வைட்டமின் டி-யின் அபாரமான நன்மைகள் மற்றும் வைட்டமின் டி சத்து அடங்கியுள்ள அசத்தலான உணவுகள். || Extraordinary foods that contain vitamin D - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, July 6, 2020

வைட்டமின் டி-யின் அபாரமான நன்மைகள் மற்றும் வைட்டமின் டி சத்து அடங்கியுள்ள அசத்தலான உணவுகள். || Extraordinary foods that contain vitamin D

வைட்டமின் டி-யின் அபாரமான நன்மைகள் மற்றும் வைட்டமின் டி சத்து அடங்கியுள்ள அசத்தலான உணவுகள். || Extraordinary foods that contain vitamin D

அனைவருக்கும் இனிய வைட்டமின் டி நிறைந்த உணவுகள் என்ன? வைட்டமின் டி குறைவாக இருந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன? என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

நம்மில் அனைவருக்கும் கால்சியம் சத்து உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருக்க மிகவும் அவசியம். அப்படிப்பட்ட கால்சியத்தை  நாம் நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாது. நம்முடைய உடலில் கால்சியத்தை உறிஞ்சி எடுப்பதற்கு  வைட்டமின் டி தேவைப்படுகிறது. எனவே நமக்கு கால்சியம் எவ்வளவு முக்கியேமா அதே போன்று வைட்டமினட டி சத்தும் முக்கியம்.

உடலில் கால்சியம், மெக்னிஷியம், பாஸ்பேட் ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ள வைட்டமின் டி நமக்கு உதவுகிறது. உடலில்  வைட்டமின்கள் போதிய அளவு இருந்தால் மட்டுமே எலும்புகள், பற்கள்  உறுதியாக இருக்கும். வைட்டமின் டி பற்றாக்குறையினால் தசைவலி எலும்பு மற்றும் மூட்டு வலி எலும்பு முறிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் சோர்வாகவும் சத்து இல்லாதது போல உணர்ந்தால் உடலில் வைட்டமின் டி குறைவாக இருக்கின்றது என்று அர்த்தம்.

 நடக்கும் போது, படிக்கட்டு ஏறும்போது  தொடர்ச்சியாக தசைவலி அல்லது மூட்டு வலி இருந்தால் வைட்டமின் டி குறைவாக இருக்கிறது என்றும் அர்த்தம். 

வைட்டமின் டி குறைபாட்டால் அதிகபடியாக  முடி உதிர்வு ஏற்படும்.  காயங்கள் ஏற்பட்டால் குணமாவதற்கு தாமதமாகும். 

 வைட்டமின் டி அதிகரிக்க சில ஆரோக்கியமான உணவுகளை நாம் இப்போதுப் பார்க்கலாம். 

வைட்டமின் டி குறைபாட்டால் அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படும் . காயங்கள் ஏற்பட்டால் குணமாவதற்கு தாமதமாகும். தொடர்ச்சியாக செரிமானப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால் வைட்டமின் டி குறைபாடு இருக்க வாய்ப்பு உள்ளது.

உடலில் வைட்டமின் டி அதிகரிக்க சில ஆரோக்கியமான உணவுகளை இப்போது பார்க்கலாம்.

பால்

தினமும் ஒரு கிளாஸ் பால் குடித்தால் நமக்குக் 20% வைட்டமின் டி கிடைக்கிறது. பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது .

ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது காலை உணவுடன் ஆரஞ்ச் பழச்சாறு அருந்தினாலும் ஒரு நாளில் கிடைக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன.

ஆரஞ்சு பழத்தை வாங்கி வீட்டிலேயே ஜூஸ் வைத்து குடிக்க வேண்டும் கடைகளில் வாங்குவதை தவிருங்கள்.

மஸ்ரூம்

மஸ்ரூம்கள் சூரிய ஒளியில் வளர்கிறது என்பதால் அதில் வைட்டமின் டி சத்து பஞ்சமே இல்லை. அது தவிர மஸ்ரூமில் வைட்டமின் பி-1 பி-2 பி-5  தாதுக்கள் மற்றும் காப்பர் ஆகியவை இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. ஆனால் அதில் கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் உண்டு.  புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாமே நிறைந்திருக்கிறது.

மீன்

கொழுப்புச்சத்து நிறைந்த மீனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம் புரதம் கால்சியம் வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த உணவுகளை தொடர்ச்சியாக உண்டுவந்தால் உடலில் வைட்டமின் டி சத்து தானாக அதிகரித்துவிடும்.

சூரிய ஒளி மூலமாக நம் உடலுக்கு கிடைக்கும் ஒரு ஆற்றல் தான் விட்டமின் டி.  நேரடியாக கிடைக்காது.  நம் உடலுடன் வினைபுரிந்து விட்டமின் டியாக நமக்கு கிடைக்கிறது.

இது கொழுப்பைக் கரைக்கக் கூடிய வி்ட்டமினாகவும் இருக்கறிது. இந்த விட்டமின் டி பெரும்பாலும் நம்முடைய கொழுப்பு செல்களில் தான் சேர்ந்திருக்கும்.

விட்டமின் டி சரியான விதத்தில் நமக்கு கிடைப்பது நாள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பசும் பாலில் அதிகளவு விட்டமின் டி மற்றும் கால்சியம் இருக்கிறது. இவை இரண்டுமே எலும்புகளின் வளர்ச்சிக்கும் அவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

காலை அல்லது இரவு தூங்க  செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் பால் குடிக்கலாம். பாதாமில் அதிகளவு ஒமேகா 3 கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை இருக்கிறது.  சாலட்களில் பாதாம் அதிக அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டை கொழுப்பு  கரையக்கூடிய விட்டமின்கள் நிறைவே இருக்கிறது . அவற்றில் ஒன்றுதான் விட்டமின் டி முட்டை எடுத்துக் கொள்வதால் உடல் எடையை குறைக்க உதவுவதுடன் உடல் இயக்கங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். காளானில் அதிக அளவு புரோட்டின் மற்றும் விட்டமின் டி இருக்கிறது.

இவை தவிர மீன் நண்டு போன்ற கடல் உணவுகளிலும் அதிகமான வைட்டமின் டி காணப்படுகிறது.  விட்டமின் டி சோயா பொருட்களில் சோயா பாலில் நிறைய விட்டமின் டி சத்துக்கள் அடங்கியுள்ளன.  எனவே ஒரு கிளாஸ் சோயாபால் தினமும் சேர்க்கும் போது உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும்.

ஆரஞ்சில் வைட்டமின் டி சத்துகள் அடங்கியுள்ளன. தினமும் காலை உணவின் போது ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகி வந்தால் வைட்டமின் டி சத்துக்கள்  உங்கள் உடலுக்கு கிடைக்கும். நன்றி 

No comments:

Post a Comment