தண்ணீரினால் வரும் நோய்கள் (தொடர்-3)
மஞ்சள் காமாலை நோய் தண்ணீரால் பரவும் நோய்களில் ஒன்று தான். எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். இந் நோய் அடைகாக்கும் காலம் 4 இருந்து 5 வாரம் ஆகும். அடைகாக்கும் காலம் என்பது நோய்க்கிருமி உடலில் நுழைந்த நாளிலிருந்து நோய் ஏற்படும் வரை உள்ள கால கட்டமாகும்.
மஞ்சள் காமாலை நோயின் வகைகள்
மஞ்சள் காமாலை நோய் சாதரணமாக இரு வகையுண்டு. அதில் முதல் வகையான ஹெப்படைடிஸ் ஏ என்பதுதான் தண்ணீர் வழியாக பரவும் நோய் ஹெப்படைடிஸ் பி என்பது ரத்தம் வழியாக பரவக்கூடிய கொடிய நோய் ஆகும்.
ஹெப்படைடிஸ் ஏ என்னும் மஞ்சள் காமாலை பரவும் முறைகள்
மிகவும் மோசமான சுகாதாரமும் நோய்க் கிருமிகள் கலந்த நீரினால் உணவில் கலந்துவிட்டு கிருமிகளாலும் உணவுப் பொருட்களை பரிமாறி பவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் உணவில் நோய்க்கிருமிகள் கடந்திருந்தாலும் அதன் மூலமாக இந்நோய் பரவ வாய்ப்புகள் உண்டு.
மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகள்
காய்ச்சல் வந்தது போன்ற உணர்வு, காய்ச்சல் குமட்டல் வாந்தி பசியின்மை உணவைக் கண்டால் வெறுப்பு புகைபிடிப்போர் இருந்தால் புகையிலை அல்லது சிகரெட்டைக் கண்டால் வெறுப்பு. வயிற்று உப்புசம் போன்றவை இந்நோயின் சாதாரண அறிகுறிகள். வயிற்றின் மேல்புறத்தில் லேசான வலி இருக்கும்.
உடம்பில் கண்களில் நகக்கண்களில் மஞ்சள் பூசியது போலவும் வாய் போன்ற பகுதிகளிலும் மெல்லிய சவ்வுகளிலும் மஞ்சள் பூத்ததுப் போலவும் இருக்கும். மலம் வெளிரிய நிறத்திலோ வெள்ளை நிறத்திலோ இருக்க வாய்ப்புகள் உண்டு. ஹெப்படைடிஸ் ஏ என்னும் காமாலை ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும்.
காமாலை தடுப்பு முறைகள்
ஹெப்படைடிஸ் ஏ என்னும் மஞ்சள் காமாலையைத் தடுக்க நீரைக் காய்ச்சிக் குடித்தால் அவசியம். உணவு உண்ணும் முன்பு கைகளை நன்கு கழுவுதல் வேண்டும். உணவுகளை நன்கு மூடி வைத்தல் வேண்டும். வீட்டில் யாருக்கேனும் காமாலை வந்து விட்டால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இம்முனோகுளோபுளின் என்னும் ஊசி மருந்தைப் போட்டால் இந்நோயை தடுக்கமுடியும்.
குடல் புழுக்கள்
இந்நோயும் தண்ணீரினால் பரவக்கூடிய நோய் தான். உருண்டைப் புழு, நாடாப் புழுஇ கொக்கிப் புழு நூல்புழு போன்ற பலவகையான புழுக்களின் முட்டைகள் நீரில் கலந்துவிடும். தண்ணீரினை தெரியாமல் குடிக்க நேரிட்டால் குடற் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் சென்று தன் இன விருத்தி செய்து பெரிய புழுக்களாக உருமாறி முட்டைகளை குடலுக்குள் இடும். இவை மலத்தின் வழியாக வெளியேற்றப்பட்டு அவற்றை சுத்தமின்மையால் மற்றவரகள் தண்ணீரோடும் உணவோடும் உட்கொள்ளும்போது மீண்டும் குடற்புழுக்கள் உற்பத்தியாகி நோயினை ஏற்படுத்தும்.
குடற்புழுக்கள் நோயின் அறிகுறிகள்
அடிக்கடி வயிற்றுவலி, பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி மலம் கழித்தல், மலம் கழிக்கும் இடத்தில் அரிப்பு, வயிற்றுப் பிரட்டல், குமட்டல் போன்றவை குடல் புழுக்களால் ஏற்படும் அறிகுறிகளாகும். மலத்தில் சில சமயங்களில் முழுபுபழுக்களும் வெளியேறும். சில சமயங்களில் மூக்கின் வழியாகவும் வாய் வழியாகவும் முழுப்புழுக்களும் வெளியே வரும்.
குடல் புழுக்கள் நோய் தடுப்பு முறை
நீரை வடிகட்டி குடித்தலும் உணவு உண்ணுமுன்பு கைகளை சுத்தமாகக் கழுவுதல் நகத்தை கடிக்காமல் இருத்தல் இந்த குடற்புழுக்களை நோயிலிருந்து நம்மை பாதுகாக்க பாதுகாத்துக் கொள்ளும் முறையாகும். சில குடற்புழுக்கள் தோலின் வழியாகவும் உடலினுள்புக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நடக்கும்கோது மிதியடிகள் போட்டு நடப்பதும் இந்நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ளும் முறையாகும்.
உணவு நஞ்சாகும் நோய்
சில உணவுப் பொருட்களை ஓரிரு நாளுக்கு வைத்திருந்து சாப்பிட்டால் இந்த உணவு நஞ்சாக விட்ட இந்த உணவு நஞ்சாக விட நோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உணவுப் பொருட்களை வைத்து இருக்கும் போது அதில் சில நுண் கிருமிகள் இனப்பெருக்கத்தை செய்து உணவுப்பொருள் நஞ்சாகிவிடும். அந்த உணவை உண்பவர்களுக்கு வாந்தி, பேதி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இந்நோய் நம்மை தாக்காது இருக்க அன்று சமைத்த உணவினை அன்றே உண்டு விடுவது நல்லது. தண்ணீரை காய்ச்சி குடித்தாலும் அவசியம்.
முடிவுரை
குடிநீரை சூடுபடுத்தி குடிப்போம். சுத்தமான உணவுகளை உண்போம். நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம். நன்றி.
No comments:
Post a Comment