நீரிழிவு நோயும் கண் பாதிப்பும் : விளக்கமாக பார்ப்போம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 1, 2020

நீரிழிவு நோயும் கண் பாதிப்பும் : விளக்கமாக பார்ப்போம்

நீரிழிவு நோயும் கண் பாதிப்பும் : விளக்கமாக பார்ப்போம்

நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் ஏராளமான சா்க்கரை வெளியாகி அதன் மூலம் உடல் சக்தி வீண் விரயமாகி கொண்டே இருக்கும்.  நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு மிகவும் பிரச்சினைக்குரிய ஒன்றாக விடுகின்றது 

விரும்பியவாறு எல்லாம் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் உணவை உண்ண முடியாது.  விரும்பிய அளவுக்கு அதிகமாக உணவை உண்ணக்கூடாது 

நீரிழிவு நோயாளி உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் நோயால் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளேயே மரணத்தின் வாயிலில் தள்ளிவிடும்.  ஆகவே நீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய விலக்கக் கூடிய உணவு வகைகள் குறித்து சுருக்கமாக விளக்குவோம். 

சர்க்கரை வெல்லம் போன்ற இனிப்புப்பொருள்கள் சேர்ந்த பலகாரங்கள் பருப்பு வகைகள் சோயா பாலினால் தயாரிக்கப்பட்ட பண்டங்கள் கடலை மொச்சை கெட்டியான சாம்பார் குழம்பு வகைகள் உருளைக்கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற மாவுச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை முடிந்த அளவுக்கு விலக்கிவிட வேண்டும்.

ராகி கேழ்வரகு பல வகையிலும் சிறந்த உணவாகும் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம் முருங்கை கீரைக்கு சர்க்கரையை குறைக்கும் சக்தி உண்டு.  

இது போன்று நீர் ஆரைக்கீைரயும் நீரிழிவு  நோயாளிகளுக்கு நல்ல  உணவாகும்.

ஒருநாள் முருங்கை கீரையும் மறுநாள் நீர் ஆரைகீரையுமாக  தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.  மாங்கொட்டை கீழாநெல்லி வேர் பொடி என அழைக்கப்படும்.  வேப்பங்கொழுந்து பசலைக்கீரை வாழைப்பூ வாழைத்தண்டு வாழைப்பூ முள்ளங்கி இவற்றை உணவில் ஏதாவது ஒரு உருவத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

மாவிலை வேப்பங்கொழுந்து முள்ளங்கி போன்றவற்றை பச்சையாக உண்ண வேண்டும். நெடுநாள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்கள் நிச்சயமாக கெடும் வாய்ப்பு உள்ளது.  நீரிழிவு நோயினால் கண்களுக்கு ஆபத்து ஏற்படலாம்.  கண்களை  மேலும் கீழுமாக பார்க்க உதவும் நரம்புகள் கெட்டுப்போய் கண் வாத நோய் வரும் வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோய் உள்ளோர் கண்களை மேலும் கீழுமாகவும் அல்லது பக்கங்ளிலோ பார்க்க முடியாமல் துன்பப்படுவார்கள்.

இது போன்ற நோய் இளம் வயதிலேயே வந்துவிடும். கண்ணில் உள்ள நரம்பு பகுதியாகிய ரெட்டினா எனப்படும் உள்விளித்திரையில் மாறுதல்கள் ஏற்பட்டு கண்ணில் உள்ளே உள்ள ஜெல்லியாகிய VITREOUS திரவத்தில் ரத்த கசிவு ஏற்பட்டு பார்வை இழக்கும் அபாயம் உண்டு.

விழித்திரை விலகியும் பார்வையை இவர்கள் இழக்கலாம். இவற்றுள் மூன்றாவதாக கூடிய ரெடினா எனப்படும் உள் விழித்திரை கெடுவதுதான் மிகவும் ஆபத்தானது.

 ஒரு பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணின் முன்னே உள்ள பல பாகங்களை கடந்து கண்ணில் உள்ள கண்ணின் உள்ளே நரம்புப் பகுதியாகிய ரெட்டினாவில் விழும்.   இந்த ஒளிக்கதிர்கள் மின்கதிர்களாக மாற்றப்பட்டு கண்ணின் நரம்புகள் மூலமாக மூளையை அடைந்து மூளையினால் அப்பொருள்  எப்பொருள் என பார்க்கப்படுகின்றது.

நீரிழிவு நோய்  கண்ணின் இந்த  முக்கிய நரம்பு பகுதியாகிய ரெட்டினாவைத்தான் கெடுத்து ஒரு மனிதனின் பார்வையை கெட வைக்கிறது.  குறை நோயினால் பார்வையை இழந்தவர்கள் தங்கள் பார்வையை அறுவை சிகிச்சை மூலமாக பெறலாம்.

ஆனால் நீரிழிவு நோயினால் அவ்வாறு உள்விழித்திரையாகிய ரெட்டினா  கெட்டு பார்வையை இழப்பவர்கள் தங்கள் பார்வையைத் திரும்பப் பெற இயலாது.

 நீரிழிவு நோயினால் கண் நரம்ப பகுதி ஏன் பாதிக்கப்படுகிறது என்ற வினா உங்கள் மனதில் எழலாம்.  பல லட்சக்கணக்கான நுண்ணிய நரம்பு கதிர்களை தன்னுள் கொண்டு உள்ள பகுதிதான் கண்ணின் உள்ளே அமைந்துள்ள உள்விழித்திரை பகுதி.

இந்த லட்சக்கணக்கான நரம்புக்கு தேவையான சக்தியை பெற உதவும் வகையில் கண்ணின் இப்பகுதியில்தான்  அதிகமான ரத்த ஓட்டம் இருந்துவருகிறது.

ஆயிரக்கணக்கான மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் நுண்ணிய நரம்புகளுக்கு சக்தியை அளிக்க உதவும் வகையில் நரம்புகளுடன் பின்னிய இபகுதியில் அமைந்துள்ளது.

நீரிழிவு நோய் நெடுநாள் உள்ள மக்களுக்கு சர்க்கரை ரத்தத்தில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பதால் ரத்தக்குழாய்களில் சில மாறுதல்களை சர்க்கரை உண்டுபண்ணும்.

இவற்றுள் குறிப்பிடத்தக்கது சிறிய ரத்தக் குழாய்களில் அடைப்பினை உண்டுபண்ணுவதுதான். 

புதிதாக உருவாகும் நுண்ணிய இந்த குழாய்களை பலமான ரத்தக் குழாய்கள் ஆக இராமல் மெல்லிய குழாய்களாக சீக்கிரமே உடைந்துவிடும் . ரத்தக்குழாய்கள் ஆக இருக்கும். இந்த புதிய ரத்தக்குழாய்கள் அடிக்கடி வெடித்து விடுவதால் இரத்தக் கசிவு அதிகமாக ஏற்பட்டு இரத்த கசிவு கண்ணின் நரம்பு பகுதியையும் தாண்டி அதற்கு அருகாமையிலுள்ள விக்டரியஸ் எனப்படும் ஜெல்லி போன்ற திரவத்தை கலந்து பார்வையை மறைக்கும்.

இவ்வாறு அடிக்கடி புதிய ரத்தக் குழாய்கள் வெடிப்பதால் நீரிழிவு நோய் உள்ளோர் நிரந்தரமாக பார்வை இழக்க நேரிடும். நம் உடலின் பல்வேறு பாகங்களில் அடிபடும் போது சில நாட்கள் கழித்து அடிபட்ட புண் ஆறிவிடும் உதாரணமாக கையில் அந்த புண் ஆறும்போது அது தழும்பாக உருவாக்கும் இதுபோலவே கண்ணில் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தக் கசிவு ஜல்லியில் உருவாகும்.  இந்த ரத்தக் கசிவு சில நாள்கள் கழித்து சிறிது சிறிதாக குறைந்து விடும். ரத்தக் கசிவு குறைவதால் பார்வை இழந்தவர்கள் மறுபடியும் சிறிது சிறிதாக தங்களது பார்வையை பெறுவார்கள்.

 ஆனால் ரத்த கசிவு மறையும் பொழுது கசிவு ஏற்பட்ட பகுதிகளில் ஒரு தழும்பு போன்ற பகுதியினை (STRANDES)  கண்களில் (VITREOUS) ஜெல்லிப்  இப்பகுதியில் இது உருவாக்கும். கண்ணில் பின்னே உள்ள (VITREOUS)  உள்விழித்திரை படலத்திற்கும் அதற்கு உள்ளே உள்ள திரவத்திற்கும் நடுவே   இம்மாதிரியான தழும்புகள் நீரிழிவு நோயினால் ரத்தக் கசிவு ஏற்படுவதற்கு உருவாகும்.

 நாள்பட நாள்பட இந்த தழும்புகள் சுருங்கும் பொழுது  அது உள் விழித்திரை இழுக்கப்படுவதால் திடீரென உள்விழித்திரை தனது இடத்தை விட்டு விலகி பெரு அபாயமான  உள்விழித்திரை விலகல் எனப்படும்  ரெட்டினா டிட்டாச்மெண்ட் என்ற அபாயத்தை  உருவாக்கி பார்வையை முற்றிலுமாக கெடுக்கும்.  நீரிழிவு நோயினாலும் உள்விழித்திரை விலகல் நோய் கண்களில் ஏற்படும் பொழுது மெதுவாக மக்கள் தங்கள் பார்வையை நிரந்தரமாக இருப்பார்கள்.  ஏனெனில் உன் விழித் திரையில் இருந்து தான் கண்ணின் ஆரம்பமாகி நரம்புகள் முளையினை மூளையை அடைந்து ஒரு பொருள் என்ன பொருள் எனப் பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment