பாலுடன் மஞ்சளைக் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா? Is there any benefit to drinking turmeric with milk? - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, July 5, 2020

பாலுடன் மஞ்சளைக் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா? Is there any benefit to drinking turmeric with milk?

பாலுடன் மஞ்சளைக் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா? Is there any benefit to drinking turmeric with milk?


1. நோய் எதிர்ப்பு சக்தி

மஞ்சளை பாலில் கலந்து குடிக்க மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக உதவி செய்யும்.

இதன் மூலமாக நாம் உடலை எந்த ஒரு பாக்டிரியா மற்றும் எந்த ஒரு வைரஸ் தாக்காதவாறு பாதுகாக்க முடியும்.

வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பாலில் மஞ்சள் கலந்து குடித்து வர மிகவும் நல்லது.

2. சுவாசக் கோளாறுகளை குணமாக்கும் 

மஞ்சள் பாலுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்ப்பு குணங்களும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அதிகம். மஞ்சள் மனிதனின் சுவாசப் பாதையைத் தாக்கக்கூடிய நோய்க் கிருமிகளையும் அழிக்கும் மட்டும் புண்களையும் குணமாக்கும். 

இதன் மூலமாக சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் .குறிப்பாக ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்ற பகுதி படுறவங்க இந்த மஞ்சள் பாலை குடித்து வர மிகவும் நல்லது. 
Is there any benefit to drinking turmeric with milk?

3 புற்றுநோய் வராமல் தடுக்கும் 

மஞ்சள் பாலில் இருக்கக் கூடிய நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உடலில் புற்று உண்டாக்க கூடிய காரணிகளை அழிக்கும். இதன் மூலமாக மார்பகம், சருமம், நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் என உடலில் எந்த பகுதியிலும் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும், புற்று நோய் நோய் வராமல் பாதுகாக்கணும்னு  நினைக்கிறவங்க இந்த மஞ்சள் பால் குடித்து வர மிகவும் நல்லது. 

4. தூக்கமின்மையை தடுக்கும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்த பாலை குடித்து வர இதில் இருக்கக்கூடிய அமினோ அமிலம் டிரிப்தோபன் போன்ற வேதிப்பொருட்கள் தூக்கத்தை உண்டாகக்கூடிய ஹார்மோனை காரணமாக உடலில் உற்பத்தி செய்து நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவி செய்யும்.

 5. சளி மற்றும் இருமலை குணமாக்கும்.

Is there any benefit to drinking turmeric with milk?

 சளி மற்றும் இருமலுக்கு ஒரு அருமருந்து மஞ்சள் பால் ஜலதோஷம் போன்ற பிரச்சனை அவதிப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக விளங்குவது மஞ்சள் பால்.  இதில் இருக்கக்கூடிய நச்சுகளுக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் தொண்டைப்புண் இருமல் சளி போன்றவற்றிற்கு உடனடியாக நிவாரணத்தைக் கொடுக்கும். சளி மட்டும் இருமலின் போது மஞ்சள் பால் குடித்து வர மிகவும் நல்லதே. 

6.  கீழ் வாத வலியை குணமாக்கும்.

கீழ்வாதத்தினால் மூட்டுக்களில் அவதிப்படுறவங்க இந்த மஞ்சள் கலந்த பாலை குடித்து வர இதில் இருக்கக்கூடிய anti-inflammatory புரோபர்டீஸ் மூட்டு வலி உண்டாகக் கூடிய இன்ஃப்லமேஸ் தடுத்து மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலியையும் குணமாக்கும்.

7 ரத்தத்தை சுத்தப்படுத்தும் 

மஞ்சள் பால் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இது ரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு நிணநீர் அமைப்புகளையும் மேம்படுத்தி ரத்த ஓட்டத்தையும் உயிர்ப்பூட்டுகிறது மஞ்சள் பால்.

8 எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது

எலும்பு தேய்மானம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மஞ்சள் கலந்த பாலை குடித்து வர பாலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கால்சியம் எலும்புகளின் வலிமைக்கும்  உறுதிக்கும் மிக உதவியாக இருக்கும். இதில் இருக்கக் கூடிய மஞ்சள் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கும். எலும்பு சம்பந்தமான பிரச்சனை அவதிப்படுறவங்க மஞ்சள் கலந்த பாலை குடித்து வர மிகவும் நல்லது

9 செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்

செரிமான பிரச்சனைகளான அஜீரணம் வயிற்றுப்போக்கு வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுறவங்க இந்த மஞ்சள் கலந்த பாலை குடித்து வர இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக செயல்பட்டு குடல் மட்டும் இறப்பையின் ஆரோக்கயத்தை மேம்படுத்தும். இதன் மூலமாக செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

10 பெண்கள் கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது

பெண்கள் மஞ்சள் பாலை குடித்து வர உடலில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை செய்து ஹார்மோன் குறைபாடுகளை சரிசெய்யும், மற்றும் பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும். மஞ்சள் வலியை குணமாக்கும் தன்மை அதிகம் கொண்டது என்பதனால் இது மாதவிடாய் காலங்களில் உண்டாகக் கூடிய கடுமையான வலியையும் போக்கும், மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் இந்த மஞ்சள் பாலை குடித்து வர மிகவும் நல்லது.  இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய இந்த மஞ்சள் பாலை தினமும் குடித்து தினமும் குடித்து வருவோம். எந்த ஒரு வைரஸ் கிருமியும் நம்மைத் தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்வோம். நன்றி. 

No comments:

Post a Comment