மணக்கும் பொருள்களின் மருத்துவப் பயன்கள் : குங்குமப்பூ மற்றும் கிராம்பு ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
குங்குமப்பூவின் மருத்துவ பயன்கள்
முதன்முதலில் இது தெற்கு ஐரோப்பாவில் விளைந்த ஒருவித பூண்டு செடியாகும். தற்போது ஐரோப்பிய நாடுகள் மத்திய தரைக்கடல் நாடுகள் துருக்கி இந்தியா ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது.
இதன் ஆங்கில பெயர் (Saffron) Iridaccae குடும்பத்தை சேர்ந்த ஆகும். இதன் சாத்திரப் பெயர் குரோகஸ் ஸாடிவஸ் ஆகும். அளவு குறைந்து தாழ்ந்து வளரும் செடியின் உலர்ந்த சூடிய குங்குமப்பூ ஆகும். இதன் பூக்கள் நீலம் அல்லது வெளிர் நீலமாகும். மனம் நிறைந்ததாகும். பூக்களில் ஆரஞ்சு நிற முப்பட்டை சூல்மூடிகள் இருக்கிறது. இவை சூல் தண்டுடன் சேர்ந்து குங்குமப் பூவாகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பகுதியில் இது பயிராகிறது. வண்டல் நிறைந்த இடங்களில் பயிரிடப்படுகிறது. விலை அதிகமாகும் நம் தேவைக்கு உள்நாட்டு உற்பத்தி குறைவு என்பதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். ஒரு பூவில் நான்கு சூல் மூடிகள் இருக்கும். அடர் மஞ்சள் கலந்த சிவப்பு மனம் அழுத்தமாகவும் சிறிது கைப்பாகவும் புதுமையாகவும் இருக்கும்.
இதன் பூக்கள் மலரும் காலம் வெப்பமுள்ள இளவேனிலும், நீண்ட இலையுதரிர் காலமுமாகும். அக்டோபர் இரண்டாம் வாரம் முதல் நவம்பர் இரண்டாம் வாரம் வரை பூக்கும். காலை வேளையில் வெயில் வருவதற்கு முன்பு பூக்களைக் கொய்து விடுதல் வேண்டும். பூக்கள் சுத்தப்படுத்தப்பட்டு சூல் தண்டுகளும் சூல் மூடிகளும் வெவ்வேறாக பிர்க்கப்படுகிறது. அன்றன்றே புற வட்டத்திலிருந்து சூல் மூடிகளைப் பிரித்து எடுக்கும் வேலையை செய்து விட வேண்டும். இல்லையெனில் பூக்கள் வாடி வதங்கி விடும்.
சூலகங்களிலிருந்து பிரித்து எடுத்து 5 நாட்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும். பிறகு ஒரு கழியால் லேசாக தட்டப்பட்டு சல்லடைகளின் மூலம் சலிக்கப்படுகிறது. முதல் தரம் ஷாஹி என்றும் இரண்டாம் தரம் மோக்ரா என்றும் மூன்றாம் லச்சா தரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது காஷ்மீரி முறையாகும்.
ஸ்பெயினில் வாட்டும் முறை கையாளப்படுகிறது. மற்ற நாடுகளில் ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 ராத்தல் வரை குங்குமப் பூ கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் அதை விட குறைவாகவே கிடைக்கிறது. ஐந்து ராத்தல் பச்சை சூல் மூடிகளிலிருந்து ஒரு ராத்தல் குறிப்பு குங்குமப்பூ கிடைக்கிறது.
வியாபாரத்திற்கு வரும் குங்குமப்பூ கருப்பு சிவப்பு கலந்த பழுப்பு சடையான சூல்முடிகளாகும். கசப்பான சுவையும் நல்ல மணமும் கொண்டதாகும். புதியதில் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நாள்பட்டபடடத்தைத் தொட்டால் சிதையும். பளபளப்பும் குறைந்திருக்கும்.
இதன் விலை அதிகம் என்பதால் பல்வேறு வகையான கலப்படத்திற்கு உள்ளாகிறது. செடியின் சூல் தண்டுகள் பூந்தாதைப்பைகள் அல்லி வட்டங்கள் வடியப் பெற்ற கசடு வேறு வகை பூக்கள் கரிமச் சாயங்கள் ஆகியவற்றால் கலப்படம் செய்யப்படுகிறது. மேலும் எடை கூடுவதற்காக தண்ணீர் எண்ணெய் கிளிசரின் சேர்க்கப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்
வெளிநாடுகளில் ரொட்டிகளிலும் உணவுப் பண்டங்களிலும் சேர்க்கப்படுகிறது. குங்குமப்பூவிற்கு மருந்து தன்மை அதிகம் உண்டு. வீக்க நோய் காய்ச்சல் ஈரல் கட்டி முதலியவற்றைக் குணமாக்கும். வெப்பம் உண்டாக்கும். நீர்க்கோவையைப் போக்கும். மருந்து பொருளில் நிறம் கொடுக்கவும் கிளர்ச்சியூட்டும் பயன்படுத்துகின்றனர். இதை அதிகமாக உபயோகித்தால் மயக்கமுண்டாகும். மாதவிடாய் இயல்பாக ஏற்பட்ட மருந்துகளில் கலந்து கொடுப்பார்கள். இந்திய ஆயுர்வேத யுனானி மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதயத்திற்கும் மூளைக்கும் வலுசேர்க்கும். கருப்பைப்புண்ணை குங்கம்பூ தைலம் ஆற்றிவிடும். நெய்யுடன் கலந்து கொண்டால் நீரிழிவு நோய் குணமாகும். கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொருள் ஆகும்

குங்குமப் பூவுக்கு நிறம் கொடுக்கும் முக்கிய பொருள் கிளைகோசைடு க்ரோசின். கசப்பு கொடுக்கும் பொருள் க்ளுகோசைடு பிக்ரோக் ரோஸின் ஆகும்.
கிராம்பு மருத்துவ பயன்கள்
கிராம்புக்கு இலவங்கம் என்றும் பெயருண்டு. உலக நாடுகளில் நறுமணப்பொருட்கள் வியாபாரத்தில் கறுப்பு மிளகுக்கு அடுத்தபடியாக கிராம்பு தான் அதிக மதிப்பீட்டில் புழங்குவது ஆகும். 10.7 மீட்டர் முதல் 12 மீட்டர் உயரம் வளரும் அடி மரத்துடன் வளரும். இம்மரத்தின் மலராத உலர்ந்த மொக்குகள்தான் கிராம்பு ஆகும்.
இதன் ஆங்கில பெயர் கிளவ் ஆகும். கிராம்பு மிர்டாசியா குடும்பத்தை சேர்ந்ததாகும். இதன் சாத்திர பெயர் யூஜினியா கார்யோபில்லஸ் ஆகும்.
உலக நாடுகளிலேயே ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் தான் அதிக அளவில் உற்பத்தியாகிறது. உலகத்தேவையில் இது 90 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. வடியப்பெற்ற கராம்பு, வடியப்பெறாத கிராம்பு கிராம்பு இலைத்தைலம் தைலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருட்கள் என பல வகையிலும் இந்தியா இறக்குமதி செய்கிறது. நமது நாட்டில் மிகக் குறைந்த அளவே கரும்பு பயிர் செய்யப்படுகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிராம்பை கீழ்த்திசை நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கி பி 1800 அளவில்தான் இதை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு அறிமுகமாக்கயது. தற்போது ஜான்சிபார் மடகாஸ்கர் இந்தோனேசியா மலேசியா இலங்கை ஆகிய நாடுகளில் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது. நீலகிரி மலை, தென்காசி குன்று, குமரி மாவட்டம் கேரளாவில் கோட்டயம் கொல்லம் மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறது.
மலராத மொக்குகள் பயிராக இருக்கும் போதே பறிக்கப்படுகின்றன. கரும் பழுப்பு நிறம் உண்டாகும் வரை வெயிலில் உலர்த்துவார்கள். இவை வட்டுருவான காம்புகள் கொண்டவை. இந்த காம்பினை சுற்றி சிறிது பருத்தி பந்து போன்ற அல்லி வட்டமும் அதை சுற்றி நான்கு பற்கள் கொண்ட புல்லி வட்டமும் இருக்கும். உலர்ந்த பிறகு கிராம்புகள் தரம் பிரிக்கப்படுகின்றன. ஒரு கிராம்புக்கு ஒன்றிலிருந்து பத்து வரை இருக்கும். தரமான கிராம்புகள் கரும்பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். மொக்குகள் பறிக்கப்படாமல் விட்டால் பழமாகிவிடும். இந்த பழம் சதைப்பற்றுள்ள முட்டை வடிவமான ஒரு விதை கொண்ட கரும்பச்சை பழமாகும். இதை கிராம்பின் தாய் என்பார்கள். இலை பழுக்காத காய். காம்பு சிதைந்த கிராம்பு ஆகியவை சத்து எண்ணெய் எடுக்கப் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்
கிராம்பு எண்ணெய் செரிமானத்திற்கு உகந்தது. அழுகலகற்றுவதற்கும் நுண்புழு கொல்லியாகவும் மருந்துகளில் பயன்படுகிறது. நமைச்சலை அகற்றக் கூடியது. பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. மற்றும் வாசனைப் பொருட்கள் சோப்புகள் ஆகியவற்றிலும் கலக்கப்படுகிறது. இந்த தைலத்தில் உள்ள யூஜினால் பிர்த்தெடுத்து செயற்கை இளம்சிவப்பு நிறம் சேரக்கவும், செயற்கை வனிலா சத்து உருவாவதற்கும் உதவுகிறது.

No comments:
Post a Comment