கடுகின் மருத்துவ குணங்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 22, 2020

கடுகின் மருத்துவ குணங்கள்

கடுகின் மருத்துவ குணங்கள்

கடுகை அசல் கடுகு  என்றோ கருப்பு கடுகு  என்றோ அழைக்கலாம்.  இதை மஸ்டர்ட் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.  கடுகில் வெண்கடுகு இந்திய கடுகு பழுப்பு  கடுகு ஆகிய வகைகள் உண்டு. கடுகு க்ருசிஃபெரெ என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.  

கருப்பு கடுகின் சாத்திர பெயர் ப்ராசிகா ஆகும்.  இதை பெரும்பாலும் ஊடுபயிராக பயிரிடப்படுவார்கள்.  இந்த செடியின் விதைகளை உணவு வகைகளுக்கு மணம் கூட்டப் பயன்படுத்தப்படுகிறது.  கருப்புக் கடுகு இனத்தில் 150க்கும்   மேலான வகைகள் உள்ளது.  சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருப்பு கடுகு நம் தேவைக்கு ஏற்ற அளவு இந்தியாவில் பெறவில்லை,  எனவே அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்கிறோம். நாம் இறக்குமதி செய்யும் நறுமணப் பொருட்களில் கடுகின் மதிப்பீடு ஆகும். 

எண்ணெய் தரும் கடுகு வகைகள் தனியானதாகவும் அவற்றின் பெயர்கள் இன வகைகள் இன்னும் தெளிவுபட வரையறை செய்யப்படவில்லை.  எண்ணெய் கடுகள் வெண்கடுகு  பழுப்பு கடுகு, டோரியா ராய் முதலியவை ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் கடுகு ஓரளவு பயிராகிறது காய்கறியாகவும் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்துகின்றனர்.


கருப்பு கடுகு, பழுப்பு கடுகு இரண்டின் மாவுகளை கலந்து கடுகு மாவு என்று விற்பனை செய்கிறார்கள். 

வெண்கடுகு

வெண்கடுகை மஞ்சள் கடுகு என்றும் கூறுவர். மற்ற கடுகுவகை தண்டுகளை  விட சற்று கூடுதலான சொரசொரப்பு கொண்டிருக்கும்.  இறகு வடிவ இலைகளையும் மஞ்சள் பூக்களையும் கொண்டிருக்கும். இதன் சாத்திரப் பெயர் பி அல்பா அல்லது பி ஹிர்டா ஆகும். 

இக்கடுகின் தோற்றம் தென்னாப்பிரிக்கா மேற்கு ஆசியா குளிர்காலத்தில் தோட்டப்பயிர் வட இந்தியாவில் பயிரிடப்படுகிறது.  இதில் எண்ணெய் பசை ஜூலி 0.16 சதவிகிதம் மிகவும் குறைவானது ஆகும்.  

இதன் விதைகளில் ஸினால்பின்  என்ற குளுகோசை டும் மிரோஸின் என்ற செரிமானப் பொருளும் அடங்கியுள்ளது.  பெரும்பாலும் இந்த கடுகை யாரும் தனியாக பயன்படுத்தப்படுவதில்லை.  கறுப்புக் கடுகுடன் கலந்தே பயன்படுத்துவார்கள்.  இதன் தழை பயிருக்கு உரமாகிறது.  பிண்ணாக்கு ஆடுகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பழுப்பு கடுகு 

பழுப்பு கடுகை  இந்திய கடுகு என்பார்கள்.  பி ஜூன்சியா என்பது சாத்திர பெயராகும்.  இதன் விதை சுருக்கம் விழுந்து சிவந்த பழுப்பு நிறமாக சிறியவையாக இருக்கும்.  இக்கடுகு இரண்டு விதமாக வளரக்கூடியது.  உயரமான செடியில் தாமதித்து உதிர்வது ஒரு வகை. குட்டையான  செடிகளில் விரைந்து முதிர்வது ஒருவகை. குட்டை ரகத்தையும்  இரண்டு வகையாக பிரிக்கலாம்.  ஒன்று சொரசொரப்பான இலைகளையும் மற்றொன்று மென்மையான இலைகளையும் கொண்டதாகும். எகிப்து முதல் சைனா வரை மேற்கு கிழக்கான  நாடுகளாகும்.  இந்தியாவில் பீகார் உத்தரபிரதேசம் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பயிராகிறது.  ஏக்கருக்கு சுமார் 15 அந்தர் கடுகு விழைகிறது.  இதில் 2.9 சதவிகிதம் வரை எண்ணெய் பசை உள்ளது.  இதன் தைலத்தை மருந்து பொருள் தொகுதியில் சேர்த்துள்ளார்கள்.  இது பதனப்படுத்தும் தன்மை பெற்றுள்ளது. நொதித்திடச் செய்யும் காடிச்சத்தாகவும் இதைப் பயன்படுத்துகின்றனர். 

கருங்கடுகு

கறுப்புக் கடுகு அசல் கடுகு என்று இதற்குப் பெயர்கள்  உண்டு.  இதன் தோற்றம் ஐரோப்பாகும். அண்மையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தான் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது.  தமிழ்நாட்டிலும் உத்தரப் பிரதேசத்திலும் இது பயிராகிறது.  இதில் எண்ணெய் கிடைப்பதில்லை.  இதில் தைலம் வடிக்க்கலாம். இந்தத் தைலம் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. இந்த தைலத்தை நுரையீரல் நோய் மற்றும் சீதளக் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது.  இதை உணவுப் பொருட்களுக்கு மணங்கூட்டப் பயன்படுத்தப்படுகிறது.  பொதுவாக கடுகு எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.  வெளிநாடுகளில் கடுகு எண்ணெய் கொண்டு சோப்பு தயாரிக்கின்றனர். விளக்கு எரிக்கவும், மசக்குப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment