பின்ஸ் என்ற காயினை சீமை அவரைக் காய் என்ற பெயரிலும் சொல்லப்படுவதுண்டு. இது விலை உயர்ந்த காய் என்றும் ஆங்கிலேய காய் என்று வர்ணிக்கப் படுகின்றது. பீன்ஸ் சுவையான காயாக திகழ்கிறது. இதனைப் பயிரிட்டு லாபம் அடைவது எப்படி என்பதை காண்போம்.
பீன்ஸ் விதைகள்
நன்றாக முற்றிப் போன விதைகள்தான் பயிரிட சிறந்தவை ஆகும். எனவே பீன்ஸ் செடியின் முற்றிய விதைகளைக் கொண்டு வந்து நன்றாக உலர்த்தி கொள்ள வேண்டும். உலர்த்தப்பட்ட இவ்விதைகளை அதற்கு அடுத்த வருடமே விதைக்க வேண்டும்.
ஏனென்றால்
முற்றி உலர்ந்த விதைகளே, விதைப்புக்கு ஏற்றதாகவும் பலன் தருவதில் சிறந்ததாகவும் உள்ளது.
விதைக்கும் காலம்
இவ்விதைகளை கீழ்க்காணும் ஏதாவது ஒரு மாதத்தில் விதைக்கலாம்.
- ஆவணி
- புரட்டாசி
- ஐப்பசி
- கார்த்திகை
பொருந்தாத காலங்கள்
பீன்ஸ் விதைப்பிற்கு மேற்சொன்ன காலங்கள் ஏற்ற காலங்களாகும். மற்ற காரணங்கள் பொருந்தா....
ஏன் என்றால் பீன்ஸ் குளிர்பிரதேச செடி வகைகளில் ஒன்று.
பலன் தரும் காலம்
பீன்ஸ் விதைக்கப்பட்டு ஒன்றேகால் மாதத்திற்கு பிறகு ஒன்றரை மாதத்திற்கு முன்பு பலனைத் தர ஆரம்பித்து விடும். சுருக்கமாக சொல்லப் போனால் சரியாக நாற்பது நாட்களுக்குள் பலனைத் தரக்கூடிய குறைந்த பட்ச கால அளவுக்குள் நிறைவான பலனை தரக் கூடியதாக பயிராக இது அமைகின்றது.
குளிர்பிரதேசச் செடி
இது குளிர் பிரதேசம் செடி என்று முன்னரே கூறப்பட்டது. எனவே இது குளிர்ப் பிரதேசங்களான ஊர்களிலும் இடங்களிலும் கால வித்தியாசம் பார்க்காமல் எக்காலத்திலும் பயிரிட ஏற்றது.
காய்க்கும்காலம்
சாதாரண காலங்களில் சுமாராக காய்க்கக் கூடிய சக்தி பொருந்திய இவை. குளிர்காலங்களிலும் அதைவிட பணிக்காலங்களிலும் அதிகமாக காய்க்கூடிய சக்தி வாய்ந்தது.
பீன்ஸ் வகைகள்
பீன்ஸ்களில் எத்தனையோ ரகங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை கீழ்வருமாறு....
- குத்து பீன்ஸ்
- முருங்கை பீன்ஸ்
- டபுள் பீன்ஸ்
- பட்டர் பீன்ஸ்
ஆகிய பீன்ஸ்களும் உண்டு.
குத்து பீன்ஸின் நன்மைகள்
குத்த பீன்ஸ் விதைகளை விதைத்த உடன் அதில் இருந்து முளைத்து எழும் செடி மற்ற பகுதிகளை விட மாறுபட்ட விதத்தில் அமையும். சதாரண பீன்ஸ் செடியை போல நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆனால் குத்து பீன்ஸ் எனப்படும் ஒருவகைக் கூத்து செடியை போல நிலைத்து நிற்கும் தன்மையைப் பெற்றிருக்கவில்லை.
அதே சமயத்தில் செடியை போல படர்செடியைப்போல பந்தலின் மீதும் படர்வது கிடையாது. இதுவே குத்து பீன்ஸின் பொதுத்தன்மைகள்.
குத்து பீன்ஸை பராமரிப்பது எப்படி?
குத்து பீன்ஸ் செடிகள் வளர்ந்தவுடன் இச்செடிகளின் அருகில் சுமார் 6 அடி உயரம் இருக்கக்கூடிய குச்சிகளை குத்தி வைத்து விட வேண்டும். இப்படி செய்தால் அச்செடிகள் அவற்றின் மேலே ஏறி பின்னிப்பிணைந்து கொள்கின்றன. குச்சிகளுடன் பின்னிப் பிணைந்து செல்லக்கூடிய இந்த செடிகள் உயரமாக சென்றவுடன் காய்க்க ஆரம்பித்து விடும். இந்த காய்களை கீழிருந்தவாறு எட்டிப் பிடித்து பறித்து விடலாம்.
முருங்கை பீன்ஸ்
பீன்ஸ் வகைகளில் அடுத்ததாக குறிப்பிடத்தக்கது முருங்கை பீன்ஸ் என்று கூறலாம். இந்த முருங்கை பீன்ஸ் வளர்வதற்கு கொடிகளுக்கு பந்தலிடுவதைப் போல செடிகளுக்கும் பந்தல் போட வேண்டும். அப்போது இவற்றின் வளர்ச்சி நன்முறையில் காணப்படும்.
டபுள் பீன்ஸ்
டபுள் பீன்ஸ் சோயாபீன்ஸ் வகையை சேர்ந்ததுதான். சாதாரண பீன்ஸை போல இவற்றினை விளைய வைக்கலாம். பீன்ஸின் மற்றொரு ரகம் பட்டர் பீன்ஸ். இந்த பட்டர் பீன்ஸை காய்களாக எவரும் சமைப்பதில்லை. இவற்றினை முற்ற வைத்து முற்றிய காய்கள் உள்ளே இருக்கக்கூடிய விதைகளை எடுத்து சமையல் செய்து உண்கின்றனர். எல்லா வகை பீன்ஸ்களும் சுவையைத் தருவன!,
No comments:
Post a Comment