நீங்க பகுதி நேரமாக சம்பாதிக்க ஆசையா? தன்னம்பிக்கையூட்டும் கட்டுரை.
நாட்டில் எங்கு பார்த்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பக்கம் பட்டதாரிகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் வேலை இழப்பும் அதே வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகின்றது.
பலருக்கு இங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக் கொள்வதே பெரும் போராட்டமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அப்படி வேலை தேடிக் கொண்டவர்களுக்கும் அந்த வேலைக்கேற்ற நியாயமான சம்பளம் கிடைப்பது இல்லை.
இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தலைவிரித்தாடுகின்றது. ஒரு பக்கம் விலைவாசி விண்ணை தொட்டு கொண்டிருக்க மறுபக்கம் வேலைக்கேற்ற சம்பளம் இல்லாமல் நாமெல்லாம் அல்லல்படுகின்றோம். சனத்தொகைப் பெருக்கம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்று இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அந்தக் கரணங்களினால நிச்சயம் நமக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
நீங்க ஒரு நிறுவனத்தில் வேலை செய்தோ அல்லது ஒரு சிறு வணிகத்தை நடத்திக்கொண்டோ இருந்து அதில் கிடைக்கும் வருமானம் உங்களுக்கு போதலனா உங்க வேலைகளை செய்துகொண்டே பகுதி நேரமாக உங்களுக்கு தேவையான அளவு, ஏன் அதைவிட அதிகமான பணத்தையும் உங்களால் சம்பாதித்துக் கொள்ள முடியும். அது எவ்வாறு என்பதை இந்த பதிவில் நாம படிக்க இருக்கின்றோம்.
அதெல்லாம் சரி இப்படி பகுதி நேரமாக சம்பாதிக்கலாம் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் என்ன தொழில் செய்வது? அதை எப்படி செய்வது அனைவராலும் இப்படி பகுதி நேரமாக சம்பாதிக்க முடியுமா முடியும் நா அது எவ்வாறு என்பது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம் கேள்விகளுக்கான பதில் என்னண்ணா நீங்க யாராக இருந்தாலும் எந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் நிச்சயம் உங்களால் பகுதி நேரமாக சம்பாதிக்க முடியும்.
அதுக்கு நீங்க பகுதி நேரமாக செய்ய வேண்டிய வேலை இது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். எநத வேலையிலும் உங்களுக்கு அனுபவம் இருக்கோ அல்லது திறமை இருக்கோ அந்த வேலையையே நீங்க பகுதி நேரமாக செய்ய வேண்டும் அது எவ்வாறு என்பதை நாமே தொடர்ந்து பார்க்கலாம்.
முதலாவது அனுபவம் இருக்கும் வேலை. நீங்க தற்போது என்ன வேலையைச் செய்து கொண்டிருக்கின்றீர்கள் அந்த வேலையில் நீங்கள் பெற்ற அனுபவத்தை வைத்து எவ்வாறு பகுதி நேரமாக ஒரு வருமானத்தை உருவாக்க முடியும் என்பதை சிந்தியுங்கள். உதாரணமாக நீங்கள் தற்போது ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கலாம் உங்க வேலையை நீங்க ஒரு மென்பொருளினை உருவாக்கவோ அல்லது போட்டோக்கள் வீடியோக்களை வடிவமைக்கவோ ஏன் இவை எதுவும் இல்லாமல் வேகமாக டைப் செய்வதை மட்டுமே பழகி இருந்தாலும் அதை வைத்து உங்களால் நிச்சயம் பணம் சம்பாதிக்க முடியும்.
உங்களது திறமைகள் உங்க பகுதியில் உள்ள யாருக்கு தேவைப்படும் என்பதை தேடுங்கள் அவர்களின் தேவையை உங்களால் பூர்த்தி செய்ய முடியுமாக இருந்தால் அந்த வேலை கேட்டு பல ஆயிரம் ரூபாய்களை நீங்கள் பகுதி நேரமாகவே சம்பாதித்துக் கொள்ளலாம். இப்படி உங்க பகுதியில் உள்ளவர்கள் என்று மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களுக்கும் உங்க சேவையை வழங்க முடியும் fiver freelancer.com உட்பட பல்வேறு இணையதளங்கள் இதற்கான ஒரு தளமாக இயங்கி வருகின்றன.
இந்த இணைய தளங்களில் இணைந்து கொள்வது முற்றிலும் இலவசமானது தான். ஆனால் இதில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவர்கள் சேவை கட்டணமாக எடுத்துக்கொள்வார்கள்.
இங்கே ஐடி துறையை நாமே ஒரு உதாரணத்திற்காகவே குறிப்பிட்டுள்ளோம். நீங்க எந்த துறையில் வேலை செய்தாலும் இதே வழியில் சம்பாதிக்க முடியும் அதை எவ்வாறு என்பதை நீங்களே கண்டறிய வேண்டும்.
இரண்டாவது உங்கள் திறமைக்கேற்ற வேலை
சில நேரங்களில் உங்க பிறகான வேலைக்கு சம்பந்தமில்லாத துறைகளில் உங்களுக்கு பல திறமைகள் இருக்கலாம். அந்த திறமைகளைக் கொண்டு எவ்வாறு இரண்டாவது வருமானத்தை உருவாக்க முடியும்? என்பதை சிந்தியுங்கள்.
உதாரணத்திற்கு நீங்க ஏதோ ஒரு இன்ஜினியரிங் துறையில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள் ஆனால் அடுத்தவர்களை கவரும்படியான பேச்சுத்திறன் உங்ககிட்ட இயற்கையிலேயே இருக்கும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் உங்க பேச்சு திறமையை வைத்து செய்யக்கூடிய ஒரு தொழிலை நீங்க தேடவேண்டும்.
உதாரணத்திற்கு ஸ்மார்ட்போன் மற்றும் அது சம்பந்தமான பொருட்கள் அல்லது பைக்குகளை வாங்கி விற்பது போன்ற விற்பனை சார்ந்த வேலைகளை செய்ய முடியும் அல்லது பகுதி நேர டெலிபோன் ஆபரேட்டராகவோ கோரி யூடியூப் சேனல் கூட ஆரம்பிக்கலாம். நீங்க எந்த தொழிலை செய்ய வேண்டும் என்பது முழுக்க முழுக்க உங்கள் தனிப்பட்ட திறமைகள் விருப்பு வெறுப்புக்களையே சார்ந்திருக்கும்.
இங்க நாம கூறிய உதாரணங்கள் எல்லாம் இந்த பகுதி நேர வேலை பற்றிய ஒரு தெளிவான ஐடியாவை உங்களுக்கு தருவதற்காக மட்டுமே. தொழில்நுட்பத்தின் வறட்சியான வேலைவாய்ப்புக்கள் ஒரு பக்கம் குறைந்து கொண்டிருந்தாலும் அதே தொழில்நுட்பத்தை வைத்தே பல புதிய வாய்ப்புகளை நீங்க உருவாக்கிவிட முடியும். பத்து வருடங்களுக்கு முன்னால ஒரு பொருளையோ அல்லது சேவைகளையோ நீங்க விற்பனை செய்ய வேண்டுமாக இருந்தால் அது உங்க பகுதியில் உள்ள சில ஆயிரம் பேருக்கு மட்டுமே விற்பனை செய்யக் கூடியதாக இருந்தது.
ஆனால் இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் உலகில் அனைத்து மக்களும் இங்கு வாடிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள். பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலையதளங்களை பயன்படுத்தி மிகச் சிறியதொரு வணிகத்தையும் உலகமெங்கும் அனுப்பிவிட முடியும். எனவே இந்த சமூக வலைதளங்களை உங்களுக்கு சார்பாக பயன்படுத்துவது எவ்வாறு என்பதை கற்றுக் கொள்ளுங்கள். அதை யூ டியூப் மூலம் உங்களால் இலவசமாக கற்றுக் கொள்ள முடியும்
எனவே இங்கு ஒரு பகுதி நேர வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நீங்க செய்து கொண்டிருக்கும் வேளையில் உங்களுக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு வரும் ஆன முதல் இரண்டாவது உங்ககிட்ட இயற்கையிலேயே இருக்கும் திறமைகள் ஆளுமைகளை வைத்து வருமானம் ஈட்டலாம்.
இந்த இரண்டு வழிகளையும் கொண்டு உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் அல்லாது ஆன்லைனிலும் முயற்சி செய்வதன் மூலம் உங்க பிரதான தொழிலை விட மிக அதிக வருமானத்தை நீங்க செய்யவிருக்கும் பகுதி நேரத் தொழிலில் ஈட்டி விட முடியும். இப்படி பகுதிநேர வருமானத்திற்காக நீங்கள் செய்யும் முயற்சிகளால உங்க வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வருமானம் எல்லாம் அதிகமானது தான். எனவே நீங்க எந்த தயக்கமும் இன்றி தைரியமாக இதை முயற்சித்துப் பார்க்கலாம். நீங்க கஷ்டப்பட்டு உழைக்க தயாராக இருந்தால் நிச்சயம் கேட்டதை விட அதிகம் பெறுவீர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment