இஞ்சியின் மருத்துவ குணங்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, July 21, 2020

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

ஜிஞ்சிபெரஸ் என்ற செடியின் தண்டு கிழங்கு இஞ்சி ஆகும். மனங்கமழ் பொருட்களில் முக்கியமானது இதுவும் ஒன்றாகும். இதன் விஞ்ஞானப் பெயர் ஜிஞ்சிபெர் அஃபிஸினேல் ஆகும். இதன் குடும்ப பெயர் ஜிஞ்சிபெராசியே ஆகும். ஆண்டுதோறும் 50 நாடுகளுக்கு சுமார் 10,000 டன் அளவு இஞ்சி அனுப்பி வைக்கப்படுகிறது. உலக உற்பத்தி அளவில் பாதி அளவு இந்தியாவில் உற்பத்தியாகிறது. உற்பத்தியில் பாதி அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

நமது நாட்டில் உற்பத்தியாகும் இஞ்சியில் 70% கேரள மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்றுமதி பொருள்களில் இஞ்சி மூன்றாவது இடத்தை வகிக்கிறது. மிதவெப்பமான காற்றில் ஈரம் கலந்த பருவநிலையே ஏற்றதாகும். 

கடல் மட்டத்திற்கு சமமான பூமியிலும் 1500 மீட்டர் வரை உயர மலையிலும் இஞ்சி பயிராகிறது. அதிக மழையுள்ள இடங்களிலும் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் பயிராகிறது. மணல் சார்ந்த களிச்சோற்று வண்டல்மண் அல்லது களிமண் கலந்த வண்டல்,  செம்மண் கலந்த வண்டல் அல்லது இரும்பகக் களிமண் சேர்ந்த வண்டல் மண்ணில் இது செழிப்பாக வளரும். 

இஞ்சிக்கு தொன்மைப் புகழ் தொன்மை உண்டு. இஞ்சியின் தோல் நீக்கப்பட்ட வைக்கப்பட்டவை. சிறிது நீக்கப்பட்டவை, நீக்கப்படாதவை என்ற வகை உண்டு. சில இஞ்சி வகைகள் தோற்றத்தில் வனப்பு கூட்டுவதற்காக நிலம் அகற்றப்பட்டும் சுண்ணாம்பு நீர் ஊற வைத்தும் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது இஞ்சி இந்தியா, ஜமைக்கா, நைஜிரியா, சைனாவின் தென்பகுதி ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது . 

பொதுவாக இஞ்சி உலர்ந்த நிலையில் ஏற்றுமதி ஆவதில்லை. இஞ்சியில் மணமும் சுவையும் குறைவாக இருப்பதால் இதில் இருந்து சாறு எடுத்து எடுப்பதில்லை. இந்தியா, மேற்கு ஆப்பிரிக்க இஞ்சிக்கு நல்ல மதிப்பு உள்ளது. ஜப்பானிய இஞ்சியில் காரம் கொஞ்சம் கூடுதலாய் இருக்கும். இந்திய இஞ்சியில் நார் கொஞ்சம் கூடுதலாய் இருக்கும். 

இஞ்சியின் ரகம், விளையும் பகுதி, பருவநிலை, பதனம் செய்யும் முறைகள் உலர்த்தும் முறைகள், விற்பனைக்கு அடைத்து வைக்கப்படும் முறைகள் ஆகியவற்றைக் கொண்டு 7 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

  1. இந்திய ரகம் 
  2. மேற்கு ஆப்பிரிக்கா அல்லது நைஜிரியா ரகம் ஆகும் 
  3. ஜமைக்கா ரகம் 
  4. ஸீராலியோன் ரகம்
  5. ஜப்பானிய ரகம்
  6.  ரியோடினஜீரோ ரகம் மற்றும்
  7. சைனா ரகம் ஆகியவையாகும்.

1. இந்திய ரகம்

இந்திய ரகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று மலையாள ராகம் இரண்டாம் ரகம் அஸ்ஸாம் ரகம். மலையாள  ரகத்தை மூன்றாகப் பிரிக்கலாம் அவை 1. கொச்சி ரகம். 2. கள்ளிக் கோட்டை ரகம். 3.வயநாடு ரகம் ஆகியவையாகும். ஆக இந்திய இஞ்சியின்  வகைகள் 26 ஆகும். 

இஞ்சியின் தோல், பிசிரைக்கு, மாச்சத்து முதலியவைகளிலிருந்து ஆவியாகும் தைலம் எடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இஞ்சியின் தைல அளவு  1 சதவீதம் முதல் 3% வரை ஆகும். இஞ்சி தைலம்  வெளுத்த மஞ்சள் நிறமும் ஒட்டும் தன்மையும் உள்ளதாகும்.  இதில் இஞ்சியின்  மணம் இருக்கும் பச்சை இஞ்சியிலிருந்து தைலம் பிசிரைக்க  எடுப்பதை விட உலர்ந்த இஞ்சியிலிருந்து எடுப்பது சிறந்ததாகும்.

இஞ்சியின் மணம் விரும்பத்தக்கதாகவும், சுவையுள்ளதாகவும், காரம் கொண்டதாகவும் இருக்கும். இது சமையலுக்கு உகந்தது சுவைக்கூட்டக்கூடியது.  

சோடா பானங்கள் தயாரிக்க பயன்படுகிறது.  இதன் தைலமும் பிசிரைக்கும் நீர்மங்கள் சாராயக் கரைசல் மருந்து வகைகள் தயாரிக்க உதவுகிறது. பச்சை இஞ்சியிலிருந்து பழச்சாறு பதனம் போன்றவை தயாரிக்கலாம். பல்வேறு பொடிகளை இதிலிருந்து தயார் செய்யலாம். 

வெளிநாடுகளில் ஜிஞ்சர் பிராந்தி.  ஜஞ்சர் ஒயின் மற்றும் ஜஞ்சர் ஏலம்  தயாரிக்கப்படுகிறது.  

அகட்டுவாய் அகற்றும் தன்மையும் பெண் தன்மையும் கொண்டதாகும்.  செரிமானமின்மை, வயிற்றுப்போக்குக்கு இஞ்சி சிறந்தது.  போஷாக் அளிக்கும்  ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.  மேலும் ஆயுர்வேதத்தில் ஆண்மை அதிகரிக்கும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.  

கால்நடைகளில் குதிரை ஆடு மாடு போன்றவைகளுக்கு ஏற்படும் வாய்வு நோய் உணவு, அஜீரணம் இழுப்பு மற்றும் குடல்வலி போன்ற உபாதைகளுக்காக செய்யப்படும் சிகிச்சைகளில் இஞ்சிப்  பயனாகிறது. குறைந்த அளவில் வாசனைப் பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment