உங்கள் நகங்கள் (Nail) சுத்தமாகவும் வெள்ளையாகவும் பராமரிக்க சில எளிய குறிப்புகள்
எலுமிச்சம் Lemon பழத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி உப்பில் தொட்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகங்கள் (Nail) பளபளப்பாக இருக்கும்
வாரம் ஒருமுறை பேக்கிங் சோடாவை நீரில் போட்டு கரைத்து அந்த நீரில் நகங்களை ஊற வைத்தால் நகங்கள் (Nail) பார்க்க மிகவும் அழகாக இருக்கும்
எலுமிச்சை சாற்றில் நகங்களை (Nail) சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர கால்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பொலிவு பெறும்.
ஒரு துண்டு எலுமிச்சையை நகத்தில் தேய்த்து ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர நகங்கள் (Nail) வெள்ளையாக இருக்கும்
அடிக்கடி மருதாணியை நகரங்களில் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கும் சோப்பு நீரில் வினிகரை சேர்த்து 5 நிமிடம் நன்கு ஊற வைத்து பின்பு கழுவி வர நகங்கள் அழகு பெறும்.
நிறைய பேருக்கு கால் நகங்கள் (Nail) கைவிரல்கள் போல் இல்லாமல் அழுக்கடைந்து உடைந்தும் சொத்தையாக இருக்கும்.
இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாததால் இறந்த செல்கள் நகங்களுக்கு இடையில் தங்கி நகங்களில் ரத்த ஓட்டம் குறைந்து சொத்தை ஆகின்றன.
இந்த நகங்கள் பார்ப்பதற்கு பழுப்பாக அல்லது மஞ்சளாக காணப்படும். இது பார்ப்பவர்களை அறுவறுப்படையச் செய்யும். மேலும் சாக்ஸ் ஷூ மற்றும் சாதாரண செருப்பு போடும் பொழுது நகங்கள் பழுதடைந்து உள்ளதால் வலியும் ஏற்படும்.
முதலில் மஞ்சள் தினமும் குளிப்பதற்கு முன் மஞ்சள் பொடியை எண்ணெயில் கலந்து நகங்களில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்யவேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிக்க செல்லலாம். இது நல்ல பலனை தரும்.மஞ்சள் நகங்களில் (Nail) ஏற்படும் தொற்றுநோய் விரட்டக்கூடியது.
அடுத்து தேயிலை மர எண்ணெய் இரவு தூங்குவதற்கு முன் தேயிலை மர எண்ணெய் பஞ்சை நனைத்து நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் இது போல் செய்து வர இறந்த செல்கள் அகன்று ரத்த ஓட்டம் அதிகரித்து நகங்கள் புதுப்பிக்கப்படும்.
அதேபோன்று எலுமிச்சை சாற்றினை ஒரு காட்டனில் நனைத்து அதனை நகங்களில் பூசி வந்தால் பூஞ்சைத் தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கி நகங்கள் புது பொலிவோடு காணப்படும்.
அடுத்து முக்கியமாக வேப்பிலை, வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மூலிகை. ஒரு கைப்பிடி வேப்பிலை எடுத்து ஒருகப் உள்ள நீரில் போட்டு கொதிக்க வைக்கவேண்டும். நன்றாக கொதி வந்ததும் வடிகட்டி அந்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரில் சிறிது பூண்டு எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் ஊற்றி அந்த கலவையை நகங்களில் தடவி வந்தால் சொத்தை மறைந்து நகங்கள் (Nail) புதுப்பொலிவோடு காணப்படும்.
அடுத்து அதிமதுரம் அதிமதுரத்தில் நீரில் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான உடன் அந்த நீரில் பஞ்சை நனைத்து மெதுவாக நகங்கள் மீது தடவ வேண்டும். இது நகத்தின் தங்கும் கிருமிகளை அழித்து நகங்களை பாதுகாக்கும்.
விரல் இடுக்குகளில் அழுக்குகள் சேராமல் இருக்கவேண்டுமானால் வாரம் ஒருமுறை நகங்களை வெட்டவேண்டும்.
இப்படி மேற்சொன்ன பல விஷயங்களை கடைபிடித்தால் நகங்களை ஆரோக்கியமாகப் பாதுகாக்கலாம்.
விரல் இடுக்குகளில் அழுக்குகள் சேராமல் இருக்கவேண்டுமானால் வாரம் ஒருமுறை நகங்களை வெட்டவேண்டும்.
இப்படி மேற்சொன்ன பல விஷயங்களை கடைபிடித்தால் நகங்களை ஆரோக்கியமாகப் பாதுகாக்கலாம்.
No comments:
Post a Comment