வெண்டைக்காய் பயிரிடும் முறைகள் மற்றும் படர்கொடி காய்கறி அறிந்துகொள்ளுங்கள்
வெண்டைக்காய் காய்கறி வகைகளில் முக்கியமானது ஒன்றாக கருதப்படுகின்றது. வெண்டைக்காயும் சுவையான பதார்த்தங்கள் ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெண்டைக்காயின் வகைகள்
வெண்டைக்காயில் சிவந்த நிறத்தை பெற்ற வெண்டைக்காய்களும் உண்டு. இவ்விற்றினை செவ்வெண்டிக்காய் என்றே என்று அழைக்கின்றனர். இந்த செவ்வெண்டிக்காயில் முட்கள் இருப்பதன் காரணமாக யாரும் இதனை பெரும்பாலும் பயிரிடுவதும் இல்லை. உணவுப் பொருளாக விரும்பி உண்ணுவதன்பொருட்டுக் கறி சமைப்பது மில்லை. இவற்றைத் தவிர பச்சை நிறமுள்ள வெண்டைக்காய்களும் உண்டு. அவற்றில் முட்கள் கிடையாது. எனவே இதனை வீட்டு தோட்டத்தில் பயிரிடுகின்றனர். சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த வெண்டைக்காய்களை போன்ற பொருட்களைப் பெற்று இருப்பதால் இவற்றுக்கு பால்வெண்டைகடகாய்கள் என்று பெயரை தந்துள்ளார்கள்.
வெண்டைக்காய் பயிரிடும் முறை
வெண்டை விதையை முதலில் எடுத்துக் கொள்ளவும். தோட்டத்துக்கு வந்து உடன் 2 அடிக்கு 2 அடி என்ற ரீதியில் இடைவெளியை விட்டுக் குழிகளைத் தயாரியுங்கள். இவ்வாறு தயாரிக்கப்பட்ட குழிகளில் ஒரு குழிக்கு 4 அல்லது 5 என்ற கணக்கில் விதைகளை விதைக்கவும். இந்த விதைகள் முளைத்து பின்னர் அவற்றில் எவை செழுமையாக உள்ளது என்பதனை பார்க்கவும். செழுமையாக உள்ள ஒன்று அல்லது இரண்டு நாற்றுகளை மட்டும் அப்படியே விட்டு வைத்து விட வேண்டும். மற்ற நாற்றுகளை பிடுங்கி அப்புறப்படுத்திவிட வேண்டும். இவை வளர்ந்து உரிய பருவத்தில் காய்கள் காய்க்கத் துவங்கும்.
எக்காலத்தில் பயிரிடுவது?
வெண்டைக்காய் பயிரிட சிறந்த காலம் படற்செடிகள் பயிருடன் காலமே.
பலனைத் தருவது எப்போது?
முறையாகப் பயிரிடப்பட்ட வெண்டை செடிகள் விதைக்கப்பட்ட இரண்டு அல்லது இரண்டரை மாதங்களிலேயே தன்னுடைய பலனை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. வெண்டை அற்புதமானகாய் என்றும் ஞாபக சக்தியை விருத்தி செய்யும் காய் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
2. படர்கொடி காய்கறி அறிந்துகொள்ளுங்கள்
படர்செடிகளை பற்றி அறிவோம். குத்துச்செடி காய்களை பற்றியும் நாம் இதுவரை அறிந்துகொண்டோம் இனி படர்கொடி காய்கறி பற்றியும் துவரை அறிந்துகொள்வோம்.
படர்கொடி காய்கறி கீழ்வருமாறு அமைகின்றன. அவரை புடலை, பீர்க்கு, பாகல், சுரை ஆகியவையாகும்.
இவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் படர்கொடி காய்கறி பயிரிடுவதில் பொதுவான சில அம்சங்களை அறிந்து கொள்ளுவோம்.
படர்கொடி காய்கறி விதைகளை பயிரிட ஏற்ற காலம்
பொதுவாகவே எவ்வித படர்கொடி காய்கறிகளுக்குறிய விதைகளையும் பயிரிடுவதற்கு ஏற்ற காலம் ஆடி மாதமே கூறப்படுகிறது. விபரம் அறிந்த பெரியவர்கள் ஆடி அமாவாசை அன்று பயிர்களை செய்வதில் முனைவார்கள். இது குறித்து நிறைய உள்ளன பல உண்மைகள் எல்லா விதமான புண்களுக்கும் ஏற்ற காலமாக ஆடி மாதமே கருத்துக் கூறப்படுகின்றது இதனை குறிப்பிடும் விதமாக ஆடி அவரை தேடி போடு என்றும் ஆடியிலே அவரை போட்டால் கார்த்திகை காய் என்றும் சொல்லப்படுவதில் இருந்து ஆடி மாதத்தில் காய் பயப்பட வேண்டிய உண்மை நிலை நமக்கு விளங்குகிறது.
பயிரிடுவது எவ்வாறு?
படர்கொடி விதைகளில் எந்த விதை பயிர் வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் முன் கூறிய வண்ணம் குழிகளை அமைத்து அங்கு நான்கு அல்லது ஐந்து விதைகளைப் போட்டு வைத்துக் கொள்ளவும். இவை வளர ஆரம்பிக்கும். வளர்ந்தவுடன் குழிக்கு இரண்டு அல்லது ஒன்று என்ற ரீதியில் நாற்றுகளைத் தேர்ந்தெடுத்தல் மிகவும் நல்லது.
மற்றவற்றை களைந்துவிடவேண்டும். செழிப்பாக உள்ளவையே ஆரோக்கியமாகவும் புஷ்டியாக உள்ளன என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த செடிகள் முளைத்து ஒரு அடி ஆகும் போதோ அல்லது ஆவதற்கு முன்னரோ படர்கொடிகளுக்கும் போடக்கூடிய பந்தலைப் போட்டு வைத்து விட வேண்டும். இவ்வாறு பயிரிட்டு விளைச்சலைப் பெருக்க வேண்டும்.
பந்தல் அமைக்கப்பட வேண்டிய முறை
பந்தலை அமைக்கும்போது கீழ்வரும் எச்சரிக்கைக் குறிப்புகளை மனதில் பதித்து வைத்துக் கொள்வதும் நல்லது.பந்தலுக்கு அடியில் சென்று காய்களை பறிப்பதற்கு ஏற்ற உயரத்தில் பயிரிட வேண்டும். அதே சமயம் பந்தலுக்கு மேற்பரப்பில் உள்ள காய்களை பறிக்க எவ்வித சிரமும் படாத வண்ணம் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். காய்கள் அளவில் பெரிதாகவும் இடையில் கூடுதலாக இருக்கும் படியான காய்கறி பயிரிட்டு இருந்தோமானால் அவற்றினை சுமப்பதற்கு உரிய அளவு உறுதியாக வாய்ந்ததாக அமைந்து இருப்பது நல்லது. இவை எல்லாம் படர்கொடிகள் மூலம் காய்கறிகள் பெற நினைப்போர் தம்மனதில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடிய குறிப்புகளாகும். தொடர்ந்துப் பார்போம்.
No comments:
Post a Comment