சிங்கத்தை வென்ற பன்றி
விறகு வெட்டி
பள்ளத்தில் இறங்கினான் பன்றி குட்டி எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அதை விட்டுவிட அவனுக்கு மனமில்லை. வேலை முடிந்த பிறகு தன்னுடன் அதனை எடுத்துச் சென்றான். விறகுவெட்டி பன்றிக் குட்டியை வளர்த்து வந்தான். பன்றி குட்டி நன்றாக கொழுகொழுவென்று வளர்ந்தது.
விறகுவெட்டி நாள்தோறும் தன்னுடன் பன்றியைக் காட்டிற்குக் கூட்டி செல்வான். அவனுடைய பன்றி விறகு வெட்டிக்கு கூடமாட ஒத்தாசை செய்யும். போகும்போது கோடாலியை தன் வாயினால் கவ்விக் கொண்டு செல்லும். விறகுவெட்டி மரத்தை வெட்டியதும் அவற்றை முகத்தினால் ஒன்று திரட்டும். மரங்களைப் பெயர்த்து எடுக்கும். பின்னர் விறகு சுமை சுமந்து வரும்.
அந்த விறகுவெட்டிக்கு பன்றிக்குட்டியின் மேல் அளவற்ற பற்றுதல். அதற்கு நன்றாக தீனி போட்டு கொழுகொழுவென்று வளர்த்தான். அது தன்னிச்சையாக மேய்ந்து காட்டுப்பன்றி போல் வாட்டசாட்டமாக வளர்ந்துவிட்டது. அந்த ஊரார் விறகுவெட்டியின் பன்றியைக் கண்டதும் பயந்து போய் விட்டனர். விறகு வெட்டியும் காட்டில் இருக்கவேண்டிய மிருகங்களை உன்னுடன் எடுத்து வளர்த்து வருகிறாய். அது ஊரில் இருப்பவர்களை எல்லாம் மிரட்டுகிறது. நீ இந்த ஊரில் இருக்க வேண்டுமானால், பழையபடி அந்த பன்றியை கொண்டு சென்று காட்டில் விட்டுவிடு. இல்லையென்றால் உன்னையும் சேர்த்து ஊரை விட்டு வெளியேற்ற வேண்டிய தான் இருக்கும் என்றனர்.
ஊரார் பேச்சுக்கு பயந்து விறகுவெட்டி ஒருநாள் பன்றியைக் கூட்டிச்சென்று தொலைவிலிருந்த வேறு ஒரு காட்டுக்குள் அதை விட்டுவிட்டு திரும்பி வந்துவிட்டான். காட்டில் விடப்பட்ட பன்றி அங்கிருந்தபன்றிக் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது. புதிதாக தங்களுடன் வந்து சேர்ந்த பன்றியை பழைய பன்றிகள் பார்த்தன. அதைப் பார்த்ததும் அவற்றிற்கு பயமாக போய்விட்டன. எல்லாப் பன்றிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு அதை எதிர்க்கச் சென்றன.
விறகுவெட்டியின் பன்றிக்குப் பதவி உயர்வு
அப்போது விறகுவெட்டியின் பன்றி, நண்பர்களே நானும் உங்களைப் போன்ற ஒருவன் தான். ஏன் வீணாக என் மீது விரோதம் காட்டுகிறீர்கள்? உங்களுடைய நன்மைக்காக நான் என் உயிரையும் தருவேன். வீணாக எதற்கு என் பெயரில் பவிரோதம் கொண்டு இருக்கிறீர்கள் என்றது. இதைக் கேட்டதும் ஒரு காட்டுப்பன்றி, நண்பர்களே அதைத் தடுக்காதீர்கள். அதன் பேரில் நம்பிக்கை வையுங்கள். இந்தப் பன்றி நம்மைப்போல் ஒரு இடத்தில் இருந்தது அல்ல. பல இடங்களுக்கும் சென்று வந்தது பலருடன் பழகி அனுபவம் இருக்கும்.
எனவே இந்த புதிய பன்றியை நமக்கு தலைவராக வைத்துக் கொள்வோம் என்றது. அதை அப்படியே செய்வோம் தலைவரே வாழ்க என்று காட்டுப்பன்றிகள் ஆரவாரம் செய்தன. பிறகு தலைமை பன்றி நண்பர்களே உங்களுடைய அன்புக்கு நன்றி. உங்களுக்கு உற்ற துயரம் எதுவாக இருந்தாலும் என்னால் இயன்ற அளவு ஒத்தாசைகள் புரிவேன் என்றது.
சிங்கம்
அதோ இந்த காட்டில் ஒரு சிங்கம் இருக்கிறதே. அது நாள் தோறும் இங்கு வந்து நமது கூட்டத்தில் ஒருவராக கொன்று தின்று விட்டு சென்று விடுகிறது. இவ்வாறு நடந்து கொண்டே இருந்தால் நமது கூட்டமே அழிந்துவிடும். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள நீங்கள்தான் ஏதாவது யோசனை சொல்ல வேண்டும் என்று தலைமை பன்றியை பார்த்துக் கூறியது.
இந்த காட்டில் ஒரு சிங்கம் தானே இருக்கிறது? என்று கேட்டது தலைமை பன்றி. ஒரே ஒரு சிங்கம் தான் இருக்கிறது என்று கிழட்டு பன்றிக் கூறியது. சிங்கம் ஒன்று ஆனால் நீங்கள் நூற்றுக்கணக்கானவர்கள். இவ்வளவு பேரும் சேர்ந்து அந்த ஒரு சிங்கத்தை எதிர்க்க முடியவில்லையா? என்று கேட்டது தலைமைப் பன்றி. அது எப்படி முடியும்? சிங்கம் அதிக பலம் கிடைத்தது. அது கர்ஜனை செய்தால் நாங்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடி விடுகிறோம் என்றது காட்டுப்பன்றிகள். சிங்கம் பலம் பொருந்தியதாக இருக்கலாம். நாம் அனைவரும் ஒன்றுபடும் போது சிங்கத்தை விட அதிக பலம் நமக்கு கிடைக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் சிங்கத்தை எளிதாக முறியடிக்க லாம் என்று தலைமைப்பன்றிக்கூறியது.
ஒற்றுமையே எதிரியை வீழ்த்தும் ஆயுதம்.
சிங்கத்தை எதிர்ப்பது என்பது மரணத்துடன் விளையாடுவதற்கு சமம் ஆயிற்றே. அதை எதிர்த்து வெற்றி பெற முடியுமா? என்றது. கிணற்றுத் தவளையைப் போல் ஓடி ஒளிந்து கொள்பவன்தான் விரைவில் மரணம் அடைகிறான். அனைவரும் ஒன்று சேர்ந்து வீரத்துடன் போரிட்டாலும் நாம் சிங்கத்தை வென்றுவிடலாம் என்றது தலைமைப்பன்றி. அப்படியே செய்கிறோம். தாங்கள் எது சொன்னாலும் அதன்படியே நடப்போம் என்றது கிழட்டு பன்றி.
இப்பொழுது அந்த சிங்கம் எங்கே இருக்கிறது? என்று தலைமை பன்றிக் கேட்டது. அதோ தெரிகிறதே அந்த மலைக்கு அருகில் உள்ள ஒரு குகையில் தான் சிங்கம் வசித்து வருகிறது. தினந்தோறும் காலை வேளையில் வந்து எங்களில் ஒருவரை கொன்று தின்று விட்டுப் போய்விடும் என்றது காட்டுப்பன்றி. சரி நாளைய தினம் சிங்கம் வரும் போது அதனுடன் நேருக்கு நேர் நாம்போரிடுவோம் என்றது தலைமைப்பன்றி.
மறுநாள் பொழுது புலர்ந்ததும் தலைமைப் பன்றி எல்லாப் பன்றிகளையும் ஓரிடத்தில் சேர்த்தது. முதலில் சிறிய குட்டிகள் அனைத்தையும் நடுவில் இருக்குமாறு சொல்லியது. குட்டிகளை சுற்றிலும் தக்கவைத்தது. அதற்குப் பிறகு வயதான பலம் குறைந்த பன்றிகளை தாய் பன்றிகளை சுற்றி வட்டமாக நிறுத்திவைத்தது. கடைசியாக பலம் பொருந்திய பன்றிகள் அனைத்தையும் வட்டத்தை சுற்றி நிற்க வைத்தது.
பிறகு வட்டமாக நிறுத்தப்பட்டிருக்கும் பன்றிப் படைகளுக்கு பக்கத்தில் ஒரு பெரிய பள்ளத்தை வெட்டும்ம்படி செய்தது. அதற்கு பக்கத்தில் மற்றொரு பள்ளமாக வெட்டும்படி செய்தது. முதலில் வெட்டிய பள்ளத்தின் மீது ஒரு மேடை அமைத்து அதன் மீது ஏறி நின்று கொண்டது விறகுவெட்டிப் பன்றி. வட்டமாக நின்று கொண்டிருக்கும் பன்றிகளைப் பார்த்து நண்பர்களே பயப்படாதீர்கள். பயம்தான் மரணத்தை எதிர்கொண்டு அழைக்கும். தைரியமாக சிங்கத்தை எதிர்த்து நில்லுங்கள். ஆனால் ஒன்று நான் என்ன சொல்கிறனோ அதன்படி நடந்து கொள்ளுங்கள், சிங்கத்தை வென்றுவிடலாம். சிங்கம் என்ன செய்தாலும் நீங்களும் அதை திருப்பி செய்யுங்கள் என்று கூறியது.
சிங்கத்தை வென்றப் பன்றிகள்
சிங்கம் வந்ததை கண்டதும் ஓடி ஒளியும் பன்றிகள் நின்று ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பது அதற்கு வியப்பை அளித்தது. கோபத்தினால் கண்களை உருட்டி அவற்றை பார்த்தது. முன்னால் நின்றிருந்த பன்றிகள் அனைத்தும் தலைமைப் பன்றி சொல்லிக்கொடுத்தது போலவே தங்கள் கண்களை உருட்டி சிங்கத்தை முறைத்து பார்த்தது. இதை கண்டதும் சிங்கத்திற்கு கோபம் பொங்கியது. தனது முன்னங்கால்களை தைரயில் அடித்து தன் பற்களைக் காட்டியது. பன்றிகளும் சிங்கம் செய்தது போலவே பதிலுக்கு செய்தன. இது சிங்கத்திற்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது.
ஆத்திரம் தாங்காத சிங்கம் பயங்கரமாக கர்ஜனை செய்தது. பன்றிகளும் கத்த ஆரம்பித்தன. எல்லாப் பன்றிகளும் ஏககாலத்தில் கத்தியது. பன்றிகளின் உறுமல் சத்தம் சிங்கத்தை கிடுகிடுக்க வைத்தது. பன்றிகளின் உருமல் சத்தம் சிங்கத்தையே பயப்பட வைத்து விட்டது என்றும் இல்லாத புதுமையாக இருந்தது சிங்கத்திற்கு. பன்றிகள் நாம் செய்வதை போலவே செய்து நம்மை மிரட்டுகின்றன வே. இவர்கள் தங்கள் சொந்த பலத்தில் இவ்வாறு செய்யவில்லை. இவைகளை வேறு யாரோ தூண்டி இருக்கிறார்கள் என்று நினைத்த சிங்கம் கோபத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தது.
படையில் பக்கத்தில் ஒரு உயர்ந்த மேடை மீது ஒரு பன்றி கம்பீரமாக நின்று கொண்டிருப்பதை கண்ட உடனே ஆத்திரத்துடன் அதன் மீது பாயத் தொடங்கியது. சிங்கத்தின் எண்ணத்தை அறிந்து கொண்ட தலைமைப் பன்றி சட்டென்று கீழே இருந்த பள்ளத்தில் பதுங்கிக் கொண்டது. நோக்கி பாய்ந்த சிங்கம் பக்கத்தில் இருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்தது. பள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல் அதிலேயே இறந்தது அந்த கொடிய சிங்கம்.
ஒற்றுமையின் பலத்தை உணர்ந்த பன்றிகள் அனைத்தும் தலைமைப்பன்றியின் சொற்படி நடந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரலாயினர்.
நீதி
பன்றிகள் சிங்கத்தை வெல்ல முடியாததுதான். ஏனென்றால் சிங்கம் காட்டுக்கு ராஜா. ஆனால் நூற்றுக்கணக்கான பன்றிகள் ஒற்றுமையாக இணைந்து ஒரு சிங்கத்தை எதிர்த்து போராடியதனால்தான் வெற்றி பெற முடிந்தது. எனவே ஒற்றுமை என்பது எவ்வளவு பெரிய பலம் வாய்ந்தது என்பதை நாம் இந்த கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே ஒற்றுமையாக இருப்போமாயின் நம்மால் எதையும் எளிதில் ஜெயிக்க முடியும். நன்றி.
No comments:
Post a Comment