2. காய்ச்சல் வரும்போது உடலின் வெப்பநிலை எதனால் உயருகிறது?
நம் மூளையில் கட்டைவிரல் அளவிருக்கும் ஹைபோதலாமஸ் எனும் பகுதி தான் உடலின் வெப்பநிலையை ஒரே சீராக பராமரித்து வருகிறது. வைரஸ் பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் உடம்புக்குள் நுழையும்போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடும். அப்போது சில வெள்ளை அணுக்கள் அழிந்து வெப்பம் வெளியிடும் பொருட்களாக மாறும் இவை மூளைக்கு சென்று ஹைபோதலாமஸ் செயலிழக்க செய்யும். இதனால் உடலின் வெப்பம் கட்டுப்பாடின்றி அதிகரித்துக் கொண்டே போகும். இதை நாம் காய்ச்சல் என்கிறோம்.
1. முட்டையில் அடங்கிய கொலஸ்ட்ரால் எவ்வளவு?
கோழி முட்டையில் அடங்கிய கொலஸ்ட்ராலின் அளவு முன்னர் நினைக்கப்பட்டதை விட குறைவு என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க விவசாய இலாகாவினர் வாஷிங்டனில் உள்ள முட்டை ஊட்டச்சத்துக்கள் கேந்திரத்துடன் சேர்ந்து ஓராண்டு காலம் ஆராய்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா அல்லது மகிழ்ச்சி அளிக்கிற செய்தியாகும். ஏனெனில் முட்டை சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும் என்றும் கருதி பலரும் முட்டை சாப்பிடுவது நிறுத்தியதால் அல்லது குறைத்ததால் அமெரிக்காவில் சமீப ஆண்டுகளில் முட்டை வியாபாரம் குறைந்து இத்தொழிலின் லாபமும் குறைந்து வந்தது.
சராசரி பெரிய முட்டை ஒன்றில் சுமார் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் அடங்கியுள்ளதாக இப்போது ஆய்வில் தெரிகிறது. 1976 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு வெளியிட்ட வழிகாட்டி குறிப்புகளில் உள்ளடக்கிய கொலஸ்ட்ராலானது 274 மில்லிகிராம் என்று கூறப்பட்டிருக்கிறது.
சாதாரண பெரிய முட்டையில் சராசரியாக 5 கிராம் கொழுப்பு சத்து உள்ளதாக தெரியவந்துள்ளது என்றும் இதுவும் முன்னர் கருதப்பட்டது விட குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒருவர் நாள் ஒன்றுக்கு 300 மில்லி கிராமுக்கு மேற்படாமல் கொலஸ்ட்ராலை சேர்த்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க இதய நோய் தடுப்பு சங்கத்தின் சிபாரிசு கூறுகிறது.
கொலஸ்ட்ரால் என்பது குறிப்பாக விலங்கு கொழுப்புப் பொருளாகும. இது நிறைய அடங்கிய உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களின் உட்புறத்தில் படிந்து இரத்தக் குழாய்களில் குறிப்பாக இதயத் தசைகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் இவ்விதம் குறுகி இரத்த சப்பளை பாதிக்கப்படும்போது இதயத் தாக்குதல் ஏற்படுகிறது.
முட்டையில் அடங்கிய கொலஸ்ட்ரால் அளவு இப்போதைய ஆய்வில் மாறுபடுவதற்கு சிறந்த சோதனை முறை கோழிகளுக்கு அளிக்கபடபடும் இரையிலான மாற்றம் கோழி வளர்ப்பு முறையிலான மாற்றம் ஆகியவை காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முட்டை உற்பத்தி யாளர் பலரிடம் இருந்தும் சுமார் 2500 முட்டைகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment