பிளாஸ்டிக் குடத்தை நீரில் நேராக அமுக்கி நீர் நிரப்ப முடிவதில்லை. ஏன்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 1, 2020

பிளாஸ்டிக் குடத்தை நீரில் நேராக அமுக்கி நீர் நிரப்ப முடிவதில்லை. ஏன்?

1. பிளாஸ்டிக் குடத்தை நீரில் நேராக அமுக்கி நீர் நிரப்ப முடிவதில்லை. ஏன்?

பிளாஸ்டிக் குடம் கனமின்றி லேசாக இருக்கும.  இது நீரில் மிதக்கிறது. வெறும் குடத்தை நேராகப் பிடித்து நீரில் அமுத்தும்போது   நீருக்குள் மூழ்கி இருக்கும் குடத்து பகுதியில் கன அளவுக்குச்  சமமான கன அளவுள்ள நீர் இடம் பெயர்கிறது.  இந்த நீரின் எடைக்கு சமமான எதிர்ப்புவி்ையானது குடத்தை மேல் நோக்கித் தள்ளும். இதுதான் மிதத்தல் விதி என்பதை நீங்கள் அறிவீர்கள் 

எடுத்துக்காட்டாக 10 லிட்டர் குடத்தை முழுவதுமாக இவ்வாறு நீர்ல் அமுக்கும்போது 10 கிலோகிராம் எடை விசையானது அதை மேல்நோக்கித் தள்ளுகிறது.  இதனால் பிளாஸ்டிக் குடத்தை நீரில் நேராக அமுக்கி நிறப்ப முடிவதில்லை.  இதே கனவுள்ள அளவுள்ள குடம்  பித்தளையில் 4 கிலோ கிராம் எடை கொண்டதாக செய்யப்பட்டிருந்தால் அதை மேல்நோக்கி அழுத்தும்  விசை 6 கிலோ கிராமத்தான் இருக்கும்.  இதில் நீர்  நிரப்புவது சற்று எளிதாக இருக்கும்

2. மாடு கன்று போட்டதும் பால் மஞ்சளாக இருப்பது ஏன்-

பாலூட்டி வகைகளில் வவ்வால் முதல் மனிதன் வரை உள்ள எல்லா விலங்குகளிலும் இந்தப் பண்பு உண்டு.  கன்று அல்லது குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால் சீம்பால் என்று பெயர்.  

இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சுரக்கும்.  இது கெட்டியாக இல்லாமல் நீரோட்டமாக இருக்கும். சீம்பாலில் குழந்தையின் உடலை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க கூடிய நோய் எதிர்ப்புப் பொருள்கள் நிறைய அடங்கியுள்ளன.  தாய்க்கு 25 ஆண்டுகளாக வந்த நோய்களுக்கான தடுப்பு மருந்தாக சீம்பால் வெளிவருகிறது.  குழந்தை பிறந்த இருபது நிமிடத்துக்குள் சீம்பாலை கண்டிப்பாக தரவேண்டும்.

3. தூங்கி எழுந்தவுடன் வயது வாயில் துர்நாற்றம் வீசுவது ஏன்? கண்ணில் புளிச்சை கட்டுவது ஏன்?

நம்முடைய முக்கிய உணவு கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இலை மாவு பொருள்களும் சர்க்கரை பொருட்களுமே ஆகும்.  வாய் குழியில் உள்ள ஏராளமான பாக்டீரியா சர்க்கரை பொருள்களை சிதைத்து அமிலத்தை உண்டாக்கும். 

இவை பற்களின் மேல் மெல்லிய படலமாக படிந்து இருக்கும். தூங்கி எழுந்தவுடன் ஒருவருக்கு படத்தின் வாய் துர்நாற்றம் அடிக்கும் வாய்ப்பு உண்டு. மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டுவது போன்ற வாய் துர்நாற்றம் பற்களினால் மட்டுமே வருவதில்லை.  இது ஒரு நோயின் அறிகுறியே, இத்தகைய துர்நாற்றம் மூக்கு மற்றும் காற்றுக் குழிவுகள் வாய் பற்கள் கழிவுகள் இரைப்பை கல்லீரல் நோய் சிறுநீரக செயலிழப்பு உணவுக் குழல் மூச்சுக் குழல் நுரையீரல் நீர் கட்டி தொண்டை அழற்சி ஆகிய பல நிலைகளில் உண்டாகலாம்.

 ஈறுகளில் இருந்து ரத்தம் கசியும் அலற்சியும் அடிபட்ட காயங்களும் கட்டிகளும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.  சொத்தைப் பற்கள் சீழ் கட்டிகள் பற்கள் இடையே சிக்கிய உணவுப் பொருட்கள் செயற்கை  பற்களின்  அசுத்தங்கள்  அசுத்தம் படிந்த நாக்கு ஆகியவையும் காரணமாக இருக்கலாம் 

தனிநபர் சுகாதாரம் வாய் சுகாதாரம் சாப்பிட்ட முன்பும் சாப்பிட்ட பின்பும் காலையிலும் இரவிலும் பற்களை முறையாக தேய்த்தல் ஆகிய நற்பழக்கங்கள் வாய் துர்நாற்றத்தை தவிர்க்க உதவும். கண்களில் புழைச்சை கட்டுவது எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. கண்களில் ஓரளவு தொற்றுக்கிருமிகள் உள்ளவர்களுக்கு தூங்கிய எழும் நிலையில் அழுக்கு சேரும். கண்ணீர் சுரப்பிக்கு அருகில் இமைகளின் விளிம்பில் உள்ள ஒரு வித எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டினால் பீழை உருவாகின்றன. இது தூசுகளை தொற்றுகளை  அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

குளவி இனப்பெருக்கம் செய்வது எவ்வாறு? பச்சை நிற புழுவை ஏன் எடுத்து செல்கிறது?

தொகுதி கணுக்காலிகள் வகையில் குழவி வரிசைப் படுத்தப்படுகிறது. இதே வரிசையை சார்ந்த எறும்புகள் தேனிக்கள் போன்றவைகளும் இனப்பெருக்கம் செய்கின்றன.  இனப்பெருக்கம் முட்டை முட்டை புழு கூட்டுப்புழு வளர்ச்சி பெற்ற போலவே ஆகிய முழு உருமாற்றம் நிலைகளை கொண்டது.

ஆண் குழவியின் கலவியின் மூலமாக பெறப்பட்ட விந்துகளிலிருந்து கரு முட்டை உருவாகிறது. இதனை ராணிக் குழவி புதிதாக கட்டப்பட்ட அரைகள்ல் இடுகிறது.   முட்டையிலிருந்து வெளிவரும் முட்டை புழு வெண்மையாகவும் புழு போன்றும் தோன்றும். முழு வளர்ச்சி அடைந்து கூட்டுப் புழுவாக மாறுகிறது.  அப்போது தன்னை சுற்றி வாயில் சுரக்கும் திரவத்தை கொண்டு கூட்டிடணை அமைக்கிறது.  பிறகு இது வளர்ச்சி பெற்ற குழவியாக மாறுகிறது. தங்கள் இளங்குழவிகளுக்கு தேனோ மகரந்தமோ கொண்டு உண்பிக்காமல் புழு பூச்சிகள் முதலிய உயிரிகளை உணவாக தருவதால் குழவிகள் தேனிகளிலிருந்து  வேறுபடுகின்றன.

No comments:

Post a Comment