அதிகாலை எழுவதன் அவசியம் - தன்னம்பிக்கைக் கட்டுரை
அதிகாலை எழுவது நல்லதா என நூறு பேரிடம் கேள்வி கேட்டால அந்த நூறு பேரில் ஆமாம் அது நல்லதுதான் என்ற பதிலையே கூறுவார்கள். அதே நபர்களிடம் நீங்க அதிகாலை இருக்கின்றீர்களா எனக்கு விட்டால் அதில் தொண்ணூற்று ஐந்து பேரின் பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.
அதிகாலை எழுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் பயனுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் நாமே அதை நடைமுறைப்படுத்துவதில்லை. இன்று உலகிலுள்ள மிகப் பெரும் தலைவர்கள் தொழிலதிபர்கள் வெற்றியாளர்கள் வாழ்க்கையை கவனித்து அதில் அதிகமானவர்கள் அதிகாலை எழும் பழக்கம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
இப்படி அதிகாலையிலேயே என்பதால் தான் அவர்களால் வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல் தங்களது குடும்பத்துடனும் அதிகமான நேரத்தை செலவிட முடிகின்றது. இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் இவர்
தினமும் அதிகாலை எழுந்து புத்தகங்கள் படித்து விட்டு தனது குழந்தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுப்பாராம். இத்தனைக்கும் இன்றுவரை அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆகவே இருக்கின்றார். சரி அதெல்லாம் ஒருபக்கம் இருக்கே ஏன் நம்மளாலே அதிகாலை எழ முடியாமல் உள்ளது?
இந்தக் கேள்வி நிச்சயம் உங்கள் மனதிலும் தோன்றியிருக்கலாம் உங்களிடம் ஒரே ஒரு பழக்கத்தினால் தான் பல வருடங்களாக நீங்கள் முயற்சி செய்தும் விரும்பியும் உங்களாலே அதிகாலையில் எழ முடியாமல் உள்ளது. அந்த பழக்கம் என்ன? அதை எவ்வாறு மாற்றுவது என்பதையே இந்த பதிவில் நாம பார்க்க விருக்கிறோம்.
தூக்கம்
இந்த ஒன்றை மட்டும் நீங்க சரி செய்தால் நிச்சயம் அதிகாலையில் எழுவது மட்டுமல்லாமல் உங்க மூளையின் மொத்த செயல்திறனும் பலமடங்காக அதிகரிக்கும். தூக்கத்தை சரி செய்வது என நாம இங்கே குறிப்பிடுவது நம்ம உடம்பு எந்த நேரத்தில் தூங்க வேண்டுமோ அந்த நேரத்தில் அதற்கு தூக்கத்தை கொடுப்பதையே. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே நாமே சூரியன் மறைந்ததும் தூங்கி சூரியன் உதிக்கும்போது எழுவதை வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால் நாகரீகங்கள் உருவான போது நாம் தூங்கும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக பின் தள்ளிப் போனது. இன்று இரவு 12 மணிக்கும் ஒரு மணி தூங்கிக் கொண்டிருக்கிறோம்.
இக்காலத்தைப் பொறுத்தவரை நமக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் தாராளமாக போதுமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படின்னா நீங்க அதிகாலை 5 மணிக்கு எழும்ப நினைத்தால் இரவு 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தூங்க வேண்டும்.
எனவே உங்கள் தூக்கத்தை சரிசெய்வதன் முதல் படி நீங்கள் எத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதுக்கப்புறம் அந்த நேரத்தில் இரவு எத்தனை மணிக்கு தூங்க வேண்டுமோ அத்தனை மணிக்கு தூங்கச் செல்லுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணி அல்லது ஏழு நேரமாவது தூங்க வேண்டும். இதை மனதில் வைத்து உங்க நேரங்களைத் திட்டமிடுங்கள்.
அதெல்லாம் சரி நாங்க என்னதான் திட்டமிட்டாலும் குறித்த நேரத்தில் எங்களால தூங்க முடியாமல் இருக்கே? அதுக்கு என்ன பண்ணலாம் என்று கேள்வி உங்களிடம் எழலாம். தாமதமாக தூங்குவதற்கு உங்களிடம் ஒரு நியாயமான காரணம் இல்லாமல் வெறுமனே சினிமா பார்ப்பதாலும் சமூக வலைதளங்களிலும் உங்கள் தூக்கம் தடைப்பட்டால் கீழேயுள்ள மூன்று யுக்திகளையும் பயன்படுத்தி அதை சரி செய்து கொள்ளலாம்.
முதலாவது நீங்க ஏன் அதிகாலை எழ வேண்டும் என்பதற்கு உறுதியான ஒரு காரணத்தை கண்டறியுங்கள். உங்ககிட்ட ஒரு உறுதியான காரணம் இல்லன்னா கஷ்டப்பட்டு அதிகாலை எழுந்து என்ன பண்றது அதுக்கு பதிலா நிம்மதியாக தூங்கலாம் என்ற எண்ணம் உங்கள் மனதில் உருவாக்கி விடும். அதுக்கப்புறமா நீங்க என்னதான் முயற்சி செய்தாலும் அதிகாலை எழ முடியாமலே போய்விடும். எனவே தினமும் செய்து முடிக்க வேண்டிய முக்கிய வேலைகள் உங்களிடம் இருந்தால் அவற்றை அதிகாலை எழுந்து செய்ய ஆரம்பிக்கலாம்.
அப்படி எதுவும் இல்லன்னா உடற்பயிற்சி செய்வதோ புத்தகங்கள் படிப்பதோ ஏன் உங்க பைக்கில் ஊர் சுற்றுவதை கூட அதிகாலை எழுந்தவுடன் செய்ய ஆரம்பிக்கலாம். இவ்வாறு நீங்க செய்யும் வேலை உங்களுக்கு மிக முக்கியமானதாகவோ அல்லது உங்கள் மனதுக்கு பிடித்ததாகவோ இருந்தால் இந்த வேலைகளுக்கு ஆகவே நீங்கள் இலகுவில் அதிகாலையில் எழுந்து விடுவீர்கள்.
இரண்டாவது உங்க மொபைல் போனினை தூரமாக வையுங்கள். இந்த காலத்தில் நம்ம தூக்கத்தின் மிகப்பெரும் எதிரில் நம்மளோட மொபைல் போன் தான். இரவு நேரங்களில் இதை அதிகமாக பாவிப்பது இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் தூக்கம் வருவதற்காக உங்கள் சுரக்க வேண்டிய சில சுரப்பிகள் சுரக்காமலேயே போய்விடும். அதுமட்டுமில்லாமல் உபயோகிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாத அளவிற்கு அது நம்மளோட மொத்த கவனத்தையும் முழுமையாக உள்வாங்கி விடும்.
தூங்குவதற்கு முன்னால் ஒரு பத்து நிமிடம் மொபைல் பார்க்கலாம் என நீங்கள் உட்கார்ந்து அந்த இடத்தில் பல மணி நேரங்களிலேயே மொபைலிலேயே வீணாகி விடும். எனவே நீங்கள் தூங்க வேண்டிய நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னாடியே மொபைல்போன் லேப்டாப் பாவனையை நிறுத்தி விட்டு முடிந்தால் உங்க மொபைலை தூங்கும் அறையை விட்டு வெளியே வைத்து விட்டு தூங்கச் செல்லுங்கள். மேலே உள்ள இரண்டு யுக்திகளையும் சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் உங்களால் தூங்க வேண்டிய நேரத்தில் சரியாக தூங்க செல்ல முடியும்.
அதையும் மீறி உங்களால தூங்கச் செல்ல முடியவில்லையென்றால் அல்லது தூங்கச் சென்றாலும் தூக்கம் வருவதில்லை என்றால் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் உடல் உழைப்பை அதிகமாக்கினால் உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் இரவில் மிக விைரவாகவே தூக்கம் வந்துவிடும்.
எனவே நீ அதிகாலை எழுந்து நினைத்தால் உங்கள் தூக்கத்தை சரிசெய்யுங்கள் அதற்கான மூன்று யுத்திகளை நாம எங்க பார்த்தோம். முதலாவது நீங்கள் ஏன் அதிகாலை எழ வேண்டும் என்பதற்கு ஒரு உறுதியான காரணத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே மொபைல்போன் லேப்டாப் அவனை நிறுத்தி விடுங்கள். முடிந்தால் அவற்றை உங்கள் அறையில் இருந்து தூரமாக வையுங்கள். மூன்றாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் இரவில் விரைவான தூக்கத்தை வரவழைக்கும். உடலையும் மனதையும் உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க பழகுங்கள். வாழ்வில் நீங்கள் எண்ணியது எல்லாம் நடத்திக்காட்ட முடியும்.
No comments:
Post a Comment