பலே மருமகள் - துணிச்சலான மருமகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 29, 2020

பலே மருமகள் - துணிச்சலான மருமகள்

பலே மருமகள் - துணிச்சலான மருமகள்


மருமகளின் கஷ்டம்


விவசாய வேலைகளையும் பார்த்து,  விட்டு வேலைகளில் ஒன்று விடாமல் செய்து வந்த மருமகளுக்கு வயிற்றுக்கு சோறு போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை என்றால் அவளால் அதை எத்தனை நாளைக்குத்தான் தாங்கிக்கொள்ள முடியும். 

கொடுமைக்காரி மாமியார்


அந்த மனைவியிடம் கணவரும் பரிவு காட்டியதில்லை.  மகனுக்கு தாயார் சொல்வதே வேதவாக்கு. .  ஒரு நாள் தோட்டத்தில் சுண்டைக் காய் பறிக்க மூவரும் போனார்கள்.  பறித்த சுண்டைக்காயில்  ஒரு பகுதியை மருமகள் யாரும் பார்க்காத போது ஓரிடத்தில் மறைத்து வைத்தாள். 

யாருக்கும் தெரியாமல் அதை விற்றால் கிடைக்கிற காசு கொண்டு இஷ்டப்பட்ட எதையாவது வாங்கித் தின்னலாேம  என்பது அவள் நினைப்பு.  அதையும் யாருக்கும் தெரியாமல் தான் தின்ன வேண்டும்.  அந்த கழுகு கண் மாமியார் இருக்கும் வரையிலும் அந்த மருமகளால்  திருட்டுத்தனமாய் எதையும் செய்ய முடியாது. 

மருமகள் சுண்டைக்காயை ஒளித்து வைத்தது மாமியார் பார்த்துவிட்டாள். மகனிடமும் அதைக் காட்டினாள்.  

வீட்டுப் பொம்பளை திருடறாள்னா அப்பேர்பட்டவளை வைத்திருக்கக் கூடாது டா . உயிரோடு போய் சுடுகாட்டில் வைத்து கொளித்திட்டு வந்துருடா என்று மருமகளுக்கு மாமியார் நியாயத் தீர்ப்பு வழங்கினாள். 

தாய் சொல்லை தட்டாத தனயன் அவன்.... 

ஒரு கோணிப்பையை எடுத்துக் கொண்டு, அதற்குள் அவளை  குண்டுகட்டாக கட்டினான்.  இரவோடு இரவாக சுடுகாட்டுக்கு தூக்கிக்கொண்டு போனான்.  இந்தக் குறைக்கறிகட்டைகளை,  குப்பைகள்,  சதைகுப்பை காட்டில் காய்ந்த எரு என்று கிடைத்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டுவந்து சேர்த்தான்.  எல்லாவற்றையும் குவித்து வைத்து அதன் மேல் கோணிப்பை எடுத்து வைத்தான். 

கொளுத்த வேண்டியது ஒன்றுதான் பாக்கி

அப்போதுதான்,  தீ உண்டுபண்ணுவதற்கான சிக்கிமுக்கிக் கல்லை எடுத்து வர மறந்து போனதை உணர்ந்தான்.  அதை எடுத்து வர வேகமாக வீட்டை நோக்கி ஓடினான்.  அப்போது சுடுகாட்டை அடுத்திருந்த பாதை வழியே ஆட்டிடையன் ஒருவன் ஆடுகளை ஓட்டிச் சென்றான். 

ஆட்டு இடையனின் உதவி


மறுநாள் அடுத்த ஊரில் சந்தையில் ஆடுகளை விற்பதற்காகவே அவன் அவற்றை  ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.  ஆடுகளை ஓட்டிச் சென்ற அவன் கொடுத்த சத்தத்திலிருந்து அவன் யார் என்பதை குழிக்குள் இருந்த மருமகள் தெரிந்து கொண்டாள்.  உள்ளூர்வாசி-யை அவன்.  அவனை அவள் முன்பே அறிந்திருந்தாள்.  

அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள்.  தன்னை காப்பாற்றும்படி முறையிட்டாள்.  பொல்லாத மாமியாரிடமும் புருஷனிடம் இந்த பெண் அனுபவித்து வந்த கொடுமைகளை அந்த ஊரே அறியும்.  சோழியை கட்டவிழ்த்து அவளை விடுவித்தான்.  மூட்டையைப் பார்த்த அவள் புருஷனுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்ற இடையன் தன்னிடமிருந்த வத்தலும்  சொத்தலுமானமான ஆடு ஒன்றை கழுத்தைத் திருகிக் கொன்று அதை கூறு போட்டு கட்டி வைத்துவிட்டான். 

காளி கோயிலில் தஞ்சம் அடைதல்


எங்காவது ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கோ என்று அந்தப் பெண்ணிடம் கூறிவிட்டு இடையன் தன் வழியே சென்று விட்டான்.  ஆனால் அந்தப் பெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  எங்கே போவது?  என்ன செய்வது என்று அவள் குடம்பி தவிக்கையில் தூரத்தில் கணவன் வருவது தெரிந்தது.  உடனே ஓடிப்போய் அருகே இருந்த காளி கோயிலில் புகுந்து மறைந்தாள்.

கணவனை,  சுடுகாட்டு காளி கோயிலில் மறைந்து இருந்த படியே கவனித்தாள் கொள்ளி வைத்ததும் தன் வேலை முடிந்தது என்று புருஷன் போய் விட்டான்.  தனக்கு போக்கிடம் இல்லை என்று அழாத குறையாக காளி சிலைக்குப் பின்னால் உட்கார்ந்து இருந்தாள்.  

நடு இரவை தாண்டி விட்ட நேரம்.  

இரவுக் கொள்ளையர்கள்


எங்கோ நகை நட்டுகளை திருடி வந்தவர் கள்வர்கள்,  அவற்றைப் பங்குப்போட்டு கொள்வதற்காக காளி கோயிலுக்கு வந்தார்கள்.  அவர்களின் முரட்டு தோற்றத்தையும், அவர்கள் தங்களிடம் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் பார்த்ததும் அந்தப் பெண் பயத்தினால் வீறிட்டு அலறினாள்.  

திடீரென்று கோரக்குரல் கேட்டதும் திருடர்கள் கோயிலில் வேறு எவரும் காணப்படாததால் சத்தம் கொடுத்தது காளியேதான்  என்று பயந்து நகைகளை எல்லாம் அங்கேயே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தார்கள். கள்வர்கள் ஓடி மறைந்ததும் அந்த பெண்ணுக்கு போன உயிர் திரும்பி வந்தது. நடந்தது என்ன என்பதை ஒருவாறு யூகித்து அறிந்து கொண்டாள்.  

நகைகள் கிடைத்தது.


சிலையின் பின்னால் இருந்து வந்து அங்கிருந்த நகைகள் எல்லாம் எடுத்துக்கொண்டு காளிக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஊர் நோக்கி திரும்பினாள். 

வீட்டை அடைந்ததும் தன் கணவனும் மாமியாரும் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.  சுடுகாட்டில் மனைவியை கொழுத்தி எரித்து விட்ட செய்தியை தாயுடன் சொல்லிக்கொண்டிருந்தான்.  

''பீடை விட்டது. இன்னொரு பெண்ணை பார்த்து உனக்கு கட்டி வைக்கிறண்டா'' என்று தாய் சொல்வதை கேட்டது.  

மருமகள் படபடவென்று கதவை தட்டினாள்.  மாமியார் தான் கதவை திறந்தாள். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நகைகள் அணிந்து,  சர்வ அலங்காரத்துடன் தன் மருமகள் நிற்பது கண்டு பேயோ பிசாசோ என்று அஞ்சி மாமியார் கூச்சலிட்டாள். கணவனும் பயத்தினால் அலறினான்.

நெடுஞ்சாண்கிடையாக அந்தப் பெண் இருவர் கால்களிலும் விழுந்து கும்பிட்டாள்.  நான் பேயும் இல்லை,  பிசாசும் இல்லை,  நல்லா பாருங்க என் கால் தரையில ஊனிட்டு இருக்கு,  என் கண்கள்  இமைக்கிறது என்றாள் அவள்.  

தாயும் கணவனும் கண்களை  நன்றாக கசக்கி விட்டு அவளை உற்றுப் பார்த்தார்கள்.  

பெண் சொன்னாள்....


நீங்கள் என்னை உயிரோடு கொளுத்தினீர்கள். அதனால் நான் இந்த உடம்போடு நேராக சொர்க்கத்திற்கு போயிட்டு அங்கே  ''மாமா பிரியமா வா மருமகளே ன்னு'' எதிர்கொண்டு கூட்டிக்கொண்டு போனார். 

இந்த நகைகள் எல்லாம் அவர்தான் கொடுத்தார். 

அப்படியா என்று மாமியார் அதிசயித்தாள். 

அப்பா அங்கே எப்படி இருக்கிறார் என்று மகன் கேட்டான். 

பெண் சொன்னாள்,  எப்பவும் அவருக்கு உங்க ரெண்டு பேரை பத்தி தான் நெனைப்பாம்.  மாமியைத் தான் மாமனார்  ரொம்ப ரொம்ப நினைச்சு பார்க்கராராம்.  

''எனக்கும் எப்பவும் அவரோட நினைப்பு தான்''-  என்று கம்மிய உரையில் சோகத்துடன் கூறினாள் மாமியார்.  

கண்ணை பறிக்கிற மாதிரி ஒன்னு ஒன்னும் மின்னதுங்க.  என்னென்ன நகைகளையோ   மாமா வச்சிருக்கார். 

நவரத்தின மாலை ஒன்று ரொம்ப நல்லா இருந்தது. அதை கேட்ட தர மாட்டேன்னு சொல்லிட்டாரு என்று வருத்தமாக சொன்னாள் மருமகன். 

இத்தனையும் கொடுத்தவரு அதை ஏன் தரல ன்னு என்று கேட்டாள் மாமியார். 

மருமகளே,  உனக்கு கொடுத்தது போக மீதி நகைகளை உன் மாமியாருக்காக வச்சிருக்கேன்.  எல்லாத்தையும் அவளுக்குத்தான் கொடுப்பேன்னு கறாரா சொல்லிட்டார் அத்தை என்றாள் மருமகள். 

மாமியாரின் அதீத ஆசை


அதற்குப் பிறகு அந்த நவரத்தின மாலையை பற்றி நினைப்பே மாமியாரை ஆட்டிப்படைத்தது. 

அத்தனை நகைகளையும் அணிந்துகொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கவேண்டும்.   மருமகளுடன் பெருமை அடிக்க வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் முற்றி வந்தது.  

உயிரோடு கொளுத்தப்பட்டதால்அல்லவா மருமகள் சொர்க்கத்திற்கு உடலோடேபோய்   மாமனாரை கண்டு நகைகளை பூட்டி வந்திருக்கிறாள். 

மகனை நச்சரிக்கத் தொடங்கினாள் தாய். 

என்னையும் மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு போயி மயானத்தில் உயிரோடு கொளுத்துடா 

அங்கே உங்க அப்பனை போய் பார்த்துட்டு வரேன் டா 

உனக்கு கோடி புண்ணியம்தான் என்றாள். 

 ஒருவாறு,  ஒரு நாள் அவன் அந்தப் புண்ணிய காரியத்தையும் செய்து முடித்து விட்டான்.

மருமகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை


அதற்குப் பிறகு மருமகள் ஒரு தொல்லையும் இல்லாமல் புருஷனுடன் சுகமாய் வாழ்ந்து வந்தாள்.  

ஆனால் அவ்வப்போது மகன் மட்டும்,  நீ போய் திரும்பியது மாதிரி அம்மாவும் மேலோகத்தில் இருந்து இன்னும் திரும்பவில்லை என்று குறைபட்டுக் கொண்டான்.  

''மாமா விட்டாதானே  மாமி திரும்பி வர முடியும் என்றாள்  அந்த பலே துணிச்சலான மருமகள்.


No comments:

Post a Comment