். உண்மைதான் ஆனால் அடிப்படை கடமை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது. நம் நாட்டு வழக்கப்படி என்ன தான் அதிகமாக சம்பாதித்தாலும் கணவர் சொற்படி நடக்கும் மனைவியே குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்கிறாள். இல்லையெனில் பணமிருந்தும் நிம்மதி இல்லாமல் போகிறது.
அது போன்று சில கணவர்கள் மனைவியை சம்பாதிக்கும் இயந்திரமாக தான் கருதுகின்றனர். அவளுக்கும் ஆசை எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை மறந்து அடிமைபோல் நடத்துகின்றனர். எந்த ஒரு பெண்ணும் அடிப்படையில் கணவர் தனக்கு மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள். அதில் தவறில்லையே. அதுபோன்ற ஆண்கள் தன் மனைவி தனக்கு மட்டும் சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு.
ஆனால், சில ஆண்கள் நாங்கள் எப்படிவேண்டுமானாலும் இருப்போம் என்று கூறும்பொழுது பிரச்சினை பெரிதாகி றது. பணம் பொருள் பங்கு போட அனுமதிக்க மனைவி கணவரை பெண்களுக்கு பங்குபோட எப்படி அனுமதி விவாகரத்திற்கு மிக முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. அறிவுரை கூறும் அளவுக்கு பெண்கள் இல்லை நன்கு படித்து பட்டம் பெற்று திகழ்கிறார்கள் பணம் பொருள் வசதி அதிகம் வந்தாலும் தனிப்பெருமை பெண்ணும் ஆணும் ஒழுக்கமாக குடும்ப வாழ்க்கை நடத்தும் பொழுது தான் அது போன்று திருமணத்திற்கு பிறகு தன் நலனில் அதிக கவனம் செலுத்துவதை விட்டு பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் நல்ல வழியில் உருவாவது ஒரு தாயின் தந்தையின் கடமையும் கூட. இதை எப்போதும் மனதில் நிறுத்தி வாழ்க்கையின் பாதியை ஒளிமயமாக்கும் நீந்தி செல்ல வேண்டும் பிற குடும்ப வாழ்க்கை வெற்றி தான்
ஒரு மனைவி தன் மனக் குமுறல்களை கணவரிடம் வெளியிட வேண்டியது தான். வடிகால் தேட வேண்டியதுதான். அதில் தவறில்லை. என்றாலும் பெண்கள் சுயமாக தொழில் செய்வது எப்படி? பெண்கள் சுயமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்றெல்லாம் பெண்களுக்கு பயன்படும் முன்னேற்ற வழிகளை பற்றி யோசிக்கும். இந்த காலகட்டத்தில் பெண்கள் சுயமாக பிரச்சனைகளை அலசுவது எப்படி சுயமாக ஆறுதல் அடைவது எப்படி என்ற கோணத்தில் ஏன் சிந்திக்கக் கூடாது. அவருடைய ஆளுமை திறன் வளர வேண்டாமா?
கணவனிடம் மனைவி தன் குமறல்களை பகிர்ந்து கொள்ளும் போது அவளுக்கு தேவையான ஆறுதல் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். பிரச்சனைக ளை எதிர்கொள்வதில் வேறுபாடுகள் இயல்பிலேயே உள்ளன தன் மனைவி ஏதாவது மன உளைச்சலில் இருந்தால் அவன் அதிலிருந்து விடுபட்டு இருக்கும்படி சொல்ல முடியுமே தவிர தான் தவறு என்று நினைத்தால் தன் கணவனும் அதை தவறு என்று தான் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தமான ஒரு எதிர்பார்ப்பை மனைவி கணவனிடமோ மனைவியிடமோ வைத்துக்கொள்ளக்கூடாது. கணவனும் மனைவியும் சந்தித்துக் கொள்ளும் போது ஏற்கனவே குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை வைத்துக் கொண்டு மற்றவரைப் பற்றிய பிரச்சனைகளையும் மன பாதிப்புகள் பற்றி பேசி தங்கள் நேரத்தையும் சக்தியையும் ஆக்கலாமா?
குடும்பத்தில் குதூகலம் கூத்தாட வேண்டும் என்று ஆசைப்படாத தம்பதிகள் உண்டா? ஏழை ஆகட்டும். பணக்காரன் ஆகட்டும் குடும்ப வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் நிலவாவிட்டால் தாம்பத்திய வாழ்க்கை சுவைக்காது. பணம் பகட்டு படாடோபம் இவற்றுக்கு மட்டுமே பிரதானம் அளிக்கும் தம்பதிகளிடையே நிச்சயம் மனக்கசப்பு ஏற்படுவது உறுதி. மணமானதும் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்குவார். குடும்பத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும். இன்னின்ன வகையில் குடித்தனம் செய்ய வேண்டும் என்று யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும். என்றெல்லாம் உபதேசம் செய்வார்கள் அது ஒரு வழி.
தெரிந்த ஆன்றோரும், சான்றோரும் தங்கள் வாழ்க்கையில் அவர்கள் கண்ட அனுபவங்களை கதை கதையாக கூறி குடும்ப வாழ்க்கைக்கு வழி வகுத்துக் கொடுப்பது உண்டு. அது ஒரு வழி.
கூடப் படித்தவர்கள் அலுவலகத்தில் சேர்ந்து வேலை பார்க்கும் நண்பர்கள் அடுத்த வீட்டு நண்பர் ஆகியோர் குடும்ப வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு படித்து படித்து சொல்லுவார்கள். அது ஒரு வழி.
இவ்வாறாக குடும்ப வாழ்வு செம்மையாக நடைபெற வேண்டும் என்று பல வழிகளை எடுத்துரைத்தும். அநேகமாக ஒரு சிலரை தவிர பெரும்பாலோர் குடும்ப வாழ்க்கைக்கு பயணத்தை மிக கஷ்டப்பட்டு நடத்திச் செல்கிறார்கள் என்பது கண்கூடு.
மொத்தத்தில் தம்பதிகளுக்கிடையே அபிப்பிராயம் பேதம் கிஞ்சித்தும் ஏற்படலாகாது என்பதை ஒவ்வொரு கணவனும் மனைவியும் உணர்ந்தாக வேண்டும். ஏனென்றால் அபிப்பிராயம் பேதம்தான் வழுவழுப்பான குடும்ப இன்ப பாதையில் தூவப்படும் கூறிய நெருஞ்சி முட்கள்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை தம்பதிகளிடையே வளரவேண்டும். சந்தேகம் உடனிருந்தே கொல்லும் வியாதி. ஆகவே கணவன் மனைவிக்கு இடையே சந்தேகம் எந்த ரூபத்தில் உருவெடுக்க லாகாது. இருவர் உள்ளத்தில் நம்பிக்கை என்னும் ஆலவிருட்சம் தளைத்து வளர வேண்டும். நிதான புத்தியும் பகுத்தறியும் தன்மையும் இருவருக்கும் அத்தியாவசியம். செட்டாக குடித்தனம் நடத்தும் திறன் கணவன் மனைவி இருவருக்கும் இருக்க வேண்டிய ஒன்று என்பதை தம்பதிகள் உணரவேண்டும்.
(தொடரும்...)
No comments:
Post a Comment