குடும்பத்தில் விருந்தோம்பல் மற்றும் சகிப்புத் தன்மையின் முக்கியத்துவங்கள்
சில பெண்கள் இருக்கிறார்கள் விருந்தினர் வந்துவிட்டால் முகத்தை சிடுசிடுவென்று மாற்றிக் கொள்வதும் வந்த விருந்தினரோடு சிடுசிடுப் பாக பேசியும் எரிந்தும் விழுந்தும் வந்தவர்களை ஒரு வினாடியும் தங்க விடாது ஒட்டி விடுவார்கள். இப்படி ஓட்டுவதில் இன்னொரு ரகமும் உண்டு. அதாவது விருந்தினர் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக தம்பதிகளிடையே சண்டை மூட்டி விடுவதில் மனைவியே காரணாவதியக அங்கம்வகிப்பாள். சண்டை உச்சகட்டத்தை அடைந்ததும் வந்த விருந்தாளிகள் பாடு ஆபத்தாய் விடும். ஏனென்றால் மனைவியிடம் கணவன் அகப்பட்டுத் தவிக்கும் பரிதாப நிலையை பார்க்கும் விருந்தினர் சண்டையை விலக்குவதா? பிடிப்பதா என்ற இக்கட்டான நிலைக்கு உள்ளாவார்கள். மறுகணமே அவர்கள் சற்றும் தாமதிக்காமல் பஞ்சாய் பறந்து போவார்கள்.
வேடிக்கைக்கு ஏதோ கதை சொல்வதாக யாரும் கருதிவிட வேண்டாம். பல இடங்களில் - வீடுகளில் இப்படி நடப்பதை பார்க்கிறோம். விருந்தினரை உபசரிக்கும் நற்குண நற்செய்கை சற்றும் இல்லாத இல்லத்தரசிகள் நடத்தும் திருவிளையாடல் அனந்தம். ஆகவே இந்த ரகத்தில் எந்த மனைவியும் சேரக்கூடாது.
பொதுப்படையாக மனைவிக்கு சேர்ந்தவர்களாக இருக்கட்டும், கணவனுக்கு சேர்ந்தவர்களாக இருக்கட்டும், சுற்றத்தாரை நேசிப்பது ஒவ்வொரு மனைவியின் பண்பாக அமைய வேண்டும். சில பெண்கள் தமக்குரிய சுற்றத்தாரை மட்டும் நேசிப்பதும், கணவனுக்கு வேண்டிய சுற்றத்தாரை புறக்கணித்து அலட்சியப்படுத்துவதும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்க்கு நல்ல மனமும் பெருந்தன்மையும் வேண்டும். இந்த இரண்டும் இல்லாத மனைவி செழுங்கியையைத் தாங்குவது எங்கணும்?
கணவனாகட்டும் மனைவியாகட்டும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கக் கூடாது. சந்தேகத்தினால் பல குடும்பங்கள் நாசமடைந்து போயின என்பதை கண்கூடாக பார்க்கிறோம். கணவனும் மனைவியும் சந்தேகிக்கக் கூடாது. அது போலவே மனைவியும் சந்தேகிக்கக் கூடாது. சில மனைவிமார்கள் கணவன்மார் இரவு நேரத்தில் நேரம் கடந்து வீட்டுக்கு வருவதை தவறாக எண்ணிக்கொண்டு அகால வேளை என்று கூட பார்க்காமல் கணவனுக்கு மல்லுக்கு இழுப்பார்கள். கணவர் போக்கில் இவ்வளவு தூரம் சில சந்தேகம் கொள்ளல் கூடாது. வெளியே செல்லும் கணவனுக்கு எத்தனையோ அலுவல் இருக்கும். தேடிப்போன நபர் வரும்வரை அங்கேயே காத்திருந்து அவரை பார்த்து விட்டு வருவார். அதை தவறாக எண்ணிக்கொண்டு கணவனை சந்தேகப் பார்வையில் பார்ப்பதும், வம்பு சண்டைக்கு இழுப்பதும் மனைவியின் நற்குணமாகாது.
ஒருவேளை கணவன் உள்ளபடியே சந்தேகத்துக்கிடமான செயலைச் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக கணவனை வம்புக்கு இழுத்து சண்டைக்குப் பிடிக்கலாமா? பெண்கள் அமைதியான முறையிலேயே தன் கணவனை நல்வழியில் திருப்பலாமே,
கணவன் குதிரை பந்தயத்தில் பித்தாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அந்த கணவரை நல்வழியில் திருப்புவது எப்படி என ஆராய வேண்டும். திடீர் தாக்குதல் நடத்தி குடும்பத்தில் சச்சரவு உண்டுபண்ணி விடக்கூடாது. குதிரை பந்தயத்தில் கோட்டையும் அதனால் நாசமாய்ப் போன பல குடும்பத்தாரின் சோக கதைகளையும் கணவருக்கு எடுத்து வைப்பதன் மூலம் தன் கணவன் மனத்தை ஓரளவு மாற்றமுடியும். சகிப்புத்தன்மையும் சாந்த குணமும் எத்தகைய கடினமான காரியத்தையும் ஆச்சரியப்படத்தக்க வகையில் சாதிக்கக்கூடும்.
குதிரை பந்தயத்தில் மூழ்கி கிடப்பது போல பரத்தையர் நேசத்தில் ஈடுபட்டுள்ள கணவனையும் மனைவி திருத்த முடியும். முயன்றால் கணவனிடம் இன்முகம் காட்டி இனிய வார்த்தை பேசி விலைமாதர் தரும் இன்ப சுகம் தந்து கணவனை தன் வழிக்கு திருப்ப முடியும் ஒரு மனைவியால்...
அத்துடன் கணவன் எந்த வகையில் தீய பழக்கவழக்கங்களை கைக்கொண்டாலும் மனைவி சற்றும் ஆத்திரப்படாமல் சாந்தமாகவும் சாத்வீதமாகவும் நடந்து தன் கணவனை திருத்தி நல்வழிக்கு திருப்ப முடியும்.
நச்சரிக்கும் மணியாக இருக்கக்கூடாது. பெண்கள் கணவரின் இருதயத்தை பூப்போல மென்மையாக வைத்திருக்க வேண்டும். கணவன் நெஞ்சிலே முட்கள் தூவி சித்திரவதை செய்யும் கொடுமை மனைவியிடம் காணப்படக் கூடாது. வருவாய்க்குத் தக்கபடி வீட்டு செலவை சமாளிக்கவேண்டுமேயல்லாது நாலு வகை கறியிருந்தால்தான் சாப்பாடு இறங்கும். அடுக்கடுக்காக துணிமணி இருந்தால்தான் மனதில் மகிழ்வு இருக்கும். சினிமாவும் பொழுதுபோக்கும் இருந்தால்தான் குடும்ப வாழ்வில் குதுகலம் காணும் என்று கணவனை நச்சரித்தால் கணவன் மனம் என்ன பாடுபடும்? கூறாமல் சந்நியாசம் கொள் ளும் அளவுக்கு அவன் மனம் மரத்துப் போகுமே. எனவே குடும்பத்தில் சந்தோசம் நிலைத்திருக்க விருந்தோம்பல் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற உயரிய குணங்கள் அனைவருக்கும் அவசியம். நன்றி.
No comments:
Post a Comment