நம்முடைய பற்களைப் பற்றிச் சில அசத்தலான கேள்விகளும் அருமையான பதில்களும் || Some useful questions and wonderful answers about our teeth.
1. விழுந்த பற்கள் திரும்ப முளைப்பதுண்டா? Do fallen teeth regenerate?
குழந்தைப் பருவத்தில் விழும் பற்கள் பால்பற்கள் (Deciduous denture) எனப்படுகின்றன. இந்த பற்களுக்கு பதிலாக புதிய பற்கள் முளைத்து விடுகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முறை வளர்கின்ற பற்கள் (Teeth) நிரந்தரமானவை.
இந்த பற்கள் நமது ஆயுட்காலம் (Lifespan) முழுவதும் திடமாக இருக்க வேண்டியவை. இவை பாதிக்கப்பட்டால் அல்லது ஈறுகளில் நோய் ஏற்பட்டால் அதனால் மிகுந்த வலி ஏற்பட்டு பற்கள் விழுந்து விடுகின்றன. பற்சிதைவுகளையும் ஈறு நோய்களளையும் வராமல் தடுக்க சர்க்கரை (Sugar) உள்ள உணவுப் பொருட்களையும், பானங்களை அதிகம் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தமது பற்களை நாம் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.
2. பற்களின் பயன்கள் யாவை? What are the uses of teeth?
பழக்கம் நமக்கு பல விதங்களில் பயன்படுகின்றன. சரியாக உச்சரிப்பதற்கும், உணவை கடித்து சுவைப்பதற்கும் உணவு செரிமானம் (Digestion) அடைவதற்கும் புன்னகை செய்து அழகான தோற்றம் தருவதற்கும் பயன்படுகின்றன.
3. பற்கள் கெடுவதற்கு என்ன காரணம்? What causes tooth decay?
சில குழந்தைகளுக்கு பற்கள் சிதைந்து போகின்றன. அவற்றில் பழுப்பும் கருப்பும் குழிகள் ஏற்பட்ட விகாரமாக தோற்றமளிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த குழிகள் சிறியவையாக இருந்திருக்கின்றன. குழிகள் ஏற்பட்டவுடன் தகுந்த பல் மருத்துவரிடம் காண்பித்து அவற்றை அடைத்து விட வேண்டும் இல்லையென்றால் குழிகள் பெரியதாகி வலி எடுக்க ஆரம்பிக்கின்றன.
பற்குழிகள் உள்ளவர்களுக்கு பல்வலியும் வாயில் துர்நாற்றமும் ஏற்படுகின்றன. மேலும் பற்களை சுற்றியுள்ள ஈறுகளில் கட்டி அல்லது புண் ஏற்படலாம். பற்கள் மிகவும் கெட்டுப் போவதால் அவற்றைப் பிடுங்கி விட வேண்டியாதகிறது. அதன்பிறகு உணவை கடிப்பதற்கும் மெல்வதற்கும் கடினமாகிறது.
4 பற்கள் ஏன் கெட்டுப் போகின்றன? Why do teeth decay?
மாவு சத்தும் (Flour is delicious) இனிப்பும் உணவுப் (Sweet food) பற்களுக்குக் கெடுதல் உண்டாக்கக் கூடியவை. இனிப்பான உணவுகளையும், நுரைச்சத்து பொங்கும் பானங்களையும் மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான (Cool) உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் கூடாது. உணவு வேளைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் இனிப்பான உணவுகளை உட்கொள்வதற்கும் பற்களுக்கு கெடுதல் ஏற்படுத்தும்.
பருக்களை சுற்றிலும் ஈறுகள் அமைந்துள்ளன. பற்களையும் ஈறுகளையும் சரியாக சுத்தம் சரிவர செய்யாதபோது ஈறுகளைச் சுற்றிலும் கறை உருவாகிறது. இந்த கரையில் கிருமிகள் (Germs) உள்ளன. இவை ஈறுகளைப் புண்ணாக்கி அவற்றின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகின்றன.
5 பற்களை நாம் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? How do we protect our teeth?
தினமும் காலையில் எழுந்தவுடனும் இரவு உறங்கச் செல்லும் முன்பும் இரண்டு வேளைகளிலும் முழுமையாக பற்களை துலக்க (Brush) வேண்டும். பற்களை துலக் குவதற்கு மென்மையான (Soft Brush) பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், வேப்ப மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தலாம்.
பற்பசை அல்லது மென்மையான பொருட்களைப் பயன்படுத்தி பற்களை தேய்க்கலாம். கரகரப்பான பொடிகள் பல் எனாமலை தேய்த்துவிடும். மேல் வரிசை பற்களை மேலிருந்து கீழாகவும் வரிசை பற்களை கீழிருந்து மேலாகவும் தேய்க்கவேண்டும். மேல் வரிசைப் பற்களையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும்.
ஒவ்வொரு முறை உணவு உட்கொண்டதும் குறிப்பாக இனிப்பான தின்பங்களை உட்கொண்டதும் தண்ணீரால் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். பற்களில் ஒட்டிக் கொண்ட உணவு வகைகளுடன் கிருமிகள் சேர்ந்து பற்சொத்தை உண்டாக்குவதை இது தடுக்கிறது.
பற்களின் இடுக்குகளில் மாட்டிக்கொண்ட உணவுத் துணுக்குகளை எடுக்க கூரான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. கடினமான உணவுப் பொருட்களை பற்களால் கடிக்க கூடாது. துண்டுகளாக்கி அதன் பின்பு கடித்து உட்கொள்ளவேண்டும். பற்களில் வலி இருந்தாலும் ஈறுகளில் இரத்தம் ஏற்பட்டாலும் வேறு எந்தவித தொல்லைகள் பற்களில் இருந்தாலும் உடனடியாக தாமதம் ஏற்படுத்தாமல் பல் மருத்துவரிடம் காண்பித்தல் வேண்டும்.
நமது பற்கள் எப்படி இருக்க வேண்டும்? What our teeth should look like?
அழகாக இருக்க வேண்டும்
ஆடாமல் இருத்தல் வேண்டும்
இன்சொல் வழங்க வேண்டும்
ஈறுகளைக் காக்க வேண்டும்
உணவை அரைக்க வேண்டும்
ஊத்தை இல்லாமல் இருக்க வேண்டும்
எடுப்பாக இருக்க வேண்டும் வேண்டும்
ஏற்றமிகு தோற்றமுடன் இருக்க வேண்டும்
ஐயமின்றிக் கடிக்க வேண்டும்
ஒழுங்கான வரிசையில் அமையவேண்டும்
ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும்
ஒளடதம் போடா வண்ணம் இருக்க வேண்டும்
நன்றி
No comments:
Post a Comment