கடன் இல்லா நிம்மதியான வாழ்வுக்கு சில எளிய வழிகள்
நமது வருமானத்தில் ஒரு சதவீதமாவது மாதத்தின் கடைசி நாளில் நம் கையில் இருக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை நாம் கைக்கொள்ள வேண்டும். நமது வருமானத்தில் 20 சதவீதத்தை ஆவது நாம் சேமிக்க வேண்டும். குறைந்தபட்சம் பத்து சதவீதமாவது சேமிக்கவேண்டும். மாத வருமானத்தில் எடுக்கும் பணம் சேமிப்பதற்காக தான் இருக்க வேண்டும்.
கடன் வாங்கவே கூடாது.
நாம் செலவழிப்பதை சரியாக கணக்கு எழுதி தேவையற்ற நம் செலவு எது என்று கண்டுபிடிக்க வேண்டும். நமக்கு தேவையான பொருள்கள் எவை என்று ஒரு தனித் தாளில் பட்டியல் தயார் செய்து பிறகு கடைக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாமே நேரில் சென்று வாங்கி பழகிக்கொள்ளவேண்டும். வரவு செலவு திட்டம் ஒன்றை தயார் செய்து அதன்படி நடக்கவேண்டும். பிரபல ஆங்கில எழுத்தாளர் கோல்ட்ஸ்மித் பின்வருமாறு கூறியுள்ளார்.
"எனது அன்புள்ள நண்பரே. உங்கள் மகனுக்கு சிக்கனத்தில் சிறப்பை கற்றுக்கொடுங்கள். இந்த உபயோகமற்ற ஊர் சுற்றும் கோல்ட்ஸ்மித்தின் வாழ்க்கை அனுபவம் அவனுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். புத்தகங்களில் நான் படித்து தெரிந்து கொண்டது தாராளமாக செலவு செய்யத்தான். ஆனால் வாழ்க்கை எனக்கு கொடுத்த படிப்பினை வேறு. சிக்கனத்தின் அவசியம் தான் அது. பெரிய தத்துவ ஞானி போல நான் கண்டபடி செலவழித்தேன். என் வள்ளல் தன்மையைப் புகழ்ந்தவர்களைக் கண்டு கண்டு நான் மகிழ்ந்தேன். உள்ளவற்றை எல்லாம் அள்ளி விட்டு நான் உண்ட ஓட்டாண்டியாக நின்றநிலை அப்பப்பா.
உண்மையில் மனிதனுக்கு மகிழ்சி அளிக்கக்கூடிய நிலை எது? வறுமையுடன் போராடி கொண்டு அதை வெற்றி காண்பதுதான். ஏழடையாய் இருப்பது அவமானமல்ல. இலக்கியம் போல் வாழ்வும் ஒரு சிறந்த கலை தான். வாழ்க்கைக் கலை என்பது என்ன? நமக்கு கிட்டியிருக்கும் பொருள்களை திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான்.
மன மகிழ்ச்சி என்பது எளிதில் கிட்டாத ஒரு பொருளல்ல. அது பல சில ரத்தினங்கள் சேர்ந்து அழகுற அமைந்த நகையாகும். மகிழ்ச்சி என்பது நாம் நடந்து செல்லும் பாதையில் நாம் சந்திக்கும் சிறுசிறு நிகழ்ச்சிகள்தான். அவைதான் மனதுக்கு எவ்வளவு இதமாய் இருக்கின்றன ஓடிக்கொண்டிருக்கும் அவசரத்தில் இவற்றையெல்லாம் நாம் கவனிப்பதில்லை. அன்றாட கடமைகளை நாம் மிகவும் எளியமுறையில் செய்தாலே அது நம்மை வந்தடைந்துவிடும்.
நிகழ் காலத்தில் வாழ்ந்து கொண்டு, கடந்த காலத்தை நினைவில் கொண்டு எதிர்காலத்தில் வெற்றியை நோக்கி நிற்பதுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கைக்கு பணம் மட்டும் ஆதாரம் அல்ல. உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு, ரசிப்புத்தன்மை, சுவை, பண்பாடு ஆகிய யாவும் காரணந்தான். இவற்றுக்கெல்லாம் மேலாக பார்க்க விழிகளும் உணரும் இருதயம் வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஒரு பெரிய புனித வாழ்வு ஒளிந்து உள்ளது. அதை அவன் புரிந்துகொள்ளவேண்டும். எனவே கடன் இல்லா வாழ்வு வாழ இந்த எளிய வழிகளைப் பின்பற்றி நாமும் சந்தோஷமாக வாழலாம். நன்றி.
No comments:
Post a Comment