கற்கை நன்றே || கற்றலின் அவசியம் || கற்பவர்கள் வெற்றிப் பெறுகிறார்கள் || தன்னம்பிக்கை வரிகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, July 12, 2020

கற்கை நன்றே || கற்றலின் அவசியம் || கற்பவர்கள் வெற்றிப் பெறுகிறார்கள் || தன்னம்பிக்கை வரிகள்

கற்கை நன்றே || கற்றலின் அவசியம் || கற்பவர்கள் வெற்றிப் பெறுகிறார்கள் || தன்னம்பிக்கை வரிகள்

நாம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் போதே வெற்றி கதவுகள் திறந்து விடுகின்றன.  இங்கு முழுமை பெற்ற மனிதன் என்பவன் யாருமில்லை. கடைசிவரை கற்றுக் கொண்டே இருப்பவர்கள்தான் வாழ்க்கையை வெல்பவர்கள் ஆக இருக்கிறார்கள். 

கற்றது கைமண்ணளவு 

அவ்வையின் அமுத மொழி. காலம் காலமாக கற்றுக் கொண்டு இருப்பவர்கள் கூட முழுமையாக இதுவரை இந்த உலகத்தையும் மனிதர்களையும் படித்ததில்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை. ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் ஒரு நேர்முகத் தேர்வில் நிராகரிக்கப் படுகிறீர்கள். உங்களைப் போலவே வேறு ஒரு மனிதர் அந்த பதவியில் இணைகிறார் என்றால் பொறாமை படாதீர்கள். 

அவர்களை விமர்சிக்காதீர்கள். அதற்கு பதிலாக உங்களோடு நீங்களே பேசுங்கள். உங்களை நீங்களே விமர்சியுங்கள். எந்த விதத்தில் நாம் அந்த பதவிக்கு ஒற்றுப் போகவில்லை என்று உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். அல்லது அந்த வேலையை செய்து பாராட்டு வாங்கியவரிடம், எப்படி செய்தீர்கள்? என்று கேள்விகள். நம்மை நாமே சரி செய்து கொள்ளும் போது நமக்கான வாழ்வு சரியாக அமைந்துவிடும். 

கந்தையானாலும் கசக்கிக் கட்டு 

என்பது நம் மூதாதையரின் மொழி. ஒரு உண்மையை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதில் ஆயிரம் விஷயங்கள் உங்களுக்குத் துணை நின்றாலும் உங்கள் உடை தரும் தன்னம்பிக்கையை வேறு யவராலும் தர முடியாது. நாம் ஆயிரம் தான் உடை அணிந்தாலும் அந்த பட்டு வேட்டி பட்டு சட்டை கட்டும் போது நமக்குள்ளே ஒரு தமிழன் என்கின்ற ஒரு வெறி, ஒரு ஆனந்தம், ஒரு பெருமை வரும் அல்லவா ?அதுதான் உடைத்தரும் ஒரு தன்னம்பிக்கை. 

மிகப் பெரிய தலைவர்கள் அனைவருமே தங்களுடைய உடை விஷயத்தில் கவனம் செலுத்தி உள்ளார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மை, உடைகளில் வாயிலாக அரசியலும் நடக்கிறது என்பது வேறு விஷயம். பாரதி மகாத்மா காந்தி சிதம்பரனார் கொடிகாத்தகுமரன் நேரு அப்துல் கலாம் என வரலாற்றுத் தலைவர்கள் அனைவருமே நினைத்த மாத்திரத்தில் நமது கண்முன் வந்து போகிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் உடையும் ஒரு காரணம்.

அதற்கு என்று ஐயாயிரம் பத்தாயிரம் போன்ற அளவில் உடை எடுக்காமல் அனைவரும் கண்ணியத்தோடு நம்மை அணுகும் வகையிலான ஆடை உடுத்துவதும், நம்முடைய தனித்துவத்தை அழகாக வெளிப்படுத்தும். 

நம்முடைய ஒருநாளில் நான் சொல்லப்போகும் மூன்று விஷயத்தையாவது  நீங்கள் செய்திருக்க வேண்டும். ஒருவருக்கு உதவி, ஒருவருக்கு பாராட்டு, ஒருவருக்கும் மன்னிப்பு.  இந்த வாழ்வு கற்றுக்கொள்வதற்கு ஏராளமானவற்றை தந்து கொண்டே இருக்கிறது. நமக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத நபர்கள் யாருக்கோ செய்யும் உதவிகள், மிகவும் உன்னதமானவை. 

அவை எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்யக் கூடியவை. அத்தகைய உதவிகளை செய்ய மனம் பழக வேண்டும். அடுத்து யாராவது ஒருவரை பாராட்ட வேண்டும் அதற்கு என்று ஒரு பெரிய மேடை போட்டு, அழைப்பிதழ் அடித்து, பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதில்லை. நமது தங்கை அம்மாவோ அப்பாவோ நண்பர்களோ என யாராக இருந்தாலும், நமக்காக செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்காக அவர்களை நாம் பாராட்டலாம். 

மன்னிப்பு 

அடுத்ததாக மன்னிப்பு ஏதாவது ஒரு சாதாரண விஷயத்திற்காகவும் அல்லது வார்த்தை தவறி விட்டதற்காக மன்னிப்புக் கேளுங்கள். இவ்வாறு செய்யும்போது ஒரு சாதாரண வாழ்வில் ஒரு அழகியலோடு அழகிய வாழ்வாகிறது. 

களவும் கற்று மற என்பது ஒரு தமிழ் பழமொழி. களவு என சொல்லப்படும் திருட்டாக இருந்தாலும் அதை கற்று, மறந்துவிடு. தீய விஷயமாக இருந்தாலும் அது என்னவென்று தெரிந்து கொள். ஏனென்றால் நாளை நீ பாதிக்கப்படும் போது அந்த தீயவற்றை சரிசெய்யக்கூடிய நல்லவற்றையும் அதில் நீ தெரிந்து இருப்பாய்,  எனவே களவும் கற்று மற வேண்டும்

குடிசைகள் இருக்கும் ஒருவனை கோபுரத்திற்கு அழைத்துச் செல்வது அவனுடைய செல்வம் அல்ல அவனுடைய அறிவு. அவனுடைய அறிவு எங்கிருந்து வருகிறது? அவன் கற்றுக் கொள்வதில் இருந்து வருகிறது. ஒரு இரண்டு வயது குழந்தைகள் இருந்து அறுபது வயது பெரியவர்கள் வரை அனைவரிடமும் பாரபட்சமில்லாமல் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். 

இந்த பதிவை படித்துகொண்டிருக்கம் இந்த ஒரு நிமிடத்தில் நீங்கள் சத்தியம் செய்து கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு, ஒரு நல்ல விஷயத்தையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அறிவின் தேவைதான் கற்றல். கற்றலின் அவசியம் அறிவு. அறிவும் கற்றலும் மாறி மாறி உங்களிடம் இருக்கும்போது உங்களுக்கான தனித்துவமான அமைப்பு இந்த சமுதாயத்தில் இயற்கையாகவே அமைந்து விடும். இறுதியாக கற்பவைகள் எல்லாம் பாரங்கள் அல்ல. ஆனாலும் கற்றுக்கொள்ளுங்கள். கற்கை நன்றே. 

No comments:

Post a Comment