நன்மைத் தரும் நாட்டு வைத்தியம் : மருத்துவ குணம் நிறைந்த சில கனிகள் மற்றும் காய்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, July 13, 2020

நன்மைத் தரும் நாட்டு வைத்தியம் : மருத்துவ குணம் நிறைந்த சில கனிகள் மற்றும் காய்கள்

நன்மைத் தரும் நாட்டு வைத்தியம் : மருத்துவ குணம் நிறைந்த சில கனிகள் மற்றும் காய்கள்.

துளசி 

துளசியில் வெண் துளசி கருந்துளசி செந்துளசி கல் துளசி முள் துளசி என பல இனங்கள் உள்ளன.

துளசி இலைகளை அவித்து சாறு பிழிந்து 10 மில்லி காலை மாலை என இரு வேளை கொடுத்து வர பசி அதிகமாகும்.

இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும்.

ரத்தம் சுத்தமாகும் தாய்ப்பால் பெருகும் துளசி இலைச்சாறு 10 மில்லி தேன் 5 மில்லி வெந்நீர் 50 மில்லி கலந்து காலை மாலை என இரு வேளை நாற்பது நாட்கள் சாப்பிட இருதய நோய் குணமாகும்.

துளசி இலை சாறு வில்வ இலை சாறு 200 மில்லி எடுத்து அத்துடன் 20 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி சாறு சுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்குத் தேய்த்து வர சைனஸ் தொல்லை தீரும்.

துளசி சாறு வெங்காயச் சாறு எலுமிச்சம் பழச்சாறு இவற்றை சம அளவு எடுத்து காய்ச்சி 15 முதல் 30 மில்லி வீதம் உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

தவிர துளசி விதையைப் பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர வெள்ளை வெட்டை நோய்கள் குணமாகும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உட்கொண்டுவர பிரசவம் எளிதாகும்


திராட்சை 

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று இதில் வைட்டமின் பி1 பி2 பி3 பி6 பி12 சி இரும்புச்சத்து பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்கள் உண்டு

இதயம் பலவீனமாக இருந்தாலும் அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும் திராட்சைப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக அருந்தி வர இதயம் பலப்படும்

படபடப்பு நீங்கும் உடல் வறட்சி பித்தம் நீங்கும் ரத்தம் தூய்மை பெறும் இதயம் கல்லீரல் மூளை நரம்புகள் வலுப்பெறும் செரிமானக் கோளாறுகள் நீங்கும் உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர மலச்சிக்கல் தீரும் மயக்கம் நீங்கும் உலர்ந்த திராட்சை பழங்களை இரண்டாக பிளந்து இரவில் நீரில் ஊறப்போட்டு காலையில் அதை பிசைந்து பிசைந்து எடுத்து சுத்தமான நீரில் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறுகள் நீங்கும்.


இதனால் குடல் புண் ஆறும் கல்லீரல் மண்ணீரல் கோளாறு நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும்


மாம்பழம் 

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம் தான் இது உடலுக்கு உஷ்ணம் ஏற்படுத்துவதுடன் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது மேலும் மாங்காய் தோலில் உள்ள சத்துப் பொருட்கள் சில புற்று நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது மாங்காய் தோலில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை மருந்தாக பயன்படும் மாங்காய் தொழில் ரெஸ்வரெட்ரால் என்ற பொருள் அதிகமாக உள்ளது இது தான் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து கொலஸ்ட்ரால் வராமல் தடுக்கிறது மேலும் அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது



கொய்யாப்பழம்

விக்கல் நிற்கும் இரும்பு சத்தும் சுண்ணாம்பு சத்தும் கிடைக்கும் மலசிக்கல் தீரும்

தக்காளிப்பழம்

கண்பார்வை வளம் பெறும் பல் உறுதி பெறும் ரத்தத்தில் அணுக்கள் பெருகும் ரத்தம் சீராக நோய் வராமல் தடுக்கும்


மாதுளை

மாதுளையில் இனிப்பு மாதுளை புளிப்பு மாதுளை பூ மாதுளை என்று 3 வகைகள் உள்ளன மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது இது ரத்த உற்பத்திக்கும் ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவும்.

அடிக்கடி மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் பித்தநோய்கள் வரட்டு இருமல் வயிறு குடல் புண்கள் குணமாகும் மேலும் ஈரல் இதயம் வலுவாகும் ஞாபக சக்தி அதிகரிக்கும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும் மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை நீங்கும்.

மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும் மாதுளம் பிஞ்சை சுடுநீரில் அல்லது தயிரில் கலந்து குடிக்க சீதபேதி கழிச்சல் குணமாகும் மாதுளம் பிஞ்சை குடிநீரில் அல்லது தயிரில் கலந்து குடிக்க சீதபேதி கழிச்சல் குணமாகும்.

மாதுளம் பூ மொக்கை நன்கு காய வைத்து பொடியாக செய்து இருமல் ஏற்படும்போது சிறிதளவு சாப்பிட இருமல் தணியும் மாத உடம்புடன் சம அளவு வால் மிளகு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை மாலை இருவேளையும் 4 முதல் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு கருப்பை கோளாறு மாதவிலக்கை சீராக்கும்


பப்பாளி

பப்பாளி ஜீரண சக்தி அதிகரித்து அஜீரணத்தை அஸ்தமனமாகும் செரிமானம் மாத்திரைகள் கூட எந்த பப்பாளி பழத்தின் பாலில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

பப்பாளியின் புரதத்தை செரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் உடையது. படுக்கும் முன் பப்பாளியை சாப்பிட்டு படுத்தால் காலையில் நன்கு மலம் வெளிப்படும் பப்பாளி பழம் நாவற்பழம் காலை 11 சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி நரம்பு வலிகள் காணாமல் போகும்.

முகப்பரு உள்ளவர்கள் பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும் இது முகப்பருக்களின் நீக்கி முகப் பொலிவைக் கூட்டி அழகை வெளிப்படுத்தும்

வாழைப்பழம்

முக்கனிகளுள் மூன்றாவது கனி இறை பூஜையில் வைக்கப்படும் கனி அதிக விலை இல்லாத அற்புத கணினி அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண் வராது உடல் உடல் பளபளப்பாகவும் பெண்களுக்கு மாதவிலக்கு சீராக வரும். வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும் இத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும் வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்

இலந்தைப்பழம் வயிற்றுப்போக்கு சீதபேதி மலச்சிக்கல் நீரிழிவு நோய் தீரும்

பலாப்பழம் 

முக்கனிகளில் இரண்டாவது கனியாக பல அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது இது உடல் உஷ்ணத்தை குறைத்து பித்த மயக்கம் கிறுகிறுப்பு ஆகியவற்றை குணமாக்கும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கிணங்க பலாப்பழம் அளவுடன் உண்ணவேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும் வாந்தியையும் உண்டாக்கிவிடும் பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும் வாத நோய் பைத்தியம் போன்றவை நீங்கும்.

பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை வயிற்றுவலி போன்றவை ஏற்படும் சொறி சிரங்கு கரப்பான் கோழைக்கட்டு இருமல் இரைப்பு வாத நோய்கள் ஏற்படும் பலா மரத்தின் வேரை அரைத்து சொறி சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும் உடல் வளர்ச்சி குடல்வால் அழற்சி எனப்படும் அப்பன்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது

அன்னாச்சி பழம்

அதிமதுரப் பொடி சந்தனத்தூள் சமன் கலந்து 1 கிராம் வீதம் எடுத்து பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி நிற்கும் உறுப்புகளில் புண் ஆறும் 1 அல்லது 2 கிராம் தேனில் குழைத்து உண்ண இருமல் மூலம் தொண்டை கரப்பு நரம்புத்தளர்ச்சி நீங்கும் இந்த பழத்தை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும் ரத்தம் ஊறும் பித்தம் போக்கும் தீராத தாகம் அடங்கும் உடல் பளபளப்பாகும்


எலுமிச்சை

எலுமிச்சை கனிகள் காட்டிலுள்ள சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும் ஸ்கர்வி நோய் வைட்டமின் சி குறைவினால் வரும் நோய் எதிரானது பசி தூண்டுவி தசை இறுக்கி ஜீரண ஊக்குவி வயிற்று வலி தீர்க்கும் வாந்தி பித்த மயக்கம் வாந்தி வாய் குமட்டல் நீர்வேட்கை வெறி கண் நோய் காது வலி போன்றவற்றை குணப்படுத்தும்.

தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு என்று கூறினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும் எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம் வெறி உடல் உஷ்ணம் குறையும் நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும் எலுமிச்சை பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும் இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும் நீர் சுருக்க…

ஆப்பிள் பழம்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள் பற்கள் வலுவடையும் குடற் கிருமிகள் ஒழியும் கல்லீரல் சுறுசுறுப்பாகும்

பூசணிக்காய்

வீடுகளில் பொது இடங்களில் நடைபெறும் விசேஷ நாட்களில் போது திருஷ்டியாக உடைக்கப் படுவதும் பூசணிக்காய் திருஷ்டி கழிக்க மட்டும் என்று சமையலிலும் இடம் பெற நமக்கு தெரியாத பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது பூசணிக்காயை கறியாக சமைத்து உண்டால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.  சிறுநீர் பெருகும் சிறுநீர் எரிச்சல் தணியும் பூசணி விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையல் மற்றும் மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது

சுரைக்காய்

சுரைக்காயில் நீர் சத்து மிகுந்தது இதில் வைட்டமின் பி இரும்புச்சத்து புரதம் சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது சுரைக்காய் பித்தத்தை போக்கும் குணமுடையது விதைகள் ஆண்மையை பெருக்கும் சுரைக்காய் சட்டியில் வைத்து கட்டி வர வெப்பத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும் சேர்த்து சமைத்து உண்டு வந்தாலும் அல்லது கொடியை நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக்கி குடித்து வந்தால் உடலில் தேங்கிய நீரை வெளியாக்கி உடல் வீக்கம் குறைக்கும் சுரைக்கொடி நீர்முள்ளி வெள்ளரி விதை இவை மூன்றையும் சம அளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல் கல்லடைப்பு போன்றவை குணமாகும்

சுண்டைக்காய்

இது கோழையகற்றியாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும் பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு ஈளை காசம் இருமல் மூலச்சூடு மூலக்கடுப்பு திமிர்ப்பூச்சி முதலியன தீரும் சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்ச்சளி ஆஸ்துமா காச நோய் திருடன் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

 சுண்டை வற்றல் மிளகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம் சுவையின்மை மலக்குடல் கிருமிகள் மூலம் ஆகியவை தீரும் ஓடு மாம் பருப்பு கறிவேப்பிலை சீரகம் வறுத்து இடித்து சூரணம் காலை மாலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வர பேதி மூலம் பசியின்மை மார்புச் சளி தீரும்

வெள்ளரிக்காய்

வெயில் காலத்திற்கு இதனை அப்படியே சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாக்கும் மேலும் வெள்ளரிச்சாறு எலுமிச்சைசாறு இரண்டையும் கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும் தவிர வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி தேன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி வர பருக்கள் மறைந்து நல்ல நிறத்தையும் கொடுக்கும்

மிளகாய்

மிளகாய் வற்றல் நெல்லி வற்றல் இரண்டையும் கரிசலாங்கண்ணி சாறு விட்டு அரைத்து நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வர கண் பார்வைத் தெளிவடையும் மிளகாயை நீர்விட்டு காய்ச்சி அதனுடன் இஞ்சி சாறு கலந்து தகுந்த அளவில் குடித்து வர வயிற்றுவலி உப்புசம் தீரும்

மாசிக்காய்

மாசிக்காய் ஜாதிக்காய் லவங்கம் மூன்றையும் பொடி செய்து வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை முகத்தில் போட்டு நன்கு தேய்த்து விட்டு கழுவினால் முகத்தில் மாசு மருவற்ற அழகை பெறலாம் மாசிக்காயை நீர் விட்டு அரைத்து அருந்தினால் நல்ல தூக்கம் வருது உடன் குடல் புண் ஆறும்

No comments:

Post a Comment