கசகசாவின் மருத்துவ குணங்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, July 26, 2020

கசகசாவின் மருத்துவ குணங்கள்

கசகசாவின் மருத்துவ குணங்கள் 

நறுமணப் பொருள்களில் விதைகளில் மிகவும் சிறியவை கசகசாவின் விதைகள் ஆகும்.  இதன் விதைகள் வெள்ளை நிறமாக இருக்கும்.  ஆயிரம் விதைகளில் 0.25 முதல் 3 கிராம் வரை ஆகும். 

கசகசா பயிரிடுவது அபினிக்காகவும் இதை ஆங்கிலத்தில் பாப்பி ஸீட் என்பார்கள்.  இது பபாவராசியே குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இதன் சாதிப்பெயர் பாபாவேர் சோம்னிபெரும் ஆகும்.  

நம் நாட்டில் அபினி தயாரிப்புத் தடைப்படுத்தப்பட்டு இருப்பதால் அரசு அனுமதியுடன் விதைகளும் பயிரிடப்படுகிறது.  ஒரு எக்டருக்கு சுமார் 250 கிலோ மகசூல் கசகசா கிடைக்கும்.  இந்தியாவில் வெண்மை நிறத்தில் கிடைக்கும் கசகசாவை போல ஐரோப்பாவின் இளங்கறுப்பு அல்லது நீல நிறம் கொண்ட விதைகள் கிடைக்கிறது. இதற்கு மாவ் விதைகள் என்று பெயர்.  இந்த வகை பயிர் அபினி தயாரிப்புக்காகவே பயிரிடப்படுகிறது. 

கசகசா விதைகளில் நிறைந்த புரதச்சத்து உள்ளது.  இதில் 50 சதவீதம் எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயில் மணம் வராதது.  ஆனால் சுவை இருக்கும். எண்ணெயின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். கசகசாவை உணவுப் பொருளாகவும் உணவுப் பொருளுக்கு மணம் கூட்டும் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இதற்கு நோய் தடுக்கும் தன்மை உண்டு. கட்டி,  வீக்கம் இவற்றை கரைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கல் சிறுநீர் கோளாறுகளை நீக்குவதற்கு மருந்தாக பயன்படுகிறது. 

விதைகளை கீறி அபினி தயாரிக்கின்றனர். அபினி தயாரிக்காத விதையுறைகளிலிருந்து  எண்ணெய் அதிகமாக கிடைக்கிறது.  வெள்ளை  விதைகளிலிருந்து தரமான எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் கறுப்பு விதை பயிரிடுவதும் மகசூல் பெறுவதும் எளிதாய் உள்ளது. 

கசகசா எண்ணெயில் மயக்கமூட்டும் தன்மை கிடையாது. இந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. ஓவியம் வரைவதற்கான வண்ணம் தயாரிப்பில் கசகசா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சோம்பு மருந்து குழம்பு சரும பாதுகாப்பு மருந்து தயாரிப்பில் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.  இந்த எண்ணெயில் கடுகு எண்ணெய் பயன்படும் என்னை எடுக்கப்பட்ட கசகசா பிண்ணாக்கு இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

இதை அப்படியே உண்ணலாம் கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம் கண்டிருக்கும் இந்த பிண்ணாக்கு  கொடுக்கக்கூடாது பயிருக்கு உரமாகவும் இந்த பிண்ணாக்கு  பயன்படுத்தலாம்.  விதைகளிலிருந்து செய்யப்படும் மருந்து பெண் காரணம் மற்றும் வீக்கம் ஆகிய நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு குணம் காணலாம் விதைகளில் இருந்து பெறப்படும் நீர் தூக்கமின்மை இருமலுக்கும் பயன்படுகிறது. 

முதிர்ந்த விதைகள் உடனே வெல்லத்தை சேர்த்து காய்ச்சி வடிகட்டிய நீர் போதே அயல் நாடுகளில் பரப்பினார் கோட்டின் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. கசகசா செடி கீரை உணவு பொருளாக சமைத்து சாப்பிடலாம். புத்தக உறை போடும்  தடித்த பழுப்பு நிறத்தாள் தயாரிக்க பயன்படுகிறது. கையால் செய்யப்படும் பலகை ஒட்டுகளுக்கு கசகசா விதையுறை சக்கைகள் உதவுகின்றன. 

இதன் பூக்கள் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இற்கொழுநீர் தயாரிக்கவும்   சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதுவே கசகசாவின் மருத்துவக் குணங்களாகும்

No comments:

Post a Comment