அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையில் நேர்ந்த இன்னல்கள்
அண்ணல் அம்பேத்கரின் அன்னை மறைவு
அம்பேத்கரின் ஆறாவது வயது. அவருடைய பிஞ்சு உள்ளத்தில் ஆறாத கவலைப்புண்ணாய் முத்திரை பதித்தது.
அவருடைய முன்னறி தெய்வமான அன்னை பீமாபாய் ஐவரையும் உத்தம கணவனையும் விட்டுப் பிரிந்தாள். அதாவது சில நாள்கள் நலிவுற்றிருந்து பிரிந்தாள்.
ராணுவ பள்ளி தலைமையாசிரியராருந்து ஓய்வு பெற்ற சக்பாலுக்கு பீமாபாய் மறைவு பேரிடியாக அமைந்தது.
கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்து மிகவும் கவலையுற்றார் சக்பால்.
அப்போது....
சக்பாலின் தங்கையான மீராபாய் தானே முன்வந்து ஐந்து குழந்தைகளையும் காக்கும் பொறுப்பை ஏற்றார். எல்லாரையும் ஒரு தடவை உற்று நோக்கினார் தேவானந்தன்.
எல்லாருடைய முகங்களிலும் சோகம் அடர் இருளாய் கப்பியிருந்தது.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற வாசகத்தின் பொருள் அங்கே அந்த கள்ளமற்ற முகங்களில் முழுமையாய் முளைத்து இருந்தது.
அயோ அம்பேத்கரோ கடைக்குட்டி பாவம் அவர் ஆறு வயதிலேயே மாதாவை பறிகொடுத்து பரிதவித்து கண்களில் முத்துக்கள் தத்தளிக்க கூறினாள் கோமதி.
''ஐயோ அற்புத செல்வரான அம்பேத்கருக்கு சிறிய வயதில் அப்படி நேர்ந்து இருக்கக்கூடாது''- மூக்கை உறிஞ்சினான் குமார்.
ஐயா நீங்கள் அம்பேத்கரின் அழகு முகத்தை சற்று முன் எங்கள் முன் நிறுத்தினீர்கள். அப்படிப்பட்ட குழந்தையாகிய அவர், பெற்ற தாயைப் பறிகொடுத்து எவ்வாறு எல்லாம் துடித்து இருப்பார். கேவ தொடங்கினாள் சுந்தரி.
அண்ணல் அம்பேத்கரை காத்தல்
குழந்தைகளே, அவருடைய அத்தை, சகோதரிகள், அண்ணன்கள் எல்லாரும் தாயினும் சாலப் பரிந்து அவரை தலை மீது தூக்கி வைத்து கவனித்தனர். தாயின் பிரிவு அவரை எந்த சூழலிலும் தாக்காது காத்தனர்.
பள்ளியில் அம்பேத்கர் அனுபவித்த கொடுமைகள்
சதாராவில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து அம்பேத்கர் அங்கும் உயர்நிலைப் பள்ளியிலும் எத்தனையோ கொடுமைகளை அனுபவித்தார். பிஞ்சு உள்ளத்தில் அந்த இழிவான நிகழ்ச்சிகள் தஞ்சம் புகுந்தன. அதனால்தான் பின்னொரு நாளில் அவர் தாழ்த்தப்பட்டோரின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்தார். சதாரா என்னும் ஊர் அவருடைய உடல் உறுப்புகளில் ஒன்றாய் இணைந்து எத்தனையோ இன்னல்களை ஏற்றது.
தீண்டாமை சாதி வெறி எல்லாம் அவருடைய காலத்தில் தலைவிரித்து ஆடிருக்குமா? ஐயா, உசேன் கேட்டான்.
இப்போதே தீண்டாமை சாதி வெறி, கொலை என்று ஏராளமாய் இருக்கிறது. அப்போது எப்படி எப்படியோ அல்லவா இருந்திருக்கும்? மரிய ஜோசப் முழங்கினான்.
அன்றைய சதாரா பள்ளி ஆசிரியர்களும் தனித்துவம் வாய்ந்த ஒரு அந்தணர் சாதியை சேர்ந்த ஆசிரியர் இருந்தார். அவர்தான் மாணவ மணிகளின் நோக்கினார் தேவானந்தன்.
அம்பேத்கர் ஷாயாதியின் குரல் இது.
அவர் தான் எழுத்து அறிவிக்கும் இறைவனாய் அப்போது பீம்ராவின் மனத்தைக் கவர்ந்தார். இறைவனின் படைப்பில் எல்லோரும் ஒன்றே.
அதனால் ஆசிரியர் அம்பேத்கர் இறைவனை தெரிந்தார் பீம்ராவிர்க்கு. என்றார் தேவானந்தன்.
பீம்ராவின் வயிற்றுக்கு சோறிட்டனர். பீம்ராவின் வீட்டார். பின்னால் வாழப்போகும் வாழ்க்கைப் பல்லோரையும் வாழவிக்கப் பாடுபடும் மேன்மைக்கு அறிவுச்சோறிட்டார் அண்ணல் அம்பேத்கர்.
கடந்த மூன்று மாதங்களில் இந்த அளவுக்கு அவர்களால் சொல்ல முடிகிறது சிந்திக்க முடிந்திருக்கிறது என்பதை நேருக்கு நேர் உணர்ந்து மகிழ்ந்து போனார். நெகிழ்ந்து போனார். இளங்கோவை தட்டிக் கொடுத்தார்.
அவன் மட்டுமல்ல, கோமதி, சுந்தரி, இளங்கோ, வடிவேலு, மரிய ஜோசப், ஷியாதி, கீதாலட்சுமி, ஆரோக்கியமேரி,குமாரு, ஆதிராஜா சுதா ஆகியோர் அவ்வப்போது உச்சிமோந்து உயர்த்துவார் அவர்.
பாராட்டு ஒருவரை பரபரப்பாய் செயலாற்றத்தூண்டும். மேலும் உயர் நிலையை எய்த உற்ற சமயங்கள் எல்லாம் உதவும்.
உணர்ந்திருந்தார் தேவானந்தன்.
ராம்ஜி மாவோஜி சக்பால் ராணுவப் பள்ளி தலைமையாசிரியர் ஓய்வுக்குப் பின்னர் குடும்பத்திற்கு தேவையான செலவினத்தை சரி செய்ய என்ன செய்வது என்று சிந்தித்தார். வேலைக்கு மனு செய்தார். சதாராவில் இருந்து வெகுதூரத்தில் இருந்து கோரேகான் என்ற ஊரில் வேலை கிடைத்தது. கேஷியர் வேலை அதாவது கணக்காயர் வேலை. புறப்பட்டார். குழந்தைகளை தன் தங்கை மீராபாயிடம் ஒப்படைத்தப்போது..
ஐவரும் அப்பாவை சூழ்ந்து அழுதனர். அம்பேத்கர் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கலங்க வில்லை. மாறாக அப்பாவின் மீது பதித்து விழிகளை புதுப்பித்தார். அத்தை மீராவின் மீது பதித்தார். மாறி மாறி இது நிகழ்ந்தது.
கடைசியாக வீட்டைவிட்டு வெளியேறும்போது அம்பேத்கரை தூக்கி தன் தோள் மீது உட்கார வைத்துக்கொண்டார் சக்பால்.
பலராம் கடிதம் எழுதுகிறேன். அத்தையிடம் சொல்லிவிட்டு கோடை விடுமுறையில் கோரேகான் வாருங்கள். நீயும் தம்பியும் என்ன மகிழ்ச்சி தானே என்று சிரித்தவாறு விடைபெற்றார்.
அவன் மட்டுமல்ல, கோமதி, சுந்தரி, இளங்கோ, வடிவேலு, மரிய ஜோசப், ஷியாதி, கீதாலட்சுமி, ஆரோக்கியமேரி,குமாரு, ஆதிராஜா சுதா ஆகியோர் அவ்வப்போது உச்சிமோந்து உயர்த்துவார் அவர்.
பாராட்டு ஒருவரை பரபரப்பாய் செயலாற்றத்தூண்டும். மேலும் உயர் நிலையை எய்த உற்ற சமயங்கள் எல்லாம் உதவும்.
உணர்ந்திருந்தார் தேவானந்தன்.
ராம்ஜி மாவோஜி சக்பால் ராணுவப் பள்ளி தலைமையாசிரியர் ஓய்வுக்குப் பின்னர் குடும்பத்திற்கு தேவையான செலவினத்தை சரி செய்ய என்ன செய்வது என்று சிந்தித்தார். வேலைக்கு மனு செய்தார். சதாராவில் இருந்து வெகுதூரத்தில் இருந்து கோரேகான் என்ற ஊரில் வேலை கிடைத்தது. கேஷியர் வேலை அதாவது கணக்காயர் வேலை. புறப்பட்டார். குழந்தைகளை தன் தங்கை மீராபாயிடம் ஒப்படைத்தப்போது..
ஐவரும் அப்பாவை சூழ்ந்து அழுதனர். அம்பேத்கர் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கலங்க வில்லை. மாறாக அப்பாவின் மீது பதித்து விழிகளை புதுப்பித்தார். அத்தை மீராவின் மீது பதித்தார். மாறி மாறி இது நிகழ்ந்தது.
கடைசியாக வீட்டைவிட்டு வெளியேறும்போது அம்பேத்கரை தூக்கி தன் தோள் மீது உட்கார வைத்துக்கொண்டார் சக்பால்.
பலராம் கடிதம் எழுதுகிறேன். அத்தையிடம் சொல்லிவிட்டு கோடை விடுமுறையில் கோரேகான் வாருங்கள். நீயும் தம்பியும் என்ன மகிழ்ச்சி தானே என்று சிரித்தவாறு விடைபெற்றார்.
''கோணிப் பையை தூக்கி சென்று வகுப்பறையில் ஒதுக்குப்புறத்தில் போட்டு அதன்மீது உட்கார்ந்து பாடம் கவனித்ததென்பதை பலராம் ஜீரணித்து விட்டிருந்தார். ஆனால் பீம்ராவால் ஜீரணிக்க முடியவில்லை.
அவருக்கு மனம் நொந்தது. வெந்தது. ஆசிரியர் அவருக்கும் அவருடைய சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் பாடத்தை நேரடியாக கற்பிக்காதது மேலும் மனத்தை அலைக்களித்தது.
இன்னொரு நிகழ்ச்சியும் ஒரு நாள் நடந்தது.
பானைத் தண்ணீர்
பீம்ராவிற்கு தண்ணீர் தேவை. வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்தது பானைத் தண்ணீர். அது அவருடைய கண்களில் பட்டது. எழுந்தார். ஆசிரியரைப் பார்த்து வலது கையின் நான்கு விரல்களையும் உள்ளங்கைக்குள் அடக்கி பெருவிரலை மட்டும் உதடுகளுக்கு நேராக நீட்டி காண்பித்து "தண்ணீர்" என்றார்.
உயர்ஜாதி பிள்ளைகளை பார்த்தார் ஆசிரியர், பீம்ராவும், அவரைப் போன்ற மகார் சாதி பிள்ளைகளும் ஆசிரியரை பார்த்தனர். ஆசிரியரையும் மகார் ஜாதி பிள்ளைகளையும் உயர் சாதிப் பிள்ளைகள் முறைத்தனர்.
ஆசிரியர், "பீம்ராவ்" நீ தண்ணீர் பானை அருகில் போகக்கூடாது. பானையை தொடக்கூடாது. இதோ இவர்கள் உனக்கு.......... ஆசிரியரின் தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் அடைத்தன.
உயர்ஜாதி பிள்ளைகளை பார்த்தார் பீம்ராவ். அவரைப் போலவே சின்னஞ் சிறுசுகள் பச்சை மண் உருண்டைகள். சிற்பி செதுக்காத குட்டிப் பொற்சிலைகள்.
பீம்ராவின் தாகம்
அந்த பிள்ளைகளும் பீம்ராவையேப் பார்த்தனர். தாகம் பீம்ராவின் தொண்டையை அடைத்தது. அப்போது அவரை போன்ற ஒரு உயர்சாதி சிறுவன் வகையில் டம்ளரில் தண்ணீரைக் கொண்டு இடக்கையில் தயாராய் இருந்த ஒரு புனலை பீம் வாய்க்கு அருகில் கொண்டு சென்றான். வாயைத் திறக்கச் சொன்னான். பீம்ராவ் புனல் வழியே தண்ணீரை ஊற்றினான். குடித்தார். பீம்ராவ் இரண்டு மடக்குகள் குடிக்கவில்லை. அவர் தொண்டைக்குள் நெருடல். வயிற்றுக்குள் குமட்டல். பாதாதிகேசம் வேலமர முட்கள் குத்தி கிழிப்பது போல் இம்சை பீறிட்டது. அவமானத்தால் தக்கம் தண்ணீருடன் அவருடைய ஒரே விழிகளில் இருந்து வடிந்த கண்ணீரும் வாய்வழி சென்றது. தொடர முடியாமல் தவித்தார் தேவானந்தன்.
மாணவர்களின் துக்கம்
அய்யா அய்யா மேலும் விளக்க இயலாமல் துக்கித்தாள் கோமதி.
ஐயா அது எனக்கு நடந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நீங்கள் சொல்ல சொல்ல என்றான்மரிய ஜோசப்.
பச்சை மரத்தில் அறையப்பட்ட ஆணிகளாய் அந்த நிகழ்ச்சிகள் பீம்ராவின் மனதில் நிலைத்தன. அண்ணன் பலராமனிடம் அத்தை மீராபாயிடமும் அண்ணன் ஆனந்தராவிடமும் மஞ்சுளா துளசி ஆகியோரிடமும் தனக்கு நேர்ந்ததை சொன்னார். வாய்விட்டு அழுதார். குடும்பமே அவரைத் தேற்றியது. அவருடைய தூக்கத்தை ஆற்றியது. நிறுத்திய தேவானந்தன் எல்லாரும் ஒரு நிமிடம் கவனித்தார்.
ஒவ்வொருவருடைய முகங்களிலும் தோன்றியிருந்த குறிப்புகளை கூர்ந்தார்.
அந்த வயதிலேயே நேர்ந்தகதிகள், அவமானத்தையும், வேதனையும் துன்பத்தையும் தந்து அவரை வருத்தத்தில் முக்கி எடுத்தன. பீம்ராவை மிகவும் பாதித்தது என்றால் இந்த வயது குழந்தைகளாகிய இவர்களை எவ்வளவு பாதிக்கும் கேட்க கேட்க.
ஐயா, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் கூறினாரே. அதனுடைய கருத்து மகாராஷ்டிரா உயர்சாதி மக்களுக்கு தெரியாதா? ஆதிராஜ் பவ்யத்துடன் கேட்டான். வாய்விட்டு சிரித்தார் தேவானந்தன்.
அருமைக் குழந்தைகளே, உங்களுக்கு பாரதி எப்படி எல்லாம் அறிமுகமாகியிருக்கிறார். உங்களைப் போன்று கிராமத்துக் குழந்தைகள் மலிந்த நம் இந்திய திரு நாட்டின் ஒருமைப்பாடு ஏனோ அன்று மட்டுமல்ல. இன்றும் கூட மிகச் சரியாகக் காகாப்படவில்லை. சாதிமத பேதங்கள் நம்மில் நீக்கப்படவில்லை. பொருள் பொதிந்த பார்வையில் எல்லாரையும் தேவானந்தன்.
அண்ணல் அம்பேத்கர் அனுபவித்த கொடுமைகள்
ஐயா அண்ணல் அம்பேத்கர் ஐந்து வயதிலும் ஆறு வயதிலும் அனுபவித்த கொடுமைகளை கேட்கும் போது எங்களுக்கே இப்படி கொதிக்கிறதே. அவருக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்? தேவானந்தனையே பார்த்தான் இளங்கோ.
அவர் சாதாரண சிறுவனாக இருந்தால் கூட பரவாயில்லை. அவ்வளவாய் எதுவும் அவருக்கு உறைத்திருக்காது.
சுந்தரி சொல்வது போல அவர் அபூர்வ சிறுவன் ஆயிற்றே என்று குறுக்கிட்டாள் கோமதி.
அதனால்தான் அந்த வயதிலேயே அவருக்கு சகிப்புத்தன்மை கைவந்திருக்கிறது. இல்லை என்றால் இவ்வுலகம் உயர்த்தும் சுயமரியாதைச் செம்மலாய் மலர்ந்து இருப்பாரா? என்றார் தேவானந்தன்.
அப்போது பக்கத்து ஊரான அரியலூர் இருந்து ஐந்தாறு பேர் பேர் அவரை தேடி வந்தனர்.
வணங்கினர்
எழுந்து நின்று பதிலுக்கு வணங்கினார் அவர்.
பிள்ளைகள் எல்லோருக்கும் புரிந்தது. அவரிடம் ஏதோ பிரச்சனை தீர்வுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தேவானந்தனையும் பார்த்தனர். தேவானந்தனும் சிறுவர் சிறுமியை பார்த்தார்.
விடைப்பெற்ற மாணவர்கள்
"சென்று வாருங்கள் குழந்தைகளே" இன்று அம்பேத்கர் குறித்து அறிந்து அவற்றை விட நாளைக்கு சற்று அதிகமாக அறிந்து கொள்ளப் போகிறீர்கள். என்று இரு கரங்களையும் கூப்பினார்.
ஐயா நன்றி. இன்று இரவு வரை தாங்கள் இதுவரை சொன்ன அண்ணல் அம்பேத்கர் சந்தித்த சிறுவயது இன்னல்களை அசை போடுவோம். படியபடிய சீவிய தலையை தடவிக் கொண்டாள் ஆரோக்கியமேரி.
நாளை விடுமுறை. அதனால் காலையில் வருகிறோம் ஐயா. ஒரே நேரத்தில் மாடப் புறாக்கள் கூண்டில் இருந்து வெளிப்படுவது போல் எல்லாரும் எழுந்தனர். கலைந்தனர்.
பிரச்சனையை சுமந்து வந்தவர்கள், மாணவ மணிகளின் பாசமும் பரிவும் கொண்டிருக்கும் தேவானந்தனையே மொய்த்தனர்.
No comments:
Post a Comment