சிக்கனமும் நேர்மையும் உடன் பிறவா சகோதரர்கள். தனக்கு மீறின வாழ்க்கை வாழ்ந்தால் எந்த மனிதனும் நேர்மையாக வாழ முடியாது. விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். வீண் ஆடம்பரத்திற்கு செலவழிப்பவர்கள் பகட்டுக்காக பளபளக்கும் பெற்று வாழ்க்கையை அடைவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பலர் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். உழைப்பார்கள். ஆனால் சம்பாதித்த பணத்தை எப்படி செலவழிப்பது? எவ்வாறு செலவழிப்பது? என்பவற்றையெல்லாம் அவர்கள் அறிவதில்லை.
இந்த நிமிஷத்தில் இந்த பொருளால் செயலால் ஏற்படும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் எனும் வெறியில் நாம் எதிர்காலத்தை மறந்து விடுகிறோம். அப்போதைக்கப்போது எழும் சில சபலங்களை நாம் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டு விட்டால் நம் எதிர்கால வாழ்வை, வளத்தை எவரும் கட்டுப்படுத்தவோ கட்டிப்போடவாே முடியாது.
தேவை இல்லாத பொருளை நாம் எவ்வளவு குறைவான பணத்தை கொடுத்து வாங்கி வந்தாலும், அது வீண் செலவு தான். ஒரு சிறு ஓட்டை பெரிய கப்பலை கவிழ்த்துவிடும் அல்லவா? அதனால் சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றி கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத பொருட்களை நாம் வாங்குவது நமது நாளைய தோல்விக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நலியச்செய்யும் மலிவுப் பொருள்கள்
கண்ணில் கண்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று விரும்புவோர் பாதி விலை குறைப்பு 50% தள்ளுபடி என்பன போன்ற விளம்பரங்களைப் பார்த்தால் போதும். உடனே அங்கு சென்று வாங்க தொடங்கிவிடுவார்கள். இன்றைய உலகில் பணம் தான் தெய்வம் என்று மதிக்கப்படுகிறது.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்
வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை நாம் வைத்திருக்க வேண்டும் தான். ஆனால் பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக நாம் ஆடம்பர வாழ்க்கை நடத்தலாமா? மலிவாக கிடைக்கின்றன என்று தேவையற்ற பொருட்களை வாங்கி தவிக்கலாமா?
சிலர் தம் இல்லாமையை எண்ணி வருந்துகின்றனர். சிலர் தம் தாழ்வு நிலைக்கு மற்றவர் மீது பழியை சுலபமாக சுமத்தி விடுவார்கள். நம் உயர்வு தாழ்வுக்கு நாமே தான் காரணம் என்பதை பலர் உணர்வதில்லை. அந்த நிமிட தேவைகளை அவசரமாக நிறைவு செய்து நாம் செலவிடும் பணம் நம்மை இழி நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. "வீண் விரயம் செய்யாதே... வீணாக தேவை ஏற்படாது" என்று ஒரு ஆங்கில பழமொழி.
ஒழுங்கே ஒரு செல்வம்.
ஒழுங்கு என்பது செல்வன் தானே? எந்த மனிதன் தனக்கு வரும் பணத்தை திட்டமிட்டு கணக்குடன் செலவழிக்கிறானோ அவனுடைய செல்வமும் இரட்டிப்பாகும்.
எவருக்கு எவர் அடிமை?
வருமானம் அதிகம் ஆகும் செலவு குறைவாகவும் இருக்க வேண்டும். எந்த பொருள் வாங்கினாலும் காசு கொடுத்து வாங்க வேண்டும். கடனுக்கு வாங்கவே கூடாது. வாங்கி கடனாளி ஆககூடாது. நாம் வாங்கிய பொருளுக்கு பணத்தை கொடுத்து விட்டாலே நம் பணக்காரர்கள் தான். எவருக்கும் ஒரு பைசா கடன் கொடுக்க வேண்டியதில்லை என்றாலே நம்மை எவரும் தாழ்வாக கருத மாட்டார்கள். ஒரு பெரும் பணக்காரனுக்கு ஒரு ரூபாய் கூட தாண்டாத நிலையில் வாழும் தொழிலாளியும் பிறர் கையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த பணக்காரனுக்கு சமமானவர்களே. அதே நேரத்தில் அந்தப் பணக்காரனை அண்டிப்பிழைக்கும் நிலையில் உள்ளவன் எவ்வளவு சுகத்துடன் வாழ்ந்தாலும் அவன் அந்த பணக்காரனுக்கு அடிமைதான்.
வரவிருக்கும் லாபத்தை எதிர்பார்த்து அது முன்னேயே அந்த தொகையை செலவிடுவது போன்ற முட்டாள்தனம் வேறில்லை. எது எப்படியாயினும் சரி நமது தினசரி வரவு செலவு கணக்கை நாம் தவறாது கவனிக்கவேண்டும். உழைப்பில்லாமல் செல்வம் இல்லை என்பதை நாம் மறக்கக்கூடாது.
எதையுமே கற்றறியாதாரும் எதையுமே சேர்க்காதவரும் தோல்விக்கான படிகளை தாங்களே அமைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதோடு உழைப்பும் சேர்ந்தால் தான் மனிதன் வெற்றி அடைய முடியும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நாம் அன்றாட வாழவில் சேர்த்து வைக்கும் பைசாக்கள் பல லட்சங்களை உருவாக்கும் சக்தி படைத்தவை.
கொடிது கொடிது தன் சக்திக்கு மீறின வாழ்க்கை. ஆடம்பர வாழ்வு நடத்திய குடும்பங்களும் அரசுகளும் நிலைபெற்று நின்றதில்லை.
ஒளவையார்என்ன சொல்கிறார்.
"ஆன முதலில் அதிகம் செலவானால்மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசைஎல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்நல்லார்க்கும் பொல்லனாம் நாடு"
இதைவிடவா ஆடம்பர வாழ்க்கையினால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அழகாக சொல்லி விட முடியும்? சிக்கனமாய் இருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போல் ஆகும் என்கிறார் ஒரு ஆங்கிலக் கவிஞன். எனவே சிக்கனமாக இருப்போம். பணத்தை சேமிப்போம். சந்தோசமாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம். நன்றி.
No comments:
Post a Comment