ஸ்மார்ட் போனில் அலாரம் வைத்துவிட்டு மொபைல் போனை தலையணைப் பக்கத்தில் தூங்குபவரா நீங்கள்? உஷார் இந்த்ப் பதிவு உங்களுக்காகத்தான். - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 15, 2020

ஸ்மார்ட் போனில் அலாரம் வைத்துவிட்டு மொபைல் போனை தலையணைப் பக்கத்தில் தூங்குபவரா நீங்கள்? உஷார் இந்த்ப் பதிவு உங்களுக்காகத்தான்.

ஸ்மார்ட் போனில் அலாரம் வைத்துவிட்டு மொபைல் போனை  தலையணைப் பக்கத்தில் தூங்குபவரா நீங்கள்? உஷார் இந்த்ப் பதிவு உங்களுக்காகத்தான்.

நவீன காலத்தில் நம் அன்றாட வாழ்வின் தேவைகளில் ஸ்மார்ட்போனான முதன்மை இடத்தை பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாமல் நம் இயக்கமே இல்லை என்ற அளவுக்கு நம் மூளையானது ஸ்மார்ட்போனுக்கு நண்பன் ஆகிவிட்டது.

ஆனால் அந்த ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டில் நாம் தூக்கம் கெடுவது மட்டுமின்றி நம் உடலிலும் பல்வேறு வகையான மாற்றங்களை உண்டாக்குகிறது. தலையணையை கட்டிப்பிடித்து தூங்குவதில் போல ஸ்மார்ட்போனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு உறங்குபவர்கள் மிக எளிதாக காண முடிகிறது. 

அப்படி ஸ்மார்ட்போனை வாரி அணைத்துக்கொண்டாள் யாருக்குமே நல்லதல்ல. மொபைல் போன்களை கட்டிப்பிடித்துக்கொண்டு நெஞ்சில் வைத்துக்கொண்டு குறிப்பாக தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குபவரா நீங்கள்? இது முழுக்க முழுக்க உங்களுக்கான வீடியோ தொகுப்பு தான். இந்த பழக்கம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? மொபைல் போன்களை வைத்துக்கொண்டு உறங்கினால் புற்றுநோய் வருமா இந்த கேள்விக்கான மிகத்துல்லியமான பதிலோ அல்லது ஆய்வின் முடிவு கிடையாது. ஆனால் எலிகளின் மீது மொபைல் கதிர்வீச்சு வெளிப்படுத்தி நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் கிட்டத்தட்ட ஆம் புற்றுநோய்க்கான வாய்ப்பு உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனால் அது மனிதர்களுக்கு சாத்தியமா என்பது தெரியவில்லை. மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷனானது மூளை மற்றும் பிற உடல் பாகங்கள் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கலாம் என பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மொபைல்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் புற்று நோய் பாதிப்புகளை மட்டுமன்றி இதயத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளது.  குறிப்பாக மார்போடு மார்பின் அருகில் மொபைல் போன்களை வைத்து கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வு பீதியை கிளப்பியுள்ளது. நிச்சயமாகியுள்ளது. கதிர்வீச்சை மட்டுமே மொபைல்போன்கள் மீழவில்லை என்பதையும் தன்னுள் நெருப்பைக் கொண்டுள்ளது என்பதையும் நாம் உணரவேண்டும். பெட்டரினளில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதன் விளைவாக ஸ்மார்ட்போன் வெடிப்பு ஏற்பட்டு உங்கள் தலையணையில் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. 

இவ்வாறு ஸ்மார்ட்போன்கள் வெடித்து தூங்கிக் கொண்டிருக்கும் போதே பற்றி நாம் நிறைய கேள்விபட்டிருப்போம். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மொபைல் போன்களை உபயோகிப்பதால் நம் உறக்க சுழற்சியை மாறிவிடும் . இரவு என்பது நம் மூளைக்கும் நம் உடலுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம். அவ்வாறு ஓய்வே கொடுக்காமல் ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்றவற்றை பார்த்துக்கொண்டிருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வு குறையும். அதனால் உடல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி மன அழுத்தமும் உண்டாகும்.

தூக்கமின்மைக்கு முதல் மருந்து ஸ்மார்ட்போனை ஓரங்கட்டுவது தான்.  மொபைல் போன்களை தலையணை அருகில் வைத்து தூங்குவதற்கு காரணமாக காலை அலாரம் மட்டுமே என்றும் அதை ஒரு நியாயமான காரணமாகவும் சொல்ல வேண்டாம். இவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கும் என தெரிந்த பிறகும் ஸ்மார்ட்போன் அலாரத்தை உபயோகிப்பது நல்லது அன்று. அதனால் தூங்கும் நேரத்தில் ஸ்மார்ட் போன் உபயோகத்தை தவிர்ப்பதோடு ஸ்மார்ட்போன்களை நம் உடலின் அருகே வைத்துக்கொண்டு தூங்குவதையும் நாம் தவிர்க்க வேண்டும். 

No comments:

Post a Comment