பயணத்தின் போது மயக்கம் வாந்தி எதனால் ஏற்படுகிறது? குடிப்பவன் தள்ளாடுவது ஏன்?
5. பயணத்தின் போது மயக்கம் வாந்தி எதனால் ஏற்படுகிறது?
சாதாரண நேரங்களில் நம் உடம்பை சமநிலைப்படுத்தி கொண்டிருப்பது காதில் உள்ள வெஸ்டிபுளர் என்னும் அமைப்பு. நாம் பயணம் செய்யும் போது வாகனத்தின் வேகத்திற்கும் அசைவு களுக்கும் ஏற்றவகையில் நம் உடம்பும் நீளவாட்டத்திலோ குறுக்கு வாட்டத்திலோ செங்குத்தாகவோ அசைய நேரிடுகிறது. இந்த சமயங்களில் சிலரின் காதுகளில் உள்ள வெஸ்டிபுளர் அமைப்பு உடம்பை சமநிலைப்படுத்த சங்கடப் படுகிறது. இதனால் மூளையில் உள்ள வாந்தி நரம்புகள் தூண்டப்படுகின்றன. விளைவு நமக்கு பயணத்தின்போது வாந்தியும் அதைத்தொடர்ந்து மயக்கமும் வருகிறது.
4. குடிப்பவன் தள்ளாடுவது ஏன்?
ரத்தத்தில் மிகுதியாக கலக்கும் ஆல்கஹால் மூளையை பாதிப்பதால் மூளையின் செயல்பாடுகள் தளர்வடைந்து தள்ளாடல் நிகழ்கிறது.
3. நாம் அழும்போது மூக்கடைப்பு ஏற்படுகிறது. அழுகைக்கும் மூக்கடைப்புக்கும் என்ன சம்பந்தம்?
கண்ணீர் சுரக்கும் தண்ணீர் வெளியேற வாய்ப்பாக கண்ணுக்கும் மூக்குக்கும் இடையே நீர்ப்பை ஒன்று உள்ளது. கண்ணீர் கீழ் மேல் இமைகளில் உள்ள கண்ணீர் துளைகள் வழியே இந் நீர் பையை அடைந்து அங்கிருந்து மூக்கின் வழியே வெளியேறுகிறது. இயல்பான சுரப்பின் போது இப்படி வெளியேறும் நீரின் அளவு மிகக் குறைவாக இருப்பதால் அது தெரிவதில்லை. ஆனால் அழும்போது கண்ணீர் வெள்ளமாய் புறப்பட்டு இத்துளைகள் வழியே நீர் பையை அடைந்து மூக்கின் உள் நுழையும் போது மூச்சிழுப்புக்கு தற்காலிக தடை ஏற்படுவதால் மூக்கடைப்பு நேர்கிறது.
2. கருப்பாக உள்ள மனிதனின் தோல் போர்வையில் உள்ள திசுக்களை நீக்குவதன் மூலம் அவனை சிவப்பாக மாற்ற முடியுமா?
மனிதனின் தோலிலுள்ள மெலனின்களை அகற்றுவதால்அவன் சிவப்பாக மாற முடியாது. மெலனின் நிறமிகள் லட்சக்கணக்கில் இருப்பதால் அவற்றை அகற்ற முடியாது. சாத்தியமல்ல.
1. குளிர்காலத்தில் காதை மூடிக் கொண்டிருந்தால் குளிரைச் சற்று குறைவாக உணருவதன் காரணம் என்ன?
மனிதன் முழு உடை அணிந்திருக்கும் போது மூடப்படாத துவாரங்கள் காதுகளும் மூக்கும் துவாரங்கள் மட்டும். ஆகவே அதன் வழியாக குளிர் காற்று உட்சென்று குளிரை உண்டாக்குகிறது. அவைகளை மூடிவிட்டால் குளிர் குறைவாக உணரப்படுகிறது. மேலும் குளிர் உணர்வை மிகையாக உடனடியாக உணர்வு செவிகள் காதுகள் மற்றும் மூக்கின் நுனி கால் கை விரல்களின் நுனி ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகிறது ஆகவே அவை மூடப்பட்டால் குளிர் தெரியாது.
No comments:
Post a Comment