உங்கள் அறிமுகம் தான் உங்கள் அடையாளம் - தன்னம்பிக்கை கட்டுரை
எமக்குத் தொழில் கவிதை. நாட்டிற்கு உழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல். இதுவே பாரதி தன்னை அறிமுகம் செய்து கொண்ட வரிகள் . எத்தனை ஒரு எளிய அறிமுகம் அதே நேரத்தில் எத்தனை வலிமையான அறிமுகம் பாரதி பற்றிய உலகத்திற்கு அறிமுகம் இதுதான். அவனுடைய தொழிலை கொண்டுவிட்டு அடுத்த இரண்டே வரிகளில் நாட்டிற்கு உழைப்பேன். இமைப்பொழுதும் சோர்வு அடையாமல் இருப்பேன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். உண்மையில் தன்னை ஒரு கவிஞராக மட்டுமின்றி தன்னை ஒரு கவிராஜன் ஆகவே அறிமுகம் செய்து வாழ்ந்து வந்தார்.
39 வயதிற்குள் அனைவரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்து மறைந்தவர் பாரதி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவன் பெயரை உச்சரிக்காமல் இங்கே தமிழ் வரலாறு எழுதப்படாது என்ற வகையில் வாழ்ந்து மறைந்தவர் பாரதி. தன்னை அறிமுகம் செய்வது என்பது ஒரு வகையான கலை.
காலில் ஒரு வடு கணுக்காலில் ஒரு மச்சம் மற்றும் கையில் ஒரு அம்மை தழும்பு உங்களை எவ்வாறு அறிமுகம் செய்து கொண்டீர்கள் என்றால் அது உடல் ரீதியான அடையாளம். அது உங்கள் மனதினை அறிமுகம் செய்தார்கள் உயர்ந்த உங்கள் சொற்களும் செயல்களும் மே உங்களை அறிமுகம் செய்யும்
ஒவ்வொரு மனிதரிடமும் உங்களை அறிமுகம் செய்வதில் நீங்கள் உங்களை உயர்வானவர் ஆகவே எண்ணங்கள் அடுத்தவரை சுட்டிக்காட்டினார்கள் நான் இந்த வகையில் சொந்தம் என்பதெல்லாம் ஒருவகையில் உங்களுக்கு ஒரு சிறிய விஷிட்டிங்க் கார்டு போன்ற அறிமுகத்தை தரும்.
இந்த உலகத்தில் தலை சிறந்த தலைவர்கள் பலரும் தனது திறமைகளையும் தாண்டி ஏதோ ஒரு தனித்த அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றால் அது மறுக்க முடியாத உண்மை. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய பிறந்த நாள் உங்களுடைய உண்மையான பிறந்த நாள் இல்லை முதன் முதலாக உங்கள் திறமை என்று வெளிப்படுகிறதோ அன்றுதான் உங்களுடைய முதல் பிறந்தநாள்.
தயக்கத்தை வென்றவர்களவர்களே இந்த உலகத்தில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள். விடுதலைக்கு போராடுவதே தேச துரோகம் என்று சொன்னார் அந்த துரோகத்தை நான் ஆயிரம் வரை செய்வேன் என்று பகத் சிங் 23 வயதில் தனது இன்னுயிரைத் தூக்குக் கயிறுக்கு காவு கொடுக்கும் கொடுக்கும் கடைசி நிமிடம் வரை ஒரு போராளியாகவே அறிமுகம் செய்தார் .
இவர் இந்த நாட்டின் தேசிய கவி என்ற காந்திக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாரதி, யாரையும் வணங்க ஹிட்லரையே வணங்க வைத்த செண்பகராமன். சுதேசி என்பதை ஓங்கி ஒலிக்கச் செய்து கடல் முழுக்க கம்பீரமாகப் கப்பலோட்டிய வ உ சி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்
இவர்கள் எல்லாம் வெறும் அடையாளங்களை மட்டுமே வைத்துக் கொண்டு வாழவில்லை. மாறாக அவர்களின் செயல்களால் உயர்ந்து நின்றார்கள.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே என்று ஒரு கம்பீரமான குரலில் சுவாமி விவேகானந்தர் சொன்னது அவரை மட்டுமின்றி இந்தியாவையே உலகம் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வாக மாறியது.
ஒரு உண்மை என்னவென்றால் அதற்கு முன்னர் அதே கூட்டத்தில் மூன்று நபர்கள் இது போன்று தங்கள் உரைகளில் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பும் பெருமையும் இவருக்கு கிடைத்தது என்றார் நிச்சயமாக சுவாமி விவேகானந்தரின் வலிமையும் மிக்க மனவுறுதி கிடைத்த வெற்றிதான் அது.
இன்றளவும் அவர் பேசிய உரைகள் எல்லாம் எடுத்துக் காட்டுகிறோம் என்றால் அது அவருடைய கம்பீரமான அடையாளத்திற்கான சான்றேயாகும். ஆரம்பத்தில் அவருடைய பேச்சைக் கேட்பதற்கு முன்பு அவருடைய உடை குறித்தும் தோற்றம் குறித்தும் ஏளனம் செய்தவர்கள் எல்லோரும் வாயடைத்துப் போனார்கள் என்பதே அவருடைய அடையாளத்திற்கு கிடைத்த வெற்றி.
நேற்று வரை நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதுவே நீங்களாக இருக்கிறீர்கள் நிச்சயமாக உங்களை நீங்கள் நம்பிக்கை நிறைந்த தலைவர்களாக மனதால் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அவமானங்களை அப்படியே ஏற்காமல் அவற்றை அனுபவமாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்காக செய்தவைகள் உங்களோடு மறைந்துவிடும். உலகத்திற்காக செய்தவைகள் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். இந்த உலகத்திற்காக உங்களை நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளுங்கள். உங்கள் அறிமுகம் தான் உங்கள் அடையாளம். உங்கள் அடையாளத்தை அறிமுகம் மூலம் வெளிப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment