புருஷனுக்கு மூக்கணாங்கயிறு - மருமகளின் அசால்டான பிளான் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 28, 2020

புருஷனுக்கு மூக்கணாங்கயிறு - மருமகளின் அசால்டான பிளான்

புருஷனுக்கு மூக்கணாங்கயிறு  - மருமகளின் அசால்டான பிளான்


கொடூரமான புருஷன்


ஏதாவது காரணத்தினால் ஏதோ ஒரு காரணமும் இல்லாமல் ஏதோ சில சமயங்களில் கணவன் மனைவியை அடித்து விடுவது உண்டு.  பின்னர் அப்படி நடந்து கொண்டதற்காக வருந்தும் கணவர் உண்டு.  வருந்தாத கணவன்மார்களும்  உண்டு. 

இவன் இந்த இரு வகையில் எந்த வகையை சேர்ந்தவனுமில்லை.  கணவனிடம் அடிபடுவதுக்கும் கணவன் அடித்து நொறுக்கப்படுவதற்கும்தான்   மனைவி என்பதே இவன் கொள்கை.  

இன்னும் இவனுக்கு மணமாகவில்லை. 

ஆனால் தனக்கு மணம் ஆகும் என்கிற நம்பிக்கையும் இல்லாமல் இல்லை. இவனையும் ஒருத்தி மனப்பாளாம்.


ஈச்சமார்


அவளை ஈச்சமாராலே விளாசித் தள்ளுவானாம்.  ஊரார் உடன் இப்படி பெருமை பேசியதுடன் நிற்கவில்லை இவன்.  வரப்போகும் மனைவியை மொத்துவதற்காகவே ஈச்சமார் சேர்ப்பதிலும் ஈடுபட்டிருந்தான்.  இவனுக்கு பைத்தியமா?  கிறுக்கா? என்று ஊரார் சிரித்தனர். 

இவனிடம் ஈச்சமாாரால்  அடி வாங்குவதுக்கென்றே   இவனுக்கு எந்தப் பெற்றோராவது பெண் கொடுப்பார்களா?  அவனுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை.  அவனைப் பெற்றவள் வேறொரு ஊரில் இவனுக்கு பெண் பார்க்கப் புறப்பட்டாள்.

மகனுக்குத் திருமணம்


அந்த ஊரில் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்த தகப்பன் ஒருவனைக் கண்டு பேசினாள்.  ஊருக்கு புதியவள் வந்து பெண் கேட்கிறாளே?  மாப்பிள்ளையைப் பற்றி அந்த ஊருக்கு போய் நான்கு பேரிடம் விசாரிக்கலாம் என்று அந்த தகப்பனுக்கு தோன்றவில்லை.  

பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் விஷயத்தில் அநேகம் பேருக்கு இத்தனை அக்கறை இருப்பதில்லை.  சுமையாய் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்தால் போதும் என்கிற தவிப்பு இதற்கு காரணம்.  

திருமணம் நடந்தது. 

இவன் சொன்ன படியே தன் மனைவியை அடிக்கத்தான் போகிறான் என்று ஊரார் எதிர்பார்த்தனர்.  ஆனால் அவன் அவளை அடிக்க வில்லை.  ஊராரிடம் சொல்லியிருப்பது போல அவளை அடிக்க தான் வேண்டும் என்று அவனுக்கு மனதில் ஒரு எண்ணம் எழத்தான் செய்தது. 

ஆனால் பொண்டாட்டி வந்த புதுசு. புது மோகம். 

அவளை அடிக்க மணம் வர வில்லை.  ஆனாலும் ''அவள் தப்பு ஏதாவது செய்வா அப்ப ஈச்சமாராலே வெளாசிடறேன்''  என்று ஊராரிடம் சொல்லிக் கொண்டான். அந்த குடும்பத்தில் வாழ்க்கைப் பட்ட சில நாட்களிலேயே அவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது.  தலைமுழுகிட்டு வந்த மருமகளுக்கு மாமியார் பழைய சாதம் போட்டாள்.  மருமகளும் அதை சாப்பிட்டாள்.  

கன்னம் வலித்தல்


சற்று நேரத்திற்கெல்லாம் அத்தை எனக்கு கன்னம் வலிக்குது என்றாள் மருமகள்.  அடி போடி உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை.  கல்யாணம் ஆனா புதுசுலே பொழுது விடிஞ்சா எனக்குந்தான் ரெண்டு கன்னமும் வீங்கும்.  புது கல்யாண ஜோரு.  உங்க மாமனார் பொல்லாதவர்.  ஆனா இப்படி கன்னம் வலிக்குதுன்னு எங்க மாமியார் கிட்ட சொல்ல மாட்டேன்.  எனக்கு வெட்கம் என்றாள் மாமியார். 

அத்தை எனது கன்னத்தில் ஏதோ கட்டிக் கெளம்புறாப்புல  போல இருக்கு. வலிக்குது. அதை சொல்ல வந்தா நீங்க ஏதோ பேசறீங்க? இத பாருங்க என்று மருமகள் மாமியார் கையை பிடித்து தன் கன்னத்தை தடவி பார்க்க சொன்னாள். மருமகள் கன்னத்தில்  அப்போதுதான் கிளம்பியது போன்ற சின்னஞ்சிறு கட்டி ஒன்று தட்டுப்பட்டது. 

ஆமா கன்னத்துல ஏதோ வீக்கம் தெரியுது.  இதுல வேற எண்ணை தேச்சி முழுகி, போதா கொறைக்கு   பழையதும்  சாப்பிட்டிருக்கியே என்று மாமியார் வருந்தினாள். 

உடனே குளிர் போறுக்காதவள்  போல சேலையை இழுத்து போர்த்திக் கொண்டாள் மருமகள்.  வேதனை தாங்காமல் முனக தொடங்கினாள். நேரம் ஆக ஆக களைத்து வீக்கம் பெரிதாவதாக சொல்லி மாமியாரை தடவிப்பார்த்து சொல்லும்படி கேட்டாள்.  பொழுது போய்விட்டது.  புருஷன் வீடு திரும்பினான். 

மனைவி முனகியவாறு படுத்திருந்ததை பார்த்தான்.

வைத்தயர் வந்தார்


ஊரே உனக்கு பொண்ணு தர மாட்டேன்னாங்க.  யாரோ செய்த புண்ணியமோ உனக்கு பொஞ்சாதியா இவ  வந்து கிடைச்சா.  இப்படி படுத்து கிடக்கிறாளே? ஓடுடா வைத்தியனைக் கூட்டிட்டு வா என்று அழுது அரற்றினாள் தாய். 

புருஷன் பயந்து போனான்.  வைத்தியரும் வந்து பார்த்தார். மருந்து கொடுத்தார். பின்தொடர்ந்தது.  மருமகளுக்கு வியாதி குணமாக வில்லை.  எங்க அம்மாவுக்கு சொல்லி அனுப்புங்கள் என்று முனகினாள் அவள். 

பெண்ணின் தாயார்


அந்தப் பெண்ணின் தாயார் வந்தாள். மகளைப் பார்த்து அழுது புலம்பினாள். வெளியே போயிருந்த சம்பந்தி அம்மாவும் மருமகனும் வந்ததும் பெண்ணின் தாய் சொன்னாள்.   இந்தப் பக்கத்திலே ஐந்து ஆறு கல் தொலைவில் புதூர் இருக்குதில்ல,  அங்கே என்னோட அண்ணன் ஒருத்தர் இருக்காரு.  அவரைப் போய் கூட்டிட்டு வரேன்.  அவர் ஜோசியம் பார்ப்பார், மை போட்டுப் பார்ப்பார், மந்திரிசிசிக் கட்டுவாரு என்று கிளம்பினாள்  அந்த தாய். 

எப்படியோ,  யார் வேண்டுமானாலும் வரட்டும்.  மனைவி குணமடைந்து பிழைத்தால் போதும் என்றிருந்தது புருஷனுக்கு.  தாய்மாமன் வந்து சேர்ந்தார்.  சோழிகளை உருட்டி பார்த்தார்.  வெற்றிலை ஒன்றைக் கேட்டு வாங்கி அதில் மையை தடவி அதை உற்று உற்றுப் பார்த்தார்.  விழிகளை உருட்டி கணவனையும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தார். பின்னர் பேசலானார். 

தோஷம்



வேற ஒன்னும் இல்ல.  இது பொண்ணுக்கு அவங்க ஊர் சங்கிலி கருப்பன் தோசம் இருக்குன்னு தெரியுது.  

புருஷனும் மாமியாரும் பதறிப்போய் அதற்கு பரிகாரம் என்ன என்று சொல்லுங்களேன் என்று விசாரித்தார்கள்.  

ஒரு கலம் அரிசி படையல் போடனும் என்றார் அவர். 

போட்டு விடுவோம் என்றான் கனவன்.

புருஷன் பரிகாரம்


அந்த அரிசியை புருஷன்தான் இங்கிருந்து சுமந்து கொண்டு போகனும் என்றார் அவர்.  சொமக்கிறேன்  சொமக்கிறேன்  என்று முந்திக் கொண்டான் கணவன். 

அதுல முக்கியமான சங்கதி என்னன்னா உங்க குத்தி மூக்கணாங் கயிறு மாட்டணும்.  அந்த கயித்தே உங்க பெண்சாதி பிடிச்சுகிட்டு வரணும்.  தலையிலே அரிசி சொமையுடன் நீங்க முன்னாடி போகணும்னு  சாமி வாக்கு சொல்லுது என்றார் அவர். 

புருஷன் தயங்கினான். 

அப்படியே செய்யறேன்னு வேண்டிக்கடா வேறு ஏதாவது நேர்ந்து விட்டால் வம்பு வந்துரும் என்று மகனை வற்புறுத்தினாள் தாய். 

இதைத்தவிர பொண்ணு  உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றார் அவர். பொண்டாட்டி செத்து விடுவாளோ என்ற பயம்.  வேறு வழியில்லாததால் அப்படியே வேண்டிக்கொண்டான் புருஷன். 

அனறலிலிருந்து இரண்டொரு நாளில் மனைவியின் கன்னத்தில் வீக்கம் வடிய தொடங்கியது.  வீக்கம் வற்றி வருவதை மாமியாரை தடவிப் பார்க்கச் சொன்னாள். 

நிச்சயமாக இது சங்கிலி கருப்பன் தோஷம் தாண்டா.

இல்லேன்னா நீ வேண்டிக்கிட்டதும் இப்படி வீக்கம் குறையுமா?  என்று கேட்டுதங தாய்  பிரார்த்தனையை மகன்  நிறைவேற்ற வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டாள்.

பரிகாரத்தை நிறைவேற்றல்


மூக்கணாங் கயிறு மாற்றிக் கொண்டான்.  மூக்கணாங்கயிறு மனைவியின் கையில் கொடுத்தான்.  தலையில் அரிசி மூட்டையை தூக்கிக் கொண்டான்.  மூக்கை பிடித்தபடி மனைவி பின்னே வர கணவன் தலைச் சுமையுடன் முன்னே தொடங்கினாள்.  

உள்ளூர்க்காரர்கள் அனைவரும் அதை பார்த்து சிரித்தார்கள்.  மனைவி ஊருக்கு போய் சேர்ந்து சங்கிலி கருப்பன் கோயிலை அடைந்தனர்.  இவர்களுக்கு முன்னமேயே செய்தி அந்த ஊருக்கு தெரிந்திருந்ததால் ஊரே அந்த கோயிலில் கூடியிருந்தது. 

மனைவியின் தந்திரம்


மணமாகி புகுந்த வீடு போனதுமே தன்னை ஈச்சமாரால்  அடிப்பதே தன் கணவனின் லட்சியம் என்பது அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது.  உடனே அவளது மூளை சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கியது.  தலை முழுக ஆற்றுக்கு போனவள்  சிறியவையும்  பெரயவைகளுமாக கூழாங்கற்கள் சிலவற்றை மடியில் கட்டிக்கொண்டு வந்தாள்.  

முதலில் சிறிய கல்லொன்று வாயில் போட்டு கன்னத்திலே  ஒத்திக்கொண்டு மாமியாரிடம் கன்னத்தில் கட்டி என்று காட்டினாள்.  

பிறகு ஒன்றைவிட ஒன்று பெரிதாக இருந்த கூழாங்கற்களை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் அதனால் தான் பெரிதாகத் தெரிந்தது.  பார்க்க வந்த தன் தாயின் மூலம் தனது திட்டத்தை மாமனுக்கு சொல்லி அனுப்பி இருந்தாள். 

சங்கிலி கருப்பன் என்பதெல்லாம் வெறும் ஜோடனைகள். ஈச்சமாரால்  மனைவியை  அடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்த கணவனை மட்டும் தட்டும் மனைவியின் திட்டம் எழுத்துப் பிசகாமல் நிறைவேறி விட்டது.

புத்திசாலியான மனைவி


இப்போது ரகசியமாக தன் கணவனிடம் இதை சொல்லி இதை ஊர் அறியச் சொல்லட்டுமா என்று கேட்டாள்.  

வேண்டாம்,  வேண்டாம் உன்னை ஈச்சமாரால்  அடிக்க மாட்டேன். இது சத்தியம். என்று கணவன் அவளை கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டான்.  சங்கிலி கருப்பன் என்பதெல்லாம் மூட நம்பிக்கையாகத்தான் இருக்கட்டுமே.  அந்த மூட நம்பிக்கை கொண்டே புத்திசாலியான ஒரு மனைவி ஆணவம் பிடித்த கணவனுக்கு பாடம் கற்பித்திருக்கிறாளே!

No comments:

Post a Comment