ஒருவருடைய ஐம்பதாவது வயதில் பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் நேரத்தை எவ்வாறு செலவிட வேண்டும்?
அந்த வழிகளில் சேர்க்கப்படும் பொருட்களும் பணமும் நிலைத்து நிற்கா. வீணாக நேரத்தை செலவிட்டால் எதிர்காலத்தில் வருந்த வேண்டிய நிலை ஏற்படும். தன் மீது நம்பிக்கை இல்லாது தன்னையே குறை கூறுபவர்கள் எப்படி பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டு பொருள் ஈட்ட முடியும்?
தன்னம்பிக்கை
நம் வாழ்வின் நம்பிக்கை நமது வாழ்க்கையின் திசை காட்டி. திருப்புமுனை. காலத்தை வீணாக்கி விட்டோமே என்று கலங்கவேண்டாம். போனது போகட்டும். இனி வரும் காலத்தில் உறுதியுடனும் துணிச்சலுடனும் செயல்பட்டால் வெற்றி நம் பக்கம்.
முன்னால் போகிறவன் பள்ளத்தில் வீழ்வது பின்னால் வருகிறவனுக்கு தீவட்டிப் பிடித்தார் போல என்பது பழமொழி.
வீழ்ந்துதான் பள்ளம் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தீயை விரலால் தாெட்டுதான் சுடும் என்று புரிந்து கொள்ள வேண்டுமா?
மன உறுதி
பல லட்ச ரூபாய் சொத்துக்களை வைத்திருந்தவர்கள் எல்லாவற்றையும் விட்டு தெருவில் நிற்பதை பார்த்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? ஒருநாளும் ஊதாரியாக வாழக்கூடாது. கவர்ச்சிக்கு ஆட்பட்டு கண்டப் பொருளை வாங்கக்கூடாது. தேவையற்ற பொருட்களை வேண்டாம் என்று கருதக் கூடிய மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பணத்தில் மட்டுமல்ல நேரத்தை செலவழிப்பதிலும் சக்தியை செலவழிப்பதிலும் நாம் சிக்கனமாய் வாழ்ந்து காட்ட வேண்டும்.
சிக்கனத்தின் அவசியம்
உதாரணத்திற்கு இன்று சமையலுக்கு பயன்படும் கேஸ் அடுப்பை எடுத்துக்கொள்வோம். விலைவாசி விஷம் போல் ஏறி வரும் இக்காலத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கேஸ் சிலிண்டர் உள்ளது. அதை சிக்கனமாக செலவிட்டால் அதிக நாட்கள் பயன்படுத்தலாம்.
இதற்கு உரிய வழிகள் யாவை?
வேண்டிய பொருட்களை தயாராக எடுத்துக் கொண்டு வைத்துவிட்டு பின் சமையலை ஆரம்பிக்க வேண்டியது. அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு பொருட்களை தேடக்கூடாது. பிரஷர் குக்கரில் சமைத்தால் 30 சதவீத எரிபொருள் மிச்சப்படும். இதில் ஒரே சமயத்தில் அரிசி பருப்பு காய்கறி ஆகியவற்றை வேக வைக்கலாம்.
எந்த பொருளும் கொதிக்க ஆரம்பித்த உடனே தீயை குறைத்துக் கொள்ளலாம் இதனால் 5% மிச்சமாகும். கொதித்துக் கொண்டிருக்க குறைந்த வெப்பம் எப்போதும் பொருள்களை வேகவைக்க அளவாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். உயரமாய் இருப்பதை விட அகலமாக இருக்கும் பாத்திரத்தை உபயோகிப்பதால் எரிபொருள் செலவு குறையும். பாத்திரம் 10 அங்குல அகலத்தில் இருப்பது நல்லது. எல்லாரும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் உணவை மீண்டும் சூடு படுத்த நேரம் நேரா.
சிக்கனமான வாழ்க்கை
பர்ணல் சிறியதாக இருந்தால் எரிபொருள் சிக்கனம். காய்கறியை மூடிய பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். மற்ற தாவரங்கள் உலர்ந்து விடலாம் ஆனால் புல்லோ எந்த காலத்திலும் அழிவின்றி பசுமையாய் இருக்கும். தோற்றத்தில் சிறிய புல்லைப்போல் போல் நாம் சிக்கனமாய் வாழ வேண்டும். பழக்கம் என்பது சிறந்த வேலைக்காரன். அதே சமயத்தில் அது மட்டமான எஜமான் ஆகும் என்கிறது ஒரு பழமொழி.
ரூபாய் நோட்டுகள் ஒலியை உண்டாக்காது. சில்லறைகள் தான் ஒலி உண்டாகும். சில்லறையை சிக்கனமாக சேர்த்து வந்தால் ஒலி உண்டாகாத ரூபாய் நோட்டுகள் நம்மை வந்து சேரும்.
சிறிய கடன் ஒரு கடன்காரனை உருவாக்கும். பெரிய கடன் ஒரு பகைவனை உருவாக்கும் என்கிறது பழமொழி. இம்மொழியை நாம் மறவாது நினைவில் கொள்ளவேண்டும்.
சேமிக்கும் பழக்கம்
சேமிக்கும் பெண்மணி தேசத்தின் கண்மணி. ஒரு பொருளிடம் ஆசை உண்டாகி விட்டால் அதை தவறான வழிகளில் அடைய முயல்கிறோம். இது முறையற்றது. நிறைவேறாத ஆசைகளின் உருவங்கள்தான் துக்கமும் கோபமும். நமது ஆசை நிறைவேறுவதற்கு தடையாக இருந்தவர்கள் நம்மை விட வலிமை கொண்டவனாக இருந்தால் அவரிடம் கோபத்தைக் காட்டி விடுகிறோம்.
அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவராக இருந்துவிட்டால் அவர்கள் மீது கோபம் கொள்ள முடியாமல் நமக்குள்ளே தூக்கப்பட்டு கொண்டு அழுகிறோம். தேவை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்தி கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு மனசாந்தி குறையும். திருப்தி குறையும். நிறைவு மனதில்தான் இருக்கிறது. இதை உணர்ந்து அவரவர் கடமைகளை செய்து கொண்டு எளிமையாக இருக்கவேண்டும்.
ஒருவர் பணக்காரர் ஆக ஆசைப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவர் ஆசைகளில் நியாயம் இருக்க வேண்டும். அவை பிறர் உரிமைகளை பாதிக்காதிருக்க வேண்டும். இவற்றில் உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் ஆசைகள் மனதில் திடமாக வலுப்பெற்று லட்சியமாகும்.
வாழ்க்கையின் லட்சியம்
இதுவரை நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இனி நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம் அமையும். அன்றாட வாழ்வில் சிறியனவும் பெரியனவுமாக பல பிரச்சினைகள் நிறைந்து இருக்கின்றன.
ஒவ்வொரு பிரச்சினையையும் முறையோடு ஆராய்ந்து முடிவெடுப்பது ஒரு நல்ல மனபழக்கத்தை ஏற்படுத்தும். முடிவெடுக்கும் திறன் பயிற்சியால் பெறப்படுவது ஒழிய வரப்பிரசாதம் அல்ல. வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து நாம் நழுவ முயல்வது புத்திசாலித்தனம் அல்ல. அவற்றை நேருக்கு நேர் சந்திப்பது தான் புத்திசாலித்தனம்.
No comments:
Post a Comment