பிளாஸ்டிக் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள் (கேரம்போர்டு ஸ்டிரைக்கர் மற்றும் சாவிக் கொத்து வில்லைகள் தயாரிக்கும் முறைகள்) - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, July 23, 2020

பிளாஸ்டிக் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள் (கேரம்போர்டு ஸ்டிரைக்கர் மற்றும் சாவிக் கொத்து வில்லைகள் தயாரிக்கும் முறைகள்)

பிளாஸ்டிக் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள் (கேரம்போர்டு ஸ்டிரைக்கர் மற்றும் சாவிக் கொத்து வில்லைகள் தயாரிக்கும் முறைகள்)

1. கேரம் போர்டு ஸ்டிக்கர் 

கேரம் போர்டு விளையாட்டு ஸ்ட்ரைக்கர் என்ற ஒரு வட்டமான பில்லைத் தேவைப்படும். இது பிளாஸ்டிக்கினால்தான் தயாரிக்கப்படும்.  இதை பல நிறத்தில் தயாரிக்கலாம். கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் தகட்டிலும் தயாரிக்கலாம். 

இதை அதிக அளவில் தயாரித்து கேரம்போடு தயாரிப்பவர்களுக்கு கொடுக்கலாம்.  சில்லரையாக கடைகளுக்கும் கொடுக்கலாம்.  இதை பெர்பக்ஸ் ட்ரான்ஸ்பரன்ட் அல்லது ஓப்பாக் பிளாஸ்டிக் தகட்டிலும் தயாரிக்கலாம். 

தேவையான பிளாஸ்டிக் தகட்டை எடுத்து அதன் மேல் உள்ள பாதுகாப்பு தாளை அகற்றி விடாமல் அதன் மேல் ஐந்து சென்டி மீட்டர் குறுக்களவு உள்ள வட்டங்களை வரைந்து கொள்ள வேண்டும்.  இப்படி வரைவதற்கு பென்சில் காம்பஸ் என்னும் வட்டம் போடும் கருவியை பயன்படுத்த வேண்டும்.  ஒரு தட்டில் எத்தனை வட்டம் போட முடியுமோ அத்தனை வட்டங்களை போட்டுவிட வேண்டும். 

பிறகு பெர்பக்ஸ் பிளாஸ்டிக் பாலீஷ் நம்பர் ஒன் கம்பளியில் கொஞ்சம் தேய்த்துக் கொண்டு அதன் மேல் பிளாஸ்டிக் வட்ட பில்லைகளின் ஓரத்தை சமமாக பிடித்து உருட்டிக்கொண்டே தேய்க்கவும்.  

இப்படித் தேய்த்தபின் அந்த ஓரத்தை கவனித்து அது வழுவழுப்புத் தன்மை அடைந்த பின் அதை வைத்து விட்டு மற்றொரு பில்லை எடுத்துத் தேய்க்கவும். இப்படியே எல்லா பில்லைகளையும் உருவாக்கிய பின் நம்பர் 2 என்ற பாலிசியை கம்பியின் மேல் தடவி மறுபடியும் பிளாஸ்டிக் பில்லைகளின் ஓரத்தைத் தேய்த்தால் அதில் மெருகேறும். ஓரம் மிகப் பளபளப்பாகும்.  அதன் பிறகு சுத்தமான வெல்வெட் துணியால் தேய்த்தால் மேலும் மினுமினுப்போடு பிரகாசிக்கும். 

இதன் வேலை முடியும் வரை பிளாஸ்டிக்கின் மேலுள்ள பாதுகாப்புத்தாளை எடுக்கவே கூடாது.  இந்த வேலைகள் முடிந்த பின் பாதுகாப்பு தாளை எடுத்து விட்டு இவற்றை சுத்தமான தண்ணீரில் போட்டு சோப்புப் பவுடர் கொண்டு சுத்தமாகக் கழுவித் துடைத்து  ஒவ்வொன்றையும் ஒரு மெல்லிய காகிதத்துண்டில் மடித்து ஒரு பெட்டிக்கு ஒரு டசன் வீதம் வைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

சாவிக்கொத்து விலைகள் 

1. சாவிக்கொத்து வில்லைகள் 

சாவி வளையத்தில் கோப்புக்க ஏற்ற வகையில் இந்த சாவிக்கொத்து வில்லைகளை தயாரிக்கலாம்.  இவற்றை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி சதுரமாகவும் வட்டமாகவும் மீன் போன்ற பலவித வடிவங்களிலும் தயார் செய்யலாம்.  

பெர்பெக்ஸ் பிளாஸ்டிக் தகட்டில் எழுத்து மற்றும் விளம்பர போர்டுகள் தயாரிப்பவர்கள் இவ்விதமான வளையங்களை செய்வது சுலபம்.  ஏனெனில், எழுத்து  போர்டு தயாரிக்கும்போது அவற்றுக்காக வெட்டப்படும் துண்டுகளில் இருந்து இந்த சாவிக்கொத்து வகைகளை தயார் செய்யலாம்.  இதற்கென தனியாக பிளாஸ்டிக் தகடு வாங்க வேண்டிய தேவை இருக்காது. 

அதிக அளவில் வேண்டியிருப்பின் தேவையான நிறமுள்ள பிளாஸ்டிக் தகட்டை எடுத்து அதன் மேல் உள்ள பாதுகாப்பு தாளின்மேல் நமக்கு தேவையான உருவில் பில்லைகளின் வடிவங்களை வரைந்து கொள்ள வேண்டும். 

இதற்கு நாம் எந்த வகையான பில்லைத் தயாரிக்கவிருப்பமோ அந்த பில்லையின் வடிவத்தை தேவையான அளவு வைத்து ஓர் இரும்புத் தகட்டில் வெட்டி எடுத்து அதன் ஓரங்களை சுத்தமாக ராவி வழு வழுப்பாக செய்துவிட்டு அதையே ஒரு அடையாளமாக வைத்து,  அளவு எடுத்துக் கொள்ளலாம்.  இப்படி செய்வது சுலபமாக இருக்கும்.  

சிறிய துண்டுகள் இந்த பில்லை தயாரிப்பதாக இருந்தால் ஒவ்வொரு துண்டிலும் அடையாள கோடு வரைந்து கொள்ளலாம்.  

பெரிய தட்டில் செய்வதனால் தகட்டின் மேல் அளவு வைத்து அதில் எத்தனை பில்லைகள் வருமோ அந்த அளவிற்கு அளவோடு வரைந்து எப்படி எப்படி வைத்து அளவு வரைய முடியுமோ அதன்படி வைத்து  அளவு வரைந்துகொள்ளவும்.  

அதன் பின் அவற்றை துண்டுகளாக வெட்டி எடுத்து குறித்த கோட்டின்படி பிரட்ஷர் என்றவாளைக் கொண்டு வடிவத்தை ஒழுங்காக வெட்டி எடுக்க வேண்டும். 

பிறகு ஓரங்களை நைஸ் அரம் கொண்டு சுத்தமாக ராவி விட்டு 0 எண் உப்புத்தாளில் தேய்த்துவிட்டு சமமாக தேய்க்கக்கூடிய ஓரங்களை சமமாகவும் வளைவாக உள்ள இடங்களைப் பாலிஷ் சக்கரத்திலும் தேய்த்து மெருகிட வேண்டும்.  

அதன்பின் துளையிட வேண்டிய இடத்தில் அளவான அலகை சேர்ந்த துரப்பணத்தை கொண்டு துளையிட்டு துளையின் மேல் மட்டத்தை சுத்தம் செய்துவிட்டு பிளாஸ்டிக்கின் மேலுள்ள பாதுகாப்புதாளை எடுத்துவிட்டு சுத்தமான நீரில் போட்டுக் கொண்டு சுத்தமாகக் கழுவி துடைத்து ஒவ்வொன்றையும் ஒரு மெல்லிய பேப்பரில் மடித்து ஒரு டஜன் அல்லது மூன்று டஜன் கொள்ளும் பெட்டிகளில் நிரப்பி விற்பனைக்கு அனுப்பலாம்.

 இந்த பில்லைகளின் மேல் எழுத்துக்கள் போட வேண்டுமானால் குடைவுச் சாதனத்தைக் கொண்டு ஒரு மில்லிமீட்டர் ஆாம் வைத்து தேவையான எழுத்துக்களை தோண்டி எடுத்து அந்த பள்ளத்தில் நிறத்திற்கு ஏற்ற பிளாஸ்டிக் பெயிண்ட் என்னும் வண்ணத்தைப்பூசி காய வைத்து எடுத்துக் கொள்ளவும். 

மீன் உருவம் போலத்தயாரித்தால் அதன் மேல் செதில் போலவும், பக்கத்தில் இறக்கைப் போலவும் வாலின் மேல் கோடுகளையும் செதுக்கிவிடவும்.

No comments:

Post a Comment