கடனில்லா சிக்கனமான வாழ்விற்கு குடும்பத் தலைவியின் முக்கிய பங்குப் பற்றிப் பார்ப்போம். - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 12, 2020

கடனில்லா சிக்கனமான வாழ்விற்கு குடும்பத் தலைவியின் முக்கிய பங்குப் பற்றிப் பார்ப்போம்.

கடனில்லா சிக்கனமான வாழ்விற்கு குடும்பத் தலைவியின் முக்கிய பங்குப் பற்றிப் பார்ப்போம்.

மனைவியின் பொறுப்பு

வளமான வாழ்க்கை அமைத்தவர்கள் பலர் தங்கள் மனைவியின் துணையுடன் தான் அப்படி வெற்றி அடைந்திருக்கிறார்கள்.  இது கருதிதான் பானை பிடித்தவன் பாக்கியசாலி என்னும் பழமொழி எழுந்தது.  வள்ளுவரும் ஒருவனுக்கு நல்ல மனைவி வாய்க்கப் பெற்றால் அவன் வீட்டில் இல்லாதது எதுவும் இல்லை என்றார். 

வீட்டு நிர்வாகம் வெற்றியடைய பெரும் உதவி புரிபவர் பெண் தான்.  அவள் தான் குடும்பத்தலைவி.  அவள் எவ்வளவு எவ்வளவு புத்திசாலியா இருக்கிறாளோ?  அவ்வளவுக்கு அவ்வளவு அந்த வீட்டு நிர்வாகம் நன்றாக நடைபெறும். ஒரு வீட்டுத் தலைவனின் வாழ்க்கை அந்த வீட்டு தலைவியை சுற்றித்தான் செல்கிறது.  ஒரு மனிதன் மிகவும் சிக்கனமான இருக்கலாம் ஆனால் அவன் வீட்டில் எல்லாரும் சிக்கனத்தை கடைபிடிக்க வில்லை என்றால் அவன் எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் பயனில்லை.  அவன் சிக்கனம் விழலுக்கு இறைத்த நீர்தான்.   ஒரு மனிதன் வாழவேண்டுமானால் அவன் மனைவி அவனை வாழ விட வேண்டும் என்பது ஆன்றோர் மொழி.  இதில் எவ்வளவு பொருள் இருக்கிறது.  

நல்ல மனைவி தன் குடும்பத்துக்கு மட்டுமல்ல.  அண்டை வீட்டாருக்கும் நல்ல எடுத்துக்காட்டாக விளங்குவாள்.  தலைவியின் பழக்கவழக்கங்கள் தான் அவள் குழந்தைகளுக்கும் பரவுகின்றன.  அவளை சுற்றி அந்த குடும்பத்தின் வாழ்வு உருவாகிவிடுகிறது.  

தலைவிக்கு தேவையான குணங்களில் ஒன்று புத்திசாலித்தனம்.  அது அறிவு என்னும் தூண்டுகோலால் தூண்டப்பட்டு அனுபவம் என்னும் எண்ணெயில் ஒளிரும் சுடர் ஆகிவிடுகிறது.  

குறித்த காலத்தில் குறித்த காரியத்தை செய்ய  ஒவ்வொரு தலைவியும் பழகிக்கொள்ள வேண்டும்.  இந்த குணம் இருந்தால் குடும்பங்களில் பல சில்லறைத் தகராறுகள் தீர்ந்துவிடும்.  சிலர் பொழுதை வீணாகக் கழித்து விட்டு நடு இரவில் துணி துவைப்பார்கள். கொடுக்க வேண்டிய கடன்களை நாளை நாளை என்று தள்ளிப் போடுவார்கள்.  கொடுத்த வாக்குறுதிகளை ''அதுக்கு இப்ப என்ன?''  என்று தள்ளி வைத்து இறுதியில் மறந்துவிடுவார்கள்.  இவையெல்லாம் அமைந்த வீட்டு தலைவியை கெட்டிக்காரி என நாம் கொள்ள முடியுமா? போற்ற முடியுமா?  ஒரு வீட்டுத் தலைவி நல்லவளாக மட்டும் இருந்தால் போதாது. கெட்டிக்காரியாகவும்  இருக்கவேண்டும்.  காலத்தின் அருமையை உணராது மனைவியும் கணவனும் எவரும் விரும்ப மாட்டார்கள்.  காரணம் நம் திட்டங்களை குட்டிச்சுவராக்கி விட்டு அவர்கள் காலத்தையும் பழகி விடுவார்கள்.

முயற்சி தரும் வெற்றி

இல்லத் தலைவியிடம்  இருக்கவேண்டிய குணங்களில் ஒன்று விடாமுயற்சி ஆகும்.  அதை உண்மையான உணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும்.  அது தக்க காலத்தில் அது நிச்சயம் பலனளிக்கும்.  சின்ன முக்காலியை மட்டும் தூக்கும் சக்தி கொண்ட ஒருவன் பெரிய மேசையை தூக்க முயலலாமா? முயன்றால் காயம் பட நேரும்.  அது போல் ஒருவன் தன் சக்திக்கு மீறிய செயல்களைச் செய்தால் வாழ்வில் துன்பம் நேரும்.  தன்னால் கொடுக்க முடியாத பணத்துக்கு கேரன்டி கையெழுத்து இடுவது,  கடன் வாங்குவது  நம்மை அடியோடு மூழ்கடிக்கும் செயல்களாகும்.  

தொடக்கந்தான் எல்லாவற்றுக்கும் காரணம் தொடங்கினால் எதுவும் நடக்கும்.  இன்றைய ஒரு பத்து ரூபாய் சேமிக்கத் தொடங்கினால் நாளடைவில் அது நூறாக,  ஆயிரமாக வளரும்.  

சுயமாக சம்பாதித்த செல்வத்தை அமுதத்தை பருகுவது போல கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்த வேண்டும்.  ஒரே தடவையில் பயன்படுத்தி விடக்கூடாது.  செல்வம் உடையவர்கள் தான் பலசாலிகள் . 

பணம் இல்லையேல் ஒருவன் கொள்ளும் நம்பிக்கையும் ஆசையும் கணவனை இழந்த காரிகை ஏங்கி தவிப்பது போல் வீணாகிவிடும். காட்டில் பயிராகும்  சில செடிகள் எப்படி உபயோகமில்லாமல் பயனற்றவை ஆகிவிடுகின்றனவோ?  அப்படியே பணம் இல்லாதவனும் உபயோகமில்லாமல் பெயரளவில் மனிதனாக இருப்பான்.  

வறுமையில் உழலும் ஒருவன் பேச்சை அவன் உறவினர்கள் கூட மதிப்பதில்லை.  நண்பர்களாய் இருந்தவர்கள் வெறுத்து ஒதுங்கி சென்று விடுவார்.  அவர் நற்குணங்கள் ஒளி மங்கி விடுகின்றன.  பிறகு மறைந்து விடுகின்றன.  பணம் இல்லாதவனுக்கு நண்பர்களை மதிப்பும் இல்லை என்கிறது ஒரு சீனப் பழமொழி. வாழ்வில் எந்த ஒரு சிறிய விஷயத்திற்கும் உணவு உடை பயணம் அன்றாடத் தேவைகள் எல்லாவற்றுக்கும் பணம் அவசியமாகிறது.  பணம் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை.  அதனால் எல்லா மனிதர்களுமே பணத்தை நாடிச் செல்கிறார்கள்.  

ஆனால் பணம் கிட்டுவது என்பது சுலபமான வழியா?  சம்பாதிக்க ஒரு தனித்திறமை வேண்டும்.  ஒரு வேலையில் சேர்ந்தால் சேர்ந்தால் தான் சம்பாதிக்க முடியும்.  ஆகவே முதலில் வேலைக்கு தகுதி உள்ளவராக நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.  

நாம் சம்பாதிக்கும் பணம் நம் தேவைக்குப் போதுமானதாக இல்லாமல் போகலாம்.  அப்போது என்ன செய்வது?  சில செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  மேலும் நம் வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.  அந்நிலையிலும் செலவு வரவுக்குள் மீறியதாக இருக்கக் கூடாது மீறினால் பல ஏமாற்றங்களும் துன்பத்துக்கும் ஆளாக நேரிடும்.

சில சமயம் கடன் வாங்க நேரிடலாம்.  அப்படி கடன் வாங்கும் முன்பு வாங்கிய பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுக்க முடியுமா?  அப்படி கொடுக்க என்ன வழி உள்ளது என்றெல்லாம் ஆராயவேண்டும். நகைகளை அடகு கடைகளில் வைத்து வடிகட்டி இறுதியில் நகையை இழப்பதைவிட ஒரேடியாக தேவை வரும்போது விற்று விடுவது சிறப்பு.  நல்ல நிலைமை ஏற்படும் போது மீண்டும் வாங்கிக் கொள்வது சாலச்சிறந்தது.  

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.  உங்கள் வெற்றிக்கு காரணம் எது என்று செல்வந்தர் ஒருவர் கேட்டபோது அவர் அதற்கு "மற்றவர்கள்"  என்றாராம்.  அவர்கள் துணையுடன் தான் நாம் பணம் சேர்க்க முடியும்.  நம்மை அவர்கள் மதித்தால் தான் நமக்கு உதவி புரிவார்கள்.  மற்றவர்கள் மதிக்க சீக்கிரமாய் வாழ்வது ஒரு சிறந்த வழி. 

பெரிய செல்வந்தராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதிலோ,  வாழ்கையை நன்கு அனுபவித்து வாழவேண்டும் என்பதிலோ ஒரு சிறிய தவறு இலைல்.  ஆனால் ஒருவன் திரட்டும் செல்வம் அனுபவிக்கும் இன்பம் மற்ற எவருக்கும் சிறிதுகூட துன்பம்  தராமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


திட்டமிடுதலே சிறந்தது.

திட்டமிடுதலில் சிறந்தது.  98 சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது என்ன என்பதைப் பற்றி எந்தவித திட்டமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் வாழ்க்கையின் முக்கிய நோக்கம் - நிரந்தரமாக சம்பளம் கிட்டும் வேலையை செய்ய வேண்டும் என்பதுதான். 

மாத சம்பளம் இருப்பதால் அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தால் கூட அவர்களுக்கு பணம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கிட்டுவதில்லை.  மாத வருமானத்தை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தி வரும் பெரும்பாலான மக்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.  

இத்தகைய மாத சம்பளக்காரர்கள் முதலில் தங்கள் மனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை தவிர்க்கலாம்.  பெரும்பாலான மக்கள் இவ்வாறு நடக்கத் தவறிவிடுகிறார்கள்.  வயிற்றுடன் விவாதத்தில் ஈடுபடுவது மிகவும் கடினமான காரியம்.  ஏனென்றால் வயிற்றுக்கு காதுகள் இல்லை.  இந்த பழமொழியை கருதி பார்த்தோமானால் பணத்தின் அவசியத்தையும் அதன் சிறப்பை உணரலாம்.  

இன்பமோ துன்பமோ ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை ஒருகை  நீட்டி வரவேற்க கற்றுக்கொள்ள வேண்டும்.  இன்பம் எப்படியோ அப்படியே துன்பமும் தவிர்க்க முடியாத ஒன்று.  துன்பத்தை எதிர்கொள்ள பழகிய மனதிற்குத்தான் எதிர் வரும் பிரச்சினைகளை கண்டு சிறிது கூட பயப்படாமல் அவற்றை எதிர்த்து வாழும் மனநிலை அமையும். 

வாழ்க்கையில் மென்மேலும் உயர விரும்புகிறவர்கள் நீண்ட நேரம் உழைக்க வேண்டியிருக்கும்.  அவ்வாறு பெருமளவில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பவனுக்கு தான் உயர் பதவிகள் கிட்டும்.  தப்பித்தவறி அதிர்ஷ்வசத்தால் முயற்சியின்றி ஒருவருக்கு உயர் பதவிகள் கிட்டலாம்.  அந்த பதவியில் அவரால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாது.  

பெரிய பதவிகளை வகித்து வரும் தலைவர்களுக்கு குறித்த வேலை நேரம் இராது.  அவர்கள் இரவும் பகலும் தொடர்ந்து வேலை செய்தால்தான் உயர்பதவிகளில் நிலைத்து நிற்கமுடியும்.  பொருள் ஈட்ட முடியும்.  சிக்கனமாக இருந்தால் தான் அந்தப் பணத்தால் முழு பலனை அடைய முடியும்.  தன்னிடம் இருப்பதை எப்படி நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளாதவனுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை அமையாது.  தன் வேலைகளை சம்பந்தப்பட்டவற்றை விடாது ஒருவன் தொடர்ந்து கற்று வந்தால் பணம் தன்னை நாடிவரும்.  அதைப் பாதுகாத்து செலவிட்டால் வளமான வாழ்வு அவனுக்கு அமையும்.  புதிது புதிதாக அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

தொலைபேசியில் பேசுவது,  அலுவலக கோப்புகளை புரட்டுவது ஆகியனவே வாழ்க்கை என கருதாமல் புதிய பலவற்றை அறிந்து கொள்ள முயல வேண்டும்,  அப்போது தான் நம் வேலையை நாம் சிறந்தவராக விளங்குவோம்.  தொடர்ந்து உயர் பதவிகளைப் பெற்று  பெரும் பணம் ஈட்ட முடியும்.  எளிய வாழ்க்கையில் இன்பமும் வெற்றியும் அடைங்கியுள்ளன.  கார், தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப் பெட்டி  போன்றவை ஒருவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று கருதுவது சரியல்ல.  நமது சக்திக்கு மீறிய எதுவுமே நமக்கு மகிழ்ச்சியைத் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கடனில்லா சிக்கனமான மற்றும் சந்தோசமான வாழ்விற்கு மனைவியின் பங்கும் மிகவும் அவசியம் என்று மேற்கண்ட கட்டுரையில் பார்த்தோம், இந்தப் பதிவு பயனுள்ளதென்ற நீங்கள் கருதினால் மற்றவர்களுக்கம் இதனை ஷேர் செய்யுங்கள். நன்றி.

No comments:

Post a Comment