குறைந்த செலவில் நிறைந்த இயற்கைமுறை வைத்தியம் (அருகம்புல், குப்பை மேனி, பிரண்டை, கீழாநெல்லி, எருக்கு)
நல்ல உணவும் - நல்ல வாழ்வும்
அருகம்புல்
அருகம்புல் மிகுந்த மருத்துவகுணம் கொண்டது. அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்ணெண்ணயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்கவும். தலையில் உண்டாகும் போன், பொடுகுத் தொல்லை நீங்கி குளிர்ச்சியாகும். இதே எண்ணயை உடலில் தேய்த்து குளித்தது வர எல்லா வித தோல் நோய்களும் குணமாகும்.
அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கி சிறுநீர்ப்பை நோய்கள் நீங்கி சிறுநீர்ப்பையும் பலப்படும்.
அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களைச் சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்து வர இதய பலவீனம் நீங்கி, இருதயமும் ரத்தக் குழாய்களும் உறுதி பெறும்.
தீராத வயிற்று வலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர் வெட்டு காட்சி காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்
அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம் நீர் கடுப்பு மூலக்கடுப்பு வெள்ளைப்படுதல் போன்றவைக் குணமாகும்.
அருகம்புல் வேர் ஆவாரம்பூ இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி 2 கிராம் அளவு எடுத்து அத்துடன் நெய் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.
மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும் வீக்கமும் குறையும்.
குப்பைமேனி
முழுத்தாவரமும் மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகிறது வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது வாந்தியை தூண்டுவது சிறுநீர் போக்கு தூண்டுவி அகற்றும் இலைகள் தோல் வியாதிகளுக்கு மேற்பூச்சாகவும் மற்றும் நாட்பட்ட புண்களை ஆற்றுகிறது மலமிளக்கி இலைச் சாறு எண்ணெய் கலந்து முடக்குவாதம் மூட்டுவலி தடவப்படும் வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு நாக்குப்பூச்சிநீங்கும் வயிற்றுப் போக்கு உண்டாகும் சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்
பிரண்டை
பிரண்டையில் கால்சியம் கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளன கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கும் கரோட்டின் தெளிவான கண் பார்வைக்கு வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கும் முக்கியமானது
பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி அரை வேக்காடாக வேக வைத்து உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி பின் அதனை பயன்படுத்தி வர அல்சர் புளியேப்பம் போன்ற வயிற்றுக் கோளாறுகள் நிவர்த்தியாகும் பிரண்டை சாற்றில் புளி உப்பு கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட வீக்கம் எலும்பு முறிவு வீக்கம் எலும்பு முறிவு ஆகியவை தீரும்
கீழாநெல்லி
இதன் முழு செய்தியையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து அதை மைபோல் அரைத்து அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் அதை கால் லிட்டர் எண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும்.
கீழாநெல்லி இலையை மட்டும் சேகரித்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து உடலில் தடவி குளித்து வர சொறி சிரங்கு நமைச்சல் போன்றவை படிப்படியாக குணமாகும் கீழாநெல்லி வேப்பிலையுடன் காயவைத்து தூளாக்கி பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகவும் மலட்டுத்தன்மையை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் மாதவிலக்கு நாட்களில் சாப்பிடலாம்
எருக்கு
எருக்கு இரண்டு வகைப்படும் அதில் வெள்ளை மலர்களைக் கொண்ட வெள்ளை எருக்கு மருத்துவ குணம் கொண்டது இது விஷத்தன்மை கொண்ட பாம்பு கடித்தவர்களுக்கு புன்னைக் காயளவு எருக்கு இலையை அரைத்து உடனே கொடுக்கலாம் தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு எடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம் இலையுடன் மூன்று துளி 10 துளி தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.
நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது வைத்து அதன் மீது பாதி கட்டப்பட்ட ஐந்து நிமிடங்கள் வரை வைக்க வேண்டும் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் குதிகால் வாதம் நீங்கும் எருக்கம் இலையை உலர்த்தி பொடியாக்கி அதை விளக்கு எண்ணெய் சேர்த்து நாள்பட்ட புண் மீது தடவி வர அந்த புண் விரைவில் குணமாகிவிடும் நன்கு முதிர்ச்சி அடைந்த எருக்கன் செடியில் இருந்து பல இலைகளை சேகரித்து அதில் அனலில் வதக்கி சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் தேன் கலந்து நன்றாகக் குறைத்து கொள்ள வேண்டும் இதனை வெளிப்பூச்சு மருந்தாக கட்டிகள் மீது உபயோகித்தால் கட்டிகள் பழுத்து சீக்கிரமாக உடைந்து ஆறிவிடும்
No comments:
Post a Comment