இந்தக் கழுதையிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் - தன்னம்பிக்கைத் தரும் கதை
மழை கிடையாது, தண்ணி கிடையாது விளைச்சல் எதுவுமே கிடையாது. அந்த ஊர் மக்கள் எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இந்த தம்பதியினர் உடைய நிலைமையும் இதேதான். எவ்வளவு நாள்தான் அப்படியே கஷ்டப்பட்டு இருக்க முடியும்? அதனால கொஞ்ச நாள் பார்த்து அந்த ஊரில் இருந்த குடும்பங்கள் எல்லாமே ஒன்னு ஒண்ணா பக்கத்து ஊருக்கு குடிபெயர்ந்து போக ஆரம்பிச்சாங்க. இந்த வயதானவருக்கு தன்னுடைய சொந்த ஊரை விட்டு வர எங்க போறது விருப்பமே இல்லை. எத்தனையோ தடவை அவருடைய மனைவி கேட்டும் போகாமல் அந்த ஊரிலேயே இருந்தார்.
கடைசில பார்த்தா அந்த ஊரில் இருந்த கடைசி குடும்பமும் காலி பண்ணிட்டாங்க. இதுக்கு மேல இங்கே இருந்தோம்னா என்று சொன்னால் சாப்பாட்டுக்கே வழியில்லாம செத்துடடுவோம், அப்படின்னு நினைச்சிட்டு இந்த தம்பதியினரும் அந்த ஊரை விட்டு கிளம்பி போறதுக்கு முடிவு பண்ணினாங்க. தன்னுடைய தட்டுமுட்டு சாமான்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஒரு கழுதை மேல் ஏற்றி வைத்து அந்த ஊரில் இருந்து பக்கத்து ஊருக்கு போக ஆரம்பிச்சாங்க.
போற வழி பார்த்திங்கன்னா ஒரு வனாந்தரம். நிழலுக்கு மரங்கள் இருக்காது. தண்ணி குடிக்க நீர் நிலைகள் இருக்காது. புழுதியும் மண்ணும் மட்டும் தான் இருக்கும். அத கடந்து போக வேண்டி அந்த ஊருக்கு போறதுக்கு மூன்று நாளாகும். இந்த வயதான தம்பதியினர் அந்த மூன்று நாளும் நடந்து போகணும் அதனால அந்த முழு நாளைக்கு தேவையான உணவை மட்டும் எடுத்து வைத்துவிட்டு அந்த நெலத்துல தள்ளாடி தள்ளாடி நடந்து போறாங்க. அந்த கழுதையை இவங்க கூட நடந்து போயிட்டு இருக்கு. இப்படி போயிட்டே இருக்கும் போது திடீரென கழுதை ஒரு கல் இடறி பக்கத்துல இருந்த குழிக்குள் விழுந்துருச்சி. பயங்கரமான ஒரு சத்தம் கேட்குது. அந்த சத்தம் கேட்டவுடனே அந்த வயதானவர் பதறிப்போய் அந்த குழியை பார்க்கிறாரு. ஒரு பத்தடி இருக்கும் அந்த கூறி அந்த குழிக்குள் நின்னுகிட்டு பரிதாபமாக வர பாக்குது அந்தக் கழுதை.
அதை பார்த்ததுமே அவருக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. குனிந்து கை கொடுத்து அந்த கழுதையை மேல எடுக்க முடியுமா? அப்படினு முயற்சி பண்றாரு. எடுக்க முடியல. ஒரு புடவை எடுத்துக் கீழே போடுறாங்க. அந்தப் உடனே அந்த கழுதையும் வாயை வைத்து கவ்வி பிடிச்சி இருக்கு. ஆனா அதை வச்சே அவரது மேலே இருக்க முடியல. கொஞ்ச நேரம் போராடி பாக்குறாரு சாயங்கால நேரம் ஆயிடுச்சு. உடனே அவருடைய மனைவி அவரை பார்த்து சொல்றாங்க.
"இதுக்கு மேல நம்ம இந்த இடத்துல நின்னு போராடிக் கொண்டே இருந்தோம் என்று சொன்னா நம்ம போறதுக்கு இன்னும் ஒருநாள் அதிகமாயிடும் அப்படி அதிகமான நம்மகிட்ட சாப்பிடறதுக்கு சாப்பாடு கிடையாது சாப்பாடு இல்லாமல் வயசான நம்ம ரெண்டு பேராலும் சமாளிக்க முடியாது. இந்தக் கழுதையை நாம காப்பாத்தனுமனு நெனச்சோம்னா நம்ம ரெண்டு பேருடைய உயிரும் இந்த வனாந்தரத்திலே போயிடும். இதுக்கு மேல இந்த கழுதை நம்மளால காப்பாத்த முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. அதனால ஒன்னு பண்ணுங்க இந்த கழுதை இங்கே விட்டுருங்க. நம்ம ரெண்டு பேரும் போய் விடலாம்" என்று சொல்றாங்க.
அந்த வயதானவருக்கு மனசே வரல. ஆனாலும் தன்னுடைய மனைவி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று தெரிஞ்சிக்கிட்டு அந்த குழியிலேயே கழுதை விட்டுட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி போறாங்க.
தன்னை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு இருந்த கழுதைக்கு அவங்க போனதை பாத்துதான் கொஞ்சம் பயமா இருந்தது. ஆனாலும் சரி போயிட்டு திரும்பி வந்து நம்மள காப்பாத்துவாங்க அப்படின்னு நினைச்சு இருந்தது அந்தக் கழுதை.
ராத்திரி பூரா இப்படியே போயிருச்சு அடுத்த நாள் காலையில் அதனை யாராவது காப்பாற்ற வர வாங்க அப்படின்னு கழுதை பார்த்துட்டே இருக்கு யாரும் வரல. ஆனா அதுக்கு பதிலா அந்த மத்தியானத்தில் பயங்கரமான ஒரு புயல் காத்து வீசுது. அந்த புயல் காத்துல பக்கத்தில் கிடந்த மண்ணு, புழுதி எல்லாமே அந்த குழிக்குள் வந்து விழுது.
குழிக்குள்ள விழுதுன்னா அந்த கழுதை மேல விழும் இல்லையா? தம் மேல மணலா விழ விழ அந்த கழுதைக்கு ஒரே பயமா இருக்கு. கண்ணன் நல்ல இருக்க மூடிக்குது. கண்ணுக்குள்ளயும், காதுக்குள்ளயும் மணல் போயிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய தலை பயங்கரமா உதறி உதறி அதன் மேல விழுந்து மண்ணெல்லாம் அது கால் பக்கத்தில் போய் விழுந்து கிடக்குது.
கால சுத்தி ஒரு அடிக்கு மண் விழுந்ததும் அந்த கழுதை என்ன பண்ணுது, தன்னுடைய காலையும் உதறிட்டு அந்த மண் மேல தன்னுடைய காலடியை எடுத்து வைக்குது. மறுபடியும் மண் விழுது. இத ஒதறுது. கீழ் மண் சேறுது. அந்த மண்மேல தன்னுடைய பாதத்தை எடுத்து வைக்குது.
இப்படி தான் மேல விழுந்த அந்த மண்ணை உதறி உதறித் தள்ளி காலடியை மேல எடுத்து வைத்து எடுத்து வைத்து அந்தக் கழுத அந்த குழியுடைய மேல் பகுதிக்கே வந்து சேர்ந்து உயிர் பிழைத்தது.
எந்தக் கழுதையை இதுக்கு மேல காப்பாற்ற முடியாது அப்படின்னு விட்டுட்டு போனாங்களோ அதே கழுத தம் மேல விழுந்த மண்ணையே தன்னுடைய அடித்தளமாக்கி உயிர்பொழச்சி வெளிய வந்தது.
இதே மாதிரி தான் உங்க வாழ்க்கைல தொடர்ச்சியான பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கலாம். உங்கள சேர்ந்த பலரும் அவ்வளுதான் முடிஞ்சதுன்னு உங்களை பார்த்து சொல்லியிருக்கலாம். நிறைய நேரங்களை அவமானமான வார்த்தைகளை உங்களை பார்த்து பேசி இருக்கலாம். ஆனால் யாரும் சொன்னாலும் எப்படி அந்த கழுதைதான் தன் மேல விழுந்து மண்ணை எல்லாம் உதறித் தள்ளிச்சோ அதே மாதிரி உங்க மேல விழற அந்த அவமானம் வார்த்தைகள் அத்தனையையும் உதறித் தள்ளுங்கள்.
அந்த அவமானங்களை அடித்தளம் ஆக்கி அதன் மேலேயே உங்களுடைய பாதத்தை எடுத்து வைங்க. எந்த ஒரு பிரச்சனைக்குமே ஒரு நாளைக்கு மேல வருத்தப்படாதீங்க. ஒரு நாளைக்கு மேல நீங்க வருத்தப்பட்டிங்கன்னா நீங்க அந்த பிரச்சனைக்கு அடிமை. ஒரே நாள்ல அந்த பிரச்சனை உதறி தள்ளிட்டு அடுத்த அடி நீங்க எடுத்து வச்சிங்க அப்படின்னு சொன்னா, அந்த பிரச்சனை உங்களுக்கு அடிமை.
அதுக்கு மேல எத்தனை பிரச்சனை வந்தாலும் நீங்க அத அடிச்சு தள்ளிட்டு போயிட்டேதான் இருப்பீங்க. அடிமையா இருக்கணுமா? இல்ல அந்த பிரச்சனையை அடிமைப்படுத்தனுமா அப்படிங்கறத நீங்கதான் முடிவு செய்யனும். பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் போது அடுத்த அடியை எடுத்து வையுங்கள். அந்தப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அது உங்க காலுக்குக் கீழ இருக்கும். வெற்றி நிச்சயம். பிரச்சினையில் வெற்றிப் பெற வாழ்த்துகிறேன். நன்றி.
No comments:
Post a Comment