சங்க தமிழர்களின் மெய் சிலிர்க்கச் செய்யும் விஞ்ஞான அறிவு | The thrilling scientific knowledge of the ancient Tamil Peoples.
மற்ற மனித இனங்கள் மிருகங்களை வேட்டையாடியும் இறைவனுக்கு மனிதன் நரபலி வழங்கியும் வாழ்ந்து வந்த நிலையில் தனக்கான சில கடமைகளுடன் அறிவியலின் விளிம்பில் காணப்பட்டான் சங்ககாலத் தமிழன்.
தமிழர்களின் இலக்கியங்களும் சில அறிவியல் கோட்பாடுகளும் இன்றளவும் உலக விஞ்ஞானிகளால் அதிசயத்துப் பார்க்கக்கூடிய ஒன்று என்றால் அது மிகையாகாது. அதை மெய்ப்பிக்கும் வகையில் அவனது ஒவ்வொரு கணிப்புகளும் ஒருபோதும் இன்றுவரை பொய்யானது இல்லை.
புறநானூறு
ஒரு சங்கத் தமிழ் நூல். மிக முக்கியமான இலக்கிய படைப்புகளில் ஒன்று .சங்ககாலத் தமிழர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் சிறந்திருந்தனர் என்பதை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் புறநானூற்றில் மூலம் தெளிவாகிறது.
ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளி திரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்று அளந்து அறிந்தார் போல என்றும் இணைந்து என்போரும் உளரே
இது புறநானூற்றுப் பாடல். இதன் பொருள் சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதை இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் தான் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது.
அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இவை யாவற்றையும் ஆராய்ந்து அறிந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதே இதன் பொருள். சூரியனைப் பற்றியும் அதன் சுழற்சி முறை பற்றியும் அறிவியல் பூர்வமாக கடந்த சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
ஆனால் இந்த புலவலரால் எவ்வாறு இந்தப் பாடலில் இவ்வளவு துல்லியமாக சொல்ல முடிகிறது என்பது இன்றளவும் மர்மமே.
இதுமட்டுமல்ல புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப இதுவும் அவர் எழுதிய புறநானூற்றுப் பாடலில் இருக்கும் ஒரு வரி இதில் விசும்பு என்றால் ஆகாயம், வலவன் என்றால் சாரதி, ஏவாத என்றால் இயக்காத, வானவூர்தி என்றால் விமானம், விண்ணில் விமானி இருந்து இயக்காத விமானம் என்பது இந்தப் பாடலின் பொருள்.
இவ்வாறான ஒரு விமானம் இருந்ததா? இல்லையா, என்பது வேறு விஷயம் . இப்படி ஒரு கணிப்பு ரைட் சகோதர்கள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு விஷயம். விமானி இல்லாத விமானம் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முன் நிச்சயமாக விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத்தோன்றும் எண்ணமும் மர்மமே.
கம்பராமாயணம்
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடை எல்லாம் ஆய்ந்து விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த புண்ணில் ஊடுருவி என மனம் மிக புடுங்கி எண்ணி நாம் இனி செய்வது என்ன இளவலே என்றான்
இதன் பொருள் விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீர்ப்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்பது. இந்த விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படி தெரிந்தது? விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினார் என்பது இன்றும் மர்மம்.
தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.
இதுமட்டுமல்ல எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பால்கனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியின் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது. பலகனிகளில் இருந்து புறப்பட்டதால் அது ஹெலிகாப்டராக இருக்குமோ என்ற கேள்விக்கும் இங்கு இருக்கிறது. இவ்வாறு பல பல செய்யுள்களில் பல பல விஞ்ஞானத் தகவல்களை புதைத்து வைத்திருக்கிறான் தமிழன். என்ன நண்பர்களே மேற்கண்டத் தமிழர்களின் வியக்கத் தக்கச் செய்தி உங்களுக்குப் பிடித்திருந்தால் இதை மற்றவர்க்கும் பகிருங்கள்.
No comments:
Post a Comment