மிளகாயின் மருத்துவ குணங்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, July 28, 2020

மிளகாயின் மருத்துவ குணங்கள்

மிளகாயின் மருத்துவ குணங்கள்/

மிளகாய் இந்தியாவுக்கு அந்நிய பொருளாகும்.  15 ஆம் நூற்றாண்டு வரை மிளகாய் பற்றி இந்தியர்கள் அறிந்திரரக்கவில்லை.  அதற்கு முன் காரணத்திற்காக மிளகாய் பயன்படுத்தினார்கள். இன்று மிளகாய் இந்தியர்களின் அத்தியாவசிய உணவுப் பொருள் ஆகிவிட்டது.  இதை சிவப்பு மிளகு என்றும் கூறுவார்கள்.  இது வெப்பநிலை நாடுகளில் நன்கு பயிராகக் கூடியது.  தற்போது இந்தியா ஆப்பிரிக்கா ஜப்பான் மெக்சிகோ அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது.

 பதினைந்தாம் நூற்றாண்டில் முதன்முதலாக போர்த்துகீஷியரால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட மிளகாய் பதினேழாவது நூற்றாண்டில் தான் பரவலாக பயன்படுத்தப்பட்டது.  இதன் தோற்றம்  தென் அமெரிக்காவாகும். மிளகாயின் அருமை உணர்ந்து ஆதிகாலம் தொட்டு பயன்படுத்தியவர்கள் பெருநாட்டு மக்களாவர். 

இந்திய மாநிலங்களில் பரவலாக மிளகாயை பயிரிட்டாலும் தமிழ்நாடு, ஆந்திரா,  கர்நாடகா மாநிலங்களில் 75 சதவீதம் மகசூல் பெறப்படுகிறது. இதன் உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மளகாயின் சாத்திரப் பெயர் காப்சிகம் ஆகும்.  குடும்பப் பெயர் சொலானோசியே  ஆகும்.  

ஆண்டுக்கு ஒருமுறை செடியில் காய்க்கக் கூடியது.  செடிகளில் பூக்கள் தனித்தனியாக மலர்ந்து பழங்களாக பழுத்து தொங்கும்.  உலக அளவில் இதை நான்கு வகையாகப் பிரிக்கின்றனர்.  நிறம், அளவு, காரம் ஆகியவற்றை கொண்டு வகை பிடிக்கிறார்கள். பெண்குலம், புபெசென்ட்,  அன்னம் புருட்சென்ஸ்  ஆகியவை நான்கு வகை மருந்து பயன்கள் ஆகும். 

இதில் முதல் இரண்டு வகை தெற்கு  அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் பயிராகிறது.  மற்ற இரண்டு வகைகளும் உலக அளவில் பயிரிடப்படுகிறது.  இந்தியாவில் விளையும் மிளகாய் அன்னம் வகையை சார்ந்ததாகும். 

இந்தியாவில் பயிராகும் அன்னம் வகையில் பல ரகங்கள் பயிராகிறது.  இவை பல்வேறு ரகம், அளவு, காரம் கொண்டதாக உள்ளது.  நம் நாட்டு மிளகாயை நீளமான  கார வகை  என்றும் மணி வடிவ மிளகாய் என்றும் பிரிக்கலாம்.  பாப்ரிகா என்னும் மிளகாய்  அன்னம் என்ற மிதமான வகையை சேர்ந்ததாகும்.  இதன் நிறம் சிவப்பு மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கொண்டதாகும்.  

அக்மார்க் விதிகளின் கீழ் வியாபார ரீதியில் முதல் ரகம்,  இரண்டாவது ரகம், சிறப்பு ரகம். மத்திய ரகம்,  சுமார் ரகம் என்று பிரிக்கப்படுகிறது.  இவ்வாறு பிரிப்பதற்கு காயின் நீளம் வனப்போடு கூடிய சிவப்பு நிறம், அதிக உறைப்பு,  உறுதியான  புல்லி வட்டச்  சேர்க்கை ஆகிய அம்சங்கள் விலைக்கு ஆதாரமாக உள்ளது.

உலர்ந்த  சிவப்பு மிளகாய்க்கு நல்ல சிவப்பு நிறத்தாலும்,  மிதமான காரத்தாலும் அதிக மதிப்பு கிடைக்கிறது. இந்தியாவில் விளையும் சிவப்பு மிளகாய்க்கும் அயல்நாடுகளில் விளையும் சிவப்பு மிளகாய்க்கம் வேறுபாடு உண்டு.  இந்திய சிவப்பு மிளகாய் ஐரோப்பிய நாடுகளில் கிராக்கி உண்டு.  எனவே ஏற்றுமதிக்கு  பாப்ரிகா ரகத்தை அதிகமாக பயிரிட  அரசு திட்டமிட்டுள்ளது.

மிளகாய்ச் செடியில் உள்ள செம்மஞ்சள் வண்ண பொருள் சேர்க்கையே மிளகாய் சிவப்பு நிறத்தை கொடுக்கும்.  மிளகாய் நிறமே அதன் மதிப்பை நிர்ணயிக்க கூடிய தாகும்.  மிளகாயை குளிர்ச்சியான வறண்ட இருண்ட கிடங்குகளில் சேமித்து வைத்தல் வேண்டும்.  வெளிச்சமும் அதிக வெப்பமும் மிளகாய் நிறத்தை அகற்றிவிடும்.  பர்டு மிளகாய் மற்றும் டபாஸ்கோ. பர்டு   மிளகாய்  செடி புதர் போன்று இருக்கும்.  இதன் பழங்கள் நீளமாய்  கூம்பு வடிவில் இருக்கும்.  வெப்ப மண்டல பகுதிகளில் நன்கு விளையும்.  இந்த மிளகாய் அதிக காரம் கொண்டவை.  ஒவ்வொரு கஷவிலும் இரண்டுக்கும் அதிகமான பூக்கள் பூக்கும்.  இதில் கிடைப்பவை பர்டு  மிளகாயும், டபாஸ்கோ மிளகாயுமாகும். 
இந்த இரண்டு ரகங்களையும் இனக் கலப்புச்  செய்வது எளிதல்ல. அவ்வாறு செய்தாலும் மலடாகிவிடும்.   

மருத்துவப் பயன்கள்

மிளகாயை உணவில் சேர்ப்பதால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறது.  இதனால் பசி தூண்டப்படுகிறது.  பச்சை மிளகாயில் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி உள்ளது. வற்றல் மிளகாயை விட பச்சை மிளகாய்க்கு ஊட்டச்சத்து அதிகம்.  உலர்த்தும் போது உயிர் சத்து குறைந்து விடுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

மளகாய்  பயன்படுத்துவதால் கீல் வாதம்,  நரம்பு வலி,  இடுப்பு வலி போன்ற நோய்கள் குணமாகிறது. வயிற்று மந்தம், வாய் குமட்டல்,  ஆகியவற்றை அகற்றும் தன்மையுண்டு.  பல்வேறு மருந்து பொருளாகவும் இது பயன்படுகிறது.

No comments:

Post a Comment