Tamil Motivational story for kids இரண்டு பானைகள் சிறுகதை
பக்கத்துல இருக்குற ஒரு குளத்துல இருந்து தன்னுடைய வீட்டுக்கு தண்ணி எடுத்துட்டு வருவதற்காக. ஒரு நீளமான தடிமனான கொச்சியில் ரெண்டு பக்கமும் கயிறுகளை கட்டி அந்தக் கயிறுகளை அந்த பானையைத் தொங்கவிட்டு அந்த குச்சியை தன்னுடைய தோள்ல வச்சிக்கிட்டு அந்த காலத்துல இருந்து தண்ணி எடுத்துட்டு தன்னுடைய வீடு வரைக்கும் அவர் சுமந்து நடந்து வருவார்.
கொஞ்ச நாள் இப்படியே போயிட்டு இருக்கு. அப்புறமா அந்த இரண்டு பானைகளை ஒரு பானையில் மட்டும் ஒரு சின்ன கீறல் விழுந்தது. கீறல் விழுந்ததினால குளத்தில் தண்ணீர் எடுக்கும் போது இரண்டு பானைகளையும் பார்த்தீங்கன்னா முழுக்க முழுக்க தண்ணி இருக்கும். வீட்டுக்கு கொண்டுவந்து வைக்கும்போது பாத்தீங்கனா அந்த கீறல் விழுந்த பானையில கால் பானை தண்ணீர் குறைந்து இருக்கும். கொஞ்ச நாளைக்கு அவருக்கு எதனால அந்த பானையில் தண்ணி ககொறையுதுன்னு தெரியல.
அப்புறமா அவர் கண்டுபிடிச்சிட்டாரு அதில் ஒரு சின்ன கீறல் இருக்கிறது. ஆனாலும் அவர் அந்த பானையை மாத்தவே இல்ல. அதே பானையை பயன்படுத்தி தான் அவர தண்ணி எடுத்து கிட்டு இருக்கிறார். பொதுவா ராத்திரி வேளைகளில் அவர் தூங்கினதுக்கு பின்னாடி இந்த இரண்டு பானைகளும் ஒன்னுக்கொன்னு பேசிக்குமாம். அதில் அந்த குறையே இல்லாத அந்த நேர்த்தியான பானை இந்த கீறல் விழுந்த பானையை பார்த்து, நம்ம ரெண்டு பேர்லேயும் ஒரே அளவு தண்ணீர் தான் அவர் எடுத்துட்டு வறார். நான் என்னன்னா முழு தண்ணியையும் இந்த வீட்டில் கொண்டுவந்து வைக்கிறேன். நீ என்னடான்னா அதுல பாதி தண்ணீயை கொட்டிட்டு மீதி தண்ணியை தான் வீட்டுக்கு எடுத்துட்டு வர.
அவருக்கும் உன்கிட்ட கீறல் இருக்குறது தெரியும். ஆனாலும் எதுக்கு தான் அவர் உன்ன ஒடச்சித்தூரப் போடாம இப்படி வீட்டிலேயே வைத்து இருக்கிறார் என்று தெரியல, அப்படின்னு சொல்லிட்டு இந்த முழு பானை அந்த கீறல் விழுந்த பானையை பார்த்து கிண்டல் பண்ணிட்டே இருக்குமாம்.
இப்படி அது கிண்டல் பண்ணி கிண்டல் பண்ணி கீறல் விழுந்த பானைக்கு தன்னுைடைய மனசுல ஒரு கவல ஆரம்பிச்சிடுச்சு. எதனாலதான் இந்த குயவன் இப்படி வீட்ல வைத்திருக்கிறார்? அவர் நினைச்சிருந்தா தூர போட்டிருக்கலாமே. நமக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் நம்ம கண்டிப்பா இந்த கேள்வியை அவர் கிட்ட கேக்கணும் சொல்லி அது மனசுல நினைச்சுக்குமாம்.
இப்படி அது நினைச்சு நினைச்சு அதற்கு ஒரு நாள் என்னாயிடுச்சி தன்னுடைய மனசுல நினைக்கிறது எல்லாம் அந்த குயவருக்கு கேக்குற மாதிரி ஒரு விசேஷ சக்தி வந்துருச்சு. அந்த ராத்திரி இந்த பானை கவலை பட்டிருக்கும் போது இந்த குயவருக்கு பானையுடைய மன ஓட்டம் எல்லாம் அவர் காதில் கேட்குது.
அடுத்த நாள் காலை அந்த பானைக்கு அதற்கான பதிலை சொல்ல நெனச்சுட்டு அடுத்தநாள் காலை வழக்கம்போல இந்த இரண்டு பானைகளையும் அந்த கம்பில் கட்டி அந்த காம்ப தன்னுடைய தோளில் வைத்து நடந்து போக ஆரம்பிக்கிறார். அவருடைய வீட்டிலிருந்து ஒரு இருபது அடி நடந்து போறதுக்கு பின்னாடி அந்த பானைகள் இரண்டையுமே அவர் இறக்கி வைக்கிறார்.
எறக்கி வச்சிட்டு அப்படியே அந்த கீறல் விழுந்த பானைக்கத்தில் போய் அவர் சொல்றாரு, கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு அப்படின்னு, அப்படியே பின்னாடி திரும்பி பார்க்குது. பார்த்தா அந்த 20 அடியிலிருந்து அவருடைய வீட்டுக்கு போற அந்த தூரம் வரைக்கும் ஒரு பாதை இருக்கு. அந்த பாதையுடைய இரண்டு பக்கமும் பூச்செடிகள் இருக்கு. அதுல ஒரு பக்க ஒரு பூச்செடி பாத்தீங்கன்னா முழுசா வளர்ந்து நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிச்சிருச்சு.
இன்னொரு பக்கம் இருக்குற பூச்செடியை பார்த்தா பாதி அளவுக்கு வளர்ந்திருக்கு. இந்த பானை எப்பவுமே கவலையோட இருக்கிறதுனால அந்த பூச்செடிகள் எல்லாம் இதுவரைக்கும் பார்த்ததே கிடையாது. இன்றைக்கைதான் முதல் முறையா பார்க்குது. ஆனாலும் இவர் எதுக்கு இத நம்மளை பார்க்க சொல்றார்னு அந்த பானைக்கு புரியல. அப்பதான் இந்த குயவர் அந்த பானை கிட்ட பதில் சொல்கிறார். ஒரு சில நாட்களுக்கு முன்னாடியே எனக்கு உன்கிட்ட கீறல் விழுந்த விஷயம்ம் தெரியும்.
அப்ப நானும் உன்னை மாத்திடனும் வெளியே போட்டுட்டு இன்னொரு பான செஞ்ச அதை பயன்படுத்தலாம் அப்படிதான் நெனச்சேன். இப்படி யோசித்து உன்னை மாதிரி நினைச்சு இருக்கும்போதுதான் அடுத்த நாள் என்னோட பாதையில் நடந்து போகும் போது இன்னொரு பக்கம் மட்டும் நிறைய செடிகள் வளர்ந்து இருந்தது. அப்புறம் யோசிச்சு பாத்தா தான் தெரிஞ்சுது நான் உன்னை எப்பவுமே வலது பக்கமாக வைத்து எடுத்து வருவேன். அப்படி வலது பக்கமாக எடுத்துட்டு வரும்போது உன்கிட்ட இருந்து தண்ணி விழுந்து விழுந்து தான் அந்த இடத்தில பறவைகள் போட்டிருந்த விதையெல்லாம் முளைச்ச இப்படி செடி ஆகியிருக்கு அப்படின்னு சொல்லி.
அதுக்கப்புறமா என்ன பண்ண ஆரம்பிச்சேன். வழக்கமாக வலது பக்கம் உன்னை தூக்கிட்டு வர்ற விட்டுட்டு இடது பக்கம் ஒரு நாள் வலது பக்கம் ஒரு நாளில் மாற்றி மாற்றி தூக்கிட்டு வர ஆரம்பிச்சேன். அப்படி தூக்கிட்டு வந்ததுனால இடது பக்கமும் செடிகள் வளர்ந்து வலது பக்கமும் செடிகள் வளர ஆரம்பிச்சுது.
ஆரம்பத்திலேயே வளர்ந்ததனால் அந்த வலது பக்கத்தில் உள்ள செடிகள் நல்ல பெருசா வளர்ந்து இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு வந்தது இந்த இடது பக்கத்தில் உள்ள செடிகள் கொஞ்சம் சின்னதா இருக்கு. ஆனா மொத்தத்துல இந்த பாதையில் ரெண்டு பக்கம் வந்து இருக்கிற இந்த செடிகளுக்கும் நீதான் காரணம்.
ஒருவேளை உன் பக்கத்துல இருக்கிற அந்த பானையை மாதிரி உன்கிட்ட அந்த கீறல் விழாமல் இருந்தது அப்படின்னு சொன்னா, இந்த பாதையில செடிகள் முளைக்கும் அப்படிங்கறது எனக்கு தெரியாமல் இருந்திருக்கும்.
அதனால உன்கிட்ட குறை இருக்குன்னு சொல்லி ஒரு நாளும் வருத்தப்படாத. உன்னுடைய கீறல் எனக்கு உதவியா தான் இருந்ததே ஒழிய எந்த விதத்துலயும் அது எனக்கு பயன் இல்லாம இல்ல அத நான் பயனுள்ளதா மாத்திகிட்டேன் அப்படின்னு சொல்லி அந்த குயவர் அதுக்கு பதில் சொல்றார்.
இந்த கதையிலிருந்து நல்ல பல கருத்துக்களை நாம் எடுத்துக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் யோசிப்போம்ல. எனக்கு மட்டும் எதற்காக இந்த குற. எனக்கு மட்டும் ஏன் இந்தப் போராட்டம்? எல்லாருக்கும் சுலபமாக கிடைக்க நிறைய விஷயங்கள் எனக்கு மட்டும் ஏன் போராடிப் போராடி கிடைக்கிறது அப்படின்னு சொல்லி.
இந்த பானை மட்டும் கீறல் விழாம இருந்தது அப்படின்னு சொன்னா அந்த இடத்தில செடிகள் வளரும் அப்படிங்கறது அந்த குயவயவருக்கு தெரிஞ்சு இருக்காது. அதே மாதிரி தான் நம்முடைய வாழ்க்கையிலே போராட்டங்கள் வரலைன்னு சொன்னா ஒரு சில குறைகள் இல்ல அப்படின்னு சொன்னா நம் வாழ்க்கையை அடுத்த ஒரு கட்டத்தை நோக்கிப் போகும் போமகும் அப்படிங்கிறதே நமக்கு தெரியாம போயிரும். நம்முடைய பலம், பலவீனம் இரண்டுமே நாம அறியனும் அப்படின்னு சொன்னா நம்ம வாழக்கையில வர சின்ன சின்ன போராட்டங்கள் தான் நமக்கு அதுக்கு வழி வகுக்கும். அத மாதிரி அந்த குயவரும் அந்த பானையில கீறல் விழுந்திருச்சி அப்படின்ன சொல்லிட்டு அத தூக்கி போடல.
அதனால வளர்ந்த அந்த செடிகளை பார்த்தாரு. இந்தச் செடி ஏன் ஒரு பக்கம் மட்டும் வளர்ந்திருக்கு அப்படிங்கறது தெரிஞ்சுகிட்டு ரெண்டு பக்கமும் அந்த செடிகள் வளருமாறு அந்த பானையை மாத்தி மாத்தி உபயோகப்படுத்த ஆரம்பிச்சாரு. அதே மாதிரி நம்முடைய பிரச்சனைகள் வரும் போது அதில் இருக்கும் வாய்ப்புகளை தேட ஆரம்பிக்கிறோம்.
அந்த வாய்ப்புகளை தேடுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் எப்படி அதை சரியாக பயன்படுத்திக்கனும் அப்படிங்கறதையும் நாம யோசிக்க ஆரம்பிக்கும். யோசிக்கும் போது தான் நம்முடைய வாழ்க்கை இன்னும் இரண்டு மடங்கு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பிக்கும். அதனால எப்பவாவது ஒரு தடவை உங்களுடைய குறைகளை நினைச்சு நீங்க ரொம்ப வருத்தப்பட்டிருப்பீங்க அப்படின்னு சொன்னா, உங்களுக்கு வர போராட்டங்களை பார்த்து நீங்கள் பயந்தீங்க அப்படின்னு சொன்னா இந்த கதையை நிச்சயம் யோசிச்சு பாருங்க எல்லாவிதத்திலும் வெற்றி உங்களுடையதாகட்டும். நன்றி.
No comments:
Post a Comment