உடலுக்குத் தேவையான வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் சத்து மிகு சிறுதானியங்கள் - இன்றையப் பதிவில் கம்பு ஸ்பெஷல் உணவு வகைகள்.
சிறுதானியத்தின் பெரும் பயன்கள்
கம்பில் அடங்கிய உள்ள முக்கிய சத்துக்கள்
மருத்துவ குணாதிசயங்கள்
கம்பினால் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகள்
தேவையான பொருட்கள்
கம்பு ஒரு கிண்ணம்
பால் தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் தேவையான அளவு
மிளகு சிறிது
இஞ்சி சிறிய துண்டு
எவ்வாறு செய்ய வேண்டும்
2. கம்பு பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்
கம்பு அரிசி ஒரு கப்
துவரம்பருப்பு கால் கப்
பாசிப்பருப்பு கால் கப்
தண்ணீர் 3 கப்
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
நீளமாக நறுக்கிய வெங்காயம் கால் கப்
நறுக்கிய தக்காளி அரை கப்
கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
பொடித்துக் கொள்ள
3. கம்பு சோறு
தேவையான பொருட்கள்
கம்பு குருணை ஒரு கிலோ
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்
4 கம்பு வெஜிடபிள் கஞ்சி
தேவையான பொருட்கள்
கம்பு அரை கிண்ணம்
மஞ்சள்
முள்ளங்கி
கேரட்
அவரை
பீன்ஸ்
காலிபிளவர்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சீரகம்
மிளகு அரைத்தேக்கரண்டி
பிரியாணி இலை ஒன்று
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
தண்ணீர் இரண்டு கிண்ணம்
எவ்வாறு செய்ய வேண்டும்
5. கம்பு புட்டு
தேவையான பொருட்கள்
கம்பர் 2 கப்
வெல்லம் ஒன்றரை கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
முந்திரிப்பருப்பு 6
எண்ணெய் மூன்று தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
எவ்வாறு செய்ய வேண்டும்
6. கம்பு அடை
தேவையான பொருட்கள்
கம்பு இரண்டு கிண்ணம்
வெங்காயம் 2 பொடியாக நறுக்கவும்
கறிவேப்பிலை 2 ஆரக்கு
பச்சை மிளகாய் 4
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்
7. கம்பு அதிரசம்
தேவையான பொருட்கள்
கம்பு மாவு ஒரு கப்
வெல்லத்தூள் அரை கப்
எள் ஒரு கைப்பிடி
எண்ணெய் தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
9. கம்பங்கூழ்
தேவையான பொருட்கள்
உடைத்த கம்பு குருணை ஒரு கப்
தண்ணீர் 3 கப்
கடைந்த தயிர் ஒரு கப்
மோர் 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
10. கம்பு தோசை
தேவையான பொருட்கள்
கம்பு மாவு ஒரு கப்
புளித்த தோசை மாவு 1 கப்
இஞ்சி சிறிது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 4
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய் உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
தோசை மாவுடன் கம்பு மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு போட்டு தோசை மாவு பதத்துக்கு கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் தோசை சுட்டு எடுக்கவும். வெங்காய சட்னி தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். கம்பு தோசை தயார்.
11. கம்பு வடை
தேவையான பொருட்கள்
கம்பு
கடலைப் பருப்பு
உளுத்தம்பருப்பு தலா அரை கப்
புழுங்கல் அரிசி கால் கப்
பச்சைமிளகாய் 4
இஞ்சி வெங்காயம் அரை கப்
உப்பு எண்ணெய் தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்
12. கம்பு இட்லி
தேவையான பொருட்கள்
கம்பு ஒரு கப்
உளுந்து கால் கப்
புழுங்கலரிசி அரை கோப்பை
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்
13. கம்பு குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி 2 கப்
கம்பு 1 கப்
உளுந்து அரை கப்
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம் 2
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் துருவல் அரை கப்
எண்ணெய் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
14. கம்பு மாவு மசாலா வடாம்
தேவையான பொருட்கள்
கம்பு மாவு 2 கப்
பெரிய பொடியாக நறுக்கிய பூண்டு 2 தேக்கரண்டி
தண்ணீர் 3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
15. கம்பு பொங்கல்
தேவையான பொருட்கள்
கம்பு 100 கிராம்
வெல்லம் 200 கிராம்
நெய் ஒரு தேக்கரண்டி
முந்திரி பாதாம் சிறிதளவு
உப்பு ஒரு சிட்டிகை
எவ்வாறு செய்ய வேண்டும்
சிறுதானியத்தின் பெரும் பயன்கள்
நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர்கள் கடைப்பிடித்த உணவு பழக்கமே ஆகும். அவர்கள் உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளை அவர்கள் பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேக பலத்துடன் வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது சிறு வயதிலேயே பல்வேறு நோய்களை சந்தித்து கொண்டு மருந்துகளையே உணவாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கமே. பீட்சா, பர்கர், ஹாட்டாக, ஸ்பீக் மற்றும் சீன இத்தாலியன் மெக்சிகன் உள்ளிட்ட உணவு வகைகள் மீது ஆர்வம் காட்டுவது, துரித உணவுகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவது, போன்றவை முக்கியக் காரணங்கள்.
இவ்வகை உணவுகளில் அதிக அளவிலான ரசாயன கலவைகள் செயற்கையான இனிப்பு கொழுப்பு வகைகள் உள்ளன தினசரி உண்ணும் சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிடவிரும்பி, மாற்று உணவுகளை தேடி போன மனிதன் இதய நோய் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் சந்தித்த நிலையில் இதனை மாற்ற மீண்டும் பாரம்பரிய உணவு முறைக்கு மாறவேண்டும் என்பதே உணவு வல்லுநர்களின் கருத்தாக உள்ளது
பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாமலும் பாதுகாத்து கொள்ளவும் ஏதுவாகிறது.
சிறுதானியங்கள் என்பது கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, சோளம் உள்ளிட்டவை ஆகும். விலைவாசி உயர்வு இயற்கை சூழ்நிலை மாற்றங்கள் காரணமாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இதனால் சிறுதானியங்கள் பயிரிடுவது குறைந்தது. அரிசி சோற்றை மட்டுேம உண்ணத் தொடங்கிய மனிதன் இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு ஆளானான். அரிசிக்கு மாற்றாக கோதுமையையும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து போனது. அரிசியைவிட சிறுதானியங்களில் 10 சதவீத சர்க்கரை சத்து குறைவு. நார்ச்சத்து அதிகம்.
கம்பில் அடங்கிய உள்ள முக்கிய சத்துக்கள்
- புரதம்
- கொழுப்புச்சத்து
- தாது உப்புக்கள்
- நார்ச்சத்துக்கள் மற்றும்
- மாவுச்சத்து
மருத்துவ குணாதிசயங்கள்
- உடல் உஷ்ணத்தை குறைக்கிறது
- வயிற்றுப்புண்ணை தவிர்க்கிறது
- மலச்சிக்கலைத் தவிர்க்கிறது
கம்பினால் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகள்
- கம்பு தயிர் சாதம்
- கம்பு பருப்பு சாதம்
- கம்பஞ்சோறு
- கம்பு வெஜிடபிள் கஞ்சி
- கம்பு புட்டு
- கம்பு அடை
- கம்பு அதிரசம்
- கம்பு டிலைட்
- கம்பகங்கூழ்
- கம்பு தோசை
- கம்பு வடை
- கம்பு இட்லி
- கம்பு குழிப்பணியாரம்
- கம்பு மாவு மசாலா வடாம்
- கம்பு பொங்கல்
இன்றைக்கு கம்பு என்ற சிறுதானிய மூலம் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகளை குறித்து விரிவாக பார்ப்போம்.1. கம்பு தயிர் சாதம்
தேவையான பொருட்கள்
கம்பு ஒரு கிண்ணம்
பால் தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் தேவையான அளவு
மிளகு சிறிது
இஞ்சி சிறிய துண்டு
எவ்வாறு செய்ய வேண்டும்
ஒரு கிண்ணம் கம்பை சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து மின் அம்மியில் போட்டு இரண்டு முறை சுற்றி எடுக்கவும். பிறகு கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதி தோலை நீக்கவும். பிறகு மீண்டும் மின் அம்மியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து அழுத்த பாத்திரத்தில் மிதமான தீயில் வைக்கவும். நான்கைந்து விசில் வந்ததும் இறக்கி பிரஷர் போனதும் திறந்து பால் சேர்த்து நன்றாக கிளறவும்.
கடாயை காய வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டி அளவு கடுகு உளுத்தம்பருப்பு வெங்காயம் தாளித்து பொன்னிறமானதும் கறிவேப்பிலை காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். 2 பச்சை மிளகாய் இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதை கம்பு சாதத்துடன் சேர்க்கவும். கடைசியாக உப்பு தயிர் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும். கம்பு தயிர் சாதம் ரெடி.
2. கம்பு பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்
கம்பு அரிசி ஒரு கப்
துவரம்பருப்பு கால் கப்
பாசிப்பருப்பு கால் கப்
தண்ணீர் 3 கப்
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
நீளமாக நறுக்கிய வெங்காயம் கால் கப்
நறுக்கிய தக்காளி அரை கப்
கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
பொடித்துக் கொள்ள
மிளகு அரை தேக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 234 பூண்டு 4
எவ்வாறு செய்ய வேண்டும்
அரிசியும் பருப்பு வகைகளையும் கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிளகு சீரகம் மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்க்கவும். வதங்கியதும் தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் அரைத்த பொடி சேர்த்து வதக்கவும். தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் அரிசி பருப்பையும் கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் வேகவிடவும். கம்பு பருப்பு சாதம் ரெடி
3. கம்பு சோறு
தேவையான பொருட்கள்
கம்பு குருணை ஒரு கிலோ
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்
கம்பு குருணை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குக்கர் அல்லது மண் சட்டியில் வேக விடவும். அடியில் பிடிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது சுவைமிகு கம்பஞ் சோறு ரெடி. கம்பத்துடன் ரசம் மோர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
4 கம்பு வெஜிடபிள் கஞ்சி
தேவையான பொருட்கள்
கம்பு அரை கிண்ணம்
மஞ்சள்
முள்ளங்கி
கேரட்
அவரை
பீன்ஸ்
காலிபிளவர்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சீரகம்
மிளகு அரைத்தேக்கரண்டி
பிரியாணி இலை ஒன்று
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
தண்ணீர் இரண்டு கிண்ணம்
எவ்வாறு செய்ய வேண்டும்
அரை கிண்ணம் கம்பை நன்றாக சுத்தம் செய்து ஊறவைக்கவும். இதனுடன் 3 கப் மஞ்சள் முள்ளங்கி கேரட் அவரை பூக்கோவா காலிபிளவர் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த விழுது அரை தேக்கரண்டி அளவுக்கு சீரகம் மிளகு 1 பிரியாணி இலை ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து 2 கிண்ணம் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெந்ததும் பிரியாணி இலையை எடுத்துவிட்டு கலவையை மின் அம்மியில் அரைத்துக் கொள்ளவேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரை தேக்கரண்டி கடுகு மற்றும் 3 பல் பூண்டு சேர்த்து தாளித்து அரைத்த சாறு கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதில் எலுமிச்சை பழச்சாறு உப்பு மிளகுத் தூள் சேர்த்துப் பருகலாம். இப்போது வெஜிடபிள் கஞ்சி ரெடி.
5. கம்பு புட்டு
தேவையான பொருட்கள்
கம்பர் 2 கப்
வெல்லம் ஒன்றரை கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
முந்திரிப்பருப்பு 6
எண்ணெய் மூன்று தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
எவ்வாறு செய்ய வேண்டும்
கம்பை நன்கு கழுவி நான்கு அல்லது ஐந்து முறைகள் அரிக்க வேண்டும் . (இல்லையெனில் மாவில் கல் மண் தட்டுப்படும்) பிறகு தண்ணீரை வடித்துவிட்டு நல்ல வெயிலில் மொறுமொறுவென காய வைக்கவும். நன்கு காய்ந்ததும் சூடான வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு படபடவெனப் பொரியும் வரை வறுத்து அள்ளவும். வறுத்த கம்பை மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்.
இந்த மாவில் ரெண்டு கப் எடுத்து சிட்டிகை உப்பு போட்டு தண்ணீர் தெளித்து பிசிறி ஆவியில் வேக வைக்கவும். அதற்கு நிறைய நேரம் எடுக்கும். அது வேகும் நேரத்தில் வெல்லத்தை தட்டி அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள் முந்திரி தேங்காய்த் துருவல் நெய் சேர்க்கவும். வெந்த புட்டை மணல் அதே சூட்டோடு பாகில் கொட்டி நன்கு கிளறி உண்ணவும். சுவையான கம்பு புட்டு ரெடி.
தேவையான பொருட்கள்
கம்பு இரண்டு கிண்ணம்
வெங்காயம் 2 பொடியாக நறுக்கவும்
கறிவேப்பிலை 2 ஆரக்கு
பச்சை மிளகாய் 4
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கம்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவி சிறிதளவு உப்பு சேர்த்து நீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்துப் பிசைந்து தோசைக்கல்லில் அடைகளாக தட்டி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். கம்பை உலறவிட்டு அறவை இயந்திரம் கடையில் கொடுத்து மாவாக்கி பயன்படுத்தியும் இதை செய்யலாம். கம்பு அடை ரெடி.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு ஒரு கப்
வெல்லத்தூள் அரை கப்
எள் ஒரு கைப்பிடி
எண்ணெய் தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
கம்பு மாவுடன் வெல்லம் சேர்த்து கெட்டியாக பிசையவும். சிறு உருண்டைகளாக்கி மாவை கையினால் பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
8. கம்பு டிலைட்
தேவையான பொருட்கள்
கம்பு அரை கிலோ
வெல்லம் 150 கிராம்
தேங்காய் துருவல் ஒரு கப்
சுத்தமான துணி அல்லது கஸ்ரால் முளை கட்ட
எவ்வாறு செய்ய வேண்டும்?
கம்பை நீரில் கழுவி சுத்தம் செய்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்து சுத்தமான துணியில் கட்டி தொங்க விடவும். மறுநாள் காலை முளை கட்டியிருக்கும், அதை எடுத்து வெல்லத்தைத் துருவி அதில் கலந்து தேங்காய் துருவில் சேர்த்து சாப்பிட ஜோராக இருக்கும். சத்து நிறைந்த உணவு இது. கம்பு டிளைட் ரெடி.
(குறிப்பு: பல்லில்லாத வயதான வர்களுக்கு முளைவிட்ட கம்பை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பிறகு வெல்லம் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொடுக்கலாம்.)
9. கம்பங்கூழ்
தேவையான பொருட்கள்
உடைத்த கம்பு குருணை ஒரு கப்
தண்ணீர் 3 கப்
கடைந்த தயிர் ஒரு கப்
மோர் 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
கம்பு குருணையைக் கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில் வேகவிடவும். ஆறியதும் மோர் தயிர் உப்பு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நீர்க்க கரைத்து பருகலாம். கம்பு வெந்ததும் அதை உருண்டைகளாக உருட்டி வைத்து தேவைப்படும்போது ஒரு உருண்டை எடுத்து கரைக்கலாம். சூடாக இருக்கும்போது சாதமாகவும் சாப்பிடலாம். மீதமான கம்பு உருண்டை களை தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும் மண்சட்டியில் செய்தால் சுவை கூடும்.
10. கம்பு தோசை
தேவையான பொருட்கள்
கம்பு மாவு ஒரு கப்
புளித்த தோசை மாவு 1 கப்
இஞ்சி சிறிது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 4
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய் உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
தோசை மாவுடன் கம்பு மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு போட்டு தோசை மாவு பதத்துக்கு கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் தோசை சுட்டு எடுக்கவும். வெங்காய சட்னி தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். கம்பு தோசை தயார்.
11. கம்பு வடை
தேவையான பொருட்கள்
கம்பு
கடலைப் பருப்பு
உளுத்தம்பருப்பு தலா அரை கப்
புழுங்கல் அரிசி கால் கப்
பச்சைமிளகாய் 4
இஞ்சி வெங்காயம் அரை கப்
உப்பு எண்ணெய் தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்
கம்பை நன்றாக களைந்து அரிசியுடன் சேர்த்து ஊறவைக்கவும். உளுந்து கடலைப்பருப்பு ஒன்றாக ஊறவைக்கவும். கம்பு அரிசியை கெட்டியாக அரைத்து பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை உப்பு சேர்த்து கடைசியில் ஊறிய உளுந்து கடலைப்பருப்பை அதில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்போது கம்பு வடை ரெடி.
12. கம்பு இட்லி
தேவையான பொருட்கள்
கம்பு ஒரு கப்
உளுந்து கால் கப்
புழுங்கலரிசி அரை கோப்பை
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்
கம்பு அரிசி இரண்டையும் ஊற வைக்கவும். பருப்பை தனியாக ஊற வைக்கவும். பின்னர் இரண்டையும் தனித்தனியே அரைத்து உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். காலையில் மாலையில் செய்யலாம். அதிக நேரம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது கம்பு இட்லி ரெடி.
13. கம்பு குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி 2 கப்
கம்பு 1 கப்
உளுந்து அரை கப்
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம் 2
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் துருவல் அரை கப்
எண்ணெய் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
அரிசி கம்பு உளுந்து மூன்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஆட்டுக்கல்லில் போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் தேங்காய் துருவல் கறிவேப்பிலை உப்பு சேர்த்து அரைத்து மூன்று மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு குழிப்பணியாரக் கல்லில் ஊற்றி நெய் எண்ணெய் கலவையை விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும் இப்போது சுவையான கம்பு குழிபணியாரம் தயார்.
14. கம்பு மாவு மசாலா வடாம்
தேவையான பொருட்கள்
கம்பு மாவு 2 கப்
பெரிய பொடியாக நறுக்கிய பூண்டு 2 தேக்கரண்டி
தண்ணீர் 3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்?
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். கம்பு மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கிளறவும். பிறகு பூண்டு வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வட்டங்களாக தட்டவும். வெயிலில் காயவிடவும் நன்றாக காய்ந்ததும் எடுத்து வைத்துக்கொள்ளவும் தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
15. கம்பு பொங்கல்
தேவையான பொருட்கள்
கம்பு 100 கிராம்
வெல்லம் 200 கிராம்
நெய் ஒரு தேக்கரண்டி
முந்திரி பாதாம் சிறிதளவு
உப்பு ஒரு சிட்டிகை
எவ்வாறு செய்ய வேண்டும்
கம்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி தண்ணீரை வடித்து, மிக்ஸியில் ஒரு சுற்று ஓட விடவும், ரொம்பவும் நைசாக அரைக்கக்கூடாது. பிறகு அதில் மூன்று பங்கு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 5 விசில் வைத்து எடுக்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி முந்திரி பாதாம் வறுத்து சேர்த்து பரிமாறவும். கம்புக்கு இயல்பிலேயே ஒரு நல்ல மனம் உண்டு என்பதால் வாசனைக்காக ஏலக்காய் கூட தேவையில்லை. நார்சத்து கால்சியம் இரும்பு சத்து என எல்லாம் நிறைந்தது இது. இப்போது சுவையான கம்பு பொங்கல் ரெடி.
என்ன நண்பர்களே, தினமும் உங்கள் வீட்டடில் பொதுவான உணவு வகைகளுக்கு இடம் கொடாமல் அடிக்கடி இது போன்ற நமது பாரம்பரிய உணவு வகைகளுக்கு முதலிடம் அளித்து உண்டு வந்தால் நமது உடலை ஆரோக்கியமாக காப்பதோடு மட்டும் அல்லாமல் நோய் இன்றியும் நலமுடன் வாழலாம். உங்கள் நலனில் அக்கறையுடன் துளிர்கல்வி.நெட் வலைதளம்.
No comments:
Post a Comment