முதலில் அதிகம் செலவிட்டு மானமpழிந்து மதிகெட்டுப் போகும் நிலைக்கு ஆளாக கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செட்டாக குடித்தனம் நடத்தும் திறன் கணவன்-மனைவி இருவருக்குமே இருக்க வேண்டும். ஆடம்பரத்திற்கு அடிமையாகாது இருக்க வேண்டும். பொருள் ஈட்டும் ஆசை இருக்க வேண்டியதுதான் ஆனால் பேராசை ஒரு துளியும் இருக்கலாகாது.
பொறுப்புணர்ச்சி
பொறுப்புணர்ச்சி உள்ள தம்பதிகள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பெரும் வெற்றி காண்பார்கள் என்பதில் அய்யமில்லை. உடுக்க உடையும் உணவும் படுக்க பாயும் ஒருவனுக்கு எவ்வளவு இன்றியமையாததோ அதே போலவே இருக்க இடமும் ஒருவருக்கு அத்தியாவசிய தேவை என்று சொன்னால் மிகையாகாது.
வசதிகள் பல பெற்றிருப்பினும் இருக்க இடமின்றி வாழும் எவரும் வாழ்க்கையில் பொருள என்ப பெற்றவர்களாக மாட்டார்கள். பட்டணத்தில் வசிப்பவர் தெரியும் அதன் அருமை. குடியிருக்க போதிய வசதியின்றி என்றாலும் அவருக்கு எல்லாம் தெரியும். ஒரே வீட்டில் நாலைந்து குடித்தனம் சேர்ந்து வசிக்கும் பரிதாபநிலை பட்டணத்தில் சகஜம்.
நடுத்தரக் குடும்பம் குறைந்தது 3000 4000 ரூபாய் வாடகை செலுத்தினால்தான் வீடு கிடைக்கும். அப்படி கிடைக்கும் வீடுகளில் வசதி உண்டா என்றால் அதுதான் கிடையாது. படுக்க அறையும் சமைக்க சிறைச்சாலை போன்ற ஒரு சிறிய இருட்டு அறையும் தான் கிடைக்கும். பகலுக்கும் இரவுக்கும் வேற்றுமை காண முடியாதவாறு சடலம் மூடிக்கிடக்கும் விசித்திரத்தை அங்கே பார்க்கலாம் . வெளிச்சத்திற்கு பஞ்சம் என்றால் காற்றுதானா தூள் பறக்கப் போகிறது. ஆளுக்கு ஒரு சிறிய விசிறிகளை வீசிக் கொண்டிருக்க வேண்டியதுதான். மின்விசிறிகள் இருந்தும் ஜீவனற்று உறங்கிக்கொண்டிருக்கும் மின்சாரம் உள்ள வீடுகள் என்று பெயர் தானே தவிர மாலை ஏழு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் அந்த மின்சக்திக்கு ஜீவன் இருக்கும் மற்ற நேரத்தில் ஜீவனில்லா பிரதம் போல் முடங்கிக் கிடக்கும்.
வெளிச்சம்தான் இல்லை. காற்றுக்குதான் பஞ்சம். போகட்டும் இடமாவது கொஞ்சம் தாராளமாக இருக்குமா என்றால் மூச்சு விடக்கூடாது.
இடவசதி தான் இந்த லட்சணம் என்றால் வீட்டுக்குக் குடிபுகுமுன்பே வீட்டுக்குரியவர் ஒரு நிபந்தனை விதிப்பார். கணவன் மனைவி மட்டுமே இருக்கலாம். வேண்டுமானால் ஒரே குழந்தை பெறுவதற்கு அனுமதி உண்டு. இது தவிர மாமியார் மாமனார் என்றோ அண்ணி நாத்தி என்றோ நினைத்துவிடக் கூடாது. குடித்தனக்காரர் தமபிமார் என்று கூட எவரும் இருக்கலாகாது. இந்த நிபந்தனைகளோடு வாடகை மாதா மாதம் முதல் தேதி சாயங்காலம் செலுத்தப்பட வேண்டும். தவறினால் ரூபாய்க்கு பத்து பைசாவும் கூடும் வட்டியுன் ஈடாக செலுத்தப்பட வேண்டும்.
இத்தகைய கடும் நிபந்தனைகளுடன் சுகாதாரக் குறைவான ஒரு வீட்டில் குடியிருப்பது யார் விரும்புவார்கள். என்றாலும் வாழ்ந்துகொண்டுதான் வருகிறார்கள். வீட்டுக்குரியவர் ஒன்றுக்கு இரண்டாக வீடுகளில் புதிது புதிதாக வாங்கிக் கொண்டு வருவதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம்தான். குடியிருப்போர் நலனைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை. சுகாதாரமின்றி, நோய் நொடியோடு தோழமை பூண்டு லட்சோபலட்சம் பேர் இன்றும் இந்தப் பட்டணத்தில் குடியிருருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நமக்கென்று கொஞ்சம்கூட இடம் இருந்தால் சின்னஞ்சிறு குடிசை ஆனாலும் சுகாதார முறையில் கச்சிதமாக வசிக்கலாம் அல்லவா. வீடு கட்டுவதற்கு முதலாவது நமக்கு தேவையான நிலம். நிலம் என்றால் சிறிய வீடு அல்லது குடிசை கட்டுவதற்கு 3 ஆயிரத்து 600 சதுர அடி கொண்ட நிலம் ஆக இருக்கலாம். அந்த நிலத்தை அடுத்துள்ள புறநகர் பகுதி இருக்கலாம். ஆயிரக்கணக்கில் நிலத்தின் விலை உயர்ந்த விட்டதற்கு காரணம் மக்கள்தொகை ஏறி கொண்டே போவதும், பட்டனவாசிகள் சுற்றுப்புறங்களுக்கு பரவுவதாலும் தான் என்று சிலர் கூறுகிறார்கள். இதைக்காட்டிலும் முக்கிய காரணம் வேறு ஒன்றும் உள்ளது.
நிலம் வாங்குபவர்களுக்கு, நிலம் விற்பவர்களுக்கிடையே ஒரு கூட்டம் குத்தாமல் வெட்டாமல் குனியாமல் நிமிராமல் பாடுபடாமல் பணம் பறித்து கொடுக்கின்ற கூட்டம் ஒன்று உண்டு. அது தான் தரகர் கூட்டம்.
நிலம் வாங்க விரும்புகிறவர்கள் விலை சூடான இடத்தில் நிலம் வாங்கும் ஆசையை அறவே அகற்றி விட வேண்டும். ஆகவே இப்போதுள்ள நிலையை கவனிக்காமல் எங்கேயாவது ஓரிடத்தில் நிலத்தை வாங்கிப் போட்டு சிறு குடிசையாக கட்டிக் கொள்வது நல்லது. வசதி கிடைக்கும்போது அதைப் பிரித்து சிறிய வீடு போல கட்டிக்கொள்ளலாம். சிறு சிறு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டும் ஜீவிக்கலாம்.
காலம் மாறிக்கொண்டு வருகிறது. பாரத நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சகல செளபாக்கியங்களோடும் வாழும் வழி வகுத்துக் கொடுக்க யோசிக்கிறது. அரசு தொழில் துறையில் நாம் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு கடன் அளித்து தொழில் ஸ்தாபனங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது அது போலவே குடியிருப்பு வசதிகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் செய்து தர அரசாங்கம் முன்வந்திருக்கிறது. தவணை முறையில் குடியிருப்பு வசதி செய்து கொடுக்க சென்னை நகரில் நிரந்தரமாக குடியிருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அதேபோல அந்த சிறு நகரங்களிலும் செய்து வருகிறது. விளம்பரம் பிரசுரம் ஆனதும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பம் அனுப்பி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வசதி திட்டம் வீடு வாசல் அற்றுத் தவிக்கும் எத்தனையோ குடும்பங்களுக்கு நன்மை பயக்கத தக்கது. தமிழக அரசு இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் மக்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்கான பல திட்டங்கள் தீட்டி அதன்படி செயலாற்றத் தொடங்கிற்று. அந்த திட்டங்களில் ஒன்றாக உருவானதுதான் குடியிருப்பு வசதி குழுவும். அதன் மூலம் நகரத்தின் சுற்றுப்புறங்களில் பிரதேசங்களில் கட்டாந்தரையாக கிடந்த நிலங்களில் வீடு கட்டிக் கொடுக்கும் பொறுப்பை அந்த குழு ஏற்றுக் கொண்டது. குடும்ப வாழ்க்கை நல்ல முறையில் அமைய வீடு தேடிக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த காலத்தில் ஆடம்பரமான வீடு கட்டுவதை விட்டு தேவையான அளவு மட்டும் வீடுகளை கட்டி சந்தோஷமாக வாழலாம். வாடகை வீட்டில் குடி இருப்பதைவிட ஒரு சிறிய வீடு நமக்கு சொந்தமாக இருந்தால் அது மிகவும் நன்றாக இருக்கும். கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் சந்தோசமாய் இருப்பதற்கு வாடகை வீடு பொருந்தாது. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் வாடகை வீட்டுக்காரர்கள் தங்களுடைய வாடகையை உயர்த்தி கொண்டே போவார்கள். எனவே வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் தேவைகளுக்கு அதிகமாக வாடகை செலுத்த நேரிடும். எனவே இந்த காலத்தில் ஆடம்பரமான வீடு கட்டுவதை விட்டு விட்டு போதுமான இடவசதி, தேவையான அளவு காற்றோட்டமுள்ள அறைகள் கொண்ட வீடுகளைகட்டி சந்தோசமாக வாழலாம். எனவே ஆடம்பரமான வீடு கட்டுவதை தவிர்த்து சிறிய அளவிலான வீடுகளை கட்டி குடி புகலாம். நன்றி.
No comments:
Post a Comment