எலிகள்
ஒரு பாழடைந்த கட்டிடத்தில் எலிகள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன. மக்களாலும் வேறு விலங்குகளினால் எந்த தொந்தரவும் இன்றி அமைதியாக வாழ்ந்து வந்தன. அந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் யானை கூட்டம் ஒன்று வசித்து வந்தது. யானைகள் வசித்த பகுதியில் நீர் எல்லாம் வற்றி விடவே குடிக்க நீரின்றி தவித்தன. தனக்கு என்ன செய்வது என்று யோசித்த பிறகு வேறு இடம் செல்லலாம் என்று முடிவு செய்தன.
உடனே யானைகளின் தலைவன் தன் பின்னே மற்ற யானைகள் வருமாறு கூறிவிட்டு தான் முன்பாக சென்றது. அப்போது எலிகள் வசித்து வந்த இடத்தில் ஒரு ஏரி இருப்பதைக் கண்டன. உடனே யானைகள் யாவும் ஆவலோடு ஏரிக்கு சென்று வேண்டிய மட்டும் நீரை குடித்து மகிழ்ச்சி அடைந்தன. யானைகள் அந்த வழியே சென்ற போது யானைகளின் காலடியில் மாட்டிக்கொண்டு அனேக எலிகள் செத்தன.
யானைகளால் எலிகளுக்கு தொந்தரவு
யானைகள் நீர் அருந்தி விட்டு திரும்ப வரும்போதும் மேலும் பல எலிகள் யானையின் காலடியில் மாட்டிக் கொண்டு இறந்தன. இதுவரை எந்த தொந்தரவும் இன்றி வாழ்ந்து வந்த எலிகளுக்கு இது ஒரு பெரும் துயரமாக இருந்தது.
யானைகள் ஒரு முறை வந்து போனதற்கு நம்மில் எத்தனை பேர் பலியாகி விட்டார்கள். இவை தினம் தினம் வந்து போனால் நாம் இனமே அழிந்துவிடும் என்று மற்ற எலிகள் எல்லாம் கவலைப்பட்டனர். எல்லா எலிகளும் சேர்ந்து இதற்கு என்ன செய்யலாம்? என்று ஆலோசனை செய்தன. நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்பட்டோம் என்று மற்ற எலிகள் கூறின. உடனே தலைவன் எலி மற்ற எலிகளைப் பார்த்து நாம் இந்தப் பிரச்சினையை யானைகள் தலைவனிடம் சென்று முறையிடுவோம் என்று கூறியது.
எலிகள் யானைகளிடம் முறையிடுதல்
இதனை மற்ற எலிகள் ஒத்துக்கொண்டன. உடனே தலைவன் எலி மற்றவர்களுடன் சேர்ந்து யானைகளின் தலைவன் இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றன. தம்மை நோக்கி கூட்டமாக வருவதைக் கண்ட யானைகள் பெரும் வியப்புற்றனர். யானைகளின் தலைவன் முன் சென்று வணங்கிய பிறகு யானைகளின் தலைவனைப் பார்த்து
''யானையாரே தாங்கள் எவ்வளவு வலிமை மிகுந்தவள்''
''நாங்கள் மிகவும் பலவீனம் உள்ளவர்கள்''
''நீங்கள் பெரியவர்கள்''
''நாங்கள் மிகவும் சிறியவர்கள்'' பெரியவர்கள் ஆகிய நீங்கள் மிகவும் சிறுவர்களாகிய எங்களுக்கு தீமைச் செய்யலாமா? என்றது. இதனை கேட்ட யானைகள் தலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் உங்களுக்கு தீமை செய்கிறோமா? ஒன்றும் புரியவில்லையே. விளக்கமாக கூறுங்கள் என்று எலிகளின் தலைவனைப் பார்த்து கூறியது.
அதைக்கேட்ட எலி தலைவன் யானைத் தலை வரை பார்த்து உங்களுக்கு தெரியாது தான். இவ்வளவு காலம் எந்தவித தொந்தரவும் இன்றி நாங்கள் வாழ்ந்து வருகிறோம். நீங்கள் இன்று நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள ஏரிக்கு நீர் அருந்த வந்தீர்கள். நீங்கள் வந்து போகும் போது எங்களில் பலர் உங்களின் காலடியில் சிக்கி கொண்டு இறந்தும் போயினர் என்று மிகுந்த வருத்ததோடு கூறியது.
இதைக் கேட்டதும் யானைகள் தலைவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவே நாங்கள் வந்து போனதால் உங்களின் அத்தனை சேதம் இது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்று எலி தலைவனைப் பார்த்து யானைத் தலைவன் கூறியது.
அதற்கு எலி தலைவன் யானைகள் தலைவனைப் பார்த்து, யானையாரே நாங்கள் இந்த இடத்தில் நீண்ட காலமாக வசித்து வருகிறோம். இது எங்களுக்கு பாதுகாப்பான இடமும் கூட. அதனால் நீங்கள் அனைவரும் இந்தப் பக்கம் நீர் அருந்து வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவே வந்தோம் என்று பயந்தபடி தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி யது. யானைகள் தலைவன் எலி தலைவனைப் பார்த்து நீங்கள் எங்களைப் பார்த்து பயப்பட தேவையில்லை. நாங்கள் மற்ற உயிர்களுக்கு தீங்கு உண்டாகுமாறு எப்பொழுதும் நடக்க மாட்டோம்.
நீங்கள் தைரியமாக போகலாம். நாங்கள், நீங்கள் இருக்கும் பக்கமே வரமாட்டோம். நீங்கள் சந்தோஷமாக செல்லுங்கள் என்று உறுதி கூறியது. இதை கேட்ட எலி தலைவன் யானைகள் தலைவனைப் பார்த்து உங்கள் உருவத்தைப் போலவே உங்கள் உள்ளமும் மிக உயர்ந்ததாக உள்ளது. சின்ன மிருகங்களான எங்களையும் மதித்து அன்பு காட்டினீர்கள். இந்த உதவியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். இதற்கு கைமாறாக நாங்கள் உங்களுக்கு எதுவும் எப்போதும் செய்ய தயாராக உள்ளோம் என்று நன்றியோடு கூறிவிட்டு விடைபெற்றது.
பிறகு யானைகள் அனைத்தும் நீர் நிலைக்குச் செல்லும் பாதையை வேறு பக்கமாக அமைத்துக் கொண்டன. எலிகளும் எந்தவித தொந்தரவும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தன.
கொஞ்ச நாள் சென்றது. அந்த நாட்டு மன்னர் சில நாட்கள் பின்னர் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் வந்தார். அவர் வந்ததும் யானைகளை கண்டான். யானைகளைப் பிடித்து நாட்டிற்கு எடுத்துச் சென்று தன்னுடைய போர் படையில் சேர்க்க விரும்பினார். யானைகளைப் பிடிக்க ஒரு பெரிய பள்ளம் வெட்ட உத்தரவிட்டார்.
யானைகளைப் பிடிக்க பள்ளத்தை வெட்டி அதன் மீது இலைதழைகளை பரப்பி வைத்தார்கள். அதனை பாராது வந்த யானைகள் அந்தப் பள்ளத்தில் விழுந்து மட்டிக் கொண்டனர். அதில் யானைகள் தலைவனும் இருந்த பள்ளத்தில் விழுந்த யானைகளை வெளியில் எடுத்து கால்களை பெரிய கைகளால் பிடித்துக்கொள்ள பெரிய பெரிய மரங்களில் கட்டி வைத்தனர். யானைகளால் அந்த கயிற்றில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. சட்டென்று யானைகள் தலைவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே தூரத்தில் இருந்த யானை ஒன்றுக்கு தன்னுடைய சூழ்நிலையை விளக்கி எலி தலைவனிடம் சென்று உதவி கேட்குமாறு சமிக்ஞை மூலமாக தெரிவித்தது அந்த யானையும் அந்த குறிப்பை உணர்ந்து பதில் சமிக்ஞையை கொடுத்து விட்டு எலி தலைவன்வன் இருக்கும் இடம் நோக்கி விரைந்தது.
யானைகளுக்கு உதவிய எலிகள்
யானைகள் நோக்கி வருவதைக் கண்ட எலிகள் தங்களுக்கு மீண்டும் யானைகளால் ஆபத்து வருகிறது என்று அஞ்சின. அப்போது அந்த யானைத் தலைவன் முன் வந்து நின்று யானைகள் தலைவன் கூறியதைக் கூறியது. அதை கேட்டதும் எலி தலைவன் யானையை பார்த்து அப்படியா இதோ நாங்கள் வருகிறோம். அந்த இடத்தை எங்களுக்கு காட்டு என்று கூறியது. யானை முன்னால் செல்ல எலிகள் எல்லாம் கூட்டமாக அதனை பின்பற்றி சென்றன.
எலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கயிற்றினை கடித்து துண்டித்து கட்டில் இருந்து விடுபட்டது். யானைகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தாம் எவ்வளவு தான் பெரிய விலங்காக இருந்த போதிலும் சிறிய பலம் இல்லாத எலிகள் தக்க சமயத்தில் உதவியதால்தான் தப்ப முடிந்தது'' என்று எலி தலைவனிடம் யானைகள் தலைவன் நன்றியோடு கூறியது. எலிகள் எல்லாம் யானைகள் தலைவனோடும் மிக மிக சந்தோஷத்துடன் இடத்தை விட்டு சென்றன.
கதையின் நீதி
நம்மை விட பலம் குறைந்தவர்களை அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கலாம். அவர்கள் நம்மைவிட தாழ்ந்தவர்கள் என்று ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல அவர்களும் ஏதாவது ஒரு சமயத்தில் நமக்கு உதவக்கூடிய நபர்களாக மாறுவார்கள். எனவே மற்றவர்களின் பலத்தை அற்பமாக எண்ணக்கூடாது.
No comments:
Post a Comment