மணக்கும் பொருள்களின் மருத்துவ பயன்கள் : துளசி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றிப் பார்ப்போம்.
1. துளசி
துளசி புதினா வகையை சார்ந்ததாகும். இதன் விஞ்ஞானப் பெயர் ஓசிமம் பேஸிலிகம். உதடனைய இதழ் கொண்ட வகை குடும்பத்தை சேர்ந்தது. இதை ஆங்கிலத்தில் பேசில் என்று அழைப்பார்கள். இது இந்தியாவில் பரவலாக வளர்க்கப்பட்டாலும் வடமேற்கு இந்தியா பகுதியில் பயிராக்கப்படுகிறது.
பெர்ஷியா, தென் பிரான்ஸ் ஐக்கிய அமெரிக்கா மத்திய தரைக்கடல் நாடுகள் ஆகியவற்றில் பயிரிடப்படுகிறது. இது ஒரு மனங்கமழ் பொருளாகும்.
துளசி 30 சென்டி மீட்டர் முதல் 90 சென்டிமீட்டர் வரை வளரக் கூடியதாகும். இதனால் 3.75 சென்டிமீட்டர் வரை நீளமிருக்கும் நீளம் இருக்கும் இதன் உலர்ந்த இலைகள் பழுப்பு கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
துளசியின் வகைகள்
துளசியில் பல வகை உள்ளன. நமது நாட்டில் நான்கு வகை துளசி பயிராகின்றன. அவை ஆல்பம் டி ஃபர்மன் திர்ஷிஃப்ளோரம் ஆகியவையாகும்.
இந்துக்களின் பூஜைப் பொருட்களில் ஒன்றாக துளசி மதித்து வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலோனோர் வீடுகளில் முற்றத்திலும் கவனத்துடன் வழங்கப்பட்டு கடவுளாக நினைத்து வழிபாடு செய்கிறார்கள்.
துளசி எத்தகைய மண்ணிலும் வளரக்கூடிய தன்மை கொண்டதாகும். இதன் தண்டு மென்மையானது. செடி இலையும், தண்டும் மணங்கமழ் பொருளாகும். இதன் மணம் வெப்பமுடன் இனிப்பாகவும் காரல் கலந்த சுவை கொண்டதாகவும் இருக்கும். அயல் மகரந்தச் சேர்க்கையால் இதன் அனமும் வகையும் நாளுக்கு நாள் பெருகி மாற்றத்துக்கு உள்ளாகிறது.
துளசியின் ஆல்பம் வகை கீரை போன்ற இலையுடையவை. பர்புராசென்'ஸ் வகை கருஞ்சிறப்பு சிவப்பு நிறம் கொண்டது. டிஃ பெர்ம் வகை சுருள் இலை கொண்டதாகவும் திரிசிக்ப்லோரம் வகை வெண்மை இலை கொண்டதாகவும் இது சாதாரண வகையாகும்.
நல்லம் தைலம் கொடுக்கக்கூடியது சுருள்இலை துளசி ஆகும். துளசி மணக்கும் பொருளில் ஒன்றாகும். மருத்துவ குணம் மிக்கது.
துளசி தைலத்தை நான்கு வகையாக பிரிவு செய்துள்ளனர்
அவை
- ஐரோப்பிய வகை
- ரியூனியன் வகை
- மெத்தில்சின்னமேட்
- யூஜினால் வகை ஆகியவையாகும்.
துளசி இலைகளில் உள்ள எண்ணற்ற பல புள்ளி போன்ற எண்ணெய் நாளங்களில் வாசனை உள்ள தைலம் அடங்கி இருக்கிறது.
துளசி தண்டு மற்றும் இலைகளில் இருந்து கிடைக்கும் தைலத்தை விட பூக்களில் இருந்து கூடுதல் தைலம் கிடைக்கிறது. சராசரியாக செடி முழுவதிலும் இருந்தும் கிடைக்கும் தைலம் 0.3 சதவீதம் முதல் 0.5 சதவீதம் ஆகும்.
துளசியை முறையாகப் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 15 அளவில் பொருள் கிடைக்கும். ஆக ஒரு ஹெக்டேருக்கு துளசி மகசூலில் இருந்து 40 கிலோ கிராம் வரை எண்ணெய் கிடைக்கும்.
துளசியில் புரதம் கார்போஹைட்ரேட் சத்து ஆவியாகாத எண்ணெய் சத்து எண்ணெய் தைலம் மரக்கூறு உலோக சத்து நிறமி ஆகியவை அடங்கியுள்ளன.
துளசியின் பயன்கள்
துளசி தைலம் உணவு வகைகளில் மணம் கூட்ட பயன்படுகிறது. இதனை துண்டு செய்மது ஆட்டு இறைச்சியில் கலந்து வேகவைக்கப்படுகிறது. உலக நாடுகளில் மிட்டாய் மற்றும் மசாலாப் பொருட்கள் ஊறுகாய்கள்சிறப்பு காடிகள் மசாலை இறைச்சிப் போன்ற உணவுப் பொருட்களிலும் துளசி தைலம் பயன்படுத்தப்படுகிறது.
துளசியின் மருத்துவப் பயனகள்
பல் மருததுவத்திற்கான மருந்துகளிலும் வாய் சுத்திகரிப்புப் பொருள்களிலும் துளசி தைலம் சேர்க்கப்படுகிறது. சில வானைப் பொருள்களில் துளசி தைலம் சேர்க்கைப்பொருளாக சேர்க்கப்படுகிறது. குறிப்பாக குளியல் சோப்புகளில் கலக்கப்படுகிறது.
பொதுவாக இத்தாலியிலும் அமெரிக்காவிலும் விளையும் துளசி தரமுடையதாக கருதப்படுகிறது. துளசியின் மருத்துவ பயன்பாடு வியக்கத்தக்கதாகவும் பசியை தூண்டும் அகட்டு வாய் அகற்றும் வியர்வை பெருக்கும் கோழை அகற்றும் வெப்பம் உண்டாக்கும் வயிற்றுப் புழுக்களை கொல்லும் காய்ச்சலை தடுக்கும் நச்சுத்தன்மையும் முறிக்கும் மார்பு நோயை நீக்கும் தலை சம்பந்தமான நோய்கள் மற்றும் கீல்வாதத்தை குணமாக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் அழர்ச்சி இருமல் போன்றவற்றிற்கு துளசி சாறு கொடுக்க குணம் உண்டாகும்.
தொண்டை கரகரப்புப் போக்கும் மூக்குத் துவாரங்களை சுத்தப்படுத்தும் காது வலி தீர்க்கும் படையை போக்கும் சீல் புண் குணமடைய செய்யும் ஓமியோபதி மருந்துகளில் துளசி பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கல் மூலநோய் தீர்ப்பதோடு உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது.
துளசி தளத்தை கொண்டு வீட்டில் உள்ள புழு பூச்சிகள் ஈ கொசுக்களை ஒழித்துவிடலாம். துளசிதைலம் கிருமி நாசினியாகிம். துளசி விதைகளை தண்ணீரில் ஊறவைத்தால் பிசின் பிரியும் யுரோனிக் அமிலம் குளுகோஸ் சைலோஸ் ரானோஸ் ஆகியவை கிடைக்கும். மேக வட்டை ரத்த பேதி வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு விதையின் சாரத்தை உட்செலுத்தி சிகிச்சை மேற்கொண்டால் சிறந்த பலன் உண்டு.
2. ஏலக்காய்
நறுமணப் பொருள்களில் நலம் பயக்கும் பொருள் ஏலக்காய் ஆகும். இது ஜிஞ்சி பெரேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. செடிகளில் முளைக்கும் விதை உறைகளில் அடங்கிய விதைகளே ஏலக்காய் ஆகும்.
ஏலக்காய் இரண்டு வகையானதாகும்.
1. சிற்றேலம் என்னும் சிறிய ஏலம்.
2. பெரிய ஏலம் என்பதாகும்.
விளைவிலும் வர்த்தகத்திலும் அதிகமாய் பயன்படுவது சிறிய ஏலமாயாகும். இந்தியாவில் அதிகமாய்ப் புழங்குவதும் பழக்கத்திற்குள்ளானதும் சிறிய ஏலமேயாகும். மிளகுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை ஏலக்காய் எல்லா வகையிலும் பிடித்துள்ளது. ஏலக்காய் விலை உயர்ந்த பயிராகும்.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் மணங்கமழ் பொருள்கள் மூலம் ஈட்டப்படும் அன்னிய செலவாணி 75 சதவீதம் வேலைக்காய் மூலமே பெறுகிறோம்.
சர்வதேச தர நிர்ணயம் (ISO) மூன்று பிரிவாகப் பிரித்துள்ளது. இந்த மூன்று பிரிவுகளில் 9 பிரிவுகளை அங்கீகரித்துள்ளது.
ஆப்ஃரோமஸ் பிரிவில் நான்கு வகை
ஆமோம் பிரிவில் நான்கு வகை
எலட்டேரியா பிரிவில் சிறிய ஏலம் ஒருவகை. ஆக 9 வகைகளாகும்.
அவை முறையே
- ஆஃப்ரமோமம் ஹோமம் ஆகஸ்டிஃபோலியம்
- ஆஃப்ரமோமம் ஹான்புர்யி
- ஆஃப்ரமோமம் கொராரிமா
- ஆஃப்ரமோமம் மெலிகுடா
- ஆமோமம் க்ரெர்வான்
- ஆமோமம் கெபுலேகா
- ஆமோமம் சுபலாடம்
- எலட்டாரின் கார்டமோமம்
இப்பெயர் விஞ்ஞான சாத்திர பெயர்களாகவும்.
ஏலக்காய் பொருத்தமட்டில் மாதம் ஒரு முறை பொதுவாக அறுவடை செய்யப்படுகிறது. முழுவதும் பலத்த விடாமல் பழுக்கும் பருவத்தில் இருக்கும் பழங்களையே பறிக்கப்படுகிறது. பறிக்கப்பட்ட பழங்கள் பின்பு உலர்த்தப்படுகிறது. உலர்த்தும் கட்டங்களில் உலையின் வெப்ப காற்று மூலம் பழங்கள் உலர்த்தப்படுகிறது. சில பகுதிகளில் திறந்த நிழல் தரும் மேடைகளில் உலர்த்தும் பணி நடைபெறுகிறது.
பழங்களை மிக விரைவில் உலர்த்தாமல் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட ஏலக்காயிலிருந்து உலர்ந்தகாம்புகள் பூக்கள் ஆகியவற்றை நீக்கப் படுகிறது.
பிறகு அளவு, நிறத்தை பொறுத்து தரம் பிரிக்கப்படுகிறது. அளவு வகையில் நீண்டவை மத்திமம் சூட்டை என்று குறிக்கப்படுகிறது. இதில் ஒரே சீரான பச்சை நிறம் கொண்டவை நல்ல தரம் உள்ளவையாகும். ஏலக்காய் களுக்கு ஒரே சீரான தோற்றம் கொடுப்பதற்காக அவைகளின் நிறம் அகற்றப்படுகிறது. நிறம் அகற்றும் வேலை தேவையில்லாத வேலை என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்திய ஏலம் நல்ல மணத்தினாலும் சுவையினாலும் சிறப்புப் பெற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளோர் பிற நாட்டு ஏலக்காய்களைவிட இந்திய ஏலக்காய்களையே விரும்புகிறார்கள்.
இந்திய மாநிலங்களில் கேரள மாநிலத்தில் தான் அதிக அளவில் 62% பயிரிடப்படுகிறது. கர்நாடகத்தில் 31 சதவீதம் தமிழகத்தில் 7% பயிரிடப்படுகிறது. 600 முதல் 1500 மீட்டர் உயரமான மலைப்பகுதிகளில் பசுமையான காட்டில் பயிரிடப்படுகிறது. ஈரமும் வெப்பமும் உள்ள சூழ்நிலையில் சீரான பருவமழையும் இலை தழை மக்கிய சத்து நிறைந்த களிச்சோற்று வண்டல் மண்ணும் ஏலச்சாகுபடிக்கு மிகவும் உகந்தது.
தென்னிந்திய மேற்கு தொடர்ச்சி மலைகளில் இரண்டு முதல் ஐந்து மீட்டர் உயரமான செடி வளரும். இதன் இலைகள் முட்டை வடிவிலும் இருக்கும் ஏலத்தின் பூக்கள் ஏப்ரல் மாதத்தில் தொன்றும். பழங்கள் மூன்று பள்ளக்குழுிகளையுடைய விதையுறைகளாக ஒவ்வொன்றிலும் பத்து முதல் பதினைந்து விதைகளுடன் காணப்படும்.
ஏலக்காய் மாதம் ஒருமுறை அறுவடை செய்யப்படுகிறது. ஏலக்காய்களை வாங்கும் போது அவை பிளவுபட்டு விதை இல்லாமல் சுருங்கி இருப்பதாய் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். காய்கள் தெறிப்பாகவும் விதைகள் உள்ளதாக இருக்க வேண்டும்.
ஏலக்காயின் பயன்கள்
ஏலக்காயடை மென்று சுவைக்கலாம். சமையல் பண்டங்களுக்கு மணம் கூட்டப் பயன்படுகிறது, இனிப்பு ஊறுகாய்களில் கலக்கப்படுகிறது, இதிலிருந்து சத்து எண்ணெய் எடுக்கப்படுகிறது மது வகைகளுக்கு மணங்கூட்டவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. அரேபிய நாட்டில் சமுதாய சமய சடங்குகளில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட சாராயக்கரைசலை வயிற்றுப் பொருமல் வாய்வு அகற்றப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் இஞ்சி லவங்கம் சீமைச்சோம்பு ஆகியவை கலந்து பயன்படுத்தினால் அஜீரணம் போய்விடும்.
ஏலக்காயின் மருத்துபயன்கள்
மருந்துகளில் நல்ல மணம் கூட்டவும், அகட்டுதல் அகற்றவும் பசியை உண்டாக்கவும் சிறுநீர் பெருக்கவும் ஏலக்காய் உதவுகிறது.
ஏலக்காய் மற்றும் கொழுப்பு கலந்த மருந்து மூக்கு உபாதையைத் தீர்க்கிறது. செரிமானமின்மை குமட்டல் வாந்தி வாயில் உமிழ்நீர் அதிகம் சுரத்தல் ஆகியவற்றுக்கு ஏலக்காயை மென்று தின்பது நல்லது. தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை ஏலத்திற்கு உண்டு. தேநீரில் சஏலத்தை கலந்து குடித்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். சிறுநீர் சுருக்கு வயிற்றுப்போக்கு சீதபேதி இதயத்துடிப்பு களைப்பு மந்தநிலை ஆகியவற்றிற்க்கு இந்த தேனீர் நல்லது.
தேனுடன் ஏலப்பொடி கலந்து தினமும் ஒரு வேளை உண்டு வந்தால் கண்பார்வை பிரகாசப்படும். நரம்பு மண்டலம் பலப்படும்.
Hi! This is my first comment here so I just wanted to give a quick shout out and say I genuinely enjoy reading your blog posts. Can you recommend any other Food Guest Post blogs that go over the same topics? Thanks a ton!
ReplyDelete