கரும்பு சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 7, 2020

கரும்பு சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

கரும்பு சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?  

கரும்பு பொதுவா அந்தந்த சீசனில் கிடைக்கக்கூடிய உணவுகளுக்கும் தனிச்சிறப்பு உண்டு.  அந்த வகையில் இந்த சீசனில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான உணவு கரும்பு.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று இந்த கரும்பு.  

இந்தக் கரும்பில் என்னென்ன சத்துகள் இருக்கு அப்படின்னு பார்த்தீங்கனா? விட்டமின் சி கால்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து ரிபோஃப்ளேவின் மற்றும் ஏராளமான விட்டமின் மற்றும் மினரல் அடங்கியிருக்கு.  இவ்வளவு சத்துக்கள் கொண்ட கரும்பு நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது.  இன்றைக்கு அனைவரும் அவசியம் ஏன் கரும்பு சாப்பிடணும்?  அதனுடைய முக்கியத்துவம் என்ன?  யாரல்லாம் சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது?  என்பதை இந்தப் பதிவில் நாம் படிக்க இருக்கின்றோம்.

மிக மிக பயனுள்ள இந்தப் பதிவை நீங்கள் படிப்பது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் 

கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்.


1. வாய் துர்நாற்றம் நீங்கும்.  நிறைய பேர் பார்த்தோம்னா அவர்கள் பேசும்போது வாய் துர்நாற்றம் வீசும்.  இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் கரும்படை சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் மறையும். 

2. செரிமான பிரச்சனைகள் குணமாகும்.  செரிமான பிரச்சனைகளான அஜீரணம் குமட்டல்,  வயிறு உப்புசம் இதுபோன்ற பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கரும்பு சாப்பிட்டுவர இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் வயிற்றில் உள்ள அமிலத்தை சரிப்படுத்தும்.  செரிமானத்திற்கு தேவையான நொதியையும் சுரக்க உதவி செய்யும்.  இதன் மூலமாக செரிமான பிரச்சனைகள் குணமாகும். 

3. பற்களை வலுவாக்கும்.  கரும்பிலிருந்து கிடைக்கக்கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களுக்கு தேவையான வலிமையை கொடுத்து பற்களை வலுவாக்கும். சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் பற்சிதைவை தடுக்கும் மிகவும் உதவியாய் இருக்கிறது கரும்பு 

4.  சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கரும்பு.  குறிப்பாக சிறுநீரகத் தொற்று யூரினரி இன்பெக்சன் கற்கள் ஏற்படாமல் தடுக்க கூடியது.  கரும்பு இதில் இருக்கக்கூடிய தாதுச் சத்துக்கள் உடலின் நீர்ச்சத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும்.  இதன் மூலமாக சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி செய்கிறது.  அது மட்டுமில்லாமல் இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து சிறுநீரகத் தொற்று கிருமிகளையும் அழிக்க வல்லது. கரும்பு இதன் மூலமாக சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் இருக்கும். 

5. தொண்டைப்புண் குணமாகும். கரும்பினை கடித்து மென்று சாப்பிடும்போது கரும்புச்சாறும் உமிழ்  நீரும் சேர்ந்து தொண்டையில் உள்ள புண்களை ஆற்றுகிறது.  தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் கரும்பு மென்று சாப்பிட்டு வர மிகவும் நல்லது.  

6. இருதய  ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  கரும்பில் இருக்கக்கூடிய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இருதயம் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்.  அதோடு உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்பினையும் கரைத்து வெளியேற்றுகிறது கரும்பு.  இதன் மூலமாக உடல் எடை குறையும் மற்றும் கரும்பினை விரைவில் கடித்து சாப்பிடும் போது மன அழுத்தம் குறையும்.  இதன் மூலமாக இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். 


7. உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.  அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு உடனடியாக எனர்ஜியை கொடுத்து நரம்புகள் மற்றும் மூளை சுறுசுறுப்பாகிறது.  இதன் மூலமாக உடல் மட்டும் மனமும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.  இதுவரைக்கும் கரும்பின் நன்மைகள் என்ன என்பதைப் பார்த்தோம். 

எத்தனைதான் தான் கரும்பு மிகவும் நன்மை தரக் கூடியது என்றாலும் கூட ஒரு சில பேர் இந்தக் கரும்பைச்  சாப்பிடக் கூடாது.  அது யார் என்பதைப் பார்ப்போம். 

சர்க்கரை நோயாளிகள்  கொஞ்சமாக சாப்பிடலாம்.  கரும்பில் அதிக அளவு சர்க்கரை இருக்கிறது.  இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை மிக விரைவில் அதிகரிக்கும்.  

கர்ப்பிணிப் பெண்கள் வந்து இந்த காரணம் என்று சாப்பிடலாம் ஆனால் ஒரு சில பேருக்கு பாத்தீங்கன்னா கர்ப்ப காலங்களில் மட்டும் டயபெட்டிக் வந்து இருக்கும்.  இப்படிப்பட்டவர்கள் இந்தக்  வந்து சாப்பிட கூடாது.  

கரும்பை சாப்பிட்ட உடனே தண்ணி வந்து குடிக்க கூடாது.  கரும்பில் இருக்கக்கூடிய அதிகப்படியான சுண்ணாம்புச் சத்து வாயில்  ஒருவித எரிச்சல் உணர்வை ஏற்படுத்தி விடும்.  எனவே சாப்பிட்ட உடனே தண்ணி குடிக்க கூடாது.  

No comments:

Post a Comment